அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம்.

‘லாயிலாஹ இல்லல்லாஹ்’ (வணக்கத்திறகுரியோன் அல்லாஹவைத்தவிர வேறு யாருமில்லை’ என்பதன் பொருள் என்ன ?
 குர் ஆனை.( தமிழ் ) விளங்கி ஓதுவோம்.
1. லாயிலாஹ : அல்லாஹ் அன்றி வணங்கப்படும் அனைத்தையும் நிராகரிப்பதாகும்.
2. இல்லல்லாஹ் : வணக்கவழிபாடுகளில் அல்லாஹ்வுக்கு யாரையும் இணையாக்காமல் அவனுக்கு மட்டுமே உரித்தாக்குவதாகும்.
‘லாயிலாஹ’ என்ற சொல்லில் மறுத்து விடுதல். ‘இல்லல்லாஹ்’ என்ற சொல்லில் உறுதிப்படுத்துதல் ஆகிய இரு அம்சங்களும் அடங்கியுள்ளனமுஸ்லிம்களில் இன்று  பலர்  தர்ஹாவிற்கு  சென்று அங்கு  இறந்து  போன அவ்லியாக்களிடம் நேரடியாக தங்களுடைய தேவையை கேட்பதும், நேர்ச்சைகள் செய்வதும் அவர்களுக்காக விழா எடுப்பதும் அதற்கு ஆலிம்கள் எனப்படுவோர் இணைவைக்கும் இச்செயலை கண்டிக்காமல் அதனைக் கண்டும் காணாதது போல் இருப்பதும் மிக வேதனையானது.

    நபி (ஸல்) கூறினார்கள்,"யஹுதிகளையும், நஸாராக்களையும் அல்லாஹ் சபித்துள்ளான். அவர்கள் தங்களது நபிமார்களுடைய கபுருகளை வணக்கஸ்தலமாக்கி விட்டனர்." (புகாரி) நபிமார்களுடைய சமாதிகளையும், வலிமார்களுடைய சமாதிகளையும் கெளரவிக்கும் விஷயத்தில் எல்லை மீறி அவர்களிடம் நம் தேவைகளை துவா செய்தால், அதனால் சமுதாயத்தில் 'ஷிர்க்' என்னும் மாபாதகம் நடந்தேரும். மேலும் அல்லாஹ்வின் கோபத்துக்கும், சாபத்துக்கும் உள்ளாக நேரிடும் என்பதை உணர்த்தவே மேற்கண்ட ஹதீஸ் அறிவுறுத்துகிறது.

   மற்றும் ஒரு ஹதீஸ் "அறிந்து கொள்ளுங்கள் உங்களுக்கு முன்பிருந்தோர் அவர்களது நபிமார்களுடைய அவர்களிடையே வாழ்ந்த நல்லடியார்களுடைய அடக்கஸ்தலங்களை வணக்கஸ்தலங்களாக ஆக்கினார்கள். ஆனால் நீங்கள் சமாதிகளை வணங்குமிடமாக்காதீர்கள். நிச்சயமாக நான் அதை விளக்கியுள்ளேன். இவ்வாறு கபுருள்ள இடங்களில் இறைவனை தொழவும் கூட நபி(ஸல்) அவர்கள் தடை செய்த நிலையில் உன்னத சமுதாயமென திருமறையால் புகழப்பட்ட முஸ்லிம்கள் இன்று தங்களது தேவைகளை தங்களது இறைவனிடம் கேட்க  வேண்டுமென்பதை  மறந்து  தம்மைப் போன்ற  சிருஷ்டிகளின் கல்லறைகளில்  மண்டியிட்டு  முறையீடு செய்வது பற்றி என்னென்று சொல்வது?  அது அநாகரிகமில்லையா? அது  இறைவனுக்கு  இணை வைக்கும் 'ஷிர்க்'  ஆகுமா இல்லையா? என்பதை முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டும்.

   என்னுடைய அடக்கஸ்தலத்தை நீங்கள் உற்சவ ஸ்தலமாக்கி விடாதீர்கள். (நஸயீ) என்று இவ்வாறு கூறியிருக்கிறார்கள் என்றால், இன்று நமது சமுதாயத்தினரிடையே உள்ள பலர் அவுலியாக்களின் சமாதிகளிலும், தர்காக்களிலும் நடத்துகின்ற பேய் கூத்துகளுக்கு ஏதாகிலும் அர்த்தமுண்டா?

   திருமறையில் "முஷ்ரிக்குகள்" எனக் கூறப்பட்டவர்கள் ஏகத்துவத்தில் இணை வைப்பவர்களே. சூறே பாத்திஹாவில்
இய்யாக நஃபுது வஇய்யாக நஸ்தஈன் (உன்னையே நாங்கள் வணங்குகிறோம், உன்னிடமே நாங்கள் உதவி தேடுகிறோம். என்று அல்லாஹ் சொல்லித் தருகிறான். நிராகரிப்பதற்குச் சமமாகும் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். பெரும்பாலான முஸ்லிம்கள் இதர சமுதாயத்தினரைப் போலவே தங்கள் தேவைகளை வேண்டுதல்களை அவுலியாக்களின் சமாதிகளை நாடிச் சென்று சிரம் குனிந்து குறைபாடுகளை முறையிடுகின்றனர். இவர்களது முறையீடுகளை அந்த நல்லடியார்கள் செவியுருகிறார்களா? என்றால், அல்லாஹ் கூறுகிறான், (நபியே) நிச்சயமாக நீர் மரித்தோரைக் கேட்கும்படிச் செய்ய முடியாது. (27:80)

   பிரார்த்தனை அல்லது தேவைகளை முறையீடு செய்வது என்பதும் வணக்கமேயாகும். சிபாரிசு செய்யத் தகுதி பெற்றவர்கள் எனக் கருதி மறைந்த பெரியார்களின் விக்கிரங்களை அன்றைய அரபியர்கள் வணங்கியும், பிரார்த்தித்தும் வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் "பிரார்த்தனை வணக்கத்தின் மூளை" (அனஸ்(ரலி),திர்மிதீ. "பிரார்த்தனை என்பதே வணக்கம்தான்" (நூமானுபின் பஷீர்(ரலி), அஹ்மத், திர்மிதீ) மேலும் அல்லாஹ் திருமறையில் கூறுகிறான், என்னையே பிரார்த்தியுங்கள் நான் உங்களுக்கு பதிலலிக்கிறேன். (40:60)

   
"நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் அழைக்கிறீர்களோ, அவர்களூம் உங்களைப் போன்ற அடிமைகளே. (7:194)
    எவர் அவனையன்றி அழைக்கிறார்களோ, அவர்கள் இவர்களுக்கு எவ்வித பதிலும் தரமாட்டார்கள்.(13:14)
    அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேடவேண்டும், அவனிடம் மட்டும் தான் பிரார்த்தனை செய்யவேண்டும் எனவும் அல்லாஹ் திருமறையில் தெளிவுபட கூறுகிறான். மேலும் திருமறை கூறுகிறது.

    
இந்நிராகரிப்போர் நம்மை விட்டு விட்டு நம்முடைய அடியாளர்களை தங்களுக்கு உதவியாளர்களாக எடுத்துக் கொள்ளலாமென்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா? (18:102) என்று இறைவன் கேட்கிறான். சிலர் இந்த வசனம் விக்ரகங்களை வணங்கும் காபிர்களுக்கு இறங்கியது ஆகையால் முஸ்லிம்களுக்கு பொருந்தாது என தங்களது அறியாமையை வெளிப்படுத்துகின்றனர். இறைவன் இவ்வசனத்தில் நம்முடைய அடியார்கள் என்று குறிப்பிடுவதே மறைந்த மகான்களைத்தான் குறிக்கின்றது என்பதை உணரலாம்.

    இப்படிப்பட்ட  வசனங்கள்  மூலமாக  குர்ஆனில்  அல்லாஹ்  இட்ட  கட்டளைக்கு  நபி (ஸல்) அவர்கள் எப்படி விளக்கம் கொடுத்தார்களோ அப்படி நடக்க வேண்டும். அல்லாஹ்வோ, நம்முடைய நபியோ "வலிமார்களின் தர்காக்களுக்கு சென்று உங்கள் தேவைகளை கேளுங்கள் அவர்கள் கொடுப்பார்கள்" என்று எங்கேயும் சொல்லவில்லை. ஆனால் வாதத்துக்காக சிலர் குர்ஆனுக்கு தங்கள் இஷ்டம்போல் விளக்கம் கொடுத்து மக்களை வழிகெடுக்கிறார்கள்.

    மேற்கூறிய விளக்கங்களிலிருந்து அல்லாஹ் அல்லாத இறந்து போன அவ்லியாக்களிடம் தங்களுடைய தேவைகளுக்காக வேண்டுகோள் வைப்பது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரண்பட்ட செயல். முஸ்லிம்களை வழிகேட்டின்பால் கொண்டு சென்று மன்னிக்கப்படாத குற்றத்திற்கு ஆளாக நேரிட்டு நரகத்திற்கே இட்டுச் செல்லும் என்பதை நினைவில் கொள்வோமாக!
இஸ்லாத்தின் கடவுள் கொள்கை 'லா இலாஹா இல்லல்லாஹ்' இதன் பொருள் 'வணக்கத்துக்குரியவன் இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை' என்பதாகும்.
   




Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

இதயங்களை வாழவைக்க உணவு முறையில் சில மாற்றம்

அஸ்ஸலாமு அழைக்கும் ..வராஹ்..


இதயங்களை வாழவைக்க....( குடும்பத்தினரை )
நம் இதயம் வாழ்ந்தால் தான் அதை நீடிக்க முடியும் ,
நம் உணவு முறையில் சில மாற்றம் தேவை 
பொரித்தது ...கூடுதல் பயன் படுத்துவதையும் ,கொழுப்புள்ள (ரெட்மீட்டை)
குறைத்துக்கொண்டும் ..நடை பயிற்சி (அலுவலகத்துக்குள் வேலை செய்பவர்கள் )
கூடுதலகவும் உடல் பயிற்சி செய்து ஆரோக்கியமாக வாழ பழகுவோம் ....இன்ஷா அல்லாஹ்  



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வாழ்வியல் நெறியாக

துபாய்,ஆக31:பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்த பிரபல மார்க்க அறிஞர் உமர் ஃபெனல்பாரின் உரையை கேட்ட 122 பெண்கள் உள்ளிட்ட 125 பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்கள் இஸ்லாத்தை தங்கள் வாழ்வியல் நெறியாக அங்கீகரித்துள்ளனர்.

துபாய் டூரிஸம் அண்ட் கமர்ஷியல் மார்கட்டிங் துறையின் கீழ் அல்த்வாரில் உமர் ஃபெனல்பாரின் உரைநிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பிலிப்பைன்ஸில் இவருடைய உரையைக்கேட்டு ஒரேநாளில் 99 பேர் இஸ்லாத்தை தழுவியதுதான் சாதனையாக இருந்தது. பிலிப்பைன்ஸ் நாட்டைச் சார்ந்தவர்களை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்ததில் பெரும் பங்குவகித்தது ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த பெண்மணிகளாவர்.


செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

ஜெர்மனி இஸ்லாமிய அரசாக மாறும் : ஜெர்மனி அதிபர் மெர்கல்(இன்ஷா அல்லாஹ்)


பெர்லின் : ஜெர்மனியில் முஸ்லீம்கள் அதிகரித்து வருதல் மற்றும் ஜெர்மனியின் சமூக தளத்தில் அவர்களின் பங்களிப்பு குறித்து ஜெர்மானியர்களுக்கு தெளிவான பார்வை இல்லை என்றும் வருங்காலத்தில் சர்ச்சுகளை விட மசூதிகள் அதிகம் இருக்க போகும் யதார்த்தத்தை ஜெர்மானியர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் அதிபர் மெர்கல் கூறியதாக ப்ராங்க்பர்டர் அல்லெஜெமின் ஜெய்துங் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் அவ்வறிக்கையில் மெர்கல் " நிச்சயமாக ஜெர்மனியின் சமூக தளம் மிகப் பெரும் மாறுதலை சந்தித்து வருவதாகவும் இனி வரும் காலங்களில் மசூதிகள் நம் வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் கூறினார். 45 இலட்சம் முஸ்லீம்கள் வாழும் ஜெர்மனியில் சமீபத்தில் திலோ சராஜின் எனும் அரசியல்வாதி முஸ்லீம்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்க மறுப்பதாகவும் குழந்தை பிறப்பின் மூலம் தங்கள் எண்ணிக்கையை அதிகரிப்பதாகவும் சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
அதற்கு பதிலளிக்கும் முகமாகவே ஜெர்மனி அதிபரின் அறிக்கை உள்ளதாக அரசியல் நோக்கர்கள் சுட்டி காட்டுகின்றனர். பிற ஐரோப்பிய தேசங்களை போல் விரைவில் ஜெர்மனியும்  இஸ்லாத்தின் இரும்பு கோட்டையாகும் என்றும் மெர்கல் குறிப்பிட்டார். மெர்கல் சொல்வதை போல் பிரான்ஸில் 20 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 30 % முஸ்லீம்களாகவும் பாரீஸ்போன்ற நகரங்களில் 45% மேலும் உள்ளது. இங்கிலாந்திலும் சுமார் 1000 மசூதிகள் உள்ளதாகவும் அதில் சில சர்ச்சுகளாக முன்னர் இருந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பெல்ஜியத்தில் பிறக்கும் குழந்தைகளில் சுமார் 50 % முஸ்லீம்களாக உள்ளனர். சமீபத்தில் லிபிய அதிபர் கடாபி ஐரோப்பா கத்தியின்றி, தோட்டாவின்றி, தீவிரவாதிகளின்றி விரைவில் இஸ்லாத்தை தழுவும் என்று குறிப்பிட்டதை மேற்காணும் புள்ளிவிபரங்கள் நிரூபிப்பதாக சமூகவியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
  thanks.www.inneram.com 



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

இஸ்லாத்தின்பால் அமெரிக்கப் பெண்கள்..

பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது.

தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர்.
பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது.
இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார்.
முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார்.
அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார்.
சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன.
அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;.லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது..
நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

உறவை பேணுங்கள்

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்தபோது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், 'என்ன?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன்''என்று கூறியது. 'உன்னை(உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்துகொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகிறவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா?' என்று கேட்டான். அதற்கு உறவு, 'ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ் 'இது (அவ்வாறுதான்) நடக்கும்'' என்று கூறினான். அறிவிப்பாளர் அபூஹுரைரா (ரலி), 'நீங்கள் விரும்பினால் '(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா?' எனும் (திருக்குர்ஆன் 47:22 வது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

1. எதையும் செய்யத் துவங்கும் பொது நீ என்ன கூறவேண்டும் ?
 

எதையும் செய்யத்துவங்கும்போது நான் பிஸ்மில்லாஹ் அல்லாஹ்வின் திருநாமத்தால் என்று கூறி ஆரம்பிப்பேன்.
 2. எதையேனும் செய்ய நாடினால்நீ
என்னகூறவேண்டும் ?
  

                                                                     நான் இன்ஷா  அல்லாஹ் நாடினால் என்று கூறுவேன்.

                                                                    3. எதையும் பாராட்டும் போது?

                                 மா
ஷா அல்லாஹ்- எல்லாம் அல்லாஹ்வின் நாட்டமே என்று புகழுவேன்
.
பிறர் எதையும் புகழும் போது நீ என்னகூறவேண்டும்?
  

சுப்ஹானல்லாஹ் -அல்லாஹ் மிகத் தூய் மையானவன்என்று கூறுவேன்.

5. இன்பத்திலும் துன்பத்திலும் நீ யாரை அழைப்பாய் ?

நான் யாஅல்லாஹ் -அல்லாஹ்வே என்று இறைவனைமட்டும் அழைப்பேன்.

6. பிறருக்கு நீ எவ்வாறு நன்றி 
கூறவேண்டும் ?
 

ஜஸாகல்லாஹ் -அல்லாஹ் நற்கூலி கொடுப்பானாக என்று கூறுவேன்.

7. தும்மினால் நீ என்ன 
கூறவேண்டும் ?
  ?

தும்மினால் நான் அல்ஹம்துலில்லாஹ்- எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே என்று கூறுவேன்.

8. பிறர் தும்மி அவர் அல்லாஹ்வைப் புகழுந்தால் நீ என்
கூறவேண்டும் ?
 

யர்ஹமுகல்லாஹ் -அல்லாஹ் அருள் பாவிப்பானாக என்று அவருக்காக பிராத்திப்பேன்.

9. நாம் தும்மி நமக்காக பிறர் துஆச் செய்தால் நீ என்னகூறவேண்டும் ?
 
யஹ்தீகு முல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலகும்.அல்லாஹ் உம்மை நேர்வழிப் படுத்தி உமது எல்லா செயல்களையும் சீர்படுத்துவானாக என்று கூறுவேன்.

10. நீ செய்த தவறை நினைத்து வருந்தும் போது என்ன கூறவேண்டும்
 

அஸ்தஃபிருல்லாஹ் -அல்லாஹ் பிழை பொறுப்பானாக என்று கூறுவேன்.

11. நாம் சத்தியம் செய்தால் எவ்வாறு கூறவேண்டும் ?

வல்லாஹி பில்லாஹ் -அல்லாஹ்வின் மீது ஆணையாக என்று கூறவேண்டும்.

12. யார் மீதும் அன்பு பாராட்டும் போது நீ எவ்வாறு கூறவேண்டும்
 

லிஹூப்பில்லாஹ் -அல்லாஹ்வின் அன்பிற்காக என்று கூறுவேன்.

13. பிறரிடமிருந்து விடை பெறும் போது எவ்வாறு நாம் கூறவேண்டும் ?

ஃபீஅமானில்லாஹ்- அல்லாஹ்வின் அடைக்கலத்தில் என்று கூறி விடைபெறுவேன்.

14. நமக்கு ஏதும் பிரட்சினைகள் ஏற்பட்டால் நாம் என்ன கூறவேண்டும் ?

தவக்கல்த்து அலல்லாஹ் -அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தேன்.

15. நாம் விரும்பியது நடந்தால் என்ன கூறவேண்டும் ?

ஃபதபாரகல்லாஹ் -அல்லாஹ் உயர்வானவன் என்று கூறவேண்டும்.

16. நாம் விரும்பாத ஒன்று நடந்து விட்டால் என்ன கூறவேண்டும் ?

நஊதுபில்லாஹ் - அல்லாஹ்விடம் காவல் தேடுகிறோம் என்று கூறவேண்டும்.

17. திடுக்கிடக் கூடிய அளவில் ஏதேனையும் நீ அறியும் போது என்ன கூறவேண்டும்
 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் .

நாம் அல்லாஹ்விடமே வந்தோம் மேலும் அவனிடமே திரும்புபவர்களாக உள்ளோம் என்று கூறுவேன்.

18. தூக்கத்திலிருந்து விழித்துக் கூறப்படுபவை ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அஹ்யானா பஃதமா அமாதனா வஇலைஹின் னுஷூர்.

பொருள்: நம்மை மரணிக்கச் செய்த பின் நமக்கு உயிர் கொடுத்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும் உரித்தாகுக.

19. ஆடை அணிகிற போது (கூறப் படும்) துஆ?

அல்ஹம்து லில்லாஹில் லதீ கஸானீ ஹாதா(ஸ்ஸவ்ப) வரஜகனீஹி மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வதின்.

பொருள்: இந்த ஆடையானதை அவனுடைய உதவியொடு என்னிடமிருந்து எவ்வித பிரயாசை மற்றும் எவ்வித சக்தியுமின்றி எனக்கு அணிவித்து, அதனைஎனக்கு அளித்தவனுமாகிய அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும் உரித்தாகுக.

20. புத்தாடை அணியும் போது (கூறப்படும்) துஆ ?

அல்லாஹூம்ம லகல் ஹம்து அன்த கஸவ்தனீஹி அஸ்அலுக மின் கைரிஹி

வகைரி மாஸூனிஅ லஹூ வ அஊதுபிக மின் ஷர்ரிஹி வஷர்ரி மா ஸூனி அலஹூ.


பொருள் : யாஅல்லாஹ் புகழ் அனைத்தும் உனக்கே உரியது, நீதான் எனக்கு அதை அணிவித்தாய், அதன் நன்மை மற்றும் எதற்காக அதை தயார் செய்யப்பட்டதோ அதன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் இன்னும் அதன்தீமை மற்றும் எதற்காக அதைத்தயார் செய்யப்பட்டதோ அந்தத் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாக்கத் தேடுகிறேன்.

21. தன்னுடைய ஆடையை அவர் கலையும் போது அவர் கூறவேண்டியது?

பிஸ்மில்லாஹ்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால்...

22. கழிவறையில் நுழைகின்ற போது துஆ?

(பிஸ்மில்லாஹி) அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக மினல் குபதி வல் கபாயிதி

பொருள் : (அல்லாஹ்வின் பெயரால) பிரவேசிக்கறேன் யாஅல்லாஹ் ஆண் ஷைத்தான் பெண் ஷைத்தான்களி(ன்தீமையி)லிருந்து உன்னைக் கொண்டு நிச்சயமாக நான் பாதுகாவல் தேடுகிறேன்.

23. வுளுச் செய்யுமுன் கூறப்பட வேண்டியது?

பிஸ்மில்லாஹி

24. வுளுவை முடித்துக் கொண்ட பின் கூறப்பட வேண்டியது?

அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹூ வஹ்தஹூ லாஷரீக லஹூ வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹூ வரஸூலுஹூ

பொருள் : வணங்கப்படுபவன் அல்லாஹ்வையன்றி (வேறு எவரும், எதுவும்) இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையில்லை என்று நான் சாட்சி கூறுகிறேன் இன்னும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் அவனுடைய (உரிய) அடியார் மற்றும் அவனுடைய தூதர் எனசாட்சி கூறுகிறென்.

25. வீட்டிலிருந்து புறப்படும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி வலா ஹவ்ல வலா குவ்த இல்லாபில்லாஹி.

பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (புறப்படுகிறேன், என் காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) அல்லாஹ்வின் மீது நம்பிக்கைவைத்து விட்டேன் மேலும், அல்லாஹ்வைக் கொண்டல்லாது (பாவத்திலிருந்து) திரும்புதலும்.(நன்மை யானவற்றைச் செய்வதற்கு) சக்தியுமில்லை.

26. வீட்டினுள் நுழையும்போது நாம் என்ன கூறவேண்டும்?

பிஸ்மில்லாஹி வலஜ்னா,வபிஸ்மில்லாஹி கரஜ்னா, வஅலா ரப்பினாதவக்கல்னா.

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் நுழைந்தோம் அல்லாஹ்வின் பெயரைக் கொண்டே புறப்படுவோம் நம்முடைய இரட்சகனின் மீது (நம்முடைய காரியங்களை முழுமையாக ஒப்படைத்து) நம்பிக்கையும் கொண்டிருக்கிறோம்.

27. பாங்கின் போது கூறப்படுபவை?

ஹய்ய அலஸ்ஸலாதி மற்றும் ஹய்ய அலல் ஃபலாஹி என்பது நீங்கலாக பாங்கு

கூறுபவர் போன்றே (செவியேற்பவரான) அவர் கூறுவார். (இவ்விரு வார்த்தைகளை செவியேற்கின்றபோது) லாஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹி என்று அவர் கூறுவார்.

28. காலை மற்றும் மாலையில் கூறப்படுபவை?

அல்ஹம்துலில்லாஹி வஹ்தஹூ, வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா மன்லா நபிய்ய பஃதஸூ.

பொருள் : புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே அவன் தனித்தவன்(அல்லாஹ்வின்) அருளும், சாந்தியும் அவர்களுக்கு பின் நபியில்லையே அத்தகையவர்களின் மீது உண்டாவதாக.

29. தூக்கத்தில் திடுக்கம் மற்றும் பயங்கரத்தால் பாதிக்கப்பட்டவருக்கு துஆ?

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஃகளபிஹி வஇகாபிஹி, வஷர்ரி இபாதிஹி, வமின்ஹமஜாத்திஷ் ஷையாத்தீனி, வஅன்யஹ்ளுருன்.

பொருள் : அல்லாஹ்வின் பரிபூரணமான வாக்குகளைக் கொண்டு - அவனின் கோபம், அவனின் தண்டனை அவனுடைய அடியார்களின் தீமை ஆகியவற்றிலிருந்தும் இன்னும் ஷைத்தான்களின் தூண்டுதல்கள் மற்றும் அவர்கள் என்னிடம் ஆஜராகுவதிலிருந்தும் நான் காவல் தேடுகிறேன்.

30. தொழுகை மற்றும் ஓதலில் (ஷைத்தானின்) ஊசலாட்ட(த்தை நீக்க) துஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று கூறி உம்முடைய இடப்பக்கம் மூன்று முறை துப்புவீராக.

31. நோயாளருக்காக (அவரை நலம் விசாரிக்கையில் ) ஓதும் துஆ?

லா பஃஸ தஹூருன் இன்ஷா அல்லாஹ்.

பொருள்: எந்தக் குற்றமும் இல்லை, அல்லாஹ் நாடினால் (இந்நோயினால் உங்களுக்கு பாவம்) பரிசுத்தமாகும்.

32. காற்று வீசுகின்ற போது ஓதும் துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஸ் அலுக கைரஹாஈ வ அஊது பிக மின்ஷர்ரிஹா.

பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக அ(க் காற்றான)தன் நன்மையை உன்னிடம் நான் கேட்கிறேன் அதன் தீமையிலிருந்தும் உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன்.

33. இடி இடிக்கின்ற போது ஓதும் துஆ?

ஸூப்ஹானல்லதீ யுஸப் பிஹூர் ரஃது பிஹம்திஹி, வல்மலாயிகத்து மின் கீஃபதிஹி.

பொருள் : அவன் தூயவன், அவன் எத்தகையவனென்றால் அவனின் புகழைக் கொண்டு இடி துதிக்கிறது. மற்றும் மலக்குகள் அவனின் பயத்தால் துதிக்கின்றனர்.

34. நோன்பு திறந்தபின் ...

தஹபழ் ழமஉ, வப்தல்லதில் உருக்கு, வதபத்தல் அஜ்ரு இன்ஷாஅல்லாஹ்.

பொருள் : தாகம் தனிந்தது, நரம்புகளும் நனைந்து விட்டன, அல்லாஹ் நாடினால் கூலியும் கிடைக்கும்.

35. உணவுக்கு முன்னர் துஆ?

உங்களில் ஒருவர் உணவு உண்டால் (1) பிஸ்மில்லாஹ் என்று கூறவும் அதன் ஆரம்பத்தில் கூற அவர் மறந்து விட்டால் (2)பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வ ஆகிரிஹி என அவர் கூறவும்.

பொருள் : (1) அல்லாஞ்வின் பெயரால் (உண்கிறேன்). (2) அதன் தொடக்கம் அதன் முடிவு ஆகியவற்றில் பிஸ்மில்லாஹ்.

36. உணவை உண்டு முடித்தபின் துஆ?

அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனீ ஹாதா வரஜகனீஹி, மின் ஃகைரி ஹவ்லின் மின்னீ வலா குவ்வத்தின்.

பொருள்: என்னிலிருந்துள்ள முயற்சி மற்றும் என்பலமின்றி எனக்கு இதை உண்ணக் கொடுத்து அதை வழங்கவும் செய்தவனாகிய அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக.

37. உணவளித் தவருக்காக விருந்தாளியின் துஆ

அல்லாஹூம்ம பாரிக் லஹூம் ஃபீமா ரஜக்தஹூம், வஃக் ஃபிர்லஹூம் வர்ஹம் ஹூம்.

பொருள் : யாஅல்லாஹ் அவர்களுக்கு நீ வழங்கியவற்றில் அவர்களுக்கு நீ பரகத்துச் செய்வாயாக, அவர்களுக்கு நீ பாவம் பொருத்தருளவும் செய்வாயாக, அவர்களுக்கு நீ அருளும் செய்வாயாக,

38. நோன்பாளர் - அவரை எவராவது ஏசினால் அவர் கூற வேண்டியது?

இன்னீ ஸாயிமுன் இன்னீ ஸாயிமுன்.

பொருள் : நிச்சயமாக நான் நோன்பாளன், நிச்சயமாக நான் நோன்பாளன்.

39. கோபம் நீங்கதுஆ?

அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்.

பொருள் : எறியப்பட்ட ஷைத்தானி(ன்தீமையி)லிருந்து அல்லாஹ்வைக் கொண்டு காவல் தேடுகிறேன்.

40. இணை வைப்பதிலிருந்து பயந்ததற்கு துஆ?

அல்லாஹூம்ம இன்னீ அஊது பிக அன் உஷ்ரிக பிக வஅன அஃலமு,

வஅஸ்தஃக்ஃபிருக லிமா லா அஃலமு.


பொருள்: யாஅல்லாஹ் நிச்சயமாக நான், அறிந்து கொண்டே உனக்கு இணைவைப்பதிலிருந்து உன்னைக் கொண்டு நான் காவல் தேடுகிறேன், நான் அறியாதவற்றுக்காக உன்னிடம் பாவம் பொருத்தருளவும் தேடுகிறேன்.

41. அல்லாஹ் உமக்கு பறகத்துச் செய்வானாக என்று கூறியவருக்கு துஆ?

வ ஃபீக பாரகல்லாஹ்.

பொருள் : அல்லாஹ் உம்மிலும் பரகத்துச் செய்வானாக.

42. பிரயாணத்தில் செல்லுகையில் தக்பீர் மற்றும் தஸ்பீஹ் கூறுதல்?

நாங்கள் (மேட்டுப்பகுதியில்) ஏறுகின்ற போது (அல்லாஹூஅக்பர் எனத்) தக்பீர் கூறுவோராக, (பள்ளத்தில்) இறங்குகின்ற போது(ஸூப்ஹானல்லாஹ் எனக் கூறி) தஸ்பீஹ் செய்பவர்களாகவும் இருந்தோம் என ஜாபிர்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

44. திடுக்கத்தின் போது கூறப்படுவது?

லாயிலாஹ இல்லல்லாஹூ

பொருள் :வணங்கப்படுபவன் அல்லாஹ்வையின்றி (வேறு) இல்லை.


45. அல்லாஹ்வுக்கு மிக விருப்பமான நாவிற்கு மிக சுலபமான மறுமையில் தராசு தட்டில் மிக கனமான இரு வார்த்தைகள்?

சுபுஹானல்லாஹி வபிஹம்திஹி சுபுஹானல்லாஹில் அளீம்.

பொருள் : பரிசுத்தமானவன் அல்லாஹ் புகழுக்குரியவன், மிகத் தூய்மையானவன் மகத்துவமிக்கவனாவான்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

இறைவன் நாடினால் .........


உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.
وَمَا جَعَلَهُ اللَّهُ إِلَّا بُشْرَى وَلِتَطْمَئِنَّ بِهِ قُلُوبُكُمْ وَمَا النَّصْرُ إِلَّا مِنْ عِنْدِ اللَّهِ إِنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

"எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே!
அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே ..... ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?தாய் வளர்த்த விதம் தான் அவர்கள் வாழ்க்கை முழுவதும் பிரதிபலிக்கும்.வளர்ப்பினிலே!"



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

முயற்சியே முன்னேற்றதிற்கு வழி.....

முயற்சியே முன்னேற்றதிற்கு வழி..... பல ஆண்கள் தங்கள் திறமைக்கு ஏற்ற தொழில் கிடைத்ததும் அதுவே போதும் என்று தொழில் செய்வதிலும் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதிலுமே காலத்தை செலவிடுகின்றனர். இதில் எந்தவித முன்னேற்றமும் இருக்காது. நிச்சயம் தாம் இருக்கும் நிலையிலிருந்து உயர் நிலைக்குச் செல்ல வேண்டும் என்றே ஒவ்வொரு நிமிடமும் சிந்திக்கவேண்டும். வீணாக காலத்தை நண்பர்களுடன் அரட்டை அடிப்பதில் செலவிடாது தமது தொழிலில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடவேண்டும். நேரம் கிடைக்கும்போதெல்லாம் படிக்கலாம். மேலதிக பட்டப்படிப்பைப் தொடரலாம். இன்றைய இளைஞர்கள் பலபேர் படித்து முடிந்ததும் தொழில் தேடுவது... அதுவரை தமது பயணம் முடிந்து விட்டதாக கருதுகின்றனர். அதன் பின் திருமணம், குழந்தைகள் என்று பெண்களைப் போலவே ஒரு வட்டத்திற்குள் இருக்க நினைக்கின்றனர். இதைவிடுத்து எதையாவது சாதிக்கவேண்டும். எத்துறையிலாவது பிரகாசிக்கவேண்டும் என்று செயற்பட்டால் என்ன? ஒரு சிறு வெற்றி கிடைத்தாலும் அது பெரிய விடயம்தானே...?


எல்லாவற்றையும் விட நல்லவராக இருக்க முயற்சி செய்யுங்கள். முதலில் வீட்டில் நல்லவராக இருங்கள். பெற்றோருக்கு அன்பான பிள்ளையாக, மனைவிக்கு ஆசைக் கணவனாக, குழந்தைக்கு பொறுப்புள்ள தந்தையாக இருங்கள். பின் உங்கள் பெருமை தானாக வெளியில் பரவும். நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் நேர்மையாக இருங்கள். எப்போதும் உண்மையைப் பேசுங்கள். மற்றவர்கள் மதிப்பை சம்பாதித்துக் கொள்ளவேண்டும். உங்கள் நடவடிக்கையைப் பார்த்தே பிறர் உங்களை மதிப்பர். எனவே நல்ல முறையில் நடந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். அனைவரையும் மதிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். யாராவது சின்ன அறிவுரை சொன்னாலும் கூட கேட்கத் தவறாதீர்கள்.


எடுக்கும் சம்பளப் பணத்தை வீணாக செலவழிக்காது ஒரு திட்டம் தீட்டி செலவிடப்பாருங்கள். நாம் எதையாவது ஒன்றைப் பெறவேண்டுமானால் ஏதாவது ஒன்றை இழந்துதான் ஆக வேண்டும். எனவே, சிக்கனப்படுத்தி உங்கள் முன்னேற்றத்திற்கு ஏற்ற செலவுகளை மட்டும் செய்யுங்கள். இன்றைய ஆண்களுக்குரிய மிகப் பெரிய மைனஸ் பொயின்ட் அவர்களது கோபம். அதனால் எண்ணற்ற பல வாய்ப்புகளை தவறவிடுகின்றனர். எப்போதும் பொறுமையை கடைபிடிக்க முயற்சிசெய்யுங்கள். உங்கள் வழியில் தெளிவு ஏற்படுமளவிற்குச் செயற்படுங்கள்.


எச்சந்தர்ப்பத்திலும் நம்பிக்கையை இழக்கவேண்டாம். எத்தனை சரிவுகள் வந்தாலும் எடுத்த கருமத்திலிருந்து பின்வாங்க வேண்டாம். நீங்கள் இருக்கும் துறையிலேயே நீங்கள் முன்னுக்கு வரலாம். தொடர்ந்து முயற்சி செய்து, காலத்தை வீணடிக்காது, உங்கள் குறிக்கோளையே சிந்தித்து, வேறு எண்ணங்கள் இல்லாது செயற்பட்டால் வெற்றி நிச்சயம்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

மதுக்கூர் அன்பர்களின் நண்பன்

108. (நபியே!) நீர் சொல்வீராக! "இதுவே என்னுடைய (நேரிய) வழியாகும்; நான் அல்லாஹ்வின் பால் (உங்களை) அழைக்கின்றேன்; நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான ஞானத்தின் மீதே இருக்கின்றோம்; அல்லாஹ் மிகத் தூய்மையானவன்; ஆகவே, அவனுக்கு இணைவைப்போரில் நானும் ஒருவனல்லன்."



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini