அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

நல்லடியார் ?

நல்லடியார்கள் அல்லாஹ்விடம் சிபாசு செய்வார்கள் என கூறுபவர்களுக்கு அல்லாஹ் கூறுகின்றான்
“அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழிபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது; இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ‘அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவேயன்றி நாங்கள் அவர்களை வணங்கவில்லை’ (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.’ (அல் குர்ஆன் 39:3)
இங்கே சிலர் கூறலாம், நாங்கள் அவர்களை வணங்கவில்லையே, அந்த நல்லடியார்களிடம் இறைவனிடம் எங்களின் கோரிக்கைகளைப் பெற்றுத்தாருங்கள் என்று தானே பிராத்திக்கிறோம் இந்த வசனம் எப்படி எங்களுக்குப் பொருந்தும்? என்று கேட்கலாம். நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனையும் ஒரு வணக்கமாகும் என்று கூறியிருக்கிறார்கள். அல்லாஹ்வும் தன்னுடைய திருமறையிலே பல்வேறு இடங்களில் அல்லாஹ்வைத்தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்று கூறுவதன் மூலம் பிரார்த்தனையும் ஒரு வணக்கம் என்றே கூறுகின்றான்.
இது போன்ற இன்னும் ஏராளமான வசனங்களில் (பார்க்க : 17:56-57, 34:22, 10:106, 6:71, 7:191, 7:192, 10:107, 27:62) இருந்து நாம் விளங்குவது என்னவென்றால்,
  • இறந்தவர்களால் பிரார்த்தனை செய்யமுடியாது (16:20-21)
  • இறந்தவர்களால் சிபாசு, பரிந்துரை செய்யமுடியாது (39:3, 10:18)
  • இறந்தவர்கள் எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பது கூட அவர்களுக்குத் தொயாது (16:20-21)
  • இறந்தவர்களின் உயிரை அல்லாஹ் தன்னிடத்திலே நிறுத்திக் கொள்கின்றான். (39:42)
  • இறந்தவர்களுக்கும் இவ்வுலகத்தில் உள்ளவர்களுக்கும் பர்ஸக் என்னும் திரையிருக்கிறது (23:99-100)
  • இறந்த நல்லடியார்கள் புது மணமகணைப் போல் உறங்கிக் கொண்டிருக்கின்றனர் (ஹதீஸ்)
  • அல்லாஹ்வையன்றி யாரை பிரார்த்திக்கின்றோமோ அவர்கள் தங்களுக்குத் தாங்களே உதவி செய்துகொள்ள சக்தி பெறமாட்டார்கள். (7:196-197)
  • அவர்கள் உங்கள் பிரார்த்தனையைச் செவியேற்கமாட்டார்கள் (35:13-15)
  • இறந்த நல்லடியார்களால் பதிலளிக்க முடியாது (17:56-57)
  • அவர்களுக்கு அணுஅளவு அதிகாரமும் இல்லை (35:13-15)
  • அல்லாஹ்வின் அடியார்களை பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளக் கூடாது (18:102)
  • அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே (7:194)
  • அல்லாஹ் அல்லர்தவர்களை அழைக்கக்கூடாது (10:106, 6:71, 23:117)
  • அல்லாஹ்வின் இல்லங்களில் நல்லடியார்களை அழைக்கக்கூடாது (72:18)
  • இறைநேசர்களிடம் கையேந்தி நிற்கும் முஸ்லிம்களில் சிலர் அவர்களுடைய அறியாமையினால், நாம் நீதிபதியிடம் வாதாடுவதற்கு நமக்கு ஒரு வக்கீல் தேவையில்லையா? அல்லது ஒரு பெரிய அமைச்சரிடம் நமது தேவையை கேட்டுப் பெறுவதற்கு அவருக்கு நெருக்கமானவரை பரிந்துரை செய்வதற்காக நியமிப்பதில்லையா? அது போலத்தான் நாங்களும் இறைவனிடம் வாதாடி, கேட்டுப் பெறுவதற்காக இறைவனுக்கு நெருக்கமான இறைநேசர்கள் மூலம் வேண்டுகிறோம் என்று கூறுகின்றனர். இவ்வாறு கூறுவது இஸ்லாத்தை பற்றி அவர்கள் ஓரளவுக்கு கூட அறியாமல் இருப்பதே காரணம் ஆகும். நீதிபதி நாம் குற்றம் செய்தவாகளா அல்லது நிரபராதியா என்பதை நமக்காக வாதாடும் வக்கீல் எடுத்து வைக்கும் சாட்சியங்களை வைத்தே அறிந்து கொள்வார். அதுவும் சாட்சியங்கள் சரிவர நிருபிக்கப்படாவிட்டால் நிரபராதிக்குக் கூட தண்டணையளிக்கும் எத்தனையோ நீதிபதிகள் இருக்கிறார்கள்.
    இது இப்படியிருக்க அகிலங்களையெல்லாம் படைத்து பரிவக்குவப்படுத்தி பாதுகாத்துக் கொண்டிருக்கும் அல்லாஹ்வுக்கு நமது தேவைகள் என்ன என்பது தெரியாதா? இதயங்களில் உள்ள இரகசியங்களை அறிபவனாக அல்லாஹ் இருக்கிறான் என்று தன்னுடைய திருமறையிலே பல இடங்களில் இறைவன் கூறுகின்றானே!!!
    “வானங்களிலும், பூமியிலும் உள்ளவற்றை அவன் அறிகிறான்; நீங்கள் இரகசியமாக்கி வைப்பதையும், பகிரங்கமாக்கி வைப்பதையும் அவன் அறிகிறான்; மேலும், இருதயங்களிலுள்ளவற்றை யெல்லாம் அல்லாஹ் அறிகிறான்”(அல்குர்ஆன் 64:4)
    இன்னும் பல வசனங்களில் 11:5, 67:13, 28:69, 2:284 அல்லாஹ் மட்டுமே இதயங்களிலுள்ள இரகசியங்களை அறிகிறான் என்றும் மற்ற யாரும் அவற்றை அறிய முடியாது என்றும் கூறுகின்றானே!. நாம் கூறாமலே நமது தேவைகளை அறிந்திருக்கும் இறைவனுக்கு, கேவலம் மனிதர்களிலுள்ள ஒரு வக்கீலோ அல்லது அதிகாயோ எடுத்துச் சொன்னால் தவிர அறிந்துக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நீதிபதியையும், அமைச்சரையும் நாம் எப்படி உதாரணங்களாக கூறமுடியும்?. இது இறைவனின் கண்ணியத்தைக் குறைவாக கருதுவதாகாதா? இறைவனுக்கு நீதிபதியையும், அமைச்சரையும் உதாரணங்களாக கூறி அல்லாஹ்விற்கு உவமைகளை ஏற்படுத்தி இணைவைத்த மாபாதகம் ஆகாதா? இவ்வாறு இறைவனுக்கு உதாரணங்களைக் கூறுபவர்களை அல்லாஹ் கடுமையான எச்சரிக்கின்றான்:
    “ஆகவே நீங்கள் அல்லாஹ்வுக்கு உதாரணங்களை கூறாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ்தான் (யாவற்றையும் நன்கு) அறிபவன்; ஆனால் நீங்கள் அறிய மாட்டீர்கள்” (அல்குர்ஆன் 16:74)
    ஆகவே அல்லாஹ்வுக்கு உதாரணங்களைக் கூறுவது இந்த திருமறை வசனத்தை மீறிய மாபெரும் குற்றமாகாதா? சிந்தியுங்கள் சகோதர சகோதரிகளே. அல்லாஹ் தன்திருமறையில் அல்லாஹ்வையே அழையுங்கள் என்றும், அவன் பிரார்த்தனை புரிபவர்களின் பிரார்த்தனையைச் செவியேற்கிறான் என்றும் ஆனால் உங்களால் அழைக்கப்படுபவர்களால் பதிலளிக்க முடியாது என்று பல இடங்களில் வலியுறுத்திக் கூறுகின்றான்.
    “நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ, அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே; நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் நீங்கள் அவர்களை அழைத்துப் பாருங்கள் – அவர்கள் உங்களுக்கு பதில் அளிக்கட்டும்!” (அல் குர்ஆன் 7:194)

எனவே என்றோ இறந்துவிட்ட நல்லடியார்கள் பிராத்தித்தால் அது இறைவனால் அங்கீகரிக்கப்படும் என்று ஒருவர் நம்பி அந்த நல்லடியார்களின் கப்ரில் கையேந்தி நின்றால் நிச்சயமாக அவர் மேற்கூறுப்பட்ட வசனங்களை நிராகரித்ததோடல்லாமல் இறைவனுக்கு இணை வைத்த மகா பாவியாகிவிடுவார். அல்லாஹ் நம்மனைவரையும் காப்பாற்றுவானாக.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பொறுமை

பொறுமை பற்றி அல்லாஹ் தன் திருமறையில் பின்வறுமாறு கூறுகிறான்.

1. காலத்தின் மீது சத்தியமாக!
2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்
3. விசுவாசங்கொண்டு, நற்கருமங்களையும் செய்து சத்தியத்தை ஒருவருக்கொருவர் உபதேசம் செய்தும், பாவங்களை விடுவதிலும் நன்மைகளைச் செய்வதிலும் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களே அத்தகையோரைத்தவிர. (ஸ¤ரா: அஸ்ர்)
“அஸ்ஸபீரு” எனும் அறபுப் பதத்திற்கு பொறுமை என்று சொல்லப்படும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண் அனைவரும் பொறுமையைக் கடைப்படிப்பது அசியமாகும். இஸ்லாம் மார்க்கமும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்றது.
விசுவாசம் கொண்டு, நற்கருமங்கள் செய்து உபதேசம் செய்து, பாவங்களைத் தவிர்த்து, நன்மைகள் செய்வதில் ஏற்படும் கஷ்டங்களைச் சகித்து, பொறுமையைக் கொண்டு உபதேசிப்பவர் நஷ்டத்தில் இல்லை என்பது மேற்கூறிய வசனத்தின் கருத்தாகும். பொறுமை என்பது, பெருந்தன்மை, உயர்ந்த குணம், ஆகியவற்றின் அறிகுறியாகும்.
இழப்புகளுக்கு எதிரான மிகப்பெரிய காப்பீடு பொறுமையாகும். சூழ்நிலையின் தாக்கத்தை தாக்குப் பிடிக்க உதவுவது பொறுமையாகும். இதனால் தான் “அஸ்ஸபூர்” என்பது இறைவனின் அழகிய திருநாமங்களுக் ஒன்றாகத் திகழ்கின்றது. ஏனெனில் இறைவன் பாவம் செய்து கொண்டே இருக்கும் தன்னுடைய அடியானை தண்டிப்பதற்குக் கூட காலம் தாழ்த்துகின்றான். அவனது அடியான் தவறு செய்வதில் அதிவேகத்தோடு செயல்பட்டால் கூட அவன் பல ஆண்டுகள் கழித்தே தன்னுடைய தீர்ப்பை வழங்குகின்றான்.
அவன் மனிதர்களுக்கு நீண்டதொரு கால அவகாசத்தை வழங்குகின்றான். அவர்கள் தவறு செய்த உடனேயே அவர்களைப் பிடித்துத் தண்டித்து விடுவதில்லை.
அல்லாஹ்வின் வசனம் பின்வருமாறு:- (“நபியே!) அவர்கள் வேதனையைக் கேட்டு உம்மிடம் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது வேதனை இறக்குவதற்காக (அறிவித்த) அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு ஒரு போதும் மாற்றம் செய்வதில்லை. நிச்சயமாக நீங்கள் கணிக்கிடும் ஆயிரம் வருடங்கள் உமதிறைவனிடத்தில் ஒரு நாளுக்குச் சமமாகும்”. (அல்குர்ஆன் 22:47) தைரியம், வீரம், ஆண்மை ஆகியவற்றின் வரிசையிலே இடம்பெறுகின்றது பொறுமை.
ஏனெனில் வாழ்க்கைச் சுமையைத் தைரியமற்ற கோழைகளாலும் பலவீனமானவர்களாலும் அவசர புத்திக்காரர்களாலும் சுமந்திட இயலாது. ஒரு மனிதரிடத்தில் சில பொருட்களைக் கொண்ட ஒரு கட்டு சுமை இருந்தால் அவன் அதை எடுத்துச் செல்ல பலம் மிக்க ஒரு மனிதனையே அமர்த்துவான். அந்த சுமையை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் செல்ல குழந்தைகளையோ பலவீனமானவர்களையோ நியமிப்பதில்லை.
வாழ்க்கை என்ற சுமையும் இதைப் போன்றதே. வாழ்க்கைப் பொறுப்பு என்ற சுமையைத் தூக்கிடவும் அதனை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு எடுத்துச் சென்றிடவும் சிங்கத்தின் இதயமும் மலை அளவு பொறுமையும் உடையவர்களால் மட்டுமே முடியும்.
இதேபோல் சமுதாயத்தில் தலைமைப் பொறுப்பை சுமப்பவர்கள்; இவர்கள் ஒவ்வொரு வரும் தாங்கள் வகிக்கும் பொறுப்புக்குத் தகுந்த அளவில் பொறுமை உடையவர்களாகவும், கஷ்டங்களைத் தாங்கிடும் தன்மை உடையவர்களாகவும், சகிப்புத் தன்மை உடையவர்களாகவும் இருந்திட வேண்டும். மேலும் பிரிதொரு இடத்தில் அல்லாஹ் கூறுகிறான்:- திட்டமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்.
ஒரு முறை இறைவனின் தூதர் (ஸல்) அவர்களிடம், “யார் யார் அதிகமான சோதனைகளைச் சந்திக்க வேண்டிய திருக்கும் “என வினவப்பட்டது. அல்லாஹ்வின் தூதர்கள், கீழ்படியில் வாழும் மக்கள், அதற்கும் கீழ்படியில் வாழும் மக்கள் ஆகியோர் அதிகமான சோதனைகளைச் சந்திக்க வேண்டிய திருக்கும்.
மனிதர்களில் ஒவ்வொருவரும் அவர்கள் மார்க்கத்தில் காட்டும் ஈடுபாடுகளின் அளவிற்கு சோதனை செய்யப்படுவார்கள். எந்த மனிதருக்கு மார்க்கத்தில் ஈடுபாடு பலமானதாகவும், அழுத்தாமானதாகவும் இருக்கின்றதோ அவருக்கு வரும் சோதனையும் கடினம் குறைந்ததாகவே இருக்கும். ஒரு மனிதனுக்கு வைக்கப்படும் சோதனை அவன் அதனை வெற்றிக் கொள்ளும் வரை தொடரும்.
அவன் அதனை வெற்றிக் கொண்ட பின்னர், அவன் பூமியில் நடக்கின்றான். அவன் மீது அதன் பின்னர் எந்தப்பாவமும் இல்லை என்று பதில் சொன்னார்கள்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பரிகாசம் ! இழிவு ! துரவித் துரவி ஆராய்வது !

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்; ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள்; அன்றியும், உங்களில் சிலர் சிலலைப் பற்றிப் புறம் பேசவேண்டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிக்க கிருபை செய்பவன். (49:11-12)
மேற்கூறிய இரண்டு வசனங்களும் இடம் பெற்றிருக்கும் அல் ஹுஜுராத் அத்தியாயம் பல்வேறு சந்தர்ப்பங்களில் இறங்கிய ஒழுக்க போதனைகளை உள்ளடக்கியுள்ளது. ஒரு இறைவிசுவாசிக்கு அவசியம் இருக்க வேண்டிய குணநலன்களைக் கற்றுத் தருவது இந்த அத்தியாயத்தின் கருப்பொருளாகக் காணப்படுகிறது. இப்போதனைகள் மதீனாவில் ஒரு கட்டுக் கோப்பான இஸ்லாமிய சமூகம் உருவாக்கப்பட்டதன் பின்னர் இறக்கப்பட்டன. அந்த சமூகத்தில் காணப்பட்ட ஜாஹிலிய்யாக் கால பண்புகளை மாற்றுவிக்க இவ்வத்தியாயத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் முனைகின்றன. அந்த வகையில் இங்கு விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கும் 11 மற்றும் 12 ஆம் வசனங்கள் ஒரு சமூகத்தின் பரஸ்பர ஒற்றுமையையும் சகோதரத்துவத்தையும் சீர்குலைத்து விடக் கூடிய மோசமான குணங்கiயிட்டு எச்சரிக்கை செய்கின்றது.
விசுவாசிகளே! எந்த ஆண்களும் மற்றெற்த ஆண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் . ஒருவேளை அவர்கள் இவர்களை விட சிறந்தவர்களாயிருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெற்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாயிருக்கலாம்.
இங்கு இவ்வசனத்தில் இடம் பெற்றிருக்கும் ஸகிர எனும் பதம் ஒருவரை சிறுமைப்படுத்தி தாழ்த்தி நோக்குவதைக் குறிக்கும். இன்னும் ஒருவரையொருவர் பரிகசிப்பதையும் இப்பதம் குறிக்கிறது. ஒருவன் நடத்தைகள், தோற்றம், பொருளாதார நிலை போன்றவற்றைக் கவனத்தில் கொண்டே பெரும்பாலும் தாழ்த்தப்படுகின்றன. பரிகசிக்கப்படுகின்றன. ஒரு முஸ்லிம் எப்பொழுதும் சகோதர முஸ்லிம்களை மதித்து நடக்க வேண்டும். அவர்களின் மானம் மரியாதை என்பன பங்கப்படும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. ஒரு முஸ்லிம் சகோதரனின் மரியாதையில் ஏற்படும களங்கம் தனது உள்ளத்தையும் வருத்த வேண்டும். இத்தகைய உணர்வுகளை தன்னகத்தே கொண்ட மனிதர்களினால் உருhவன ஒரு சமூகத்தையே முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனாவில் தோற்றுவித்தார்கள்.
முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லிமின் குருதியும் (உயிரும்) மானமும், செல்வமும், இன்னொரு முஸ்லிமின் பார்வையில் புனிதமானவையாகும். (முஸ்லிம்)
சகோதரர்களே! இஸ்லாம் கூறும் ஈமானியப் பண்புகளுக்கும் எமக்கும் இடையில் எவ்ளவு இடைவெளி ஏற்பட்டுள்ளது என்பதை அவதானிக்கும் போது நாம் வெகுதூரம் விலகிச் சென்றுள்ளோம் என்பது தெளிவாகப்படுகிறது. எமக்கு மத்தியில் ஒருவர் கதைக்கும் பொது ஒரு வார்த்தை தவறுதலாகப் பேசி விட்டால் அவரைப் பல வகையில் பரிகாசம் செய்து சிரித்து மகிழ்கின்றோம். உடல் உறுப்புக்களில் ஏற்படும் வித்தியாசங்களை அல்லது தோற்றங்கள் நடை, பேச்சு, பழக்க வழக்கங்களைப் பார்த்து கிண்டல் செய்கிறோம். இன்னும் சிலர் வயோதிகர்களைக் கண்டு விட்டால் அவர்களின் மனம் புண்படும் அளவுக்கு அவர்களை நையாண்டி செய்கின்றனர்.
இன்னும் எமக்கு மத்தியில் ஒருவர் இஸ்லாமியப் பண்புகளை ஏற்று நடக்கும் போது அல்லது ஒரு குறையை எமக்கு மத்தியில் சுட்டிக் காட்டும் போது அவரை நாம் பரிகசிக்கின்றோம். கண்சாடை செய்து அடுத்தவர்களின் கவனததையும் திருப்பி சிரிக்க வைக்கின்றோம். அடுத்து, சில சகோதரர்கள் மற்றும் சிலரின் குரல் வன்மையை பழித்துக் காட்டுவதை அவதானிக்கின்றோம். இவ்வாறான மோசமான செயல்களைப் புரியம் ஒருவர் அடுத்த சகோதரர் ஒருவரின் மனோநிலை பாதிக்கப்படுகின்றது. மனம் வேதனையடைகின்றது என்பதைச் சற்றும் கவனத்தில் கொள்வதில்லை.

பரிகாசத்தைத் தமது தொழிலாகக் கொண்டு செயல்படும் சகோதரர்கள் தாம் பரிகசிக்கும் சகோதரர் அல்லாஹ்விடத்தில் உயர்வான அந்தஸ்தில் இருக்கலாம் என்பதை மறந்து விடுகின்றனர்.
பரிகசிக்கப்படுபவர் அல்லாஹ்வின் பார்வையில் மறுமையின் நற்பேறுகளைப் பெறுவதற்கு மிகவும் அருகதையுடையவராகக் காணப்படலாம். ஆனால் வெளித்தோற்றத்தில் அவர் ஒரு பரதேசியைப் போன்று காட்சியளிக்கலாம். இறைத்தூதரின் வாக்கு இதனை உண்மைப்படுத்துகிறது.
நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடற்கட்டுகளையோ தோற்றங்களையோ பார்க்க மாட்டான். மாறாக உங்களின் உள்ளத்தையே அவதானிக்கின்றான். (முஸ்லிம்)
பரிகசிப்பவர்கள் இவ்வுலகில் தமது செயல்களுக்கான விளைவுகளைக் காணாத போதும் மறுமையில் கண்டு கொள்வார்கள். அவர்கள் கண்சாடையின் மூலம் ஒருவரை பரிகசிக்கும் போது அச்செயல் பதிவு செய்யப்படுகின்றது.
ஓ! எங்களுடைய கேடே! இதென்ன புத்தகம் (எங்களுடைய பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும் விடாது இதில் வரையப் பெற்றிருக்கின்றதோ! என்று அவர்கள் கூறுவதை நீர் காண்பீர். (18:19)
இந்த வசனத்தில் வந்திருக்கும் சிறிய பாவங்கள் என்பது பரிகாசத்தைக் குறிக்கின்றது என இமாம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள். இங்கு ஆண்கள், ஆண்களையும், பெண்கள் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம் என வந்துள்ள போதும் ஆண்கள் பெண்களையும், பெண்கள் ஆண்களையும் பரிகசிப்பதையும் இவ்வசனங்கள் தடை செய்கின்றன என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். ஈமானிய உணர்வோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சகோதரர்கள் இச்செயல்களையிட்டு எப்போதும் தங்கள் உறுப்புக்களை எச்சரிக்கையாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நீங்கள் ஒருவரையொருவர் குத்திப் பேச வேண்டாம்
மக்கள் தங்களுக்கு மத்தியில் ஒருவர் இன்னொருவரைக் குத்திப் பேசுதல், ஏளனஞ் செய்தல், குறை கூறித் திரிதல் போன்ற செயல்களை இவ்வசனம் குறித்துக் காட்டுகிறது. இன்னும் மக்களைப் பழித்தல் போன்ற செயல்களையும் குறிக்கும். மக்களை நேருக்கு நேர் ஏளனஞ் செய்து கொண்டும் மறைமுகமாக மக்கள் மத்தியில் ஏனையோரின் குறைகளை கூறித்திரிபவனையும் அல்குர்ஆன் சபிக்கிறது. ஒருவர் ஏதேனும் ஒரு தவறைச் செய்து விட்டால் அவருடன் நேரடியாகப் பேசி அவரின் தவறை திருத்த முனைய வேண்டும். மாறாக அவரின் தவறை ஏனைய மக்களிடம் கூறித் திரிவதில் எந்த நலனும் ஏற்படப் போவதில்லை. அன்றி மக்கள் மத்தியில் பகையுணர்வுகளையே வளர்த்து விடுகின்றது. அல்குர்ஆன் ஏற்படுத்த விரும்பும் உயர்ந்த சமூக அமைப்பைச் சீர்குலைக்கும் பண்புகளில் ஒன்றாக இது காணப்படுகின்றமையினாலேயே அல்குர்ஆன் இதனைக் கண்டனம் செய்கிறது.
நீங்கள் ஒருவரையொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர்கள்.
இவ்வசனம் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் மக்கள் மத்தியில் பரவிக் காணப்பட்ட மோசமான பண்பு ஒன்றினை கண்டித்தே இறக்கப்பட்டது. இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டு சென்ற போது அங்கு ஒருவருக்கு இரண்டு அல்லது மூன்று பட்டப்பெயர்கள் சூட்டப்பட்டிருந்தன. இறைத்தூதர் அவர்கள் மதீனாவை அடைந்த போது மக்கள் சிலர், சிலருக்கு பட்டப் பெயர் கூறி அழைக்கின்றனர் என்ற விசயத்தைக் கூறினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே இவ்வசனம் இறக்கப்பட்டது.
இந்த ஜாஹிலிய்யப் பண்பு இன்றைய சமூகங்களில் மலிந்து காணப்படுகின்றது. சாதாரண முஸ்லிம்கள் பட்டப்பெயர் சூட்டுவது ஒரு புறமிருக்க இஸ்லாத்தோடு மிகவம் நெருக்கமான, அல்குர்ஆனை சுன்னாவைக் கற்பவர்களுக்கு மத்தியிலமு; நாளாந்த இஸ்லாமியக் கருத்துக்களை மரிமாறிக் கொண்டிருப்பவர்களுக்கு மத்தியிலும் இப்பண்பு பரவி இருப்பது கவலைக்கிடமானதாகும். இன்று சாதாரணமாக தடியான், மொட்டையன், கிழவன், நொண்டியன் போன்ற மோசமான பண்புகளைக் கூறி மக்கள் அழைக்கபப்டுகின்றனர். மேலும் இஸ்லாத்தை ஏற்ற ஒருவரை முன்னைய மதத்தைக் கூறி தமிழன், யூதன் என்று அழைக்கப்படுவதுமுண்டு. இவ்வாறு பட்டப் பெயர் சூட்டுவது ஒருவர் இன்னொருவருக்குப் புரியும் அநியாயமாகமாகும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவன் தனது சகோதரனுக்கு அநீதி இழைக்கவோ, அவனை இழிவு படுத்தவோ மாட்டான்.
இறைநம்பிக்கை கொண்டதன் பின்னர் மோசமா பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட செயலாகும். எவர்கள் இந்த நடத்தையைக் கைவிடவில்லையோ அவாகள் தாம் கொடுமைக்காரர்கள்.
ஒரு விசுவாசி பட்டப் பெயர் கூறி ஒருவரை அழைப்பது மிகவும் மோசமான ஒரு பாவச் செயலாகும் என்று இவ்வசனம் தெளிவாகக் கூறுகின்றது. அத்தோடு இவ்வசனத்தில் மேலே கூறப்பட்ட பண்புகளும் ஈமானுக்கு புறம்பானவைகளாகும். தொடர்ந்து இந்த இழிச் செயல்களைப் புரிந்து வரும் ஒருவன் விசுவாசியாக இருக்க முடியாது. அவரை இப்பண்புகள் ஈமானி கூட்டத்தை விட்டு வெளியேற்றி விடுகின்றன. இச்செயல்கள் ஒவ்வொன்றும் இஸ்லாம் பூண்டோடு அழித்தொழித்த ஜாஹிலிய்யாக் கால பண்புகள் என்பதைத் தெளிவாகப் புரிந்து அவற்றை விட்டும் ஒதுங்கி வாழ்வதன் மூலமே ஒருவரின் ஈமான் பசுமையானதாகக் காட்சியளிக்கும்.
விசுவாசிகளே! அதிகமாக சந்தேகங் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன.
பொதுவாக ஒருவர் மற்றவரின் நடத்தைகள், பேச்சுக்கள் போன்றவற்றில் சந்தேகங் கொள்வதை ழன்னுஎன் பதம் விககுகின்றது. இவ்வசனத்தில் அதிகமாக என்று கூறப்பட்டிருப்பது அனைத்து விதமான யூகங்களில் (சந்தேகங்களில்) இருந்தும் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதேயாகும். ஏனெனில் சில யூகங்கள் பாவமாக அமைகின்றன.
ஒருவர் இன்னொருவரைப் பற்றி எக்காரணமுமின்றி சந்தேகப்படுதல், சிலரை எப்போதும் சந்தேக எண்ணத்துடன் அணுகுவது, வெளிப்படையாக நல்லவர்கள், கண்ணியமானவர்கள் என்று தோன்றுபவர்களையும் சந்தேக நோக்கோடு பார்ப்பது போன்ற வரையறைகளுக்குட்பட்ட சந்தேகங்கள் யூகங்கள் பாவமானவையாகக் காணப்படுகின்றன.
இஸ்லாம் சந்தேகங் கொள்வதை முற்றாக எச்சரிக்கின்றது. ஏனெனில் எந்த சந்தேகத்தில் தீங்கு உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியாது.. (புகாரி)

ஏதேனம் ஒரு விசயம் தொடர்பாகச் சந்தேகம் ஏற்பட்டால் அச்சந்தேகத்தின் நிழலில் நின்று கூட இறுதி முடிவு எடுக்கக் கூடாது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் நல்லெண்ணம் கொள்ளுமாறு இறைத்தூதர் (ஸல்) அவர்கள் போதித்துள்ளார்கள். ஒருவரின் செயலில் நன்மைக்கும் தீமைக்கும் இடமிருக்கும் போது வீண் சந்தேகங் கொண்டு தீய முடிவுகளை எடுப்பது பாவமாக அமைகின்றது. ஒருவரின் செயல்களையிட்டு நல்லெண்ணம் கொள்வதே முஃமின்களின் பண்பாகும் என அல்குர்ஆன் பல இடங்களில் உணர்த்துகின்றது.
இங்கு இன்னுமொரு அம்சமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதாவது ஒரு சமூகத்தில் மக்களுடன் இணைந்து வாழ்கின்ற ஒவ்வொருவரும் ஏனையோரின் உள்ளங்களில் சந்தேகங்களை எழுப்பி விடும் வகையில் செயல்படக் கூடாது. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனதுமனiவி ஸபிய்யாவை அழைத்துச் சென்ற போது, இரண்டு ஸஹாபிகள் (நபித்தோழர்கள்) அவர்களைக் கடந்து சென்ற பொது அவர்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்குச் ஸலாம் கூறினார்கள். அப்போது அவர்களை நிறுத்தி தன்னுடன் இருக்கும் பெண் தன் மனைவி ஸபிய்யா என்று கூறி அவர்கள் இருவரையும் சந்தேகம் எனும் நோயில் இருந்து காப்பாற்றினார்கள். இது போன்ற முன்மாதிரிகளைக் கடைபிடிக்கும் போது பல தீமைகளைத் தடை செய்யலாம். சந்தேகம் எனும் நோய்க்கு உள்ளத்தில் இடமளிக்கும் போது இன்னும் பல கொடிய நோய்கள் தோன்றி சமூகத்தினை முழமையாக உருக்குலைத்த விடுகின்றன.
மேலும் துப்பறிவதில் ஈடுபடாதீர்கள்.
ஒருவரின் சந்தேகம் ஏற்பட்டு விட்டால் மக்கள் அவரின் செயல்கள் ஒவ்வொன்றையும் துரவித் துரவி ஆராய முற்படுகின்றனர். முஹம்மத் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது மனித கண்ணியங்கள் உரிமைகள் என்பவற்றுக்கான உறுதியான பாதுகாப்பினை ஏற்படுத்தினார்கள். ஒரு முஸ்லிமின் சொத்துக்கள், மானம், உயிர் என்பன புனிதமானவைகளாகும். அவற்றில் களங்கம் ஏற்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாகும். முஸ்லிம்களின் குறைகளைத் துரவித் தேடித் திரிவது, துரவித் துரவி ஆராய்வது போன்ற செயல்கள் மோசமான பாவங்களாகும். அவற்றுக்கான தண்டனைகள் கொடியவையாகும்.
இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :ஒருவரின் வீட்டில் நடக்கும் செயல்கள் அவரின் அனுமதியின்றி யார் அறிந்து கொள்ள முனைகின்றானோ அவனின் கண்களைக் பிடுங்கி விடுவது அவரின் மீது குற்றமாகாது (புகாரி)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

மிகப்பெரிய உறவுகள் !

மனிதனுக்கு, உறவுகள் அவன் முன்னேறுவதற்கும் மன அறுதல் அடைவதற்கும் மிகப்பெரிய பாலமாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் இரத்த பந்தத்தின் மூலமும் பழக்கத்தின் மூலமும் ஏற்படுகிறது. இந்த உறவுகளை நல்லமுறையில் கவனித்து வருபவன் இம்மையிலும் மறுமையிலும் நல்லநிலையில் வாழ்வான். இந்த உறவு முறைகளில் அண்டைவீட்டாருடன் ஏற்படும் உறவுகள் மிகமுக்கியத்துவம் வாய்ந்தாக அமைந்துள்ளது. இந்த உறவுகள் நமக்கு நல்லமுறையில் அமைய வேண்டும். அதை நல்ல முறையில் பராமரிக்கவும் வேண்டும்.திருக்குர்ஆன் நபிமொழிகளில் அண்டைவீட்டாரின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள்! பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள்! பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4 : 36)
நாம், நன்மை செய்யவேண்டியவர்களின் பட்டியலில் அண்டைவீட்டாரை அல்லாஹ் இணைத்துள்ளான். மேலும் உறவினரான அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அல்லது உறவினரல்லாத அண்டைவீட்டாராக இருந்தாலும் சரி அவர்களுக்கு நன்மை செய்வது முஸ்லிம்களின் கடமை என்பதை மேற்கூறிய வசனத்தில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அவ்வசனத்தின் இறுதியில் " பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான்'' என்ற வாசகத்தின் மூலம் அண்டைவீட்டாரை அற்பாக நினைக்கூடாது என்பதையும் அவர்களையும் நம்மை போன்றே எண்ண வேண்டும் என்பதையும் தெளிவுபடுத்துகிறான்.
மூன்று அண்டைவீட்டார்
அண்டைவீட்டார் அதிகபட்சமாக மூன்று உரிமைகளை பெற்றவராக திகழ்வர். அண்டைவீட்டில் உள்ளவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் இருந்தால் அவர்களுக்கு நாம் மூன்று வகையான உரிமைகளை வழங்க கடமைபட்டுள்ளோம். ஒன்று அண்டைவீட்டாரின்உரிமைகள், இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள், மூன்றாவது உறவினர்களின் உரிமைகள்.
அண்டைவீட்டார் முஸ்லிமாக மட்டும் இருந்தால் அவருக்கு இரண்டு உரிமைகளை வழங்கபடவேண்டும். ஒன்று அண்டைவீட்டாரின் உரிமைகள், இரண்டாவது முஸ்லிம்களின் உரிமைகள்.
அண்டைவீட்டார் முஸ்லிமாக இல்லாமலிருந்தால் அவருக்கு அண்டைவீட்டாரின் உரிமை மட்டும் கிடைக்கும்.
அண்டைவீட்டார் மூன்று வகைப்படுவர்.1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டைவீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டைவீட்டார்.இவர் முஸ்லிமான அண்டைவீட்டார். இவருக்கு அண்டைவீட்டார் உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டைவீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டைவீட்டடார் என்று உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம் :7 பக்கம் :185)
கண்ணிப்படுத்துங்கள்!
நம் வீட்டில் விசேஷங்கள் ஏதும் நிகழ்ந்தால் முதலில் அண்டைவீட்டாருக்கு அழைப்புக் கொடுத்து அவர்களை கண்ணியப்படுத்தவேண்டும். ஆனால் இன்று சின்ன பிரச்சனைகளால் சண்டையிட்டுக் கொண்டு திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் வரும் போது, ஊர் முழுக்க அழைப்பு கொடுப்பவர்கள் பக்கத்துவீட்டில் இருப்பவர்களுக்கு அழைப்பு கொடுப்பதில்லை. கொடுத்தாலும்கூட மரியாதை கலந்த அழைப்பாக இருப்பதில்லை. நபிகளார் அவர்கள் இது போன்று நடப்பவர்களுக்கு பின்வருமாறு கட்டளையிடுகிறார்கள்.
"அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கைக் கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப்படுத்தட்டும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி), நூல் : புகாரீ (6019)
இறைவனின் அன்புக்கு அழகிய வழி
அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்பது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தம் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளட்டும் என்றுநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி), நூல்கள் : ýஅபுல் ஈமான்-பைஹகீ (1502),  ஹக்குல் ஜார், பக்கம் : 6.
நபிகளாரின் இறுதி அறிவுரை
நபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது "நான் அண்டைவீட்டாரிடம் நல்லமுறையில் நடந்து கொள்ளவேண்டுமென வலியுறுத்துகிறேன்' என்று அதிமாக கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி), நூல் : அல்முஃஜமுல் கபீர்-தப்ரானீ, பாகம் : 8, பக்கம் : 111)
யார் முஸ்லிம்?
அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டைவீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான்.
"உன் பக்கத்தில் இருக்கும் அண்டைவீட்டாருக்கு நன்னமை செய் நீ முஸ்லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி),நூல் : இப்னுமாஜா (4207)
உதவுங்கள்
அண்டைவீட்டார் சிரமப்படும் போது அவர்களுக்கு பொருளாதார உதவிகள் செய்வது, நோயுற்றால் மருத்தவரிடம் கொண்டு செல்வது, நோயுற்ற நேரத்தில் உணவுகளை சமைத்துக் கொடுப்பது என்று எல்லாவிதமான உதவிகளையும் செய்யவேண்டும். நம் உறவினர்களுக்கு செய்வதைப் போன்று அவர்களுக்கும் நாம் செய்யவேண்டும்.இதை பின்வரும் நபிமொழியிலிருந்து விளங்கலாம்.
அண்டைவீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டைவீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ (60014)
குழம்பில் தண்ணீரை அதிகப்படுத்துங்கள்
அண்டைவீட்டார் இருக்கிறார்கள் என்ற எண்ணம் நம்மிடம் எப்போதும் இருந்து கொண்டே இருக்கட்டும். நாம் நல்ல பொருள்களை சமைக்கும் போது அவர்களுக்கும் வழங்கவேண்டும். குறைவாக நாம் குழம்பு வைத்தாலும் அதில் கொஞ்சம் தண்ணீரை சேர்த்து அவர்களுக்கும் வழங்கவேண்டும்.
அபூதர்ரே! நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து! உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிம் (4758)
அற்பமானது என்று கொடுக்காமல் இருந்துவிடாதீர்!
நாம் அண்டைவீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்தாக இருக்கவேண்டும் என்பது நிபந்தனையில்லை, சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்கவேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாக கருதக்கூடாது.
"முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டைவீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத  வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுýரைரா (ரலி), நூல் : புகாரீ (2566)
அன்பளிப்புச் செய்வதில் முதலிடம்
ஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்யமுடியும், குறைவான பொருட்களே இருக்கிறது என்றால் அண்டைவீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் " இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல் : புகாரீ (2259)
சிறந்ததை தேர்வு செய்யுங்கள்
நம்மிடம் உள்ளதில் எது மட்டமானதோ அல்லது எதை சாப்பிட நாம் விரும்ப மாட்டோமோ அத்தகைய பொருள்களை அண்டைவீட்டாருக்கு வழங்காதீர்கள்! நல்ல தரமான பொருள்களை வழங்குங்கள். நீங்கள் சாப்பிடுவது சாதாரணமான பொருளாக இருந்தால் அதை வழங்குவதில் தவறில்லை. அதே நேரத்தில் மட்டமான பொருட்களாக தேர்வு செய்து வழங்கக்கூடாது.
நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையானவற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள்! கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள்! அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2 : 267)
எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! "தமக்கு விரும்பியதை தன் அண்டைவீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : முஸ்லிம் (65???)
தான் மட்டும் வயிராற சப்பிடமாட்டான்
பக்கது வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறுபுடைக்க சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல! அண்டைவீட்டில் இருப்பவருக்கு வழங்கிவிட்டு சாப்பிடுவதுதான் இறைநம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.
"தன் அண்டைவீட்டானை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிடமாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : அஹ்மத் (367)
"முஸனத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூலில் அண்டைவீட்டான் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன்! என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.
மரப்பலகை அடித்தல்
பக்கத்து வீடு என்று வரும்போது அவர்கள் வீட்டை கட்டும் போது அல்லது வீட்டை புதுப்பிக்கும் போது மரக்கட்டைகள் போன்றவற்றை அண்டைவீட்டாரின் சுவற்றில் பதிக்கவேண்டிய நிலை ஏற்படலாம். இவ்வாறு ஏற்படும் போது அண்டைவீட்டாருக்கிடையில் பெரிய சண்டைகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. நபிகளார் அவர்கள் இது போன்று நிலைகள் வரும் போது அண்டைவீட்டாருக்கு மரப்பலகைகள் போன்றவற்றை தமது சுவற்றில் பதிக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அதை தடுக்கக்கூடாது என்றும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளவேண்டும் என்றும் நமக்கு கட்டளையிட்டுள்ளார்கள்.
ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்கவேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லிவிட்டு ''என்ன இது உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன் அபூஹுýýரைரா (ரலி) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்அஃரஜ், நூல் : புகாரீ (2463)
வீட்டை விற்றல்
நமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டைவீட்டாரிடம் விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா? என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்யவேண்டும். இதுவும் அண்டைவீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.
நான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள்புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து " ஸஅதே! உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடம்மிருந்து வாங்கிக் கொள்வீராக!'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவற்றை நான் வாங்கமாட்டேன். என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் " அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத்தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள் " அல்லாஹ்வின் மீது ஆணையாக! தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிமாகத் தரமாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. "அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்கு கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக்காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறிவிட்டு ஸஅதுக்கே விற்றார்.
அறிவிப்பவர் : அம்ர் பின் ஷரீத், நூல் :புகாரீ (2258)
தொல்லை தருதல்
வீட்டில் ரேடியோ டேப்ரிக்காடர், டி.வி. போன்றவை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டைவீட்டாருக்கு கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தை கொடுப்பது என்று எந்த வகையிலும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.
"அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரீ (5187)
அண்டைவீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்கமாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்கிறது.
"அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். "அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் " எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர் : அபூஷுýரைஹ் (ரலி), நூல் : புகாரீ (6016)
அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு மூன்று தடவை அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன் என்று நபிகளார் கூறியது அண்டைவீட்டாருக்கு தொல்லை தருவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை விளக்கிறது. அண்டைவீட்டாருடன் தொடர்ந்து பகைமை போக்கை கடைபிடிப்பவர்கள் இந்த ஹதீஸை ஆழமாக சிந்திக்கட்டும். அண்டைவீட்டாருக்கு தொல்லைகள் தருபவன் சுவர்க்கம் புகமுடியாது என்ற கடுமையான எச்சரிக்கையையும் நபிகளார் செய்துள்ளார்கள்.
எவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (66???)
நல்லறங்கள் பல புரிந்தும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தந்தால் அவரும் நரகம் புகுவார் என்பதை விளக்கும் இன்னொரு நபிமொழி.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூஹýரைரா (ரலி), நூல் : அஹ்மத் (9298)
ஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : அஹ்மத் (12575)

மாபெரும் குற்றம்
அண்டைவீட்டாருக்கு செய்யவேண்டிய கடமைகளில் அவருக்கு நம்பிக்கைக்குரியவராக திகழ்வது அவசியமாகும். பக்கத்துவீட்டில் இருக்கிறார், அவர் நல்லவர் என்று நம்பி வெளியூர் செல்லும்போது அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அவர் நடந்து கொள்ளவேண்டும். அண்டைவீட்டார் வெளியூர் சென்றுவிட்டார் எனவே நாம் அங்கு சென்று திருடலாம், விபச்சாரம் செய்யலாம் என்று எண்ணி தவறான காரியங்களில் ஈடுபட்டால் அது மிகப்பெரிய குற்றமாக கருதப்படும். அதற்கு கடுமையான தண்டனையும் வழங்கப்படும்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் " அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது? '' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், " அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், '' நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு "பிறகு எது?'' என்று கேட்டேன். " உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது" என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்று கேட்க, அவர்கள், "உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), நூல் : புகாரீ (4477)
பொதுவாக விபச்சாரம் செய்தல் ஒரு குற்றம், அடுத்த நம்பியவர்களுக்கு துரோகம் செய்தல் இன்னொரு குற்றம், இந்த இரண்டும் சேர்ந்து பெரும்பாவமாக மாறிவிடுகிறது.
நீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்" ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, " அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), நூல் : அஹ்மத் (22734)
அதாவது  ஒருவர் பக்கவீட்டு பெண்ணிடம் விபச்சாரம் செய்வது (மற்ற) பத்து பெண்களை விபச்சாரம் செய்தால் கிடைக்கும் தண்டனையைவிட மிகக் கடுமையானதாகும்.
ஒருவர் பக்கவீட்டில் திருடுவது (மற்ற) பத்து வீட்டில் திருடுவதால் கிடைக்கும் தண்டனையை விட மிகக்கடுமையானதாகும்.
மறுமையில் முறையிடுவான்
அண்டைவீட்டாருக்கு நலம் நாடாமல் தான் மட்டும் நன்றாக இருந்தவனுக்கு எதிராக  அவனின் அண்டைவீட்டான் அல்லாஹ்விடம் முறையிட்டு நீதி கேட்பான்.
தன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா! இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல்  கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அதபுல் முஃப்ரத் (111)

நன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்
மார்க்கம் தொடர்பான மற்றும் நல்ல காரியங்களில் கூட்டாக செயல்படும் போது கூடுதல் நன்மைகள் கிடைக்கின்றன. அண்டைவீட்டாருக்கு நன்மையான காரிங்களை எடுத்துச் சொல்லுதல், தீமையான காரியங்களைச் செய்தால் அதைத் தடுத்தல், நற்காரியங்கள் நடக்கும் அவைகளுக்கு அழைத்துச் செல்லுதல், தவறும் பட்சத்தில் கேட்ட நல்ல செய்திகளை அண்டைவீட்டாருக்குச் சொல்லுதல் என்று நற்காரியங்களில் கூட்டாக செயல்பட்டு நன்மைகளை அள்ளிச் செல்லவேண்டும். நபித்தோழர்கள் இவ்வாறு நற்காரிங்களில் கூட்டாக செயல்பட்டுள்ளனர்.
நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன்.
அறிவிப்பவர் : உமர் (ரலி), நூல் : புகாரீ (89)
திருக்குர்ஆன் அறிவுரைகள்,நபிகளாரின் விளக்கங்களை முறைவைத்து கற்று வந்து நபித்தோழர்களைப் போல் அண்டைவீட்டார்கள் சேர்ந்து போக முடியாத நேரங்களில் ஒருவர் சென்று நல்ல செய்திகளை கேட்டறிந்து தம் அண்டைவீட்டாருக்கும் எடுத்துச் சொல்லி நன்மையில் கூட்டாகவேண்டும்.
அல்லாஹ்விடம் சிறந்தவர்
நண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே! பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல் :  திர்மிதீ (1867)
நல்ல அண்டைவீட்டார்
நல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மத் (14830)
தொல்லையை பொறுத்துக் கொள்ளுங்கள்
அண்டைவீட்டார் என்ற வரும்போது சில பிரச்சனைகள் ஏற்படத்தான் செய்யும். அதை பெரிய விசயமாக எடுத்துக் கொண்டு வாழ்நாள் பகைவர்களாக மாறிவிடாதீர்கள்! அவர்கள் தரும் சிரமங்களை பொறுத்துக்கொண்டு அவருக்கு சரியான அறிவுரைகளைக் கூறி திருத்தினால் இறைவனின் பேரருள் கிடைக்கும்.
ஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : ஹாகிம் 2446)அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்ற இஸ்லாமின் சமூக அமைப்பைப் புரிந்துகொண்ட முஸ்லிம் அண்டை வீட்டாரில் மிக நெருக்கமாக இருப்பவருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
    அன்னை ஆயிஷா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு அண்டை வீட்டார் இருக்கின்றனர். அந்த இருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு வழங்க வேண்டும்?'' என்று கேட்டதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்த இருவரில் யாருடைய வாசல் (உம் வீட்டுக்கு) நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்று கூறினார்கள். (அல் அதபுல் முஃப்ரத்)
    நபி (ஸல்) அவர்களின் இந்த மேன்மையான வழிகாட்டுதலை நபித்தோழர்கள் பின்பற்றினார்கள். இது குறித்து அபூஹுரைரா (ரழி) கூறினார்கள்: "தனது அண்டை வீட்டாரில் அருகிலிருப்பவரை விட தூரத்திலிருப்பவருக்கு முன்னுரிமையளிக்க வேண்டாம். முதலில் நெருங்கி இருப்பவருக்கும், அடுத்து தூரத்திலிருப்பவருக்கும் உபகாரத்தைச் செய்ய வேண்டும்.'' (அல் அதபுல் முஃப்ரத்)
    அண்டை வீட்டாருக்கு உபகாரம் செய்வது பற்றிய இவ்வரிசை முறை முஸ்லிமை தனது தூரமான அண்டை வீட்டாரை கவனிப்பதிலிருந்து முகத்தைத் திருப்பிவிடாது. அவரது வீட்டைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அண்டை வீட்டார் என்ற உரிமையைப் பெறுவார்கள். முஸ்லிம், அவர்களுக்கு உபகாரம் செய்ய கடமைபட்டிருக்கிறார். நெருங்கிய அண்டை வீட்டாருக்கு முன்னுரிமையளிக்க வேண்டுமென்பது மனித இயல்பை கவனித்து அமைக்கப்பட்டதாகும். இது விஷயத்தில் நபி (ஸல்) அவர்கள் மிக நெருங்கிய அண்டை வீட்டாரின் மனநிலையைக் கவனித்தார்கள்.
    சிறந்த அண்டை வீட்டுக்காரராகத் திகழ்வார்
    அண்டை வீட்டாருக்கு உதவியும், உபகாரமும் செய்வது முஸ்லிமின் இயல்போடு ஒன்றிவிட்ட ஒர் உணர்வாகும். இது அல்லாஹ்விடமும் மனிதர்களிடமும் அவருக்குரிய சிறப்புத் தன்மையாகும். ஏனெனில், அவர் இஸ்லாமிய அமுதத்தை அருந்தியவர். அவரது இதயம் இஸ்லாமின் மேன்மையான பயிற்சியினால் மலர்ந்திருக்கும். இந்நிலையில் அவர் சிறந்த தோழராக, சிறந்த அண்டை வீட்டாராகவே திகழ்வார்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "அல்லாஹ்வின் பார்வையில் தோழமையால் மிகச் சிறந்தவர் தமது தோழர்களிடமும் சிறந்து விளங்குபவரே. அல்லாஹ்வின் பார்வையில் சிறந்த அண்டை வீட்டுக்காரர் யாரெனில் தனது அண்டை வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே.'' (ஸன்னனுத் திர்மிதி)
    சிறந்த அண்டை வீட்டார் அமைவதும் ஒரு முஸ்லிமுக்கு கிடைக்கும் நற்பாக்கியங்களில் ஒன்றாகும். அவர்கள் மூலம் மனநிம்மதி, சந்தோஷம் போன்ற நற்பாக்கியங்களை அடைகிறார். பின்வரும் ஹதீஸில் நல்ல அண்டை வீட்டார் அமைவதை ஒரு நற்பாக்கியம் என்று கூறி நபி (ஸல்) அவர்கள் உயர்வுபடுத்தினார்கள்.
    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஸாலிஹான அண்டை வீட்டார் அமைவதும், விசாலமான வீடும், சிறந்த வாகனமும் உலகில் ஒரு முஸ்லிமின் வாழ்வு ஈடேற்றம் பெற்றதற்கான அடையாளமாகும்.'' (முஸ்னத் அஹமத்)
    நமது முன்னோர்கள் நற்பண்புள்ள அண்டை வீட்டாரை விலை மதிக்க முடியாத அருட்கொடையாகக் கருதினார்கள். ஸயீது பின் அஸ் (ரழி) அவர்களின் அண்டை வீட்டுக்காரர் தனது வீட்டை ஒரு இலட்சம் திர்ஹத்துக்கு விலை பேசினார். அதை வாங்குபவரிடம் "இது இந்த வீட்டின் விலையாகும். ஆனால், ஸயீது (ரழி) அவர்களின் பக்கத்து வீடு என்ற சிறப்புத் தன்மையை அடைந்து கொள்ள எவ்வளவு கொடுப்பாய்?'' என்று கேட்டார். இதையறிந்த ஸயீது (ரழி) அந்த வீட்டுக்காரருக்கு ஒர் இலட்சம் திர்ஹத்தை அனுப்பி அவரையே குடியிருக்கச் செய்தார்கள்.
    இதுவரை நல்ல அண்டைவீட்டார் சம்பந்தப்பட்ட அழகிய உபதேசங்களைக் கண்டோம். இதோ இப்போது கெட்ட அண்டை வீட்டார் பற்றிய விஷயங்களைக் காண்போம்.
    தீய அண்டை வீட்டானும் அவனது கருப்புப் பக்கமும்
    தீய அண்டை வீட்டான் இவ்வுலக வாழ்வின் பாக்கியங்களில் ஈமான் என்ற மிகச் சிறந்த பாக்கியத்தை இழந்தவனாவான். இதை நபி(ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டித்துள்ளார்கள். "அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார். அல்லாஹ்வின் மீது ஆணையாக! ஈமான் கொண்டவராக மாட்டார்'' என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது, தோழர்கள் "அல்லாஹ்வின் தூதரே அவர் யார்?'' என வினவினர். நபி (ஸல்) அவர்கள் "எவருடைய தீங்குகளிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதி பெறவில்லையோ அவர்'' என்று கூறினார்கள். (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)
    ஸஹீஹ் முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளதாவது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "எவருடைய தீங்கிலிருந்து அண்டை வீட்டார் நிம்மதியடைய மாட்டார்களோ அவர் சுவனம் புகமாட்டார்.''
    இது எவ்வளவு பெரிய பாவம்? தனது அண்டை வீட்டாரிடம் தீய முறையில் நடந்து கொள்பவர் எவ்வளவு பெரிய அருட்கொடையை இழந்துவிட்டார்? "ஈமான்' என்ற மகத்தான அருட்கொடை அவரிடமிருந்து நீங்கி விடுகிறது. சுவனத்தில் நுழையும் பாக்கியத்தையும் இழந்து ஈடு செய்ய முடியாத நஷ்டத்தில் வீழ்ந்து விடுகிறார்.
    உண்மை முஸ்லிம் திறந்த மனதுடன் மேற்கண்ட சான்றுகளைப் புரிந்துகொண்டு தனது அண்டை வீட்டாரிடம் எந்த நிலையிலும் சண்டை, சச்சரவு இல்லாமல் அவர்களைத் துன்புறுத்திவிடாத வகையில் செயல்படுவார். அவ்வாறு இல்லையென்றால் அவருடைய ஈமான் பறி போய்விடும்; மறுமை வாழ்வில் தோல்வியடைந்து விடுவார். இதைவிட பெரிய துரதிஷ்டம் என்னவாக இருக்க முடியும்? அதை நினைத்தாலே அவரது உடல் நடுங்கி இயம் திடுக்கிட்டுவிடும்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini