அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

உறுதியான ஏகத்துவ நம்பிக்கை !!!

 'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)
    இறைவனின் கட்டளைகளை மீறி அவனுக்கு மாறுசெய்தோர் விசாரிக்கப்படுவது போல் மனிதர்களுக்கு அநீதி இழைத்தவர்களும் விசாரிக்கப்படுவார்கள். இதன் காரணமாகத்தான் 'யவ்முல் ஃபஸ்ல்' நியாயத்தீர்ப்பு நாள் என்று இங்கே இறைவன் குறிப்பிடுகிறான்.
    இறைவனுக்கு செய்யும் கடமைகளில் தவறியது, மனிதனுக்குச் செய்யும் கடமைகளில் மறந்தது ஆகிய இரண்டு குற்றங்களைப் பற்றியும் எவ்வாறு விசாரணை நடைபெறும்? எவ்வாறு தீர்ப்பு வழங்கப்படும்? என்று நபி (ஸல்) விளக்கமாகக் கூறியுள்ளனர்.
    யாரேனும் தம் சகோதரர்களுக்கு மானம் அல்லது பொருட்கள் சம்பந்தமாக அநீதி இழைத்திருந்தால் தங்கக்காசுகளோ, வெள்ளிக் காசுகளோ பயனளிக்காத நாள் வரும் முன் இன்றே பாதிக்கப்பட்டவரிடம் பரிகாரம் தேடிக் கொள்ளட்டும். இவரிடம் ஏதேனும் நல்லறம் இருந்தால் இவர் செய்த அநீதியின் அளவுக்கு அந்த நல்லறம் எடுக்கப்படும். பாதிக்கப்பட்டவருக்கு வழங்கப்படும். இவரிடம் நன்மைகள் ஏதுமில்லாவிட்டால் இவரால் பாதிக்கப்பட்டவரின் தீமைகள் எடுக்கப்பட்டு இவர்மேல் வைக்கப்படும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி)
    (அனைத்தையும்) இழந்தவன் யார் என்பது உங்களுக்கு தெரியுமா? என்று நபி (ஸல்) கேட்டனர். 'யாரிடம் காசோ ஏனைய சொத்துக்களோ இல்லையோ அவர்தான்' என்று நபித்தோழர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் 'இழந்தவன் யாரெனில்' தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகிய கடமைகளை நிறைவேற்றிவிட்டு ஒருவனைத் திட்டியவனாக இன்னொருவன் மேல் அவதூறு கூறியவனாக மற்றொருவனின் பொருளைச் சாப்பிட்டவனாக வேறொருவனின் இரத்தத்தை ஓட்டியவனாக, இன்னொருவனை அடித்தவனாக மறுமைநாளில் வருவான். பாதிக்கப்பட்ட ஒவ்வொருவனுக்கும் இவனது நன்மைகள் வழங்கப்படும். கணக்குத் தீர்வதற்கு முன்னால் இவனது நன்மைகள் முடிந்து விட்டால் பாதிக்கப்பட்டவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவன் மேல் வீசப்படும். பின்னர் நரகத்தில் இவன் வீசப்படுவான்' என்று விளக்கினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    (உங்களால் அநீதி இழைக்கப் பட்டவர்களுக்கு) உரிய கடமைகள் மறுமை நாளில் நீங்கள் நிறைவேற்றுவீர்கள். கொம்பு இல்லாத ஆட்டுக்காக கொம்புள்ள ஆடு (முட்டியதற்காக) கணக்குத் தீர்க்கப்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களின் முன்னால் வந்து அமர்ந்தார். 'அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில அடிமைகள் உள்ளனர். அவர்கள் என்னை நம்புவதில்லை. எனக்கு மாறுசெய்கின்றனர். துரோகம் செய்கின்றனர். எனவே அவர்களை நான் அடிக்கிறேன் திட்டுகிறேன். (மறுமையில்) அவர்களுடன் எனது நிலை எவ்வாறு இருக்கும்?' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் அவர்கள் உனக்குச் செய்த மாறுபாடு, துரோகம் ஆகியவையும் அவர்களைத் தண்டித்ததும் கணக்கிடப்படும். அவர்களின் குற்றங்களின் அளவுக்கு உன் தண்டனை இருந்தால் இரண்டும் சரிக்குச் சரியாகி விடும். உனக்கு லாபமோ நட்டமோ இராது. அவர்கள் செய்த குற்றங்களை விட நீ வழங்கிய தண்டனை குறைவாக இருந்தால் அது உனக்கு உபரியாக (லாபமாக) அமையும். அவர்களின் குற்றங்களை விட உன் தண்டனை அதிகமானதாக இருந்தால் அவர்களுக்காக உனது நல்லறங்கள் எடுக்கப்படும்' என்று விடையளித்தார்கள். அப்போது அந்த மனிதர் அழுது புலம்பியவராக நகரலானார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள் 'கியாமத் நாளில் நீதமான தராசுகளை நாம நிறுவுவோம். எந்த ஆத்மாவுக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படாது. கடுகளவாக இருந்தாலும் அதையும் நாம் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும்' என்ற இறைவசனத்தை நீர் ஓதவில்லையா? என்று கேட்டார்கள். அப்போது அந்த மனிதர் 'அல்லாஹ்வின் தூதரே! எனது அடிமைகளைப் பிரித்து விடுவது தான் எனக்கும் அவர்களுக்கும் நல்லதாக தெரிகின்றது. அவர்கள் அனைவரும் விடுதலை பெற்றார்கள் என்பதற்கு உங்களையே சாட்சியாக்குகிறேன் என்று அவர் கூறினார். (அறிவிப்பவர்: அயிஷா (ரலி), நூல்: திர்மிதி)
    மனிதனுக்கு மனிதன் செய்த கொடுமைகள், தீங்குகள் பற்றி இவ்வளவு கடுமையாக நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளனர். எந்த மனிதனுக்கு அநீதி இழைக்கப்பட்டாலும் அதை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான். அநீதி இழைக்கப்பட்டவரிடம் இவ்வுலகிலேயே பரிகாரம் செய்ய வேண்டும். அல்லது மன்னிப்புக் கேட்க வேண்டும். இல்லையெனில் செய்த நல்லறங்கள் யாவும் பயனற்றுப் போவதுடன் பிறரது தீமைகளையும் சுமக்கும் நிலை ஏற்படும். முஸ்லிம்கள் அந்த விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
    மனிதனுக்கு மனிதன் இழைத்த அநீதிகளைப் பற்றி தாட்சண்யமின்றி நீதி வழங்கும் இறைவன் தனக்கு மனிதன் செய்த பாவங்கள் விஷயத்தில் மிகவும் பெருந்தன்மையுடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்வான். அதையும் நபி (ஸல்) அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்.
    'யார் துருவி விசாரிக்கப்படுகிறாரோ அவர் அழிந்தார்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் 'யார் தமது வலக்கரத்தில் பதிவேடு வழங்கப்படுகிறாரோ அவர் லேசாக விசாரிக்கப்படுவார்' என்று அல்லாஹ் கூறுகிறானே என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அந்த விசாரணை மேலோட்டமாக எடுத்துக் காட்டப்படுவது தான். ஒவ்வொன்றாக விசாரிக்கப்படும் யாரும் அழிந்து போகாதிருப்பதில்லை' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    மனிதன் செய்த ஒவ்வொரு செயலாக இறைவன் விசாரிக்க ஆரம்பித்தால் எவ்வளவு பெரிய மகான் என்றாலும் வெற்றி பெற முடியாது. ஆனால் இறைவன் அவ்வாறு செய்யாமல் மேலோட்டமாகவே விசாரணை செய்து அடியார்களுக்குக் கருணை காட்டுவான்.
    அடியான் முதன் முதலில் தொழுகை பற்றியே விசாரிக்கப்படுவான். அது சரியாக இருந்தால் வெற்றியடைந்து விட்டான். அது சரியாக இல்லாவிட்டால் அவன் நஷ்டமடைந்து விட்டான். கடமையான தொழுகைகளில் ஏதும் குறைவு இருந்தால், என் அடியானிடம் உபரியான தொழுகை ஏதுமுள்ளதா? என்று கவனியுங்கள் என்று இறைவன் கூறுவான். அந்த உபரியான தொழுகை மூலம் கடமையான தொழுகையில் ஏற்பட்ட குறை நிவர்த்திக்கப்படும். ஏனைய நல்லறங்களும் இவ்வாறே என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: திர்மிதி, நஸயி)
    எப்படியாவது அடியானை சொர்க்கத்திற்கு அனுப்ப வழி இருக்கிறதா என்றே வல்ல இறைவன் கவனிக்கிறான் என்பதை இந்த ஹதீஸ் மூலம் அறியலாம்.
    மூமின் இறைவனுக்கு அருகில் கொண்டு செல்லப்படுவார். இறைவன் தனது நிழலை அவன் மேல் போடுவான். மூமின் செய்த குற்றங்களைக் குறிப்பிட்டு இன்னின்ன பாவங்கள் செய்ததை நீ அறிவாயா? என்று இறைவன் கேட்பான். இறைவா! நான் அறிவேன், நான் அறிவேன் என்று மூமின் கூறுவார். அப்போது இறைவன், 'அக்குறைகளை உலகில் நான் மறைத்தேன் இன்று அவற்றை மன்னித்து விட்டேன் எனக் கூறுவான் என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: இப்னுஉமர் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
    மறுமை நாளில் மக்கள் முன்னிலையில் அல்லாஹ் மனிதனை விடுதலை செய்வான். அவனது குற்றங்கள் பதிவு செய்யப்பட்ட தொனண்ணுற்றி ஒன்பது ஏடுகள் விரிக்கப்படும். ஒவ்வொரு ஏடும் பார்வை எட்டும் தொலைவுடையதாக இருக்கும். இவற்றில் எதையேனும் மறுக்கிறாயா? நம்பகமான எனது எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா? என்று இறைவன் கேட்பான். 'இல்லை இறைவா!' என்று அவன் கூறுவான். அக்குற்றங்களுக்கு உன்னிடம் சமாதானம் ஏதும் உள்ளதா? என்று இறைவன் கேட்பான். 'இல்லை இறைவா!' என்று அவன் கூறுவான். அப்போது இறைவன் 'நிச்சயமாக உனக்கு என்னிடத்தில் நல்லதே கிடைக்கும், இன்று எந்த அநீதியும் கிடையாது' என்று கூறுவான். பிறகு சிறிய துண்டுச் சீட்டு ஒன்று வெளிப்படுத்தப்படும். அதில் 'அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹுவ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹுவரஸுலுஹு' என்று எழுதப்பட்டிருக்கும். 'உனது எடையைப்பார்' என்று இறைவன் கூறுவான். அதற்கு அம்மனிதன் 'இறைவா! அந்தத் துண்டுச்சீட்டு அந்த ஏடுகளுக்கு எப்படி நிகராகும்?' என்று கேட்பான். உனக்கு எந்த அநியாயமும் செய்யப்படாது என்று இறைவன் கூறுவான். அந்த ஏடுகள் அனைத்தும் ஒரு தட்டிலும் அந்தத் துண்டுச் சீட்டு இன்னொரு தட்டிலும் வைக்கப்படும். ஏடுகள் உயர்ந்து துண்டுச்சீட்டு வைக்கப்பட்ட தட்டு கீழிறங்கும். அல்லாஹ்வின் திருநாமத்திற்கு நிகராக ஏதுவும் ஆகாது என்று நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி), நூல்: திர்மிதி)
    கியாமத் நாளில் ஒரு மனிதன் கொண்டு வரப்படுவான். இவனது சிறு குற்றங்களை இவனிடம் எடுத்துக் காட்டுங்கள். பெருங்குற்றங்களைக் காட்டாதீர்கள் என்று வானவர்களுக்குக் கூறப்படும். அவ்வாறே அவனது சிறுபாவங்கள் எடுத்துக் காட்டப்படும். இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? இன்னின்ன நாளில் இன்னின்ன குற்றத்தை நீ செய்தாயா? என்று கேட்கப்படும். மறுக்க முடியாமல் அவன் 'ஆம்' என்பான். பெரும் பாவங்கள் எடுத்துக் காட்டப்பட்டால் என்னவாகும் என்று அஞ்சிக் கொண்டிருப்பான். அப்போது அவனிடம் 'உனது ஒவ்வொரு தீமைக்கு பதிலாக ஒரு நன்மை உனக்கு உண்டு' என்று கூறப்படும். அதற்கு அம்மனிதன் 'இறைவா! இன்னும் எத்தனையோ குற்றங்கள் செய்துள்ளேன் அவற்றை இங்கே நான் காணவில்லையே! என்பான். இதை நபி (ஸல்) கூறிவிட்டு தம் கடவாய் பற்கள் தெரியுமளவிற்கு சிரித்தார்கள். (அறிவிப்பவர்: அபூதர் கிபாரி (ரலி), நூல்கள்: முஸ்லிம், திர்மிதி)
    உறுதியான ஏகத்துவ நம்பிக்கை உள்ள ஒருவரை இறைவன் மன்னிக்க நாடினால் எந்த அளவுக்குப் பெருந்தன்மையாக நடந்து கொள்வான் என்பதற்கு இந்த நபிமொழிகளே போதிய சான்றாகும்.
யாரை இறைவன் மன்னிக்க விரும்பவில்லையோ அவரது நிலை எவ்வாறு இருக்கும் என்பதையும் அறிந்து கொள்வோம்.








Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

அல்லாஹ்வின் பரகத்..

பரகத் என்றால் என்ன?
அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது.பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும்.
உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 5000 ருபா சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை வைத்து அதைவிட அதிகமான சம்பாதித்தால் அதை வைத்து என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 5000 ருபாவை வைத்து செய்வோம்.நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்.இதற்கு காரணம் அல்லாஹ்வின் மறைமுகமான அருள்இல்லாதது தான்.
பரகத்தின் பலன் என்ன?
நம்முடைய பொருளாதாரத்தில் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் கிடைக்கும் என்று நம்பினோம் என்றால் இன்று நடக்கின்ற ஏராளமான தவருகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதாவது நம்மில் அதிகமானவார்கள் வட்டி வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் தங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் என்பதற்குத்தான். நாம் சம்பாதிக்கும் அளவு குறைவாக இருந்தாலும் சரி அல்லாஹ் நம்முடைய பெருளாதாரத்தில் பரகத்தை வழங்குவான் என்று உருதியாக நம்பினால் எவறும் வட்டி வாங்க மாட்டார்கள்.அதிகமானவார்கள் வியாரபரத்தில் கலப்படம் செய்வது அடுத்தவர்களை எல்லாம் ஏமாற்றுவதற்கு காரணமும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.அனால் அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான் என்றநம்பிக்கை இருந்நால் நாம் இவ்வாறு தவருகளைச் செய்யமாட்டோம் இஸ்லாம் கூறும் விதத்தில் வாழ்வதற்கு உதவும்.
அதுமட்டும் இல்லாமல் நம்மில் அதிகமானவர்கள் பெறாசை கொண்டு அழைந்து கொண்டு இருக்கிறார்கள்.எவ்வளது சம்பாதித்தாலும் போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அல்லாஹ்வின் பாதையில் கூட செலவு செய்யாமல் இருக்கின்றார்கள்.இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருப்பதற்கு அவன் ஆசைப்படுவான்.மன்னைத்தவிர வேறு எதுவும் அவனுடைய வாயை நிறப்பாது.
அறிவிப்பவர்: அன்ஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6439
தங்கத்தினாலான ஓடை இருந்தும் இன்னொரு ஓடைக்கு அவன் ஆசைப்படுவானாயின் எவ்வளவு பேறாசை உடையவான இருப்பான்.நாம் அல்லாஹ் நம்மக்கு பரகத் செய்வான் என்று சரியாக நம்பினால் எந்த பேறாசையையும் நம்மால் விரட்டி அடிக்க முடியும்.ஏன் என்றால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அல்லாஹ் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொடுப்பான் என்று நம்பிக்கை வரும் போது நாம்பேறாசைப்பட மாட்டேம்.
பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ
இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்து பரகத்தை வழியுருத்தி துஆ செய்தார்கள்.ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்;டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ
اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
 
என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனஸ{க்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்.நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிக மாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் அபிவிருத்தி வழங்குவாயாக! என்று பிரார்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6344
நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சேவகர் அனஸ{க்காக பிரார்திக்கும் போதும் பரகத்தை வளியுருத்தி கேட்டுள்ளார்கள்.
ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில் ஒன்று திருமனம் அந்த திருமனத்தில் நபி(ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்துவாதற்காக கற்றுத்தந்த துஆ பரகத்தை வலியுருத்தக்க கூடியதாகத்தான் இருந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ
إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

 
அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும்.
நபி(ஸல்)அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால் அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பாயாக! மற்ற ஒரு அறிவிப்பில் “அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி வழங்குவானாக!” என்று மட்டும் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபுஹ {ரைரா) நூல்: திர்மிதி 1011
அந்த சந்தர்பத்தின் போது கூட நபி(ஸல்)அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரகத்தை வலியுருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மதினா நகருக்கு ஒரு பிரத்தியோகமான துஆவைக்கேட்டார்கள் அந்த துஆவும் பரகத்தை வலியுருத்தித் தான் இருந்தது.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ
اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ

 
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வே! நீ மக்காவுக்கு வழங்கிய பரகத்தைப் போல் இருமடங்கு பரகத்தை மதினாவுக்கு வழங்குவாயாக!
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 1885
இந்த துஆவின் பிரதிபலனை அந்த மக்களும் அனுபவித்தார்கள்.மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வந்த போது மதினாவிலிருந்த மக்கள் தங்கள் சொத்துக்களில் சரி பாதியை மக்கத்து மக்களுக்கு வழங்கினார்கள்.எவ்வளவு அவர்களுடைய செல்வத்தை மக்கத்து மக்களுக்கு வழங்கினாலும் மதினாவில் அதை வழங்கிய மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை.ஏன் என்றால் மதினாவுக்கு நபி(ஸல்)அவர்கள் கேட்ட துஆ பிரதிபலித்தது.பாதியைக் கொடுத்தாலும் மீதியை வைத்து முழுவதும் இருந்தால் எப்படி வாழ்தார்களோ அதே போன்று தான் வாழ்ந்தார்கள்.
பரகத்தை அடைய என்ன வழி?
ஹலாலான சம்பாத்தியம்
எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில் அபிவிருத்தியைப் பெறமுடியும்.
நபி(ஸல்)அவர்கள்; யார் செல்லவத்தை உரியமுறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் கிடைக்கும்;. யார் செல்வத்தை தவரான முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் சாப்பிட்டுவிட்டு வயிரு நிரம்பாதவனைப் போல என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுசயீதில் குத்ரி நூல் : முஸ்லிம் 1742
நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெறவேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது இஸ்லாம் அனுமதித்த முறையில் திரட்ட வேண்டும்.அவ்வாறு நாம் திரட்டினோம் என்றால் அவனின் பரகத்தை அடைய முடியும்.இல்லாவிட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதைக் கொண்டு நம்முடைய தேவைகள் நிறைவடையாது என்பதை இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சாப்பிட்டும் வயிரு நிரம்பாதவர்போல என்று குறிப்பிடுகிறார்கள்.எனவே முதலில் நம்முடைய வாழ்கையில் பரகத் கிடைக்க வேண்டுமானால் நம்முடைய தொழிலில் நாம் இஸ்லாம் தடுத்த விஷயங்களை சேர்த்துள்ளோமா என்பதை கவணிக்க கடமைப்பட்டுள்ளோம்.அதிகமானவர்களுக்கு பரகத் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தங்களின் வியாபரத்தில் வட்டி போன்ற மார்கம்அனுமதிக்காத காரியங்களை செய்வதுதான்.நமக்கு குறைவாக கிடைத்தாலும் சரி இஸ்லாம் அனுமதித்த முறையில் தான் கிடைக்கவேண்டும் என்று உருதியாக இருந்தால் அவனுடைய பரகத்தை பெறமுடியும்.
பேறாசை படாமல் இருத்தல்.
நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ”ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன்
போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது” என்று கூறினார்கள்.அப்போது நான், ”அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்” எனக் கூறினேன். ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் ‘முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1472
இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் செல்வத்தை பெறாசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெறமுடியும். பெறாசையுடன் செல்வத்தை அடைந்தோமேயானால் பரகத்தை அடையமுடியாது.அதிகமானவர்கள் செல்வத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் இப்படிப்பட்வர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் பரகத்தை வழங்கமாட்டன்.அதுமட்டும் இல்லாமல் சிலர் காசு பணத்துக்காக கொள்கையைவிட்டுக் கூட தடம்புரளக்கூடிய நிலைமையை பார்கமுடிகிறது இப்படி இருந்தால் எப்படி பரகத்தை அடையமுடியும்.இன்னும் நம்மில் சிலர் ஒரு பொருள் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் அதற்கு சண்டை இட்டுக் கொண்டு தன்மானத்தை விட்டு செல்வதை பார்கலாம்.இவர்களுக்கு தன் மானத்தை விட செல்வம் பெரிதாக தெரிகிறது.இஸ்லாமிய மார்கம் தன்மானத்துடன் வாழச்சொல்லக்கூடிய மார்கம்.தன்மானத்தை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு செல்வத்துக்கு அடிபணிந்து இருந்தால் அல்லாஹ்வின் பரகத்தை எப்படி அடையமுடியும்?சிந்தித்துப்பார்கவேண்டும்! ஏற்றத் தாழ்வை பொருத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய அடியானை அவன் வழங்குவதைக் கொண்டு சோதிப்பான் யார் அவன் பிரித்துக் கொடுத்ததை பொருத்துக் கொள்கிறானோ அவனுக்கு அதிலே பரகத்தை ஏற்படுத்துவான் விசாலமாக வழங்குவான்.யார் அதை பொருத்துக் கொள்ளவில்லையோ அவனுக்கு பரகத்தை வழங்கமாட்டான்.
ஆறிவிப்பவர்: பனூ சுலைம் குலத்தைச் சார்ந்த ஒருவர். நூல் : அஹமத் 19398
அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைவரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க மாட்டான்.ஏற்றத்தாழ்வுடன் தான் படைத்து இருப்பான். வசதியில்லாதவர்கள் வசதியானவர்களைப் பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மையும் அவர்களைப்போன்று வைக்கவில்லையே என்று நினைத்துவிடக்கூடாது. அதை நாம் பொருத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பொருத்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியும்.அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை குறைவாக கொடுத்து இருப்பான்
அதை நாம் பொருத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய பரகத்தை அடைய முடியாது.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதி குறைந்தவனைத் தான் பார்கவேண்டும் அப்படி பார்பதின் மூலம் நமக்கு செல்வத்தின் மேல் உள்ள மோகம் குறைந்துவிடும்.நம்மை விட வசதி அதிகமானவனைப் பார்த்தால் அவன் அளவுக்கு நாம் எப்படி வசதியாகுவது என்று தான் நம்முடைய சிந்தனை இருக்குமே தவிர இருப்பதை வைத்து நாம் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம்.இஸ்லாம் இதற்கு அழகிய வழி முறையில் கற்றுத்தருகிறது. நூல்: புகாரி 6490
நம்மை விட குறைந்தவர்களை நாம் பார்த்தோம் என்றால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் அருளை விளங்க முடியும்.நம்மை விட மேலானவர்களை நாம் பார்த்தோம் என்றால் நமக்கு இருப்பது குறையாகத்தான் தெரியும்.குறைவாக இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் இன்று இருக்க வேண்டும். இவ்வாறு நாம் நமக்கு கிடைப்பதை பொருத்துக் கொண்டோமென்றால் அல்லாஹ்வின் பரகத்தைப்பொற முடியும்.
வியாபரத்தில் உண்மை
அடுத்து நாம் வியாபாரம் செய்யும் போது இன்னொரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம் அல்லஹ்வின் அபிவிருத்தியைப்பெறமுடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமரிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்சொல்ரியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 2079
வியாபாரம் செய்யும் பொது பொருளை வாங்குபவர் மற்றும் பொருளை விற்பவர் ஆகிய இருவரும் பிரிந்து செல்லும் வரை இருவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அந்ந உரிமையுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.அதிகமான இடத்தில் பொருள் மீது கையை வைத்து விட்டாலே அந்த பொருளை வாங்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவார்கள்.நிர்பந்தத்தின் காரணமாக பொருளை வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதற்கு மார்கத்தின்
அனுமதியில்லை அது மட்டும் இல்லாமல் உண்மையைப் பேசி பொருளில் உள்ள குறைகளை கூறி வியாபாரம் செய்ய வேண்டும். இப்படி நாம் நடந்து கொண்டோம் என்றால் நமக்கு பரகத்தைப் பெற முடியும்.ஆனால் இன்று நடை பெரும் அதிகமான வியாபாரங்களில் இந்த முறைகள் நடையபெறுவதில்லை வெறும் பொய்யும் பித்தளாட்ங்களும் தான் நடை பெருகிறது.எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படி வியாபாரம் செய்தால் நமக்கு அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியாது.

திருமணத்தில் எளிமை
குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரகத் பொருந்தியதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: அஹ்மத் 23388

திருமணம் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டும் அவ்வாறு நடத்தப் படுவதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும்.நம்முடைய சமூதாயம் இன்று திருமணத்திற்கு செலவு செய்வதைப்போன்று வேறு எதற்கும் செலவு செய்வது கிடையாது.கொள்கை சகோதரர் கூட இந்த திருமணவிஷயத்தில் மடங்கி விடுகிறார்கள்.வீண்விரயம் இஸ்லாம் கற்றுத்தராத அனாச்சாரங்கள் மலிந்து கிடப்பதைப்பார்க்கலாம்.இஸ்லாம் கற்றுத்தரகூடிய முறையில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலம் நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும். எனவே இவைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer


 ''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்''அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஆதாரம் அபூதாவுத். ]
அனைத்துப் புகழும் சூரியன், சந்திரன், கிரகங்கள் நட்சத்திரங்கள் இவைகளை உள்ளடக்கிய அகிலங்கள் அனைத்தையும் படைத்து பரிபக்குவப் படுத்தி ஆட்சி செய்யும் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது.
பரந்த விண்வெளியில் காணப்படும் நட்சத்திரங்களையும் கிரகங்களையும் பற்றி இரு வகையாக ஆராய்கின்றனர்.
அவைகள்:
1) நட்சத்திரங்கள், கிரகங்கள், சந்திரன்கள், நட்சத்திர மண்டலங்கள் ஆகியவற்றின் அமைப்பு, நகர்வு, அவை இருக்கும் இடங்கள் ஆகியவற்றைப் பற்றிய அறியும் கலைக்கு வானவியல் (Astronomy)என்று பெயர்.
2) கிரகங்கள், நட்சத்திரங்கள் ஆகியவைகளின் மூலம் பூமியில் உள்ளவர்களின் மீது ஏற்படும் தாக்கங்கள். (Astrology)

இதில் முதலாவது வகை அறிவியலை எடுத்துக் கொண்டால், இஸ்லாமிய அறிஞர்களின் கருத்துப்படி, திசைகளை அறிந்துக் கொள்வதற்காகவும், பல்வேறு கால நிலைகளை அறிந்துக் கொள்வதற்காவும், இறைவனின் படைப்பின் அற்புதத்தை கண்டு வியந்து அவனை துதி செய்வதற்காகவும் இந்தக் கலையைக் கற்றுக் கொள்வதில் தவறில்லை என்கின்றனர்.
அதே நேரத்தில், ஒருவர் இத்தகைய கல்வியின் மூலம், இதனால் தான் மழை வருகிறது அல்லது குளிர் அல்லது வெயில் அடிக்கிறது என்று கூறாதிருக்கும் பட்சத்தில் இதில் தவறில்லை என்கின்றனர். இவ்வாறு கூறுவது ஷிர்க் ஆகும் ஏனென்றால் மழை பெய்ய வைப்பதும், பருவ நிலை மாறி வரச் செய்வதும் இறைவனின் செயலாகும்.
ஜோதிடக் கலை:
இரண்டாவது வகையான நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் தாக்கங்கள் என்பது பற்றிய ஆராய்ச்சி இஸ்லாம் முற்றுமுழுதாக தடுக்கும், ஒருவருடைய ஏகத்துவ நம்பிக்கையையே சிதைக்கும் ஒரு கல்வியாகும்.
ஜோதிடக் கலையின் முக்கிய அம்சங்கள்:
1) கிரகங்களும், நட்சத்திரங்களும் ஒருவருடைய வாழ்வில் நன்மை, தீமைகளை ஏற்படுத்துகின்றன என்று நம்புவது.
இது இறைவனால் என்றுமே மன்னிக்கப்படாத மாபெரும் பாவமாகிய ஷிர்க் என்னும் இணைவைத்தலாகும். ஏனென்றால் நன்மை தீமைகளை உருவாக்கும் சக்தி அல்லாஹ்வைத் தவிர அவனுடைய படைப்பினங்களுக்கும், உண்டு என்று நம்புபவன் இணைவைத்தவனாவான்.
2) நட்சத்திரங்கள் மற்றும் கிரக நிலை மாற்றத்தினால் ஒருவருடைய வாழ்வில் இன்னின்ன மாறுதல்கள் ஏற்படும் என்பதைக் கணித்துக் கூறுவது, அதாவது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் ஏற்பட்ட மாற்றமானது, அந்த நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருடைய வாழ்விலும் இன்னின்ன மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்புவது.
இத்தகைய நம்பிக்கை, இறைவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்கள் இறைவனல்லாத ஜோதிடர்களுக்கும், குறி சொல்பவர்களுக்கும் தெரியும் என்று நம்புவதாகும். ஒருவர் தமக்கு மறைவான விஷயமாகிய எதிர்காலத்தைக் கணித்துக் கூறும் ஆற்றல் உண்டு என்று கூறுவாராயின் அது குப்ர் என்னும் இறை நிராகரிப்பாகும். அவர் இஸ்லாத்தை விட்டு அப்பாற்பட்டவராகிறார்.
இராசிப்பலன்கள்:
ஜோதிடக் கலையின் ஒரு அம்சமே ராசிப்பலன் பார்த்தல் ஆகும்.
படைப்பனங்களிலேயே சிறந்த படைப்பாக இறைவனால் படைக்கப்பட்ட மனித இனம் ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ்வால் அருளப்பட்ட அல்-குர்ஆனிலும் மனிதர்களைப் புனிதர்களாக்கி அவர்கள் ஈடேற்றம் பெற்றிட வழிகாட்டியாக வந்த அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்களின் வழிமுறைகளிலும் இராசிப்பலன்கள் பார்பதற்குரிய அனுமதி குறித்தோ அல்லது இவர்கள் கற்பனையாக வடிவமைத்திருக்கின்ற ராசி மண்டலங்கள் (Zodiac Signs) குறித்தோ எவ்வித ஆதாரமும் இல்லை. மாறாக அல்-குர்ஆனிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறைகளிலும் இவற்றிற்கு எதிராக ஏராளமான சான்றுகள் உள்ளன.
எந்தவொரு படைப்பினத்திற்கும் கொடுக்கப்படாத இரண்டு சிறப்பங்சங்களை அல்லாஹ் மனிதனுக்குக் கொடுத்திருக்கின்றான். அவைகளாவன: -
1) நன்மை தீமைகளை பகுத்து ஆராயும் பகுத்தறிவு
2) ஒருவன் தாம் விரும்பும் பாதையை சுயமாக சிந்தித்து தேர்ந்தெடுத்துக் கொள்ளும் விருப்பம்.
ஒருவனுடைய பழக்க வழக்கங்கள், குணங்கள், தன்மைகள் ஆகியவை அவனுடைய கல்வியறிவு, அனுபவம் ஆகியவற்றைப் பொறுத்தே தான் அமைகின்றதே தவிர வேறொன்றுமில்லை. இவற்றிற்கும் நட்சத்திரங்களுக்கும் மற்றும் இராசி மண்டலங்கள் என்று சொல்லப்படக்கூடிய வற்றிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. மேலும் ஒருவனுடைய பிறந்த தேதியோ அல்லது வருடமோ அவனுடைய வாழ்வில் எவ்வித பாதிப்பையோ நலவையோ ஏற்படுத்துவதில்லை.
ஒரு குறிப்பிட்ட கிரகமோ அல்லது நட்சத்திரமோ ஒருவருடைய வாழ்க்கையில் பாதிப்பையோ அல்லது நன்மையையோ ஏற்படுத்துகின்றது என்று நம்புவது மிகப்பெரும் பாவமாகிய ஷிர்க் எனும் இணைவைத்தலைச் சேர்ந்ததாகும்.
ஜோதிடம், ராசி பலன், நல்ல நேரம், இராகு காலம் பார்த்தல், சகுனம் பார்த்தல் இவைகள் அனைத்தும் அறியாமைக்கால மக்களின் மூட நம்பிக்கைகளாகும். இதில் வேதனையான விஷயம் என்ன வென்றால் தாம் உயர் கல்வியைப் பயின்று நாகரிகத்தின் உச்சிக்கு சென்று விட்டதாக இருமாப்புக் கொள்ளும் அறிவு ஜீவிகளும் தமது அறிவை அடகு வைத்துவிட்டு, தம் வயிற்று பிழைப்புக்காக தம் மனப்போன போக்கில் உளறிக் கொண்டிருக்கும் உதவாக்கரைகளிடம், தம் வாழ்வை எதிர்காலத்தை தாமே வணப்படுத்திக் கொள்ள தெரியாதவர்களிடம் போய் மண்டியிட்டு, தங்களின் எதிர் காலத்தைக் கணித்துக் கூறுமாறு கோருகின்றனர். இதை விட வேறு அறிவீனம் உண்டோ?
ஜோதிடம், ராசி பலன் பார்த்தல் போன்றவற்றை இஸ்லாம் தடை செய்ததோடல்லாமல் இதை செய்பவர்களை கடுமையாக எச்சரிக்கிறது. இவற்றின் மீது நம்மிக்கை கொள்வது ஒருவருடைய நன்மை தீமைகளைத் தீர்மானிப்பதன் பங்கு அல்லாஹ்வைத் தவிர இந்த கிரகங்கள், நட்சத்திரங்களுக்கும் உண்டு என்று நம்புவதாகும்.
அல்லாஹ்வையும் மறுமை நாளையும் விசுவாசித்த உண்மையான முஃமின் இத்தகைய அறியாமைக் (ஜாகிலிய்யாக்) கால மூட நம்பிக்கைகளிலிருந்து முற்றிலுமாக விலகியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்தப் பிரபஞ்சத்திலுள்ள சூரியன் சந்திரன் மற்றும் அனைத்து கிரகங்களும், நட்சத்திரங்களும் முற்று முழுதாக அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் தான் இயங்குகின்றது.
ஈமானின் முக்கியமான நிபந்தனையான விதியை ஏற்றுக் கொண்டுள்ள ஒவ்வொரு முஃமினும் நன்மை தீமைகள் அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் அவனையன்றி ஒரு அணுவும் அசையாது என்பதையும் உறுதியாக நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
(இன்னும்) நீர் கூறுவீராக: ''அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார். (அல்-குர்ஆன் 27:65)  

ஆயினும், (நபியே!) நீர் பொறுமையுடன் இருப்பீராக நிச்சயமாக அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்; ஆகவே, உறுதியான நம்பிக்கை இல்லாத இவர்கள் உம்மைக் கலக்கமடையச் செய்ய வேண்டாம். (அல்-குர்ஆன் 3:60)
உமக்கு (எவ்வித) நன்மையையோ, தீமையையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாததை எதனையும் நீர் பிரார்த்திக்க வேண்டாம் (அவ்வாறு) செய்வீராயின் நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராகிவிடுவீர். அல்லாஹ் ஒரு தீமையை உம்மைத் தீண்டும்படி செய்தால் அதை அவனைத் தவிர (வேறு எவரும்) நீக்க முடியாது; அவன் உமக்கு ஒரு நன்மை செய்ய நாடிவிட்டால் அவனது அருளைத் தடுப்பவர் எவருமில்லை; தன் அடியார்களில் அவன் நாடியவருக்கே அதனை அளிக்கின்றான் - அவன் மிகவும் மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் உள்ளான். (அல்-குர்ஆன் 10:106-107)
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன். (அல்-குர்ஆன் 31:34)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் இரவு மழை பொழிந்த பின் ஹுதைபிய்யா எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹுத் தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் மக்களை நோக்கி''உங்களுடைய இறைவன் என்ன கூறினான் என்று அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள்''அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்றனர். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ''என்னுடைய அடியார்களில் என்னை நம்பியவர்களும் என்னை நிராகரிப்பவர்களும் இருக்கின்றனர். அல்லாஹ்வின் அருளால், அவனுடைய கருணையால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நம்பியவர். நட்சத்திரங்களை நிராகரித்தவர். இன்னின்ன நட்சத்திரங்களால் எங்களுக்கு மழை பொழிந்தது என்று கூறுகிறவரே என்னை நிராகரித்து நட்சத்திரங்களை நம்பியவர்' என்று அல்லாஹ் கூறினான்'' எனக் குறிப்பிட்டார்கள். (அறிவிப்பவர்: ஸைத் இப்னு காலித் ரளியல்லாஹு அன்ஹுஆதாரம்: புகாரி)
அல்லாஹ் நட்சத்திரங்களை 3 காரணங்களுக்காக படைத்துள்ளான்.
1) வானத்தை அலங்கரிப்பதற்காகவும்
2) சைத்தானை விரட்டுவதற்கான எரி கற்கலாகவும்
3) கப்பலில் வழி காட்டியாகவும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
''யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சூன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்'' அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.
''யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மதுஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்''(அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுஆதாரம் அபூதாவுத்.)
''குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் ரளியல்லாஹு அன்ஹுஅவர்கள் அறிவிக்கிறார்கள்.
எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் ''மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே'' என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது ''இறைவனைத்'' தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்'' என கூறுவது போலாகும்.

அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், பாவங்களில் சிறியதோ- பெரியதோ அனைத்தையும் தவிர்ந்து நடக்க நமக்கு அருள் புரிவானாக!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

இஸ்லாம் (மார்க்கம்)

எல்லாம் வல்ல கண்ணியமிக்க அல்லாஹ் மனிதனைப் படைத்து, அந்த மனிதன் இந்த உலகில் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக செல்வம், பெற்றோர், உறவினர், மனைவி, மக்கள் என்ற எண்ணற்ற அருட்கொடைகளை வழங்கியுள்ளான்.

இது மட்டுமின்றி அவனுக்கு வரவிருக்கும் மற்றொரு வாழ்க்கையிலும் அவன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதற்காக நன்மை தரும் பல காரியங்களைத் தனது தூதர் (ஸல்) மூலம் வழிகாட்டியுள்ளான். அதில் ஒன்று தான் தர்மம்.

தனது தேவைக்கு மிஞ்சிய செல்வம் படைத்தவர்கள், தனக்குக் கீழுள்ள கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுத்து அதன் மூலம் அவர்களது சிரமத்தை நீக்க வேண்டும்.

அல்லாஹ் நமக்குக் காட்டித் தந்த எத்தனையோ நற்காரியங்களுக்கு கணக்கின்றி எண்ணற்ற நன்மைகளை அள்ளிக் கொடுக்கின்றான். அது போன்று தர்மத்திற்கும் எண்ணற்ற பலன்கள் உண்டு. இப்பலனை அறியாத மக்கள் தர்மம் செய்வதை விட்டும் தள்ளிச் சென்று நிற்கின்றனர்.

"தேவை போக எஞ்சியதைத் தர்மம் செய்வதே சிறந்ததாகும். முதல் உமது வீட்டாரிடமிருந்து ஆரம்பம் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1426

தேவைக்கு மிஞ்சியதில் தர்மம் செய்ய வேண்டும் என்று நபியவர்கள் கூறியுள்ள இந்த ஹதீஸை இன்றைய மக்களின் நிலையோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது மிக மோசமான நிலையே நமக்குக் கிடைக்கின்றது.

கோடீஸ்வரனாகவும் பல இலட்சங்களுக்குச் சொந்தக்காரனாகவும் இருப்பவர்கள் கூட தன் செல்வத்தை வறுமையில் வாடுபவர்களுக்குக் கொடுக்காமல் ஆடம்பரச் செலவு செய்கின்றனர். இப்படியா இஸ்லாம் கூறுகின்றது? பசியில் இருப்பவனைத் தேடிச் சென்று உதவி செய்யச் சொல்கின்றது.

"ஆதமின் மகனே! நீ மற்றவர்களுக்காகச் செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்'' என்று அல்லாஹ் கூறியதாக நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 5352


இதில் அல்லாஹ் நமக்குச் சொல்லக் கூடிய வார்த்தையைப் பாருங்கள். உன்னிடம் இருப்பதை நீ மற்றவர்களுக்குக் கொடுத்தால் உன் பசியை நான் போக்குவேன் என்கிறான். இது எவ்வளவு பெரிய வாக்குறுதி! இதை விட நமக்கு வேறு என்ன வேண்டும்? அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானதாகும்.

இந்த உலகில் நாம் நன்றாக வாழ்வதற்குத் தர்மம் வழிவகுப்பது போன்றே மறுமை வாழ்க்கையும் நன்றாக அமைய வழிவகுக்கின்றது.

மறுமை என்பது, மனிதர்களின் அழிச்சாட்டியங்கள் அடங்கி ஒடுங்கி பரிதாபத்துடன் நிற்கும் வாழ்க்கை! அவ்வாழ்க்கையின் கடுமைகளில் ஒன்று தான் வெப்பம்; வியர்வை! மனிதன் இவ்வுலகில் செய்த பாவத்திற்கேற்ப அவன் வியர்வையில் மூழ்கும் நேரம். இந்த நேரத்தில் அவன் எப்பேற்பட்ட கொம்பனாக இருந்தாலும் எதுவும் செய்ய முடியாத நிலை! இந்நிலையில் அந்தக் கொடிய வெப்பத்தை விட்டும், வியர்வையை விட்டும் காப்பதற்கு உதவ போவது இந்தத் தர்மம்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 


அல்லாஹ்வின் நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத அந்நாளில் அல்லாஹ் தன் நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்களின் ஒருவர் தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 660


இத்துடன் தர்மத்தின் பலன்கள் நின்று விடுவதில்லை. அல்லாஹ் அதன் பலன்களை அள்ளி வழங்குகின்றான்.


"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி), நூல்: புகாரி 1413, 6539

இதுவும் அல்லாஹ் நமக்குச் செய்யும் மிகப் பெரும் உதவி தான். நாம் அனைவருமே நரகத்திருந்து விடுதலை பெறுவதற்காகத் தான் அமல்கள் செய்கிறோம். அத்தகைய நரகத்திருந்து காக்கும் கேடயமாக தர்மம் அமைந்துள்ளது.

ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!'' என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!'' என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 1442


வெள்ளிக்குப் பதில் யாரேனும் பவளத்தைக் கொடுப்பார்களா? ஆனால் நாம் செய்யும் சாதாரண தர்மத்திற்கு அல்லாஹ் மிகப் பெரும் கூலியாக சிறப்பான மறுமை வாழ்வைத் தருகின்றான். எனவே இதில் நாம் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில் இவ்வுலகில் இறைவன் நமக்கு வழங்கிய பொருளாதாரத்தைப் பற்றி மறுமை நாளில் விசாரிப்பான்.

அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.அல்குர்ஆன் 102:8

இந்த வசனத்தில் கூறப்படும் அருட்கொடை என்பது பொருட் செல்வம், மக்கட் செல்வம் என மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்துச் செல்வங்களையும் குறிக்கும். இந்தச் செல்வங்களைக் குறித்து மறுமையில் இறைவன் விசாரிப்பான்.

எனவே இந்த அற்ப உலகில் ஆடம்பரமாகச் செலவு செய்வதை விட்டு விட்டு, வறுமையிலும் பசியிலும் வாழக்கூடிய மக்களுக்கு நாம் அதிகமதிகம் தர்மம் செய்து மறுமையில் நாம் அனைவரும் அல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோமாக!
ஒரு மதம் (மார்க்கம்) தானாக பரவுகின்றது, வளருகின்றது என்றால் நீங்கள் நம்புவீர்களா? ஆம் அந்த அதிசயத்தை உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. இஸ்லாத்தை பரப்புவதற்கு உலகளவில் ஒரு அமைப்பு இல்லை. ஒரு இயக்கம் இல்லை. ஆனாலும் அது பரவுகின்றது வளருகின்றது.

இஸ்லாத்தை எதிர்த்தால் பெரிய பெரிய வல்லரசுகளின் ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கின்றது. அதற்கு உதாரணம் சல்மான் ருஷ்டி, தஸ்லீமா நஸ்ரீன். ஒரு முஸ்லிம் விரைவில் கோடீஸ்வரன ஆக வேண்டுமா?

அவன் வேறொன்றும் செய்ய வேண்டியதில்லை. அவன் ஏதாவது உளறினாலோ, கிறுக்கினாலோ போதும்; உடனே அவனுக்கு உலகில் பெயரும் புகழும் கிடைக்கும். ஒரே இரவில் அவனை ஓர் ஒரு சிறந்த அறிஞன், மிகப்பெரிய சிந்தனையாளன், புரட்சி எழுத்தாளான் என்றெல்லாம் அவனுக்கு பட்டங்கள் வந்து சேர்ந்துவிடும்.

எல்லா பத்திரிகைகளும் பத்தி பத்தியாக செய்திகள் வெளியிடும். அப்பாவி முஸ்லிம்கள் உணர்ச்சி வசப்பட்டு கொதித்தெழுவார்கள். துப்பாக்கி சூடுகளுக்குப் பழியாகி பிணமாவார்கள். இஸ்லாத்தை விமர்சித்த அந்த பெயர் தாங்கி முஸ்லிமுக்கு இன்னும் அதிக முக்கியத்துவம் கிடைத்துவிடும்.

ஒரு சிலர் ஆத்திரப்பட்டு கொலை மிரட்டல்கள் விடுவார்கள். உடனே அவனுக்கு பாஸ்போர்ர்ட் இல்லாமலேயே உலகப் பயனம் மேற்கொள்ளும் தகுதி கிடைத்துவிடும். அவனுக்காக அடைக்கலம் தர பெரிய பெரிய நாடுகள் முன் வருவார்கள். வல்லரசுகளின் அதிபர்கள் எல்லாம் அவனுக்கு விருந்துகளும், விருதுகளும் தந்து கெளரவிப்பார்கள்.

முஸ்லிம்களுக்கு சகிப்புத்தன்மை இல்லை; விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனோபக்குவம் இல்லை; கருத்து சுதந்திரம் இல்லை; முஸ்லிம்கள் என்றாலே அது ஒரு வெறிப் பிடித்த கூட்டம்; தீவிரவாத கூட்டம் என்றெல்லாம் உலக அரங்கில் பிரச்சாரம் முடுக்கிவிடப்படும்.

இஸ்லாத்தை எதிர்ப்பதுதான் கெளரவமான செயல் என்பதை நிலை நாட்டத்தான் இத்தனை ஆதரவுகள் தரப்படுகின்றன. இஸ்லாத்தை முஸ்லிம்களே எதிர்க்க வேண்டும் என்று சில முஸ்லிம் அதிருப்தியாளர்களை தூண்டத்தான் இத்தனை வஞ்சக நாடகங்களும் நடத்தப்படுகின்றன.

ஆக அனைத்து மீடியாக்களும் ஒன்று சேர்ந்து அல்லும் பகலும் பிரச்சாரம் செய்கின்றன. ஆனாலும் இஸ்லாம் தேய்பிறையாக மாறாமல் வளர் பிறையாக மின்னுகிறது. இஸ்லாத்தை கடுமையாக எதிர்க்கும் நாடுகளிலேயே அவர்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் இஸ்லாம் வளருகின்றது.

எதிர்ப்புகள் வளர வளர, அப்படி இஸ்லாத்தில் என்னதான் குறைகள் இருக்கின்றன; நாமும் பார்ப்போமே என்று, இன்று இஸ்லாத்தை ஆராய முன் வருகிறார்கள். அவர்களுடை மனக்கண்கள் திறக்கின்றன.

உலகில் இப்படி மனித குலத்தை ஒருங்கிணைக்கும் மார்க்கம் ஒன்று இருக்கின்றதா? அடடா இதுவரை எங்களுக்கு தெரியாமல் போய்விட்டதே என்று அங்கலாய்க்கிறார்கள். ஒரு தூய்மையான மார்க்கத்தைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருந்தோமே என்று வருத்தப்படுகிறார்கள்.

உண்மை என்னவென்று தெரிந்த பிறகு உடனே அதை அரவணைத்துக் கொள்கிறார்கள். இன்று இஸ்லாத்தை எதிர்க்கின்ற அனைத்து சக்திகளும் தங்களுக்கு தெரியாமல் இஸ்லாம் வளர்வதற்கு காரணமாக இருக்கின்றார்கள். எதிர்ப்புகளையும், எதிர்ப்பாளர்களையும் வைத்தே இஸ்லாம் பரவுகின்றதென்றால் இது ஒரு அதிசயமல்லவா?

பத்திரிகைகள், சினிமா தொலைக்காட்சி, இசை இவை இல்லாமல் இன்று உலகில் எதுவும் பரவ முடியாது. இது இன்றைய உலக நிலை. மற்ற மதங்கள் அழகான பெண்களைக் காட்டி சீரியல் நாடகங்களையும் நடத்தி பட்டி மன்றங்களையும், திருவிளாக்களையும், தெருக்கூத்துகளையும் காட்டி இசையுடன் சேர்ந்த பாடல்களை பாடி பத்திரிகைகளில் விளம்பரம் செய்து தங்கள் மதங்களை வளர்க்க முயற்சிக்கின்றன.

ஆனால் இத்தனைக்குப் பிறகும் இவைகளைப் பார்த்து மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த மதத்தில் இணைந்ததாக செய்திகளை நாளிதல்களில் பார்க்க முடிகிறதா?

ஒரு மதம் பரவ வேண்டுமானால் சிலைகள் அவசியம் வேண்டும். மதச் சின்னங்களைப் பரப்ப வேண்டும். இவையில்லாமல் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. ஆனால் சிலைகளும் இல்லாமல்; சின்னங்களும் இல்லாமல் இஸ்லாம் பரவுகின்றதே! இது ஆச்சயரியமில்லையா?

இன்றைய பிரச்சார சாதனங்களுக்கு மூலதனமே பெண்கள்தான். விளம்பரத்தின் திறவுகோலும் தோற்று வாயுமாக இருக்கின்ற பெண்ணின் கவர்ச்சியான உடலமைப்பிற்குத் திரைப்போட்டு மூடிவிட்டு இஸ்லாம் வளருகின்றதே... இசை கூத்துக்கு இங்கே இடமேயில்லை.

மனிதன் விரும்பும் மனம்போல் வாழ இஸ்லாத்தில் சுதந்திரம் இல்லை. மனம்போன போக்கில் ஒரு முஸ்லிம் வாழ முடியாது, இங்கு கட்டுப்பாடுகள் அதிகம். மக்கள் விரும்பும் விபச்சாரம், சூதாட்டம், மதுபானம், வட்டி இந்த நான்கையும் அறவே தடுப்பது இஸ்லாம் ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே.

முஸ்லிம்களிடம் வல்லரசுகள் இல்லை. ஐ.நா சபையில் ஆதிக்கம் இல்லை. ஒருங்கிணைப்பு இல்லை. எங்கே பார்த்தாலும் முஸ்லிம்கள் தம் வீடுகளிலிருந்து துரத்தப்படுகிறார்கள், முஸ்லிம் என்று சொன்னாலேயே ஆபத்து வலிய வருகின்றது.

ஆனாலும் இஸ்லாம் வளருகின்றதே. முஸ்லிம்களின் கடவுளோ கண்களுக்குத் தெரியாது. அவர்களுடைய தலைவரின் (இறைத்தூதர்) படம்கூட அவர்கள் பார்த்ததில்லை.

முஸ்லிம்கள் தொழுவதற்கு கைகால் கழுவ வேண்டும். சிறு நீர் கழித்தாலும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். குளிப்பு கடமையானால் (முழுக்கு) குளித்து விட்டுத்தான் இறை ஆலயத்திற்குள் நுழைய வேண்டும்.

தினந்தோறும் ஐந்து வேளை கட்டாயம் தொழ வேண்டும். இத்தனை சிரமங்கள், இத்தனை கஷ்டங்கள் இருப்பினும் இஸ்லாம் பரவுகின்றதே.

தர்மம் செய்துதான் தீரவேண்டும் என்று எந்த மதத்திலும் கட்டாயமில்லை. ஆனால் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமும் வருடா வருடம் ரூபாய்க்கு இரண்டரை சதவீதம் தன்னுடைய சம்பாத்தியத்திலிருந்து ஏழைகளுக்குக் கொடுத்தே தீர வேண்டும்.

இந்த சுமையையும் ஒரு முஸ்லிம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். இஸ்லாத்தில் குற்றங்களுக்கு தண்டனை மிக கடுமையானவை. ஆனாலும் இஸ்லாம் பரவுகின்றதே! இது எப்படி சாத்தியமாகின்றது?

இறைவன் தன்னுடைய திருமறையில் கூறுகின்றான்;

"அவர்கள் அல்லாஹ்வின் ஒளியை தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர். ஆனால் காஃபிர்கள் வெறுத்த போதிலும் அல்லாஹ் தன் ஒளியை பூரணமாக்கியே வைப்பான். (61:8)
உலகில் உள்ள மதங்கள் கடவுளுக்காக அல்லாமல், மதங்களுக்கே கடவுளை பயன்படுத்துகின்றன. கடவுளின் சட்டங்கள், கடவுளின் ஆட்சி வரவேண்டும் என்று கடவுளுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்கள் முஸ்லிம்கள் மட்டும்தான்.

மாற்று மதத்தினர் தங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்காகத்தான் கடவுளை வணங்குகிறார்களே தவிர, கடவுளின் விருப்பங்கள் நிறைவேற அவர்கள் ஆசைப்படுவதில்லை. கடவுளை தங்கள் இனத்திற்கும் மதத்திற்கும் சொந்தமாக்க முயற்சி செய்கின்றார்களே தவிர, கடவுளை எல்லோருக்கும் பொதுவாக்க அவர்கள் விரும்புவதில்லை.

Universal god என்ற பரந்த நோக்கை குறுகிய மனப்பான்மையோடு, கடவுளையே சிறுமைப்படுத்த முயல்கின்றார்களே தவிர, இவர்கள் கூறும் மதங்களால் கடவுளுக்குப் பெருமையில்லை.

மனித குலத்திற்காக மதம் சேவையாற்ற வேண்டுமே தவிர, மதங்களுக்காக மனித குலத்தைக் கூறு போடக்கூடாது. ஆக உண்மையான கடவுள் நம்பிக்கை உடையவர்கள் இஸ்லாத்தைத் தழுவுவதை தவிர வேறு வழி கிடையாது.

இஸ்லாம் ஒன்றுதான் கடவுளை பெருமைப்படுத்தும் மதமாக (மார்க்கமாக) இருக்கின்றது. அது மட்டும்தான் தனக்காக வாழாமல் கடவுளுக்காக வாழ கற்றுத் தருகின்றது. கடவுளை அடைய அது ஒன்றுதான் வழியாய் இருக்கின்றது.

போலிப் பொருள்களுக்குத்தான் போலியான விளம்பரங்கள் தேவை. சர்க்கரையை யாரும் விளம்பரம் செய்ய அவசியமில்லை. அதன் இனிப்பு சுவைத்தவர்களுக்கு நன்கு தெரிகின்றது.

விளம்பரம் இல்லாமல் அது தானே விற்பனையாகிறது. அது போலத்தான் இஸ்லாமும். நாம் சர்க்கரை உள்ள இடத்தைக் காட்டினால் போதும். மக்கள் தானே அதைப் பெற்றுக் கொள்வார்கள். இன்பம் அடைவார்கள்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

அடைமொழி !!

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)....
உங்கள் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமின்.
வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கூறுகிறான்:


'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்).

'ஹஜ்' என்கிற கடைமையை இஸ்லாத்தின் இறுதி கடமையாக அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்திருக்கிறான். முஸ்லிமான எவரிடம் பொருளாதார வசதியும், உடல் வலிமையும் இருக்கின்றதோ, அவர் ஹஜ் செய்வது கட்டாயக் கடமையாகும். மேலும் அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்து அசிங்கமான வார்த்தைகள் பேசாமல், பாவமான காரியங்களில் ஈடுபடாமல் இருக்கிறாரோ, அவர் ஹஜ்ஜை முடித்துவிட்டுத் திரும்புகிற போது அன்று பிறந்த பாலகன் போல் திரும்புகிறார்.' (ஆதார நூல்: புஹாரி).

இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமையான ஹஜ்ஜை தூய்மையான எண்ணத்துடனும், செயல்களுடனும் செய்துவிட்டு வந்த நம் இஸ்லாமிய சகோதரர்கள் 'ஹாஜி' என்றும், சகோதரிகள் தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜிமா' என்றும் அடைமொழி இட்டுக்கொள்வது காலங்காலமாக நம் சமுதாய மக்களின் வழக்கமாக இருந்து வருகிறது.

அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் மதினாவிலிருந்து மக்கா வந்து 'ஹஜ்' செய்துவிட்டு மீண்டும் மதினா திரும்பினார்கள். அவர்களுடன் அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்டு மதினா திரும்பினார்கள். அண்ணல் நபி(ஸல்) அவர்களோ அல்லது அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்களோ தங்கள் பெயர்களுக்கு முன்னால் 'ஹாஜி' என்றோ அல்லது 'ஹாஜிமா' என்றோ அடைமொழி இட்டுக் கொள்ளவில்லை. அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் 'ஹஜ்' செய்தபோது அவர்களுடன் அவர்களின் அன்புத்தோழர்கள் பலர் 'ஹஜ்' என்கிற கடமையை செய்தார்கள். அவர்களில் எவரையும் நாம் 'ஹாஜி' என்று அழைப்பதில்லை. இருப்பினும் 'ஹஜ்' என்னும் கடமையை முடித்துவிட்ட நம் சமுதாய மக்கள் தஙகள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' அல்லது 'ஹாஜிமா' என்று அடைமொழி இட்டுக் கொள்ளும் வழக்கம் இன்றும் வேரூன்றி போய் இருப்பதை காண்கிறோம்.

இவ்வாறு அடைமொழி இட்டுக்கொள்வது எப்படியிருக்கிறது என்றால் - இந்தியாவில் உள்ள அரசியல்வாதிகளில் சிலர் மிசா என்ற சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருப்பார்கள். அவர்கள் சிறையிலிருந்து வெளியானவுடன் தங்கள் பெயருக்கு முன்னால் 'மிசா' என்கிற அடைமொழியைச் சேர்த்துக் கொள்வதைப்போலவும், தடா என்ற சட்டத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவர்கள் 'தடா' என்கிற அடைமொழியைத் தங்கள் பெயர்களுக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதைப்போலவும் இருக்கிறது.

அல்லாஹ் விதித்த ஐம்பெரும் கடமைகளில் ஒன்றான ஹஜ்ஜினை நிறைவேற்றி வந்தவர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்ற அடைமொழியைச் சேர்த்து கொள்வதில் பலவிதத்தில் உள்ளது. ஒரு முறைக்கு மேல் இன்னொரு முறை 'ஹஜ்' கடமையை நிறைவேற்றி வந்தவர்களில் சிலர் 'அல்-ஹாஜ்' என்ற அடைமொழியைத் தங்கள் பெயருக்கு முன்னால் சேர்த்துக் கொள்வதை நாம் நம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தாங்கள் வைத்திருக்கும் கடைகளுக்கும், வியாபார நிறுவனங்களுக்கும் ஹாஜி ஸ்டோர் என்றும், ஹாஜி அன் ஸன்ஸ் என்றும், ஹாஜி மளிகைக்கடை என்றும் பெயர் வைத்துக் கொண்டு விளம்பரம் தேடிக்கொள்ளும் நிலையையும் பார்க்கிறோம். தவிர ஹஜ் என்னும் இஸ்லாத்தின் கடமையை முடித்தவிட்டு வந்தவர்களை, அறிந்தவர்கள் சாதாரணமாக அழைக்கும்போது கூட 'ஹாஜி' என்று அழைப்பதையும், அவ்வாறு அழைக்கப்படுவதை சம்பந்தப்பட்டவர் அவ்வாறு அழைக்கக் கூடாது என்று மறுக்காமல், அவ்வாறு அழைப்பதே தமக்குப் பெருமை சேர்க்கும் என்ற நோக்கத்தில் இருந்து வருவதையும் நாம் அன்றாட வாழ்வில் கண்டு வருகிறோம். மேற்படி செயல்கள் இஸ்லாத்தில் அனுமதிக்கப்படாத, இஸ்லாத்தில் புதிதாக புகுத்தப்பட்ட ஒரு நூதன செயலாகும்.

'நமது உத்திரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்).

அல்லாஹ் முஸ்லிம்கள் மீது விதித்த கடமைகளான - ஈமான் கொள்வது, இறைவனைத் தொழுவது, ஜக்காத் கொடுப்பது, நோன்பு நோற்பது போன்ற நான்கு கடமைகளைப் போன்று ஐந்தாவதாக அல்லாஹ் விதித்த கடமைதான் 'ஹஜ்' என்கிற கடமையுமாகும். அல்லாஹ் விதித்த மற்ற கடமையான ஈமான் கொண்டவர் எவரும் தனது பெயருக்கு முன்னால் 'ஈமானி' (ஈமான் கொண்டவர்) என்கிற அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை. அதுபோல இறைவனை ஐவேளையும் தவறாமல் தொழுதுவரும் எவரும் தம் பெயருக்கு முன்னால் 'முஸல்லி' (தொழுகையாளி) என்கிற அடைமொழியை இட்டுக் கொள்வதில்லை. தவிர நோன்பு நோற்கும் எவரும், அல்லது ஜக்காத் கொடுக்கும் எவரும் தங்கள் பெயருக்கு முன்னால் 'ஸொம்வி' (நோன்பாளி) என்றோ, 'ஜக்காத்தி' (ஜக்காத் வங்குபவர்) என்கிற அடைமொழிகளையோ இட்டுக் கொள்வதில்லை.

ஆனால் இந்த இறுதிக்கடமையான ஹஜ்ஜை முடித்து விட்டவர்கள் மாத்திரம் (குறிப்பாக இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வாழ்ந்து வரும் ஹஜ் கடமையை முடித்துவிட்ட முஸ்லிம்கள்) தங்கள் பெயருக்கு முன்னால் ஹாஜி என்கிற அடைமொழியைச் சேர்த்து கொள்கிறார்கள். இவ்வாறு 'ஹாஜி' என்று தங்கள் பெயருக்கு முன்னால் அடைமொழி இட்டுக் கொள்ளும் வழக்கம் அரபு நாடுகளில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களிடையே இல்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. இவ்வாறு விளம்பரத்திற்காகவும், இந்த உலகில் தங்கள் புகழ் ஒங்கவேண்டும் என்ற பெருமைக்காகவும் அல்லாஹ் விதித்த கடமைகளை செய்யக் கூடியவர்களைப் பற்றி அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் கீழ்க்கண்டவாறு சுட்டிக் காட்டுகின்றான்:

'எவரேனும் இவ்வுலக வாழ்க்கையையும், அதன் அலங்காரத்தையும் (மட்டுமே) நாடினால் அவர்களுடைய செயல்களுக்குரிய (பலன்களை) இவ்வுலகத்திலேயே நிறைவேற்றுவோம்: அவற்றில் குறைவு செய்யப்படமாட்டார்கள். இத்தகையோருக்கு மறுமையில் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை: (இவ்வுலகில்) இவர்கள் செய்த யாவும் அழிந்து விட்டன: அவர்கள் செய்து கொண்டிருப்பவையும் வீணானவையே!' (அருள்மறை குர்ஆன் அத்தியாயம் - 11 ஸூரத்துல் ஹூது - 15 மற்றும் 16ஆம் வசனங்கள்).

அவர்கள் செய்யும் இது போன்ற நூதனமான காரியங்களுக்கான பலன்களை இவ்வுலகத்திலேயே நிறiவேற்றுவதாக வாக்களிக்கும் இறைவன், மறுமையில் அவர்களுக்கான பலன் நரக நெருப்பைத் தவிர வேறெதுவும் இல்லை என்று எச்சரிக்கையும் விடுக்கிறான். மேலும் இவ்வுலகில் அவர்கள் செய்த செயல்கள் யாவும் அழிந்துவிடும் என்றும், அவர்கள் செய்து கொண்டிருப்பவை யாவும் வீணான செயல்கள் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

இவ்வாறு அல்லாஹ் விதித்த கடமைகளை நிறைவேற்றும்போது - அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்கிறோம் என்கிற எண்ணம் இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையில் பெயரும், பெருமையும் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் செய்யக் கூடிய செயல்கள் யாவும் நிராகரிக்கப்படும் என்பதை அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் அறிவித்த கீழ்க்காணும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்:

'நமது உத்திவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும்' என அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்)அவர்கள் சொன்னார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதார நூல்: முஸ்லிம்).

மேலே குறிப்பிட்பட்ட அருள்மறை குர்ஆன் வசனத்தை கருத்தில் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைப்படி ஹஜ் என்னும் கடமையை முடித்து விட்ட இஸ்லாமிய சகோதர, சகோதரரிகள் தங்களுடைய பெயருக்கு முன்னால் 'ஹாஜி' என்றும், 'ஹாஜிமா' என்றும் அடைமொழிகள் இடுவதை விட்டும் தவிர்ந்து கொள்வார்களாக! மனிதனை நரகிற்கு இட்டுச் செல்லும் இது போன்ற நூதனம்(பித்அத்) ஆன காரியங்களிலிருந்து வல்ல அ
ல்லாஹ் நம்மைப் பாதுகாத்தருள்வானாக!

இறைவன் நம் அனைவரையும் என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக...ஆமின்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நல்ல மனைவி @ தன் துணைவி.


 நாம் நம்தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் எனஎதிபார்க்கிறோம்  . மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நினைவாக்க  வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை எம்மில் பலர் சிந்தித்ததுண்டா? ]
''..அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை...'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய 
விசயங்களில்  கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விசயங்களில் கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.

''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)]
''பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில் பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தே விடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே நீடிக்கும். ஆகவே பெண்களிடம் நல்ல முறையில் நடந்துகொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்''
(ஸஹீஹுல் புஹாரி: 5186)

இன்றைய காலகட்டத்திலே இயந்திரமாய் இயங்கிக் கொண்டிருக்கும் மனிதனுக்கு இல்லற வாழ்வே இன்பத்தையளித்து சமூகத்தோடு இயைபுபட்டு வாழக்கூடிய நிலையை ஏற்படுத்திக் கொடுக்கின்றது. பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் இணையும் தம்பதிகளின் புரிந்துணர் வின்மையின் காரணமாக பல குடும்பங்கள் பிரச்சினைகளில் சிக்கித் தவிப்பதைக் காணலாம். ஆகையால் கணவனும் மனைவியும் தமது கடமைகளை செவ்வனே நிறைவேற்றும் போது மணவாழ்வு மகிழ்ச்சியளிக்கும்;;. இங்கு நாம் கணவனின் கடமைகள் சிலவற்றை 
பார்ப்போம்.

1. கணவன் வீட்டில் நுழையும் போது சலாம் கூறுதல்.
அல்லாஹ்வின் திருத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இது பற்றிக் கூறுகையில் ''நீங்கள் இறை நம்பிக்கை(ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கம் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காத வரை(முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயற்படுத்தினால் ஒருவரையொருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள்'' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 93)

மேற்படி நபிமொழி யிலிருந்து கணவன் மனைவி விரும்பும் பாசமும் நேசமும் உருவாவதற்கு அடிக்கடி சலாம் கூறிக்கொள்வது சிறந்த வழியாகும். குறிப்பாக பாசத்திற்காக ஏங்கும் தம்பதிகள் இவ் அடிப்படை சுன்னாவை நடைமுறைப் படுத்துவதன் மூலம் இல்லறம் இனிக்க வாழலாம்.

2. வாயில் துர்வாடை வீசா வண்ணம் பல்துலக்குவதன் மூலம் சுகந்தத்தைப் பேணுதல்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் முதலில் பல்துலக்குவார்கள்'' (நூல்: முஸ்லிம் 424) கணவனின் வருகையை எதிர்பார்த்திருந்த மனைவி அவனை முகமலர்ச்சியுடன் வரவேற்கும் வேளை, கணவனின் வாயில் இருந்து வரும் துர்வாடை அவளை முகம் சுளிக்கச் செய்கின்றது. ஆகையால் பல்துலக்கி வாயை சுத்தம் செய்வதானது இல்லறத்தை செழிப்பாக்கும்.

3. மனைவியை விஷேட பெயர் கொண்டு அழைத்தல்.
அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். ''அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (ஒரு நாள் என்னிடம்) ஆயிஷ் இதோ(வானவர்) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் உனக்கு ஸலாம் உரைக்கிறார் என்று சொன்னார்கள்.'' (நூல்: புஹாரி-3768, முஸ்லிம்-4837)

நல்ல வார்த்தைகளுக்கும் வசீகரிக்கும் தன்மை உண்டு. ஆகையால், அழகிய பெயர் கொண்டு அழைப்பது மனைவியை மகிழ்விக்கும் வித்தைகளில் ஒன்றாகும். இந்நடைமுறை புதுமணத் தம்பதியினர்களிடம் காணப்பட்டாலும் காலப்போக்கில் இது 
 நிலைப்பதில்லை.

5. மனைவியின் உதவிகளை வரவேற்றல், நன்றி செலுத்ததல்.
இது குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ''யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ அவர் அல்லாஹ்வக்கு நன்றி செலுத்தமாட்டார்'' என்று கூறினார்கள். (நூல்: அஹ்மத்-7313) உங்களின் மனைவியரின் உதவிகளுக்கு நன்றி கூறிப் பாராட்டும்போது மென்மேலும் உங்கள் மனைவியின் பாசமும், பரிவும் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

6. வீட்டுப் பணிகளில் பங்கேற்றல்.

காலத்தின் தேவை அதிகரித்துவர இல்லத்து பணிகளும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. முன்னொரு காலத்தில் தமது அன்றாட வேலைகளுக்கப்பால் பலமணி நேரம் ஓய்வெடுத்து திக்ர், குர்ஆன், திலாவத் மற்றும் ஸலவாத் ஓதுதல் போன்ற உபரியான வணக்கங்களில் எமது பெண்கள் ஈடுபட்டுவந்துள்ளனர்.

ஆனால், இன்று 
யாரை  பார்த்தாலும் ''பிஸி, , நேரம் இல்லை''  என்ற  வார்த்தையே   ஒலிக்கின்றன. .
வீட்டுச்சுத்தம், துணிதுவைத்தல், பிள்ளைப் பராமரிப்பு, சமைத்தல் என அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதற்குள் கணவனுக்காக செய்கின்ற பணிகளும் ஏராளம். ஆனால் கணவன்மார்களில் பலர் அற்ப விசயங்களில் மனைவி மீது சீற்றம் கொள்கின்றனர். எமது முன்மாதிரி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பற்றி ஆயிஷா அவர்கள் தரும் 
விவரணம் இதோ :

''பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது இல்லத்துப் பணியின் பங்குபற்றி வினவப்பட்டபோது,

நபியவர்கள் தமது துணியைத் தைப்பவராகவும் காலணியை சீர்செய்பவர்களாகவும் ஏனைய ஆண்கள் தமது வீடுகளில் செய்வதையெல்லாம் தாங்களும் செய்பவர்களாக இருந்தார்கள்.'' (நூல்: அஹ்மத்- 24346, இப்னுஹிப்பான்-5155)

7. எடுத்ததெற்கெல்லாம் குறை காண்பதைத் தவிர்த்தல்.

''இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை(முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும், மற்றொரு
குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளக்கூடும் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.'' நூல்: முஸ்லிம்-2915.

இன்று சில ஆண்கள் தான் சந்திக்கும் அனைத்துப் பெண்களிடமும் உள்ள எல்லாப் பண்புகளும் தன் மனைவியிடமும் ஒன்று சேர அமைந்திருக்க வேண்டுமென ஒப்பீட்டாய்வு செய்கின்றனர். அவள் மேற்கொள்ளும் பல பெறுமதியான பணிகளைக் கூட கண்டுகொள்வதில்லை.

''நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களுக்கிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன''. (அல்குர்ஆன் 30:21)

அடிக்கடி நாம் கணவனின் தேவைகளை மனைவி புரிந்து நடக்கவேண்டும் என
விருப்பபடுகிறோம் , மனைவி நல்ல ஆடைகளை அணிந்து, கவலை மறந்து சிரித்து, அன்பாக அணுகி தனது கனவுகளை நனவாக்க வேண்டுமென்று கணவன்மார் நினைக்கின்றனர். ஆனால் மனைவி விரும்பும் கணவனாக தான் இருக்கின்றேனா? என்பதை நம்மில்  பலர் சிந்தித்ததுண்டா?

01. அல்லாஹ் தனக்கென பங்கு வைத்ததைப் பொருந்திக் கொள்ளல்.
கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு
அதிகரிக்கும்.

02. மனைவியின் பாசத்தைப் புதுப்பித்துக் கொள்ளல்.

மகிழ்ச்சிமிக்க திருமண வாழ்க்கை உட்பட அனைத்து அம்சங்களுக்கும் பாசமே முக்கிய காரணியென்ற வகையில், இஸ்லாம் அனுமதித்த வழிகளில் மனைவியின் அன்பை அதிகரிக்க,
கணவன் முயற்சியெடுத்தல் வேண்டும். கனிவான வார்த்தைகளைப் பேசுதல், உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்லல், அன்பளிப்புகள் கொடுத்தல், சுற்றுலாக்கள் செல்லுதல் போன்ற
இன்னோரன்ன அம்சங்கள் மூலமே இருவருக்கிடையிலான பாசமும் பரிவும், நேசமும் நெருக்கமும் அதிகரிக்கின்றது.

03. கருத்து முரண்பாடு ஏற்படும் போது உருவாகும் பிரச்சினைகளைப் பொருட் படுத்தாதிருத்தல்.
எந்த வினாடியிலும், எந்தக் காரணியாலும் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு அதிக சாத்தியமுள்ள இடம் வீடு. கருத்துக்கள் முரண்படுவதென்பது ஓர் இயற்கையான அம்சம். எல்லா நோய்க்கும் மருந்துண்டு, எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு என்பார்கள். ஆகையால், கணவன், மனைவியரிடையே இவ்வாறான கருத்து முரண்பாடு ஏற்படும்; போது, இஸ்லாம் கூறும் பொறுமை, ஆறுதலான உரையாடல், அமைதி விவாதம் போன்றவற்றின் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதால் குடும்பத்தில் குழப்பங்கள் குறைந்து, சந்தோசம் நிலைக்கின்றது. இதுபற்றி எமது தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகிறார்கள்.

''பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக் கொள்ளுங்கள்.ஏனெனில், பெண்கள்(வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். விலா எலும்பின் மிகக் கோணலான பகுதி அதன் மேல்பகுதியாகும். அதை நீ(பலவந்தமாக) நிமிர்த்திக் கொண்டே போனால் அதை நீ ஒடித்தேவிடுவாய். அதை அப்படியே நீ விட்டுவிட்டால் கோணலுள்ளதாகவே அது நீடிக்கும். ஆகவே, பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதைஏற்றுக்கொள்ளுங்கள்.''  (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஸஹீஹுல் புஹாரி 5186)

04. இல்லற இரகசியங்களைப் பாதுகாத்தல்.
''அவர்கள் உங்களுக்கு ஆடை. நீங்கள் அவர்களுக்கு ஆடை..'' (அல்குர்ஆன் 2:187)
கணவன் மனைவி இருவரும் ஒருவரில் மற்றவர் பரிபூரண நம்பிக்கை வைத்து இரண்டறக் கலந்து விடுகின்றனர். அனைவரிடமும் மறைக்கக்கூடிய விடயங்களைக் கூட, தமக்கிடையே பகிர்ந்து கொள்வர். இதனாலேயே மறைக்கக் கூடிய ஆடையை கணவன், மனைவி உறவுக்கு உவமையாக அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. தம்பதியரிடையேயான அந்தரங்க விடயங்களை கணவன் தற்பெருமைக்காக பகிரங்கப்படுத்துவதனால், கணவன் மீதான நம்பிக்கை இழப்பும் உளவியல் ரீதியான பிரச்சினைகளும் ஏற்படுகின்றன. இதனை மேலும் வலியுறுத்தி நபியவர்களும் பின்வருமாறு கூறியுள்ளார்கள்.
''மறுமையில் அல்லாஹ்விடத்தில் மிக மோசமான மனிதன், தனது மனைவியோடு உறவு கொண்டு விட்டு, அவளது இரகசியத்தைப் பரப்புபவன் ஆவான்.'' (அறிவிப்பர்: அபூசயீத் அல்குத்ரி ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்-2832)

05. மனைவி மீது அடக்குமுறைகளைக் கையாளாது நிர்வகித்தல்,
''சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அழ்ழாஹ்வின் பாதுகாவல்மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டுவிட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்.''  (அல்குர்ஆன் 4:34)

மேற்படி கணவன் மனைவியை நிர்வகிப்பவன் என்பதனால் அடக்கியாள்பவன், பெருமைக்குரியவன் என ஊரார் புகழ வேண்டுமென்பது பொருளாகாது. மாறாக கனிவுதரும் வார்த்தைகளால் தன் துணைவியைக் கவர்ந்திழுத்து கட்டுப்படுத்தல், கணவன் தான் தவறு செய்யும் போது, தன்மானம் பாராது தன் தவறுக்காக வருந்துதல் போன்ற விடயங்களால் தம்பதியருக்கிடையில் புரிந்துணர்வு அதிகரிக்கும்.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini