முன்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த லயசன் மாரியா Liaision Maria என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். மரியா Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார்.
மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் ‘Stray Sheeps’ என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது நம்முடைய உணர்வுக்காகவும் ஈதுல் அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல.
மாறாக “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை” அதாவது இந்தப் பள்ளிவாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்து கொண்டிருக்கிறது.
ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேஷியாவில் மிக அதிக அளவில் உறுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்த்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.
சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை.
நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.
பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய Theology & Philosophyy உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன். அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வுப் பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.
இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள் என்று எங்களுக்கு விளக்கினார்கள். இந்தோனேஷியாவில் ஏழைகளாக இருக்கிறார்களே , அவர்களுடைய மதம் என்ன? இஸ்லாம். முட்டாள்களாக இருக்கிறார்களே அவர்களுடைய மதம் என்ன? இஸ்லாம். வெள்ளிக்கிழமை தொழுகையின் போது தங்களின் காலணிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? இஸ்லாம். ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே அவர்களுடைய மதம் என்ன? இஸ்லாம்.
தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? இஸ்லாம்.
இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நண்பர்கள் அனைவரும் இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம் என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதேசமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது. என்றும் அவர்களிடம் கூறினேன்.
நான் அவர்களிடம் “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது. மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன். உதாரணமாக:- பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம். அல்ல! அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
மெக்ஸிகோ ஒரு ஏழைநாடு. அந்நாட்டில் குற்றவாளிகளாகவும், திரடர்களாகவும் குடிகாரர்களாகவும் கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர்.
அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டுப் பிரச்சினையில் சிக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தச் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தச் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்தாந்து கிறிஸ்தவர்களுக்கிடையில்தான். அவர்கள் தமக்குள்ளாகவே சண்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள்.
ஐரோப்பிய சமூகம் அவர்களை அயர்லாந்தின் தீவிரவாதிகள் என்று கருதுகிறது. அவர்கள் ‘ஐரோப்பிய தீவிரவாதிகள், என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள். இத்தாலியைப் பாருங்கள். போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.
அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம் இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே என்று கூறினேன்.
அப்போது நான், இஸ்லாத்தை இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதிக்கப்பட்டேன். நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன்தான்” என்று வலியுறுத்தியது.
அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற ‘திரித்துவக் கடவுள் கொள்கைக்குப் முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்த போது (சூரா இக்லாஸ்) இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில் மதங்களைப் பற்றிய பாடத்தை வண. பாதிரியார் அவர்கள் போதித்த போது ‘கடவுள் ஒருவரே’ ஆனால் மூவரில் இருக்கிறார். (திரித்துவம்) என்று போதித்தார்.
அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்று மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.
மறுநாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம் விவாதித்தேன். “கடவுளின் திரித்துவக் கொள்கை (Trinity Clod) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன். கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்க முடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.
அந்தப் பாதிரியார் முன்வந்து ஒரு முக்கோணத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோணத்திற்கு முன்று மூலைகள் இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார். அதற்கு நான் உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும், எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடையவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்.
அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாரிதியார் இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறினார். அதற்கு நான் “இது சாத்தியமானதே” என்று கூறி முன்னால் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன். முக்கோணத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் இருக்கின்றனவே என்று கூறினேன். அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ‘முடியாது’ என்று கூறினார். முன்பு இதற்கு சாத்தியமே இல்லை என்று கூறிய அவர் தற்போது முடியாது என்று மட்டும் கூறினார்.
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer