முஸ்லிம் சமூகத்தையும் இஸ்லாத்தையும் ஒழித்துக் கட்டுவதற்காக இஸ்லாத்தின் எதிரிகள் மேற்கொள்கின்ற சூழ்ச்சிகளில் முக்கியமானது முஸ்லிம் பெண்களை சீரழித்து விடுவதாகும். அதன்மூலம் தமது கனவுகளை நனவாக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதை கடந்த இதழில் நோக்கினோம்.......
இவள் இல்லாமல் இந்த சமூகம் இருக்க முடியாது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இவளை சுற்றி இருக்கும். கண்ணியமான இஸ்லாமிய சூழலில் வளர்ந்த இவள் மார்க்கத்தை விரும்புபவள், அல்லாஹ்விற்கு வழிபடுபவள். அல்லாஹ்வை தனதிரட்சகனாகவும், இஸ்லாத்தை தனது மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் ஏற்றுக் கொண்டவள்.
எமது பாதைகளில் எங்கிருந்து எமது பயணத்தை ஆரம்பிப்பது?
எமக்கு எத்தகைய கட்டுச்சாதனங்கள் தேவை என்பதை விளங்கிக் கொள்வதற்கு சென்ற இதழில் நாம் நோக்கியவிசயங்கள் போதுமானது. இவ்விதழில் இன்னும் சில விசயங்கள் நோக்குவோம்.
எமது சமூகத்தில் ஒரு பெண்ணின் பெறுமானம் என்ன? அவள் இந்த சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணி என்ன? அவள் தன்னை சூழ இடம்பெறுகின்ற நிகழ்வுகளை எதிர்கொள்ள தயாராக இருக்கிறாளா?அந்த நிகழ்வுகளுக்கு முன்னால் தனது பொறுப்புக்களை பொறுமையுடன் சுமந்து செல்ல தயாராக இருக்கிறாளா? போன்ற பல கேள்விகள் இன்றைய எமது சமூகத்தை நோக்கும்போது எழுகின்றன.
எமது முஸ்லிம் பெண்களின் கவனத்தை திசை திருப்புவதற்கும் அவர்களது செயற்பாடுகளை சீரழிப் பதற்கும் பல சக்திகள் செயற்பட்டுக் கொண்டிருக்கின் றன. அந்த சக்திகளை எதிர்கொள்வதில் எமது பெண்கள் பல வகையினராக காணப்படுகின்றனர். அவ்வகையினர்களைப் பற்றி நாம் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்.
1. பாரம்பரிய பெண்
இவள் தன்னை சீரான முறையில் உருவாக்கிக் கொள்ளாதவள், சரியான பாதையை அறிந்துகொள்வதற் காக இஸ்லாத்தின் வழிகாட்டல்களை பெற்றுக் கொள்ளா தவள், பாரம்பரிய வழிமுறைகளில் வளர்ந்தவள். வழக்கா றுகளை கண்ணியப்படுத்துபவள், சூழலுடன் ஒன்றித்துச் செல்பவள்.
இவளது சிந்தனை, நம்பிக்கை, பண்பாடு போன்றன அவள் இஸ்லாத்தை வெறுக்கின்ற ஒரு சமூகத்தில் தோன்றவில்லை என்பதை காட்டுகின்றது. இவள் சில கிரியைகளை நிறைவேற்றுகின்றாள். இவளது இந்த செயற்பாடுகளுக்குக் காரணம் இஸ்லாத்தை சரியான முறையில் விளங்காமையாகும்.
இவ்வாறான பெண்கள் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றனர். இவர்கள் பிரச்சினைகளுக்கும் சவால்களுக்கும் முகங்கொடுக்க மாட்டார்கள். கஷ்டங் களைத் தாங்கிக் கொள்ளமாட்டார்கள். ஒரு நவீன சிந்தனை கொண்ட மனிதனை திருமணம் முடித்தால் அவனது நடத்தைக்குப் பின்னால் சென்றுவிடுவார்கள். அவனது நம்பிக்கை, அறிவு போன்றவற்றால் தாக்கமடைவார்கள்.
2. குழம்பிய பெண்
இவள் மார்க்கத்தில் சில விடயங்களை மட்டும் அறிந்துகொண்டிருப்பவள். இவளுக்கு பலமான ஈமான் மார்க்கம் பற்றிய சரியான தெளிவு போன்றன கிடைக்காவிட்டால் சவால்களை எதிர்கொள்வதில் மிகவும் சிரமப்படுவாள். இவளை இஸ்லாத்தின் எதிரிகள் மிக நன்றாக பயன்படுத்திக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் இருக்கின்றது. நாகரிகம், ஆடம்பரம், சொகுசான வாழ்க்கைக்கு இவள் இலகுவாக ஈர்க்கப்படுவாள்.
இவள் நாகரிக வாழ்க்கைக்கும் இஸ்லாம் கூறுகின்ற விதமான வாழ்க்கைக்குமிடையே அல்லல்படுவாள். உண்மையில் இஸ்லாம் உலகை வெறுத்தொதுக்க வேண்டுமென்றோ அல்லது அத்துமீறி அனுபவிக்க வேண்டுமென்றோ கூறவில்லை. மாற்றமாக அல் லாஹ்வை மறந்து உலக வாழ்வில் மூழ்கிவிடுவதையே தடுக்கின்றது. இஸ்லாம் வறுமையில் வாழவேண்டு மென்று கூறவில்லை. மாற்றமாக ரஸூல் (ஸல்) அவர்கள் வறுமையிலிருந்தும் குப்ரிலிருந்தும் பாது காப்புத் தேடியிருக்கின்றார்கள்.
ஐரோப்பாவைச் சேர்ந்த ஒருவர் நான் இஸ்லாத்தை நேசிக்கின்றேன். அதனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கின்றேன். ஆனால், நான் விமானத்தில் பயணம் செய்வதற்கும் நவீன உணவகங்களில் சாப்பிடுவதற்கும் ஆசைப்படுகின்றேன். இவற்றிற்கு இஸ்லாத்தில் அங்கீகாரமில்லை என்பதைத் தான் என்னை சிந்திக்க வைக்கின்றது என்று கூறுகிறார்.
உண்மையில் இவர் இஸ்லாத்தின் எதிரிகளின் பிரச்சாரத்தில் சிக்கிக் கொண்டுள்ளார். இஸ்லாம் அவர் கூறிய ஆசைகள் எதனையும் மறுக்கவில்லை. மாற்றமாக வீண்விரயம் செய்வதையே தடுத்துள்ளது. அல்குர்ஆன் இது பற்றி தெளிவாகவே கூறியிருக்கின்றது.
உண்பதும் பருகுவதும், உறங்குவதும் என்ற குறுகிய வட்டத்தில் மனித வாழ்வு சுருக்கிவிட இஸ்லாம் விரும்பவில்லை. அதற்கும் அப்பால் இவ்வுலக வாழ் விற்கு ஒரு நோக்கம் இருப்பதை இஸ்லாம் தெளிவுபடுத் துகின்றது. உலக இன்பங்களை ஹலாலான முறையில் அனுபவிப்பதை இஸ்லாம் தடை செய்வில்லை. உலகையும் மறுமையையும் இணைத்து பேசுகின்ற இஸ்லாத்தை சரியாக புரிந்துகொள்ளாமையே இத்தகைய தவறான மனப்பதிவுகளுக்குக் காரணமாகும்.
3. வாழும் சூழலைவிட்டு வெளியேற வேண்டியவள்
இவள் ஐரோப்பா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வாழ்கின்றவள். இவளது சூழலில் நிறைய சிக்கல்களை எதிர்கொள்கிறாள். இவள் மார்க்க விடயங்களில் உறுதியுடன் வாழ வேண்டும். இஸ்லாத்தின் வழிகாட்டல் களைப் பின்பற்றுவதற்கு கடுமையான பொறுமையைக் கைக்கொள்ள வேண்டும். இவள் வழிகெடாதிருப்பதற்கு அகீதா பண்பாடு நடத்தை போன்றவற்றில் தொடர்ந்து பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். இல்லாதபோது இவள் நாகரீக மோகத்தினுள் சிக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.
4. நவீன பெண்
இவள் தன்னைச் சூழ இருக்கின்ற சூழலால் கவரப்பட் டவள். நாகரிக மோகங்களுக்குப் பின்னால் செல்பவள். நாகரிகத்தைத் தவிர வேறெதனையும் பொருட்படுத்த மாட்டாள். பாரம்பரியங்களை பின்னடைவென்றும் முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கின்றதென்றும் கூறுவாள். தன்னை அலங்கரித்துக் கொள்ள கண்ணாடி முன்னால் பல மணித்தியாலங்களை செலவிடுவாள். ஆனால், தன்னைப் படைத்த இறைவனுக்கு முன்னால் சில நிமிடங்கள் நிற்பதற்கும் பின்வாங்குவாள். ஆண்களின் கைகளில் விளையாட்டுப் பொருள்போல் இவள் இருப்பாள். ஒரு நல்ல தாயாக, மனைவியாக, சகோதரி யாக வாழ்வதற்கு தயாராக இருக்க மாட்டாள்.
5. தஃவா பாதையிலுள்ள பெண்
இஸ்லாமிய தஃவாப் பணியை மேற்கொள்ளும் இவள்தான் இந்த சமூகத்தின் வாசனைமிக்க வசந்தம். இவள் இல்லாமல் இந்த சமூகம் இருக்க முடியாது. அல்லாஹ்வின் பாதுகாப்பு இவளை சுற்றி இருக்கும். கண்ணியமான இஸ்லாமிய சூழலில் வளர்ந்த இவள் மார்க்கத்தை விரும்புபவள், அல்லாஹ்விற்கு வழிபடுபவள். அல்லாஹ்வை தனதிரட்சகனாகவும், இஸ்லாத்தை தனது மார்க்கமாகவும், முஹம்மத் (ஸல்) அவர்களை நபியாகவும் ரஸூலாகவும் ஏற்றுக் கொண்டவள். இவளது வீடு, கணவன், பிள்ளைகள், பணம் போன்ற அனைத் தையும் அமானிதம் என்று கருதுபவள். அதனை நிறை வேற்றுவதற்காக கஷ்டங்களையும் சோகங்களையும் சகித்துக் கொள்பவள். கண்மூடித்தனமாக எதனையும் பின் பற்ற மாட்டாள். வரலாற்றில் தோன்றிய தியாகப் பெண் களை தனது முன்மாதிரியாக ஏற்றுக் கொள்வாள்.
இதுதான் எமது யதார்த்த உலகம். இதனைப் புரிந்து கொண்டால்தான் நாம் எமது பாதையை சரியாக விளங்கிக் கொள்ள முடியும். அப்பாதையில் எமது பயணத்தை தொடர முடியும்.
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer