அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

நம் குழந்தைகளை !


ன்பான நம் சமுதாய சொந்தங்களே வரும் காலங்களில் நம் குழந்தைகளை இறை அச்சமுள்ள மார்க்க பற்றான சமுதாயத்தை உருவாக்கவேண்டும் மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும்தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தௌவான வழியைக் காட்டுகிறது.
படைத்தவனை வணங்க வேண்டும் என்று கூறும் இஸ்லாம் உலகத்தையும் சிந்தித்து அதில் இறைவன் வைத்திருக்கும் ஆற்றலை விளங்கிக் கொள்ள வேண்டும் என்று பணிக்கிறது. நல்லவர்களைப் பற்றித் திருக்குர்ஆன் பேசும் போது…
வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன
(அல்குர்ஆன் 3:190)
அவர்கள் நின்றும் அமர்ந்தும் படுத்த நிலையிலும் அல்லாஹ்வை நினைப்பார்கள். வானங்கள் மற்றும் புமி படைக்கப்பட்டது குறித்துச் சிந்திப்பார்கள். எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை நீ தூயவன். எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! (என்று கூறுவார்கள்) (அல்குர்ஆன் 3:191)
நம் முஸ்லீம் சமுதாயம் எந்த அளவுக்கு கல்வியில் பின் தங்கியுள்ளது என்பதையும் அதனால் நம் சமுதாயத்தின் நிலை பின்தங்கியுள்ளதையும் நீதிபதி இராஜேந்திர சாச்சா கமிட்டி மூலம் தெரிந்துக் கொண்டோம்.கல்வி, உலகத்தை மட்டுமின்றி இதர அண்ட சராசரங்களையும் புணரமைப்பதற்குரிய அடித்தளமாகும். பரந்த உலகில் எந்த ஒரு அங்குலத்தில் எந்த ஒரு மாற்றம் நடைபெற வேண்டுமானாலும் கல்விதான் முதல் விதி. கல்வியின் ஆரம்பத்தை நாம் அறிந்தாலும் அதன் முடிவு எங்கே என்று யாருக்கும் தெரியாது. இத்தோடு முடித்துக்கொள்ளலாம் என்பதற்குரிய முற்றுப்புள்ளி இங்கே இல்லை. சிறந்த, மிகச் சிறந்த மனிதர்களை உருவாக்குவது கல்விதான். ஆனால் எந்த மனிதராலும் கல்வியை உருவாக்க முடியாது. புதிய கல்வித் திட்டம் என்பதெல்லாம் ஏற்கனவே கற்றதின் மறு வடிவம் தானே தவிர கருவரையில் புதிதாக உற்பத்தியாவதல்ல. தனி மனிதன் முதல் - குடும்பம் - நாடு என்று சர்வதேச ஆக்கத்திற்கும், அழிவிற்கும் கல்வியே வித்தணு.இத்தகைய கட்டுப்பாட்டில்லா புரட்சிக்குரிய கல்வி குறித்து இஸ்லாமிய பார்வை என்ன? என்பது தலையான வினாவாகும். கல்வி குறித்து நாம் சிந்திக்கும்போது எதிரே தெரியும் முஸ்லிம்கள் மிகப் பரிதாபத்திற்குரியவர்களாகவே காட்சியளிக்கிறார்கள். ஒரு சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு அடிப்படைக் கல்வியின் அவசியம் என்ன? உலகியல் சாதனங்களை எவ்வாறெல்லாம் பயன்படுத்த வேண்டும், தம் சொந்த காலில் நின்று தமக்காகவும், தம் சமூதாயத்திற்காகவும் கல்வியை எப்படி வளப்படுத்திக் கொள்ள வேண்டும் போன்ற சிந்தனைகளெல்லாம் இந்த மக்களிடம் வந்துவிடக்கூடாது என்பதில் இந்த சமுதாயத்தின் மீது அக்கறையுள்ளவர்களாக நடித்துக் கொண்டிருப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்கிறார்கள். செல்வம் கொழிக்கும் நிலவளத்தை இறைவன் இந்த மக்களிடம் கொடுத்திருந்தும், கல்வியின்மையின் காரணத்தால் இம்மக்கள் அடுத்தவர்களிடம் கையேந்தி நிற்கும் நிலையே தொடர்கிறது.


இஸ்லாம் மறுமை என்ற பெருவாழ்வை மையமாக வைத்து இவ்வுலக வாழ்க்கையை அமைத்துக் கொள்ளச் சொல்கிறது. இந்த சிந்தனை மேலோங்கினால்தான் உலக வாழ்க்கை சீரோடும் சிறப்போடும் அமையும். ஆனால் முஸ்லிம்கள் 'மறுமை வாழ்வு' என்ற ஒரு அடையாள வார்த்தையை மட்டும் பிடித்துக் கொண்டு இவ்வுலகில் மிகப்பெரும் தோல்வியைத் தழுவி நிற்கிறார்கள். கல்வி விஷயத்தில் மாடுகளின் வாயில்களில் மென்று துப்பப்பட்ட வைக்கோலின் நிலையில் உள்ளார்கள் என்றால் அது தகுந்த வார்த்தையாகும். இந்திய அளவில் முஸ்லிம்களின் கல்வி வீழ்ச்சிக்கு முஸ்லிம்களாலேயே துவங்கப்பட்ட அரபு மதராஸாக்களும் ஓரளவு காரணமாக அமைந்துள்ளது.


கல்வியை உலகக்கல்வி, மார்க்கக்கல்வி என்று இறு கூறாகப் பிரித்து மார்க்கத்திற்கு என்று மதராஸாக்கள் துவங்கப்பட்டது. அப்படித் துவங்கப்பட்ட மதரஸாக்களில் பெரும்பாலானவை மார்க்கத்தைக் கூட அதன் அடிப்படையோடு போதிக்கத் தெரியாமல் சமுதாய முன்னேற்றத்திற்கெதிரான நவீன உலகிற்கு ஈடுகொடுக்க முடியாத கல்வி(?)யையே போதித்து வருகின்றன.


இந்தக் கல்விக்கூடங்களிலிருந்து வெளியேறுகிறவர்கள் சமுதாயத்தில் ஒரு கணிசமான தொகையினரைத் தம் கட்டுக்குள் வைத்துக்கொண்டு தாம் மதரஸாவில் படித்த கல்வி வழியிலேயே அழைத்துச் செல்கிறார்கள். இது மிகப் பரிதாபமான நிலையாகும்.


எதற்கும் பயனற்ற இந்த மதரஸா கல்வித்திட்டத்தின் மீது எரிச்சல் கொண்டு வேறு கல்வியை நோக்கி பயணிக்கத்துவங்கிய சில முஸ்லிம்கள் மேற்கத்திய கல்வித் திட்டத்தில் தம்மை அடிமைப்படுத்திக் கொண்டு தமது தனித் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து நிற்கிறார்கள்.


இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து பரஸ்பர வாழ்த்துக் கூறிக்கொள்ள இஸ்லாம் கற்றுக் கொடுக்கும் 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்கள் மீது சாந்தி நிலவட்டும்) என்ற அழகிய வார்த்தைகூட மேற்கத்திய கல்வியில் தம்மைப் புதைத்துக் கொண்ட முஸ்லிம்களிடம் இல்லை. உலகப்புரணமைப்பிற்கு மேற்கத்திய கல்வி தவிர வேறு வழியே இல்லை என்ற சிந்தனை இவர்களின் உள்ளங்களில் சிலுவையாய் அறையப்பட்டுள்ளன. இஸ்லாம் வகுத்துக் கொடுக்கும் இறைச்சட்டத்திற்கெதிரான மனிதச்சட்டங்களை நிலை நாட்டும் போராட்டத்தில் இந்த முஸ்லிம்களும் தென்படுவார்கள்.


1. உலகத்தையோ, கடும் உழைப்பினால் ஏற்படும் வாழ்க்கை முன்னேற்றத்தையோ கண்டுகொள்ளாமல் அடுத்தவர்களைச் சார்ந்து நின்று தம் வாழ்க்கையின் சொற்ப வருமானத்தைப் பெற்றுத் தரும் இஸ்லாத்திற்கெதிரான நவீன சவால்களை எதிர் கொண்டு, அந்த சவால்களை முறியடிக்கும் கல்விக்குப் பதிலாக அந்த சவால்களை ஆமோதிப்பது போன்ற கல்வியை போதிக்கும் மதரஸா கல்வியையோ..,


2. வரையறையற்ற வாழ்க்கை சுகம், சோஷலிஸம், செயற்கைகள் பெற்றுத்தரும் பேர், புகழ், சுகம் இவைகளை அடிப்படையாகக் கொண்ட மேற்கத்திய கல்வியையோ இஸ்லாம் அதன் அசல் கல்வித் திட்டமாக ஏற்கவில்லை.


இறைவனால் தேர்வு செய்யபப்ட்ட நபிமார்கள், கல்வியை உலகம், மார்க்கம் என்று பிரித்தறிவிக்கவில்லை. ஒன்றோடொன்றை பிணைத்துத்தான் போதித்தார்கள் - வாழ்ந்து காட்டினார்கள். குர்ஆன் நெடுகிலும் இந்தக் கல்வித் திட்டம் வியாபித்துள்ளது. ஆதம் (அலை) என்ற முதல் மனிதரைக் கொண்டே கல்வி துவங்குகிறது. அவரது கல்வித் திட்டம் என்ன?..
பூமியில் பிரதிநிதியை ஏற்படுத்தப்போகிறேன் என்று உம் இறைவன் மலக்குகளிடம் கூறிய போது அவர்கள் (இறைவா) பூமியின் ஒழுங்கு அமைப்புகளை சீர்குலைத்து அதில் இரத்தம் சிந்துவோரையா நீ அமைக்கப்போகிறாய். இன்னும் நாங்கள் உன்னை புகழ்ந்து உன்னை துதித்து உன் அருட்புகழைப் போற்றியவர்களாக இருக்கிறோம் என்று கூறினார்கள். (அல்குர்ஆன்: 2:30)


ஆதம்(அலை) அவர்களின் படைப்பு குறித்து இறைவன் அறிவித்த போது மலக்குகள் செய்த ஆட்சேபனைதான் இந்த வசனத்தில் கூறப்படுகிறது.


மனித படைப்பின் துவக்கம் ஆரம்பத்திலேயே ஆட்சேபனைக்குரியதா இருந்துள்ளது. முக்கிய இரண்டு ஆட்சேபனைகள்.


1 பூமியின் ஒழுங்கமைப்பு சீர்குலைவது
2 இரத்தம் கொட்டும் அட்டூழியம் நிகழ்வது.


இவை இரண்டுமே அறிவால் நிகழ்வதாகும். மனித படைப்புக்கு முன் பூமியின் நிலை இந்த இரண்டு பிரச்சனைகளும் எழாத தூய்மையாக இருந்துள்ளது என்பதை இந்த வசனத்திலிருந்து நாம் விளங்களாம்.


நிச்சயமாக வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், இவற்றை(இறைவனாகிய) நாமே பிரித்தோம் என்பதையும் நிராகரிப்பவர்கள் பார்க்கவில்லையா (அல்குர்ஆன்: 21:30)


நிராகரிப்பவர்கள் காணவில்லையா என்ற அறிவியல் உண்மை கேள்வியாக பிறப்பதிலிருந்து வானம் போன்றே பூமியும் தூய்மையானதாக இருந்தது மனித இனத்தால் தான் அது பாழ்படுகிறது என்ற உண்மை தெளிவாகிறது.


மலக்குகளின் ஆட்சேபனையை தொடர்ந்து நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நான் அறிவேன் என்று இறைவன் கூறுகிறான்.(அல்குர்ஆன்:2:30)


வானவர்கள் அறியாத விஷயம் என்று இங்கு இறைவன் எதைக் கூறுகிறான்? என்பதை அறிய வேண்டும்.


எல்லாப்(பொருள்களின்) பெயர்களையும் ஆதமுக்கு(இறைவன்) கற்றுக்கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களிடம் எடுத்துக்காட்டி(மனிதரைப்படைக்க ஆட்சேபனை தெரிவித்தீர்களே) நீங்கள் உண்மையாளர்களாயின் இவற்றின் பெயர்களை எனக்கு அறிவியுங்கள் என்றான். (அல் குர்ஆன்:2.31)


அதற்கவர்கள்(இறைவா) நீ தூயவன், நீ எங்களுக்கு கற்றுக் கொடுத்ததைத் தவிர வேறு எதைப் பற்றிய அறிவும் எங்களுக்கில்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன், விவேகம் மிக்கவன் என்றார்கள். (அல்குர்ஆன்:2:32)
ஆதமே அப்பொருள்களின் பெயர்களை வானவர்களுக்கு விவரிப்பீராக என்றான் இறைவன். அவர் அப்பெயர்களை வானவர்களுக்கு விவரித்தார். (அல் குர்ஆன் 2:33)


இது வரை உள்ள விபரங்களை முதலில் விளங்குவோம்.


உன்னை வணங்க, துதிக்க, நாங்கள் இருக்கும் போது பூமியை பாழ்படுத்தக் கூடிய மனித இனத்தை ஏன் படைக்கப் போகிறாய்? என்பது வானவர்களின் கேள்வி,  நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் என்பது இறைவனின் பதில்.


வணங்குவதற்கு அதாவது மலக்குகள் வணங்குவது போன்று முழு நேர இறை வணக்கத்திற்காக அல்லாமல் இன்னும் சில காரியங்களுக்காக மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.


அது தான் பூமியை ஆளுமை செய்யும் பணி, இப்பணிக்காக தேர்தெடுக்கப்பட்ட முதல் மனிதர் தான் ஆதம் (அலை) அவர்கள்.


அவரது ஆளுமைக்குரிய எல்லா பொருள்கள் பற்றியும் அவருக்கு கற்பிக்கப்படுகிறது. அவரே அதை வானவர்களுக்கு அறிவிக்கும் அளவிற்கு அவர் வசிக்கப் போகும் பூமியை பற்றிய அறிவை அவர் இறைவனிடமிருந்துப் பெறுகிறார்.


மேற்கண்ட வசனங்களில் பெயர்கள் என்று மொழிப்பெயர்கப்படும் இடங்களில் 'அஸ்மாவு,' என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு மொழி ரீதியாக 'பெயர்கள்' என்பது தான் பொருள் என்றாலும் ஆதம் (அலை) சம்பந்தப்பட்ட வசனங்களுக்கு பெயர்கள் என்பது மட்டும் முழுமையான பொருளாக அமையாது.


எப்படி ?


ஒரு பொருளின் பெயர் தெரிவதால் மட்டுமே அப்பொருளை இயக்கி விட முடியாது. பெயர் என்பது ஒருபொருளை சுட்டிக்காட்டத்தானே தவிர அதன் இயக்கதத்தை கற்பிப்பற்கல்ல.


கம்பியூட்டர் என்ற பெயர் இன்று எல்லோருக்கும் தெரியும். பெயரைத் தெரிந்தவர்கள் எல்லாம் கம்யூட்டரை இயக்கமுடியுமா என்றால் முடியாது. இது கம்யூட்டருக்கு மட்டும் பொருந்தும் விதியல்ல. சாதாரணமாக வீட்டில் பயன்படுத்தப்படும் பொருள்களுக்கும் இது தான் விதி.


ஆதம் (அலை) அவர்கள் முதலாவதாக இந்த உலகிற்கு வரும் மனிதர் அவருக்கு முன் யாரும் வந்து அவருக்காக உலகத்தை தயார் படுத்தி வைக்கவில்லை. அவர்தான் தம் மனைவியோடு சேர்ந்து தமக்கு தேவையான எல்லாவற்றையும் உலகில் செய்ய வேண்டும்.


உணவுக்கு உழுது பயரிட வேண்டும். நிலம், நெல்மணி என்ற பெயரை தெரிந்துக் கொண்டால் மட்டும் நிலத்தில் அது விளைந்து விடாது. உழவு, பாத்தி, தேவையான தண்ணிர், தட்ப சூழல் பற்றிய அறிவோடு நிலத்தை உழுது பயிர் விதைத்தால் தான் - கதிர்களின் தன்மையையும், அறுவடை காலத்தையும் அறிந்தால் தான் - உணவு உற்பத்தியில் வெற்றிப் பெற முடியும். எனவே ஆதம்(அலை) இறைவனிடமிருந்து உழவுத் தொழில் மற்றும் விவசாய அறிவைப் பெற்றிருக்க வேண்டும்.


தங்குவதற்கு இடம் தேவை, காற்று மழை வெயில் என்று பூமியை சூழந்துள்ள விசயங்களை எதிர் கொண்டு தம்மையும் மனைவி சந்ததிகளையும் பாதுகாத்தக் கொள்ள தங்குமிடம் வேண்டும். அது தேவை என்றால் அதை உருவாக்கத் தேவையான அறிவு வேண்டும்.


950 ஆண்டு இந்த ஏற்பாடுகளை எல்லாம் செய்யாமல் ஆதம் நபி வாழ்ந்து விட்டு சென்றார் என்று நம்ப முடியாது. தங்குமிடம் பற்றிய அறிவையும் இறைவனிடமிருந்துப் பெற்றிருப்பார்கள்.


அவர் காலத்தில் அவருக்கு மனித எதிரிகள் இல்லை. ஆனால் கொடிய மிருகங்களிடமிருந்து தன்னை தற்காக்கும் நிலை அவருக்கு கட்டாயம் ஏற்பட்டிருக்கும். வெறும் கைகளால் மட்டும் அம் மிருகங்களை எதிர்த்து போராடியிருக்க முடியாது. கத்தி, கோடாரி, அறுவால் போன்ற ஆயுதங்கள் அவசியம் அவருக்கு தேவைப்பட்டிருக்கும். அதனால் ஆயுதங்கள் பற்றிய அறிவையும் இறைவன் கற்றுக் கொடுத்திருப்பான்.


ஓரளவாவது மருத்துவ அறிவு இருந்திருக்க வேண்டும்.


இப்படியெல்லாம் சிந்திக்கும் போது இறைவன் ஆதம் (அலை) அவர்களுக்கு பொருள்களின் பெயர்களை மட்டும் கற்றுக் கொடுத்திருக்க முடியாது அவற்றோடு அப் பொருட்களை நிர்வகிக்கும் - பயன்படுத்தும் - அறிவையும் சேர்த்துதான் கற்பித்திருக்க வேண்டும் என்பதை விளக்கலாம்.


ஆதம் (அலை)யும் ஹவ்வாவும் சுவார்கத்தில் குடி புகுந்து வாழும் வேளையில் ஷெய்த்தானால் மனதில் ஊசலாட்டம் ஏற்பட்டு ஒரு மரத்தை - இறைவன் தடுத்த மரத்தை - நெருங்குகிறார்கள். உடனே தமது வெட்கத்தலங்கள் சம்பந்தமான தாக்கம் அவர்களுக்கு ஏற்பட்டு விடுகிறது. உடனே மரத்திலுள்ள இலைகளை பறித்து தம் வெட்கத் தலங்களை மறைத்துக் கொள்கிறார்கள். இந்த விபரங்களெல்லாம் அல்குர்ஆன் 7:19 - 22 வரையுள்ள வசனங்களில் கிடைக்கின்றன.


மரம் மரத்திலுள்ளது இலை என்ற பெயர் மட்டும் ஆதம் (அலை) ஹவ்வாவிற்கு தெரிந்திருந்தால் அந்த இலைகளை கொண்டு மானத்தை அவர்களால் மறைத்திருக்க முடியாது. இலைகளை இதற்கும் பயன்படுத்தலாம் என்ற அறிவு இருந்தால் மட்டுமே இப்படி செய்ய முடியும்.


இந்த விபரங்களிலிருந்து ஆதம் அவர்களுக்கு இறைவன் கற்றுக் கொடுத்த அறிவு அதாவது பெயர்கள் என்னவென்பதை விளங்கலாம்.


ஆதம் (அலை) அவர்கள் மலக்குகளுக்கு கற்பித்தது வணக்க வழிபாடுகளை சார்ந்த பெயர்களாகவோ அறிவாகவோ இருக்க முடியாது. ஏனெனில் மனிதர்களை விட எல்லா விதமான வணக்கங்களையும் அறிந்து அதில் குறை வைக்காமல் இறைவனை வணங்குபவர்கள் அவர்கள்.


எனவே தாம் குடும்பத்தோடு வசிக்கப் போகும் இயக்கப் போகும் பூமியைப் பற்றிய அறிவையே வானவர்களுக்கு ஆதம்(அலை) கற்றுக் கொடுத்துள்ளார்கள். வணக்க அறிவுடன் சேர்ந்து ஆளுமை அறிவும் மனிதனிடம் இருப்பதால் தான் தம்மை விட அறிவில் ஆதம் சிறந்தவர் என்பதை (ஸஜ்தாவின் மூலம்) வானவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இவ்வாறு ஒப்புக் கொள்ள வேண்டும் என்று தான் மலக்குகளுக்கு இறைவன் கட்டளையிடுகிறான்.


இஸ்லாமிய வாழ்க்கை நெறியோடு பூமிக்கு இறங்கி தேவையான போது இறைவனிடமிருந்து வழி காட்டுதலைப் பெற்ற ஆதம் (அலை) உலகக் கல்வி, மார்க்க கல்வி என்றெல்லாம் பிரிக்காமல் இரண்டையும் கற்று மிக சிறப்போடு இவ்வுலகில் வாழ்ந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து விளங்குங்கள்.


மார்க்கக் கல்வி வேறு, உலகக் கல்வி வேறு என்று நம் மக்கள் நினைத்துக் கொண்டிருப்பதுப் போல் நபிமார்கள் கல்வியை இரண்டாகப் பிரிக்கவில்லை என்பதை ஆதம் நபி வாழ்விலிருந்து நாம் கற்கும் பாடம் தெளிவாக உணர்த்துகிறது.


நீங்கள் இங்கிருந்து இறங்குங்கள் உங்களுக்கு பூமியில் தங்குமிடம் உள்ளது அதில் ஒரு (குறிபிட்ட) காலம் வரை சுகம் அனுபவிக்கும் வழியுமுண்டு என்று (ஆதமுக்கு இறைவன்)கூறினான். (அல்குர்ஆன்7:24)
                                               வளரும் இறைவன் நாட்டப்படி


அதை எவ்வாறு சரி செய்வது என்பதை விளக்குவதற்கு தான் இந்த கட்டுரை எழுதப்படுகிறது. இந்தக் கல்வியாண்டிலாவது படிப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்து நமது குழந்தைகளின் படிப்பை இடையில் நிறுத்தி விடாமல் உயர் கல்வியில் சேர்வதற்கும் நல்ல நிலைக்குக் கொண்டு வரவும் முயற்சி செய்வோம்.
வறுமை நிலையில் இருப்பவர்கள் படிப்பைத் தொடர்வதற்குரிய உதவிகளையும் செய்வோம். கல்வியின் அவசியத்தையும் சிறப்பையும். இன்னமும் நம்மில் பெரும்பான்மையானவரகள் அறியவில்லை. தங்களின் மகன் 10 வகுப்பு கடந்து விட்டால் பாஸ்போரட் தான் தகுதி என எண்ணி விடுகின்றனர.
அதன் விளைவு தான் வளைகுடா மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் கூலி தொழிலாளியாக துன்பப்படும் நிலை.
நம் வருமானத்தில் எத்தனை சதவீதம் நம் குழந்தைகளின் கல்விக்கும் மற்ற வீணான ஆடம்பர செயல்களுக்கும் செலவழிக்கின்றோம். வீணானவற்றிற்கு செலவழிப்பது தான் அதிகம். எந்தளவிற்கென்றால் குழந்தையின் பெயரசூட்டுவதற்கு ரு1இலட்சம் வரை செலவு செய்பவரகள் தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு யோசிப்பாரகள்.
இது தான் அவலம்.
எத்தனை ஏழை குழந்தைகள் பள்ளிகூடம் செல்ல வேண்டிய வயதில் கூலி தொழிலாளியாகவும் பீடி சுற்றிக்கொண்டும் டீ கடையில் கிளாஸ் கழுவிகொண்டும் உள்ளனரே! அவரகளின் கல்வி கண்ணை திறக்க ஒரு நிமிடம் சிந்தித்ததுண்டா?
அதேப்போல் மனிதகுலம் சந்தித்த சந்திக்கவிருக்கின்ற அத்தனை பிரச்னைகளையும் தீரக்கக்கூடிய ஓரே மாரக்கம் இஸ்லாம் தான். அதனால் உலக கல்வியோடு மாரக்க கல்வி அவசியம். ஆனால் நம் மதரஸாக்களில் படித்துவிட்டு வருபவரகளின் அறிவோ? என்ன சொல்வது.
அதேப்போல் கல்விச்சாலைகளையும் நாம் தேரந்தெடுக்க வேண்டும். ஏனெனில் இன்றைய கல்விச்சலைகள் மாணவரகளுக்கு நல்ல ஒழுக்கங்களை போதிப்பதில்லை. உலக கல்வியோடு கூடிய மாரக்க கல்வியும் போதிக்கப்பட வேண்டும். இல்லையெனில் தன்னை வளரத்து ஆளாக்கியவரகளைக் கூட கவனிக்காமல் மாரக்க அறிவுமின்றி ஒழுக்கங்கெட்டவரகளாக வாழ்ந்து தங்களை அழித்துக்கொள்வாரகள்.

நபி(ஸல்) அவரகள் கூறினாரகள்
(ஒரு காலத்தில்) கல்வி பறிக்கப்பட்டு விடும். அறியாமையும் குழப்பங்களும் பரவி விடும். கொந்தளிப்பு மிகுந்து விடும். அப்போது கொந்தளிப்பு என்னவென்று வினவப்பட்டது அதற்கு நபி(ஸல்) அவரகள் தமது கையால் கொலை செய்வது போல் செய்து காட்டினாரகள்.
(அபுஹீரைரா(ரலி) புகாரி)


இதன் அடிப்படையில் நமதூரில் சிறப்பாக கல்வி கொடுத்து கொண்டிருக்கும் (மார்க்க கல்வியுடன் கூடிய உலக கல்வி)அர் ரஹ்மான் பள்ளியை வளர்ச்சியின் பாதையில் செலுத்திட இறைவனிடம் பிராத்திப்போம். .Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini