அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

அபிவிருத்தி (பரகத்) ...

அல்லாஹ் யாருக்காவது அதிகமான செல்வத்தை வழங்கி விட்டால் அவனுக்கு பரகத் கிடைத்துவிட்டது என்று நம்மில் அதிகமானவர்கள் கருதிக் கொண்டு இருக்கிறார்கள். அல்லாஹ்; அதிகமான செல்வத்தை வழங்கினால் அது பரகத்தாக ஆகிவிடாது.பரகத் என்றால் ஒரு குறிப்பிட்ட பொருளில் அதை விட அதிகமாக பலனைப் பொருவது தான் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் ஆகும்.

உதாரணமாக நாம் ஒரு மாதத்திற்கு 1000  ரூபாய் சம்பாதிக்கிறோம் என்றால் அந்த பணத்தை விட அதிகமான சம்பாதித்தால் என்ன வேளை செய்வோமோ அந்த வேளைகளை இந்த 1000

 ரூபாயைவைத்து செய்வோம்.நாம் சிலரைப்பார்க்களாம் அவர்கள் குறைந்த அளவில் தான் சம்பாதிப்பார்கள் ஆனால் அதை வைத்து நிம்மதியாக உண்ணுவார்கள் நிம்மதியாகப் பருகுவார்கள் தங்களுடைய குழந்தைகளை நல்ல முறையில் படிக்கவும் வைப்பார்கள் எந்த கடன் தொல்லைகளும் இல்லாமல் நிம்மதியாகவும் வாழ்வார்கள்.இது தான் அல்லாஹ்வின் மறைமுகமான அருள். இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்கள் பல ஆயிரம்கள் சம்பாதிப்பார்கள் ஆனால் அவர்களுடைய வாழ்கையில் நிம்மதியைக்காண முடியாது.கடன் தொல்லைகளும் இருந்து கொண்டே இருக்கும்.இதற்கு காரணம் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் இல்லாதது தான்.

பரகத்தின் பலன் என்ன?

நம்முடைய பொருளாதாரத்தில் பரகத் என்னும் அல்லாஹ்வின் மறைமுகமான அருள் கிடைக்கும் என்று நம்பினோம் என்றால் இன்று நடக்கின்ற ஏராளமான தவருகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கமுடியும். அதாவது நம்மில் அதிகமானவார்கள் வட்டி வாங்குவதற்கு காரணம் என்னவென்றால் தங்களுடைய பொருளாதாரத்தை விருத்தி செய்யவேண்டும் என்பதற்குத்தான். நாம் சம்பாதிக்கும் அளவு குறைவாக இருந்தாலும் சரி அல்லாஹ் நம்முடைய பெருளாதாரத்தில் பரகத்தை வழங்குவான் என்று உருதியாக நம்பினால் எவறும் வட்டி வாங்க மாட்டார்கள்.அதிகமானவார்கள் வியாரபரத்தில் கலப்படம் செய்வது அடுத்தவர்களை எல்லாம் ஏமாற்றுவதற்கு காரணமும் அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்பது தான்.அனால் அல்லாஹ் நமக்கு பரகத் செய்வான் என்றநம்பிக்கை இருந்நால் நாம் இவ்வாறு தவருகளைச் செய்யமாட்டோம் இஸ்லாம் கூறும் விதத்தில் வாழ்வதற்கு உதவும்.

அதுமட்டும் இல்லாமல் நம்மில் அதிகமானவர்கள் பெறாசை கொண்டு அழைந்து கொண்டு இருக்கிறார்கள்.எவ்வளது சம்பாதித்தாலும் போதாது இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்று அல்லாஹ்வின் பாதையில் கூட செலவு செய்யாமல் இருக்கின்றார்கள்.இதை அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அதமுடைய மகனுக்கு தங்கத்தினாலான ஒரு ஓடை இருந்தாலும் இரண்டு ஓடைகள் இருப்பதற்கு அவன் ஆசைப்படுவான்.மன்னைத்தவிர வேறு எதுவும் அவனுடைய வாயை நிறப்பாது.
அறிவிப்பவர்: அன்ஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6439

தங்கத்தினாலான ஓடை இருந்தும் இன்னொரு ஓடைக்கு அவன் ஆசைப்படுவானாயின் எவ்வளவு பேறாசை உடையவான இருப்பான்.நாம் அல்லாஹ் நம்மக்கு பரகத் செய்வான் என்று சரியாக நம்பினால் எந்த பேறாசையையும் நம்மால் விரட்டி அடிக்க முடியும்.ஏன் என்றால் எவ்வளவு பொருளாதாரம் இருந்தாலும் அல்லாஹ் நம் தேவைகள் அனைத்தையும் நிறைவு செய்து கொடுப்பான் என்று நம்பிக்கை வரும் போது நாம்பேறாசைப்பட மாட்டேம்.

பரகத்தை வலியுருத்தி நபிகளாரின் துஆ

இறைத்தூதர்(ஸல்)அவர்கள் தங்களுடைய தோழர்களுக்காக துஆ செய்யும் போதும் அதிகாமாக இந்து பரகத்தை வழியுருத்தி துஆ செய்தார்கள்.ஒருவருடைய வாழ்கையில் பரகத் கிடைத்து விட்;டது என்றால் அவனுடைய வாழ்கை நிம்மதியாக இருக்கும்.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَتْ أُمِّي يَا رَسُولَ اللَّهِ خَادِمُكَ أَنَسٌ ادْعُ
اللَّهَ لَهُ قَالَ اللَّهُمَّ أَكْثِرْ مَالَهُ وَوَلَدَهُ وَبَارِكْ لَهُ فِيمَا أَعْطَيْتَهُ
 
என் தாயார்(உம்மு சுலைம்)அவர்கள் நபி(ஸல்)அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! தாங்களின் சேவகர் அனஸ{க்காகப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்.நபி(ஸல்)அவர்கள் அல்லாஹ்வே! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிக மாக்குவாயாக! அவருக்கு நீ வழங்கியுள்ளவற்றில் அபிவிருத்தி வழங்குவாயாக! என்று பிரார்தித்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 6344

நபி(ஸல்)அவர்கள் தங்களுடைய சேவகர் அனஸ{க்காக பிரார்திக்கும் போதும் பரகத்தை வளியுருத்தி கேட்டுள்ளார்கள்.

ஒருவருடைய வாழ்கையில் மிக முக்கியமான நேரங்களில் ஒன்று திருமனம் அந்த திருமனத்தில் நபி(ஸல்)அவர்கள் மணமக்களை வாழ்த்துவாதற்காக கற்றுத்தந்த துஆ பரகத்தை வலியுருத்தக்க கூடியதாகத்தான் இருந்தது.

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا رَفَّأَ الْإِنْسَانَ
إِذَا تَزَوَّجَ قَالَ بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَمَعَ بَيْنَكُمَا فِي الْخَيْرِ

 
அல்லாஹ் உனக்கு பரக்கத் செய்யட்டும் உங்கள் இருவரையும் நல்ல விஷயத்தில் ஒன்று சேர்க்கட்டும்.


நபி(ஸல்)அவர்கள் திருமனம் முடிக்கும் போது ஒரு மனிதனை வாழ்த்தினால் அல்லாஹ் உங்களுக்கு அகத்திலும் புறத்திலும் அபிவிருத்தி வழங்குவாயாக! நல்ல காரயங்களில் இவ்விருவரையும் ஒன்று சேர்பாயாக! மற்ற ஒரு அறிவிப்பில் “அல்லாஹ் உமக்கு அபிவிருத்தி வழங்குவானாக!” என்று மட்டும் வந்துள்ளது.
அறிவிப்பவர்: அபுஹ {ரைரா) நூல்: திர்மிதி 1011

அந்த சந்தர்பத்தின் போது கூட நபி(ஸல்)அவர்கள் பணத்தை கேட்டு பிரார்த்தனை செய்யாமல் பரகத்தை வலியுருத்தித்தான் பிரார்த்தனை செய்தார்கள்.

அதுமட்டுமல்லாமல் நபி(ஸல்)அவர்கள் மதினா நகருக்கு ஒரு பிரத்தியோகமான துஆவைக்கேட்டார்கள் அந்த துஆவும் பரகத்தை வலியுருத்தித் தான் இருந்தது.

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُمَّ
اجْعَلْ بِالْمَدِينَةِ ضِعْفَيْ مَا جَعَلْتَ بِمَكَّةَ مِنْ الْبَرَكَةِ

 
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
அல்லாஹ்வே! நீ மக்காவுக்கு வழங்கிய பரகத்தைப் போல் இருமடங்கு பரகத்தை மதினாவுக்கு வழங்குவாயாக!
அறிவிப்பவர்: அனஸ்(ரலி)அவர்கள் நூல்: புகாரி 1885

இந்த துஆவின் பிரதிபலனை அந்த மக்களும் அனுபவித்தார்கள்.மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து மதினாவுக்கு வந்த போது மதினாவிலிருந்த மக்கள் தங்கள் சொத்துக்களில் சரி பாதியை மக்கத்து மக்களுக்கு வழங்கினார்கள்.எவ்வளவு அவர்களுடைய செல்வத்தை மக்கத்து மக்களுக்கு வழங்கினாலும் மதினாவில் அதை வழங்கிய மக்களுக்கு எந்த குறையும் ஏற்படவில்லை.ஏன் என்றால் மதினாவுக்கு நபி(ஸல்)அவர்கள் கேட்ட துஆ பிரதிபலித்தது.பாதியைக் கொடுத்தாலும் மீதியை வைத்து முழுவதும் இருந்தால் எப்படி வாழ்தார்களோ அதே போன்று தான் வாழ்ந்தார்கள்.

பரகத்தை அடைய என்ன வழி?

ஹலாலான சம்பாத்தியம்

எனவே நம்முடைய வாழ்கையில் நமக்கு பரகத் கிடைத்தது என்றால் நாம் நிம்மதியாக வாழமுடியும்.அதை எந்த வழிகளில் பெருவது என்பதையும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள்.அந்த அடிப்படையில் செயல்பட்டோம் என்றால் நமக்கும் நம்முடைய வாழ்வில் அபிவிருத்தியைப் பெறமுடியும்.

நபி(ஸல்)அவர்கள்; யார் செல்லவத்தை உரியமுறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவருக்கு பரகத் கிடைக்கும்;. யார் செல்வத்தை தவரான முறையில் எடுத்துக் கொள்கிறாரோ அவர் சாப்பிட்டுவிட்டு வயிரு நிரம்பாதவனைப் போல என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுசயீதில் குத்ரி நூல் : முஸ்லிம் 1742

நமது பொருளாதாரத்தில் அபிவிருத்தியைப் பெறவேண்டுமானால் நாம் பொருளாதாரத்தை திரட்டும் போது இஸ்லாம் அனுமதித்த முறையில் திரட்ட வேண்டும்.அவ்வாறு நாம் திரட்டினோம் என்றால் அவனின் பரகத்தை அடைய முடியும்.இல்லாவிட்டால் நமக்கு எவ்வளவு பொருளாதரம் கிடைத்தாலும் அதைக் கொண்டு நம்முடைய தேவைகள் நிறைவடையாது என்பதை இறைத்தூதர்(ஸல்)அவர்கள் சாப்பிட்டும் வயிரு நிரம்பாதவர்போல என்று குறிப்பிடுகிறார்கள்.எனவே முதலில் நம்முடைய வாழ்கையில் பரகத் கிடைக்க வேண்டுமானால் நம்முடைய தொழிலில் நாம் இஸ்லாம் தடுத்த விஷயங்களை சேர்த்துள்ளோமா என்பதை கவணிக்க கடமைப்பட்டுள்ளோம்.அதிகமானவர்களுக்கு பரகத் கிடைக்காமல் இருப்பதற்கு காரணம் தங்களின் வியாபரத்தில் வட்டி போன்ற மார்கம்அனுமதிக்காத காரியங்களை செய்வதுதான்.நமக்கு குறைவாக கிடைத்தாலும் சரி இஸ்லாம் அனுமதித்த முறையில் தான் கிடைக்கவேண்டும் என்று உருதியாக இருந்தால் அவனுடைய பரகத்தை பெறமுடியும்.

பேறாசை படாமல் இருத்தல்.

நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ''ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் வளம் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக்கொள்கின்றாரோ அவருக்கு அதில் வளம் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன்
போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது'' என்று கூறினார்கள்.அப்போது நான், ''அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பிவைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன்'' எனக் கூறினேன். ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். பிறகு உமர் (ரலி)அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் 'முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!' எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 1472
இந்த செய்தியில் நபி(ஸல்)அவர்கள் செல்வத்தை பெறாசையில்லாமல் எடுத்தால் பரகத்தை பெறமுடியும். பெறாசையுடன் செல்வத்தை அடைந்தோமேயானால் பரகத்தை அடையமுடியாது.அதிகமானவர்கள் செல்வத்துக்காக எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்று இருக்கிறார்கள் இப்படிப்பட்வர்களுக்கு அல்லாஹ் ஒருபோதும் பரகத்தை வழங்கமாட்டன்.அதுமட்டும் இல்லாமல் சிலர் காசு பணத்துக்காக கொள்கையைவிட்டுக் கூட தடம்புரளக்கூடிய நிலைமையை பார்கமுடிகிறது இப்படி இருந்தால் எப்படி பரகத்தை அடையமுடியும்.இன்னும் நம்மில் சிலர் ஒரு பொருள் இலவசமாக கிடைப்பதாக இருந்தால் அதற்கு சண்டை இட்டுக் கொண்டு தன்மானத்தை விட்டு செல்வதை பார்கலாம்.இவர்களுக்கு தன் மானத்தை விட செல்வம் பெரிதாக தெரிகிறது.இஸ்லாமிய மார்கம் தன்மானத்துடன் வாழச்சொல்லக்கூடிய மார்கம்.தன்மானத்தை எல்லாம் தூக்கி எரிந்துவிட்டு செல்வத்துக்கு அடிபணிந்து இருந்தால் அல்லாஹ்வின் பரகத்தை எப்படி அடையமுடியும்?சிந்தித்துப்பார்கவேண்டும்! ஏற்றத் தாழ்வை பொருத்துக் கொள்ள வேண்டும்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் தன்னுடைய அடியானை அவன் வழங்குவதைக் கொண்டு சோதிப்பான் யார் அவன் பிரித்துக் கொடுத்ததை பொருத்துக் கொள்கிறானோ அவனுக்கு அதிலே பரகத்தை ஏற்படுத்துவான் விசாலமாக வழங்குவான்.யார் அதை பொருத்துக் கொள்ளவில்லையோ அவனுக்கு பரகத்தை வழங்கமாட்டான்.
ஆறிவிப்பவர்: பனூ சுலைம் குலத்தைச் சார்ந்த ஒருவர். நூல் : அஹமத் 19398
அல்லாஹ் இந்த உலகில் உள்ள அனைவரையும் செல்வந்தர்களாகப் படைத்திருக்க மாட்டான்.ஏற்றத்தாழ்வுடன் தான் படைத்து இருப்பான். வசதியில்லாதவர்கள் வசதியானவர்களைப் பார்த்துவிட்டு அல்லாஹ் நம்மையும் அவர்களைப்போன்று வைக்கவில்லையே என்று நினைத்துவிடக்கூடாது. அதை நாம் பொருத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறு பொருத்துக் கொள்வதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியும்.அல்லாஹ் சிலருக்கு செல்வத்தை குறைவாக கொடுத்து இருப்பான்
அதை நாம் பொருத்துக் கொள்ளவில்லை என்றால் அவனுடைய பரகத்தை அடைய முடியாது.நாம் எப்பொழுதும் நம்மை விட வசதி குறைந்தவனைத் தான் பார்கவேண்டும் அப்படி பார்பதின் மூலம் நமக்கு செல்வத்தின் மேல் உள்ள மோகம் குறைந்துவிடும்.நம்மை விட வசதி அதிகமானவனைப் பார்த்தால் அவன் அளவுக்கு நாம் எப்படி வசதியாகுவது என்று தான் நம்முடைய சிந்தனை இருக்குமே தவிர இருப்பதை வைத்து நாம் போதுமாக்கிக் கொள்ளமாட்டோம்.இஸ்லாம் இதற்கு அழகிய வழி முறையில் கற்றுத்தருகிறது. நூல்: புகாரி 6490
நம்மை விட குறைந்தவர்களை நாம் பார்த்தோம் என்றால் அல்லாஹ் நமக்கு வழங்கியிருக்கும் அருளை விளங்க முடியும்.நம்மை விட மேலானவர்களை நாம் பார்த்தோம் என்றால் நமக்கு இருப்பது குறையாகத்தான் தெரியும்.குறைவாக இருந்தாலும் அல்ஹம்துலில்லாஹ் இன்று இருக்க வேண்டும். இவ்வாறு நாம் நமக்கு கிடைப்பதை பொருத்துக் கொண்டோமென்றால் அல்லாஹ்வின் பரகத்தைப்பொற முடியும்.
வியாபரத்தில் உண்மை

அடுத்து நாம் வியாபாரம் செய்யும் போது இன்னொரு விஷயத்தை கடைபிடிக்க வேண்டும்.அதன் மூலம் அல்லஹ்வின் அபிவிருத்தியைப்பெறமுடியும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமரிருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மைபேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய்சொல்ரியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும்!
அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் நூல்: புகாரி 2079
வியாபாரம் செய்யும் பொது பொருளை வாங்குபவர் மற்றும் பொருளை விற்பவர் ஆகிய இருவரும் பிரிந்து செல்லும் வரை இருவருக்கும் வியாபாரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருக்கிறது. அந்ந உரிமையுடன் வியாபாரம் செய்ய வேண்டும்.அதிகமான இடத்தில் பொருள் மீது கையை வைத்து விட்டாலே அந்த பொருளை வாங்கவேண்டும் என்று நிர்பந்தப்படுத்துவார்கள்.நிர்பந்தத்தின் காரணமாக பொருளை வாங்க வேண்டிய ஒரு நிலை ஏற்படும். இதற்கு மார்கத்தின்
அனுமதியில்லை அது மட்டும் இல்லாமல் உண்மையைப் பேசி பொருளில் உள்ள குறைகளை கூறி வியாபாரம் செய்ய வேண்டும். இப்படி நாம் நடந்து கொண்டோம் என்றால் நமக்கு பரகத்தைப் பெற முடியும்.ஆனால் இன்று நடை பெரும் அதிகமான வியாபாரங்களில் இந்த முறைகள் நடையபெறுவதில்லை வெறும் பொய்யும் பித்தளாட்ங்களும் தான் நடை பெருகிறது.எப்படியாவது அடுத்தவர்களை ஏமாற்றுவதிலேயே குறியாக இருப்பார்கள் இப்படி வியாபாரம் செய்தால் நமக்கு அல்லாஹ்வின் பரகத்தைப் பெற முடியாது.

திருமணத்தில் எளிமை
குறைந்த செலவில் நடத்தப் படும் திருமணமே அதிகம் பரகத் பொருந்தியதாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்:ஆயிஷா(ரலி)அவர்கள் நூல்: அஹ்மத் 23388

திருமணம் குறைந்த செலவில் நடத்தப் படவேண்டும் அவ்வாறு நடத்தப் படுவதின் மூலம் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும்.நம்முடைய சமூதாயம் இன்று திருமணத்திற்கு செலவு செய்வதைப்போன்று வேறு எதற்கும் செலவு செய்வது கிடையாது.கொள்கை சகோதரர் கூட இந்த திருமணவிஷயத்தில் மடங்கி விடுகிறார்கள்.வீண்விரயம் இஸ்லாம் கற்றுத்தராத அனாச்சாரங்கள் மலிந்து கிடப்பதைப்பார்க்கலாம்.இஸ்லாம் கற்றுத்தரகூடிய முறையில் குறைந்த செலவில் திருமணத்தை நடத்த வேண்டும் அவ்வாறு செய்வதின் மூலம் நம்முடைய வாழ்வில் அல்லாஹ்வின் பரகத்தைப் பெறமுடியும். எனவே இவைகளை அறிந்து அதன் அடிப்படையில் செயல்பட அல்லாஹ் நம் அனைவருக்கும் அருள் புரிவானாக



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நல்லடியார்கள் !

எல்லாப் புகழும் இறைவனுக்கே! அன்புக்குரிய சகோதர, சகோதரிகளே!
இன்றைய கால கட்டத்தில் இஸ்லாம் மார்க்கம் மக்களிடையே பரவாமல் தடுப்பதென்ற முடிவுடன் பலவித உத்திகளைக் கொண்டு அவப்பெயர் களையும், முஸ்லிம்களை மாத்திரம் தீவிரவாதத்தை உடையவர்களென பொய்ப் பிரச்சாரங்கள், பிட் நோட்டீஸ்கள் இன்னும் பிற முயற்சிகள் மேற்கொண்டாலும், இஸ்லாம் மார்க்கம் மேலும் மேலும் பரவி சத்தியத்தை நிலை நிறுத்துவதைக் காணலாம்.சத்தியம் அறியாத மக்களிடையே பரவினாலும், இந்த சத்திய மார்க்கத்தில் ஒவ்வொருவரும் நன்மையை ஏவி தீமையை தடுத்து சிறந்த சமுதாய முன்னோடிகளாக திகழக் கூடிய முஸ்லிம்களை ஷைத்தானின் சூழ்ச்சியில் சிக்கி கற்றவர்கள் எனக் கூறிக் கொள்ளும் உலமாக்கள், மெளலவிகள் தங்களின் தவறான பிரச்சாரத்தின் மூலம் ”தர்ஹா” என்று சொல்லக் கூடிய சமாதிகளின் மீது அடிமைப்பட்டுக் கிடக்க வைத்துள்ளனர். இந்த அடிமைத்தனம் இன்று நேற்றல்ல நூஹு(அலை) அவர்களின் காலத்திலிருந்தே இருந்து வருகிறது.
படைத்த இறைவனை மறந்து, தத்தமது சமூகங்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட நபியின் வழிமுறைகளை (சுன்னத்துகளை) மறந்து, இறைவனால் தூக்கியெறியப்பட்ட ஷைத்தானின் சூழ்ச்சியாலும், தத்தமது மன இச்சைகளைப் பின்பற்றியும் இறைவன் எதை மன்னிக்கவே மாட்டானோ அந்த இணை வைத்தலை செய்து வருகின்றனர்.
இவர்கள் செய்யக்கூடிய செயல்கள் தவறானது என்று நாம் கூறினோம் என்றால், அவர்கள் அளிக்கக் கூடிய பதில் “”உடம்பு சரியில்லையென்றால் டாக்டரிடம் காட்டுகின்றோம்; அவர் குணப்படுத்துகின்றார்; நாம் ஒரு முதலமைச்சரை சில காரணங்களுக்காக சந்திப்பது என்றால் நம்மால் இயலாது. அதற்கு நமக்கு தெரிந்த ஒரு M.L.A., M.P. ஐயோ தான் நமக்கு சிபாரிசு பண்ணக் கூடியவர் என்று நம்புகின்றோம்; செயல்படுத்துகின்றோம். நாமெல்லாம் பெரும் பாவம் பண்ணி இறைவனின் கோபத்திக்கு ஆளாகியுள்ளோம். எனவே நாம் பாவத்தை மன்னிப்பதற்கும் மறுமையில் சிபாரிசு பண்ணுவதற்கும் வக்கீலாகவே அவ்லியாக்களிடம் வேண்டுகிறோம் என்று கூறுவதைக் காணலாம்.
இவர்களுக்கு இறைவன் கூறக் கூடிய பதில் என்ன? தத்தமது நாயகர்களாக நினைக் கூடியவர்களிடத்தில் நடக்கும் அனாச்சாரங்கள் என்ன? என்பதை பற்றிப் பார்ப்போம்.
“தர்ஹா” என்பது மார்க்கப் பெரியார்களின் பெயரால் கட்டப்பட்டுள்ள கபுரடிகளாகும். இச்சமாதிகளின் மூலம் வழிகெடுவதுமல்லாமல், பலவித அனாச்சாரங்களைப் புரிவதையும் காணலாம். இது மட்டுமில்லாமல் இறந்துபோய் கபுரில் அடக்கப்பட்டவர்களை அவமானப்படுத்துவதையும் காணலாம். ஏன் இந்த நிலையென்றால் – இறந்துபோன பெரியவர்கள் மூலம் தமது தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகின்றன என்ற தீய எண்ணத்தை தவறான பிரச்சாரத்தின் மூலம் மனதில் நிறுத்தி வைத்திருப்பதே முக்கிய காரணமாகும். அவ்லியாக்கள் எனப்படுவோர் யார்? அவர்களின் தகுதிகளாக இறைவன் குறிப்பிடுவது எவற்றை? அவ்லியாக்களை எவர் அறிய இயலும்? இன்னார்தான் அவ்லியா என்பதற்கு என்ன அத்தாட்சி? இறைநேசகர்கள் யார் என்றால், இறைவனை ஏற்று, இறைவனால் அனுப்பப்பட்ட நபியைப் பின்பற்றி, நன்மை தீமைகளை மக்களிடம் எடுத்துரைக்கக் கூடிய மூஃமின்கள் அனைவரும் இறைநேசகர்கள் தான். இதை இறைவன் தன் திருமறையில் கூறுகின்றான்(தயவு செய்து பார்க்கவும்) 2:195;2:2222;3:76;3:146,148,159;5:13;5:42;5:93;9:4-7,108;10:62,63; 49:9;60:8;61:4
மேற்குறிப்பிட்ட வசனங்களின் வாயிலாகவே இறைநேசகர்களின் அடையாளங்களையும், தகுதிகளையும் குறிப்பிடுகின்றான்.
தர்காவில் அடங்கி இருக்கும் இந்த இறை நேசர்களெல்லாம் தூய இஸ்லாத்தைப் பரப்ப வேண்டும் என்ற நன்நோக்கில் ஊரைவிட்டு, தாம் பிறந்த நாட்டை விட்டு, மனைவி மக்களையெல்லாம் விட்டு சத்தியத்தை எடுத்துரைக்கும் பொருட்டு ஹிஜ்ரத் புரிந்து, மார்க்கத்தை எடுத்துரைத்த இவர்களை இவர்களின் இறப்புக்குப் பின் அவர்களின் கபுரின் மேலாக கட்டிடம் எழுப்பி, அதற்கு வெள்ளையடித்து, பூமாலை, பூக்கள் தூவி அந்த கபுருக்கருகில் பச்சை நிற தலைப் பாகையுடன் ஒருவர் கையில் மயிலிற குடன் அமந்து கொண்டு அங்கு வருவோர் போவோரிடம் அவ்லியா சக்திமிக்கவர் பலவிதநோய்களைத் தீர்க்கக் கூடியவர், பல கராமத்களை உடையவர் என்று கூறி இன்ன அவ்லியாவுக்கு பாத்திஹா ஓதுங்கள் எனக்கூறி, தமக்குத் தெரிந்த அரைகுறையான அரபி வார்த்தைகளை முனுமுனுத்து அதைக் கொண்டு வயிறு வளர்ப்பதைக் காணலாம்.
அங்கு வரக்கூடிய மக்கள் இன்ன அவ்லியாவிடம் வேண்டிக் கொண்டால் குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தைக் கிடைக்கும். நோய் தீரும் என்று நம்பி வந்து தங்களது ஈமானை இழக்கின்றனர். இந்த மக்கள் என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா? இறைவனை நம்ப மறுத்து, அதற்கு இணையாக வணங்கும் கற்களை நோக்கி, மாரியம்மா, காளியம்மா , மூலியம்மா என்றழைக்கக்கூடிய காஃபிர்களும் கூட கற்களை வணங்குவதால் அவர்களுக்கும் நோய் தீர்ந்து விடுகின்றது. குழந்தை பிறக்கின்றது. இன்னும் பல தேவைகளும் பூர்த்தியாகின்றன. இதை வைத்து அவர்கள் வணங்க கூடிய கற்களை அவ்லியாக்களாக தங்களது பாதுகாவலர்களாக ஏற்றுக் கொள்வார்களா? சிந்திக்கவும். மேலும் நிராகரிப்பவர்கள் செய்யக்கூடிய செயல்களை யெல்லாம், முஸ்லிம் என்ற லேபிளில் செய்வதைக் காணலாம்.
அவர்கள் தத்தமது தெய்வங்களுக்கு வணங்க சூடம், சாம்பிராணி, பத்தி கொளுத்துவது போன்று, நம்மவர்களும் அவ்லியாக்களின் சமாதிகளுக்கு பூச்சூடி, பத்தி கொளுத்தி வருவதைக் காணலாம். அவர்களிடத்தில் விளக்கு ஏற்றி இறுதியில் பிரசாதம் என்ற பெயரில் சாம்பலை அளிக்கின்றார்கள். நம்மவர்களிடத்தில் துவாரஜகோஜனம் என்னும் பெயரில் பத்தி, நாட்டுச் சர்க்கரை, பூ எல்லாம் கலந்த கலவையாக அளிப்பதையும், அதை வாங்கி பக்தி சிரத்தையுடன் உண்பதற்கும், கூட்டம் அடித்து பிடித்து அலைமோதுவதையும் காணலாம். அவர்கள் ஊர் கூடி பால்குடம், தீர்த்தக் குடம் எடுத்தால், நம்மவர்கள் சந்தனக் குடம் எடுத்து விமரிசையாக கொண்டாட்டம் போடுவதைக் காணலாம். இதுபோன்ற பல உதாரணங்களை நாம் எடுத்துரைக்கலாம். இன்னும் இந்த அவ்லியாக்களுக்கு பல பாத்திஹாக்கள் ஓதுவதைக் காணலாம். பாத்திஹா ஓதுவதால் பரக்கத் ,செல்வம், சிறப்பு என்று பல கிடைக்கின்றன என்றால்,பாத்திஹா ஓத வைக்கக் கூடிய உங்களுக்கு இது போன்றவை கிடைக்கும் எனில்…. ஓதக் கூடிய பச்சை தலைப்பாகை பண்டாரங்களுக்கு எவ்வளவு கிடைக்க வேண்டும்? அதுவும் நீங்கள் பயணம் செய்து அவ்லியாக்களுக்கு பாத்திஹா ஓதுகிறீர்கள். அவ்லியாவுக்கு பக்கத்திலேயே காலம் பூரா அமர்ந்து இந்த செயல்களை செய்கின்ற இந்த பண்டாரங்கள் உங்களோட கைகளை எதிர்பார்த்து ரூ.5,10க்கு ஆசைப்படுவது எதைக் காட்டுகின்றது?
அங்கிருக்கக் கூடியவர்களுக்கே ஒன்றும் இல்லை….ஆனால் உங்களுக்கு மட்டும் பரக்கத் கூரையைப் பிய்த்துக்கொண்டு கொட்டுவதை எப்படி எதிர்பார்க்க இயலும்? அதுவும் அவ்லியாவின் மேலே அவர்களுக்கே நம்பிக்கையில்லை. தத்தமது உணவு பிரச்சினை தீர்க்க உண்டியல் நடப்பட்டு, அதில் விழக்கூடிய காசுகளை எதிர்பார்ப்பது எதைக் காட்டுகின்றது? சிந்திக்கவும். இங்கு ஓதக் கூடிய பாத்திஹாக்களுக்குப் பின் கொடுக்கப்படும் நார்சா மிக சிறப்பாக கண்ணியப்படுத்தப்படுகின்றது. பக்தி சிரத்தையுடன் பெற்று தமது சொந்தக்காரர்களுக்கு உறவினர்களுக்கு அனுப்பி வைக்கின்றனர். இதை சாப்பிடுவதால் பலா முஸீபத்துகள் (நோய் நொடிகள்) வெருண்டோடுவதாகவும் நம்பிக் கொள்கின்றனர். கடையில் இருக்கும் சர்க்கரை, பூ, கல்கண்டு இவைகளுக்கு இருக்கும் இடத்தில் மதிப்பு இல்லை. ஆனால் இது நார்சாவாக உருவெடுத்தால், இவைகளின் மீது அவ்லியாவின் பரக்கத் இறங்கியுள்ளதாக எண்ணுவது எந்த அளவு அறியாமை?
மேலும் இந்த அவ்லியாக்களால் நோய்களையும், பேய்(?)களையும் குணப்படுத்த இயலும் என்று நம்பச் செய்து பேய்(?) பிடித்து இருப்பவர்களை அழைத்து வந்து அவர்களை அங்கு தங்கச் செய்து, பல சித்திரவதைகள் புரிந்து மனநிலை சரியில்லாத்வர்களை குற்றுயிரும், குலையுயிருமாக வெளிக் கொண்டு வருவதையும் காணலாம்.
இறந்தவர்கள் பேயாக வருவதில்லை:
ஒரு மனிதரோ, பெண்ணோ மன அழுத்தத்தின் காரணமாக மன வியாதிக்கு ஆட்பட்டால் அவர்களையெல்லாம் பேய் பிடித்து உள்ளவர் என்று கூறி தர்காக்களில் சங்கிலிகளால் பிணைத்து அவர்களை அடித்து, உதைத்து சித்திரவதைப்படுத்தி தன் வயிறுகளை வளர்க்க மிரட்டி இன்ன இன்ன  பொருள்களை தொடுத்தால் இன்னாரை விட்டு விலகி விடுகின்றேன் எனச் சொல்லச் செய்து, அதே போன்று பொருட்களைப் பெற்று – தர்ம அடிகளை பரிசாகக் கொடுத்து, சுரண்டுவதில் குளிர்காய்கின்றனர்.
மனநிலை சரியில்லாதவர்களை அவ்லியாக்களிடத்தில் சென்றுதான் குணப்படுத்த வேண்டும் என்பதில்லை. இறைவனின் மீது தவக்கல் வைத்து சிறந்த மனநல மருத்துவரை நாடி சிகிட்சை பெற்றாலே போதும். ஆனால் உளறல் பிதற்றல் ஓடுவது, சப்தமிடுவது ஆகிய அனைத்தும் விரோதி சைத்தானின் தூண்டலே. பிறந்த குழந்தை மீண்டும் தாயின் கர்ப்பப்பையில் எப்படி நுழைய முடியாதோ, கறந்த பால் மீண்டும் எப்படி மடிபுகாதோ அதே போல் இறந்தவர்களின் ஆன்மா மீண்டும் இவ்வுலகம் வர முடியாது. 39:42 இறைவாக்கின்படி இறப்பில் கைப்பற்றப்பட்ட ஆன்மா மீண்டும் இவ்வுலகிற்கு வரவே முடியாது. இப்படி இருக்கையில் இறந்த ஒருவரின் ஆன்மா மற்றொருவதை சார்வது எப்படி சாத்தியமாகும்? சிந்திக்கவும்!
“கப்ருகளை ஜியாரத் செய்யும் பெண்களையும் அவற்றில் பள்ளிகள் கட்டுபரைவுயும் விளக்கேற்றுபவரையும் நபி(ஸல்) அவர்கள் சபித்தனர்.”  ஆதாரம்: அபூஹுரைரா(ரழி), நூல்: ஸுனன்.
மேற்காணும் ஹதீஸுக்கு மாறாக பெண்கள் சாரைசாரையாக கபுருக்கு செல்வதையும் விளக்கேற்றுவதையும் கப்ரின் மேலே கட்டம் கட்டப்பட்டுள்ளதையும் காணலாம். இச்செயல்கள் மிக வேதனைக் குரியதாக உள்ளன. நபி(ஸல்) அவர்களை நேசிப்பதகாவும், உயிருக்கு மேலானவர்கள் என்று எண்ணக்கூடியவர்கள் கீழ்வரும் ஹதீஸை கவனிக்கவும். நபியின் மகளார் பத்திமா(ரழி)க்கே கப்ருக்கு சென்றால் கடுந்தண்டனை கிடைக்கும் என்பதை காணலாம்.
நபி(ஸல்) அவர்களோடு சென்று நாங்கள் ஓர் மைய்யத்தை அடக்கம் செய்த பின் அவர்களோடு அந்த இறந்தவரின் வீட்டின் பக்கம் திரும்பி வரும் போது எதிர்பாரா வண்ணம் ஒரு பெண் முன்னாலிருந்து வருவதை நபி(ஸல்) கண்டுவிட்டனர். அப்பெண் எவர் என்பதை நபி(ஸல்) அவர்கள் அறிந்து கொண்டார்கள் என்று நான் எண்ணிணேன். அவர் பாத்திமா(ரழி) அவர்கள் தாம்! எனவே நபி(ஸல்) அவர்கள் (தம் அருமை மகளாரை நோக்கி)” உம்முடைய வீட்டிலிருந்து எக்காரணம் கொண்டு வெளி வந்தீர்! என்று வினவினார்கள்; அதற்கு பாத்திமா(ரழி) அவர்கள், இறந்தவரின் குடும்பத்தினரிடம் சென்று அவர்களுடைய இறந்த உறவினருக்கு இறையருளைக் கேட்டுவிட்டு அவர்களுக்கும் அனுதாபம் கூறிவிட்டு வருகிறேன் என்று கூறினார்கள். (அது கேட்ட) நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களுடன் அவரின் அடக்க இடத்திற்கு சென்றீரா? என்று வினவ (அதற்கு) பாத்திமா(ரழி) அல்லாஹ் என்னை காத்தருள்வானா! நிச்சயமாக தாங்கள் இதுபற்றி (கூடாது என்று) கூறி வந்ததை நான் செவியுற்றேன்”என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் நீர் அவர்களோடு (அவரின்) அடக்கதலத்திற்கு சென்றிருப்பீராயின் அதன் காரணமாக உமக்கு கடும் வேதனையுண்டு என்று கூறி “”உன் தந்தையின் பாட்டன் சொர்க்கம் செல்லும் வரை நீயும் செல்ல முடியாது” என்று கூறினார்கள்.
ஆதாரம்: இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல்: அபூதாவூத், நஸயீ.
மேற்கண்ட ஹதீஸின் வாயிலாக பெண்கள் கப்ருக்குளுக்குச் சென்றால் கடுந்தண்டனை உண்டு என்பதை உணரலாம். இது மாத்திரம் அல்லாமல் தர்ஹாக்களில் தட்டு, தாயத்துகள் விற்கப்படுகின்றன. இதைக் கொண்டு (செப்புத் தகட்டில்) ஏதோ சில அரபி வாசகங்களை எழுதி தத்தமது வீடுகளின் முகப்பில் பிரேமிட்டு மாட்டி விட்டால் முஸீபத்துகள், கெட்ட செயல்களெல்லாம் விலகிவிடும் என்றும், தாயத்துகள் அணிந்து கொண்டால் பேய்கள், ஆவிகள், பயம் ஆகியவற்றி லெல்லாம் இருந்து விலகிக் கொள்ளலாம் என்று விற்பனை செய்கின்றனர். இதை நம்பி வாங்கக் கூடிய மக்கள் இந்த தகடு, தாயத்துகள் மீது மிகுந்த மரியாதை செலுத்துவதையும் காண்கின்றோம். இந்தப் செப்புத் தகட்டிற்கு செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் பத்தி, சாம்பிராணி போடப்பட்டடு மிக பக்தி சிரத்தையுடன் பாதுகாக்கின்றனர். ஆனால் இதற்கு அளிக்கக்கூடிய சிரத்தையை குர்ஆனுக்கு அளிக்கின்றார்கள்? என்பதை பார்த்தோமானால் நிச்சயம் இல்லையென்றே சொல்லலாம்.
குர்ஆனை பக்குவமாக பட்டுத்துணியெடுத்து அதை உறையாக தைத்து உயரமான இடத்தில் வைத்து விடுகின்றனர்; ஒரு சிறைக் கைதியைப் போல. ஏனெனில் சிறையில் இருக்கக்கூடிய ஒருவன் தான் பரோலில் வெளியே வந்து, பரோலின் காலம் முடிந்த பின் மீண்டும் சிறைக்கு செல்வானோ, அதுபோல குர்ஆனை உயரமான இடத்தில் வைத்து விட்டு, வீடுகளில் எவரேனும் இறந்து, இறந்தவர்களுக்கு -3ம் பாத்திஹா, 7ம் பாத்திஹா, 40ம் பாத்திஹா என்ற நிலைக்கு மாத்திரம் குர்ஆனை கையிலெடுத்து அரபி வாசகங்களை ஓதிவிட்டு, மீண்டும் இருந்த இடத்திலேயே வைக்கின்றார்கள். இறைவன் “”குர்ஆன்”க்கு மாத்திரம் பேசக் கூடிய சக்தியை அளிதிருப்பானாயின் குர்ஆன் இறைவனிடத்தில் பிரார்த்திக்கும் “”யா இறைவா இன்னார் வீட்டில் தொடர்ந்து மரணத்தை அளிப்பாயாக”, ”அப்பொழுதுதான் என்னைக் கையிலெடுத்து ஓதுகின்றார்கள் ” அந்த சந்தர்பத்திலாவது எனக்கு விடுதலை கிடைக்கின்றதாகப் பிரார்த்திக்கும்.
-குர்ஆனைப் பற்றி இறைவன் தன் திருமறையில் இந்த குர்ஆனை நன்கு நினைவுப்படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம். எனவே (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்குர்ஆன் 54:40)
இதற்கு மாற்றமான முறையிலேயே பயன் படுத்துவதைக் காணலாம். மேலும் தாயத்துகளை அணிவதை ஹதீஸ் தடை செய்கின்றது. இதுமட்டுமல்ல சந்தனக்கூடு – உரூஸ் என்ற பெயரில் பல அனாச்சாரங்களும் நடக்கின்றன.
சந்தனக்கூடு – உரூஸ் அன்று விசே­பாத்திஹாக்கள் ஓதப்பட்டு, சந்தனம் ஊற்றப்பட்டுள்ள சந்தனக் குடத்தை ஊர்வழியாக ஊர்வலம் சென்று அவ்லியாக்களின் சமாதிகளில் பூச, விழா ஏற்படுத்தி அந்த விழாவில் கூட்டங்கள் அலைமோ, ஆண், பெண் இருபாலரும் கூட்டத்தின் நெரிசலில் இடித்து, கெட்ட செயல்களையெல்லாம் புரிந்து அனாச்சாரங்களை நிறைவேற்றும் இடங்களாக அவ்லியாக்களின் சமாதிகளுகும், அடக்க ஸ்தலங்களும் பயன்படுகின்றன.
இந்த உரூஸில் சிலம்பாட்டம், ஒலியாட்டம், குரங்காட்டம் போன்ற பல செயல்களை இஸ்லாத்திற்கு சம்பந்தமில்லாத முற்றிலும் மாற்று இனத்தவர்கள் புரியக் கூடிய செயல்களை இஸ்லாமிய திருவிழா போல நடத்துவதைக் காணலாம்.
இதுவும் அல்லாமல் பூக்குழி இறங்குதல் என்ற பெயரில் நெருப்பு மிதித்தல் என்ற நிகழச்சியையும் நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சி எதன் வாயிலாக என்றால் தாங்கள் குடும்பத்தார்கள் படைத்த இறைவனை விட்டு தனது அடிமையிடம் தாங்களது பிரார்த்தனையை வேண்டி, அந்த பிரார்த்தனைகள் இறையருளால் பூரணம் ஆனால் – அது அந்த அவ்லியாவால் தான் நடந்தது என்று எண்ணி அந்த அவ்லியாவுக்கு நன்றிக் கடன் செலுத்துவதாக எண்ணி இந்த நெருப்புக் குழியில் இறங்கி, தங்களது நேரத்தையும், கால்களையும் புண்ணாக்கி கொண்டு, யா முஹைதீன், யா காஜா என்றெல்லாம் கூப்பாடுகளிட்டு அலறுவதில் எத்தகைய பயனும் இல்லை.
அந்த அவ்லியாவுக்கு நேர்ந்து முடி இறக்குவதும், ஆடு மாடு, கோழிகளை அறுத்து பலியிடுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.  மேலும் அந்த அவ்லியாக்களின் சமாதிகளில் விபச்சாரங்களும், சீட்டாட்டங்களும், மது விற்பனைகளும் நடப்பதை காண்கையில் நிச்சயமாக இந்த இடம் புனிதமானதாகவோ, பயணம் செய்யக்கூடிய இடங்களோ என்றால் நிச்சயமாக இல்லை. இந்த அவ்லியாக்களுக்கும் கராமத்துகள் உண்டென்று நம்ப வைத்து பணம் சுரண்டி உண்டு வருவதையும காணலாம். இதுபோன்ற பெயர்களில் எல்லாம் உள்ள அவ்லியாக்கள் நிச்சயமாக இறை நேசகர்களாக இருக்க முடியாது. . மேலும் இறைவனும், இறைத்தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டி தந்த முறைதானா என்றாலும் இல்லை. மாறாக இறைவன் தன் திருமறையில், தன்னை விட்டு தன் அவ்லியாவிடம் கையேந்துபவர்களை நோக்கிக் கூறுகின்றான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி, எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்களும், உங்களைப் போன்ற அடிமைகளே! (உங்கள் கோரிக்கைகளை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள் என்று கூறுவதில்) நீங்கள் உண்மை சொல்லுபவர்களாக இருந்தால், அவர்களை நீங்கள் அழைத்துப் பாருங்கள், உங்களுக்கு அவர்கள் பதிலளிக்கட்டும்.” (அல்குர்ஆன் 7:194)
“”….அவர்களுக்கு கால்கள் இருக்கின்றனவா? அவைகளைக் கொண்டு நடக்கின்றார்களா? அவர்களுக்குக் கைகள் இருக்கின்றனவா; அவைகளை கொண்டு பிடிக்கின்றாரக்ளா? அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு பார்க்கின்றனரா? அவர்களுக்கு காதுகள் இருக்கின்றனவா; அவைகளைக் கொண்டு கேட்கின்றனரா? (அல்குர்ஆன் 7:195)
இறந்துவிட்ட அவ்லியாவுக்கு கால்கள் இருந்தும் நடந்து வர இயலாது. கைகள் இருந்தும் அதைக் கொண்டு எவ்வித செயல்களை செய்ய இயலாது. கண்கள் இருந்தும் எந்த ஒரு பொருளையும் பார்க்க இயலாது. காதுகள் இருந்தும், (கேட்கும் பிரார்த்தனைகளை) செவி சாய்த்து, பதில் கூறவோ சிபாரிசு பண்ணவோ இயலாது. மேலும் அவ்லியாக்களுக்கு நேர்ச்சை புரிந்து, ஆடு,கோழி, மாடுகளை அறுத்து பலியிடுகின்றனர். பலியிடுவது முழுவதும் அல்லாஹ்வுக்கே….
“” கால்நடைகளிலும், விவசாயத்திலும் (சிலவற்றைக் குறிப்பிட்டு நேர்ச்சைக்காக) இது தடுக்கப்பட்டிருக்கிறது. எங்கள் கொள்கைப்படி, நாங்கள் விரும்புகிற (புரோகிதர், அவ்லியா முதலிய) வர்களைத் தவிர, (மற்றெவரும்) அதனைப் புசிக்க கூடாது என்று அவர்கள் கூறுகின்றனர்.” (அல்குர்ஆன் 6:138)
அவ்லியாக்கள் எங்களுடைய கனவில் வந்து இன்ன தர்ஹாவிற்கு வரச் சொன்னார். அதனால் போகின்றோம் எனக் கூறி தர்காக்களுக்கு செல்லுபவர்களுக்கென அல்லாஹ் கூறுகின்றான்.
“”(நபியே!) இவர்கள் அல்லாஹ் அல்லாதவர்களைத் தெய்வங்களாக எடுத்துக் கொண்டிருக்கின்றனரா? (அவ்வாறாயின் அவர்களை நோக்கி) என்னுடன் இருப்பவர்களின் வேதமும், (அதவாது, குர்ஆன் இன்ஜில், தவ்றாத்) இதோ இருக்கின்றன.(அல்லாஹ் அல்லாதவற்றை வணங்குவதற்கு) உங்களுடைய அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்” என்று கூறும். எனினும் அவர்களில் பெரும்பாலோர் உண்மையை அறிந்து கொள்ளாமல் புறக்கணிக்கின்றனர். (அல்குர்ஆன் 21:24)
மேற்கூறப்பட்ட வசனத்திலிருந்து அவ்லியாக்களை வணங்குவ தற்கும், நேர்ச்சை புரிவதற்கும் எந்தவித அத்தாட்சியையும் இறைவனு டைய வேதத்திலிருந்தும் நபி(ஸல்) அவர்களின் வழிமுறையிலிருந்து எவரும் கொடுக்க முடியாது என்பதை உணரலாம்.
எனவே இறைவனுடைய வாக்கான “”இணைவைத்தலை மண்ணிக்கவே மாட்டேன் ” என்பதற்கிணங்க நாமும் நம் பின்வரும் சந்ததிகளும் இதுபோன்ற விலக்கப்பட்ட செயல்களை விட்டு விலகி, நன்மையை ஏவி தீமையை தடுத்து ரஸூல்(ஸல்)  
 காட்டி தந்த முறையை செயல்படுத்த நம்மீது இறைவன் அருள்புரிவானாக!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

ஓதுங்கள்.


குர்ஆனை உலகப் பொதுமறை என்று நாம் பெருமையாக சொல்லிக் கொண்டாலும், அதன் உள்ளடக்கத்தையும் அது உலகிற்கு வைக்கும் அழைப்பையும் நம்மில் எத்துனைப் பேர் கூர்ந்து - ஆழ்ந்து கவனிக்கிறோம்? முஸ்லிம்கள் பெருமைப் பேசிக் கொள்வதற்காகவோ வெறும் புனிதப் பொருளாகக் கருதிப் பாதுகாத்து வைப்பதற்காகவோ குர்ஆன் இறக்கி வைக்கப்படவில்லை.

அதன் ஒளியும் - ஒலியும் உலகத்தாரின் கண்களுக்கும், செவிகளுக்கும் சென்றாக வேண்டும். அந்தப் பணியை செய்ய முஸ்லி்ம்கள் தயாராகவில்லை என்றால் அவர்கள் குர்ஆனைப் பற்றி பெருமைப் பேசுவது வெறும் வெத்துப் பேச்சாகவே முடியும்.

குர்ஆனை பொருளரிந்து படிப்பதும், அதன் கருத்துக்களை, வாதங்களை ஆழ்ந்து சிந்திப்பதும் கட்டாயம்.

அல்குர்ஆனை பொருளறிந்து படிப்பது.

திருமறையை சூரத்துல் ஃபாத்திஹாவிலிருந்து சூரத்துன்னாஸ் வரை முழுமையாகப் படித்து அதன் செய்திகளை அறிந்து கொள்ளவேண்டும். அதன் கட்டளைகளுக்கு கட்டுப்படுவது, அது தடுக்கும் செயல்களை விட்டும் விலகிக் கொள்வது. அதில் கூறப்பட்ட சம்பவங்களின் மூலம் படிப்பினை பெறுவது, இவ்வாறு அல்குர்ஆனோடு நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வது முஸ்லிம்கள் அனைவரின் மீதும் கட்டாயக் கடமையாகும். நபி(ஸல்) அவர்களின் குணநலன்கள் அல்-குர்ஆனாகவே இருந்தது என்று அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதின் பொருளும் இதுதான்.

எனவே நம்முடைய வாழ்க்கையை முற்றிலும் அல்-குர்ஆனுக்கு கட்டுப்படும் வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளவேண்டும். அதுவே அல்-குர்ஆன் இறக்கி அருளப்பட்டதின் மகத்தான நோக்கமாகும். இந்த நோக்கத்தைப் புரிந்து கொண்ட நபித்தோழர்களும் நபித்தோழியர்களும் அல்-குர்ஆனுக்கு இணங்க தங்களது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். ஒவ்வொரு வசனம் இறங்கும் போதும் அதன் கட்டளைகளுக்கு உடனே கட்டுப்படுபவர்களாக இருந்தனர். இதற்கு வரலாற்றில் எத்தனையோ சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் பொதுமக்களுக்குப் புரியாது என்று கூறுவது தவறான கூற்றாகும். திருக்குர்ஆனின் அர்த்தம் மற்றும் விளக்கங்களை நேரடியாக அறிவதற்கு அரபி மொழியில் புலமை அவசியம் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் மொழி பெயர்க்கப்பட்டவற்றைப் படித்து அதில் உள்ள செய்திகளை ஒவ்வொருவரும் அவரவரின் அறிவுக்கு ஏற்றவாறு புரிந்து கொள்ள முடியும். ஒரு நூல் மொழிபெயர்க்கப்படுகிறது என்றால் அந்த மொழியை அறியாதவர்கள் அதனை புரிந்து கொள்ளவேண்டும் என்பதற்குத்தான். எனவே குர்ஆனை அதன் மொழிபெயர்ப்பை புரிந்து கொள்ள முடியாதென்பது தவறானதும் அல்லாஹ்வின் வேதவசனங்களுக்கு மாற்றமான கூற்றுமாகும். அல்லாஹ் இதனை 54: 32, 47: 24 வசனங்களின் மூலம் உணர்த்துகிறான்.

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُّدَّكِرٍ 

நிச்சயமாக இக்குர்ஆனை நன்கு நினைவு படுத்திக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே இதிலிருந்து நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (அல்-குர்ஆன் 54:32)

َفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَاَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இருதயங்கள் மீது பூட்டுப் போடப்பட்டு விட்டனவா? (அல்-குர்ஆன் 47:24)


அல்குர்ஆனை ஓதுதல்

பொருளறியாமல் படித்தாலும் ஆன்மீக ரீதியாக நன்மையை பெற்றுத்தரும் ஒரே நூல் அல்குர்ஆன் மட்டும்தான். திருக்குர்ஆனை ஓதுவதில் எண்ணிலடங்கா நன்மைகள் கிடைக்கின்றன.  திருமறையைப் படித்தவர்களுக்காக அது மறுமையில் அல்லாஹ்விடம் சிபாரிசு செய்யும். இதுபோன்ற இன்னும் பல நன்மைகளும் சிறப்புக்களும் உள்ளன. எனவே பொருட்செலவோ, கடின உடலுழைப்போ இன்றி குறைந்த நேரத்தில் நிறைந்த நன்மையைப் பெற்றுத் தரும் திருமறையை அதிகமாக ஓதிடவேண்டும்.
குறிப்பாக ரமளான் மாதத்தில் அதிமாக ஓதவேண்டும். ரமளான் மாதத்தில் ஒவ்வொரு முஸ்லிம் ஒரு தடவையாவது குர்ஆனை முழுமையாக ஓதி முடிப்பது நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலில் ஒன்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் ரமளானில் ஒரு தடவை குர்ஆனை ஓதிக் காண்பிக்கப்பட்டது. அவர்கள் மரணிக்கும் வருடம் இரண்டு தடவை ஓதிக் காண்பிக்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) - ஆதாரம் : புகாரி)

குர்ஆனின் சிறப்புக்கள்.

நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம் ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அல்-குர்ஆன் 17:82)

மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசமும் வந்துள்ளது. (உங்கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அருமருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது. (அல்-குர்ஆன் 10:57)
(நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக. (அல்-குர்ஆன் 16:98)

அகிலத்தாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்படடதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால், அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். (அல்-குர்ஆன் 69: 43-46)


குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு அத்தியாயங்கள் அல்பகரா, ஆலஇம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம்.

குர்ஆனைத் தானும் கற்று பிறருக்கும் கற்றுக் கொடுப்பவரே உங்களில் சிறந்தவர் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள். உஸ்மான்(ரலி) புகாரி.

குர்ஆனின் ஒரு முனை அல்லாஹ்வின் கையிலும் மறுமுனை உங்கள் கைளிலும் உள்ளது. எனவே இதனை உறுதியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் இம்மையில் வழிதவறமாட்டீர்கள், மறுமையில் அழிவுறவும் மாட்டீர்கள். என்பது நபிமொழி. அபூஹுரைரா(ரலி)  தப்ரானி.

பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள் முஸ்லிம்.

குர்ஆனின் சிறு பகுதியேனும் யார் உள்ளத்தில் மனனம் இல்லையோ அவர் உள்ளம் பாழடைந்த வீட்டைப் போன்றது என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) திர்மிதி.

குர்ஆனிலிருந்து ஒரு எழுத்தை ஓதினால் நன்மை இருக்கிறது. ஒரு நன்மை அதுபோன்று பத்து மடங்காக்கப்படும். "அலீஃப், லாம், மீம்" ஒரு எழுத்து என்று சொல்லமாட்டேன். மாறாக அலீஃப் ஒரு எழுத்து, லாம் ஒரு எழுத்து, மீம் ஒரு எழுத்துமாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  இப்னு மஸ்வூத்(ரலி) திர்மிதி, தாரமி.

குர்ஆனை ஓதக்கூடியவருக்கு உவமைகளையும், ஓதாமல் இருப்பவருக்கு உவமைகளையும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். குர்ஆனை ஓதக்கூடிய முஃமினின் உவமை பழத்தைப் போன்றது. அதனுடைய வாசனையோ மணமானது. அதனுடைய சுவையோ ருசிக்கத்தக்கது. குர்ஆனை ஓதாத முஃமின்களின் உவமை பேரித்தம் பழத்தை போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ இனிப்பானது. குர்ஆனை ஓதாத நயவஞ்சகனின் உவமை குமட்டிக்காய் போன்றது. அதற்கு வாசனை இல்லை. அதனுடைய சுவையோ கசப்பானது. குர்ஆனை ஓதக்கூடிய நயவஞ்சகனின் உதாரணம் துளசி செடியை போன்றது. அதனுடைய வாசனை மணமானது. அதனுடைய சுவையோ கசப்பானது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபு மூஸா(ரலி) புகாரி, முஸ்லிம்.

குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள் மேலும் அதை ஓதுங்கள். குர்ஆனைக் கற்று அதனை ஒதி அதன் அடிப்படையில் நடப்போருக்கு உவமையானது கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையைப் போன்றது. அது அனைத்து இடங்களிலும் மணம் வீசிக்கொண்டிருக்கும். குர்ஆனைக் கற்று அது அவருடைய உள்ளத்தில் பசுமையாய் பதிந்தும் அதனடிப்படையில் நடக்கவில்லையோ அவரின் உவமை கஸ்தூரியால் நிரப்பப்பட்ட பையை அது பரவாமல் கட்டிக்கொண்டவரைப் போல என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபுஹூரைரா(ரலி) திர்மிதி, நஸயீ, இப்னுமாஜா.

நாங்கள் திண்ணையில் அமர்ந்து இருக்கிற சமயத்தில் நபி(ஸல்) எங்களிடம் வந்து உங்களிடம் பாவம் செய்யாது சொந்த பந்தங்களை துண்டிக்காத நிலையில் ஒவ்வொரு நாளும் புத்ஹான் அல்லது ஹதீக் என்ற இடத்திற்கு சென்று திமில்களுடைய இரண்டு ஓட்டகங்களை கொண்டு வர யார் விரும்புவார்? என வினவினார்கள். நாங்கள் அனைவரும் இதை விரும்புவோம் என்று பதிலளித்தோம். உங்களில் ஒருவர் பள்ளிவாசல் பக்கம் செல்லக்கூடாதா? அவ்வாறு சென்று அல்லாஹ்வுடைய வேத்தில் இரண்டு வசனங்களை ஓதுதல் அல்லது கற்றல் இரண்டு ஒட்டகங்களை விட சிறந்தது. மூன்று வசனங்களை ஓதுவது மூன்று ஒட்டகங்களை விட சிறந்தது. நான்கு வசனங்களை ஓதுவது நான்கு ஒட்டகங்களை விட சிறந்தது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் தன்னுடைய இல்லத்திற்கு செல்லும்போது தன்னுடன் நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்களை பெற்றுச் செல்லவேண்டும் என்று விரும்புவாரா? என்று வினவினார்கள். நாங்கள் அனைவரும் அதை விரும்புவோம் என்று கூறினோம். மூன்று (குர்ஆனிய) வசனங்களை உங்களில் ஒருவர் தன்னுடைய தொழுகையில் ஓதுவது அவருக்கு நல்ல கொழுத்த மூன்று ஒட்டகங்கள் கிடைப்பதை விட சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அபுஹூரைரா(ரலி)  முஸ்லிம், இப்னுமாஜா).

குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திருப்பித்திருப்பி சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆயிஷா(ரலி)  புகாரி, முஸ்லிம்.

மறுமை நாளில் குர்ஆனை ஓதி அதனடிப்படையில் நடந்தவரிடம் குர்ஆனிய தோழரே ஓதுவீராக என்று கூறப்படும். மேலும் உலகத்தில் எவ்வாறு நிறுத்தி நிதானமாக ஓதினீரோ அவ்வாறு ஓதுவீராக! நிச்சயமாக எந்த வசனத்தை கடைசியாக ஓதி முடிப்பாரோ அதுதான் சொர்க்கத்தில் உமது அந்தஸ்தாகும் என்று கூறப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி) அபூதாவுத், திர்மிதி.

குர்ஆனை ஓதிய தோழர் மறுமையில் வருவார். அப்போது குர்ஆன் இறைவா இவருக்கு ஆடையை அணிவி என்று சொல்லும் அப்போது அவருக்கு உயர்ந்த கிரீடம் அணிவிக்கப்படும். இறைவா இவருக்கு உன் அருளை வழங்குவாயாக! என்று கூறும். அப்போது அவருக்கு உயர்ந்த சீருடை அணிவிக்கப்படும். பிறகு குர்ஆன் இவரை பொருந்திக் கொள்ளுமாறு சொல்லும் அவரை இறைவன் பொருந்திக் கொள்வான். அம்மனிதரிடம் குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஒதுவீராக!, அவர் ஒதுகிறபோது ஒவ்வொரு வசனத்திற்க்கும் ஒரு நன்மை அதிகப்படுத்தப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அபுஹூரைரா(ரலி) திர்மிதி, இப்னு குஸைமா.

குர்ஆன் உயிருடன் இருக்கும் போதே படித்து நேர்வழி பெறுவதற்குத்தானேயொழிய இறந்த பின் மரணித்தவர்களுக்கு குர்ஆனை அஞ்சல் செய்வதற்கு இல்லை.

(இது) உயிரோடிருப்பவர்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறது. நிராகரிப்பவர்களுக்கு (தண்டனையுண்டு என்ற) வாக்கை உண்மையென உறுதிப்படுத்துகிறது (அல்குர்ஆன் 36: 70)
குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளிய நோக்கம் நாம் அதைப் படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்குத்தான். ஆனால் முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பது உண்மை. உங்களை மரணம் வந்தடைவதற்கு முன் குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களிடம் சென்று குர்ஆனை ஓதத் தெரிந்து கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதரர்கள் குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். குர்ஆனைப் படியுங்கள். அதைப்படிப்பது மிகவும் இலகுவானது.

குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். ஆகவே அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜுமதுல் குர்ஆனில் விளங்கிப்படியுங்கள். விளங்காதவற்றை அறிந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளுங்கள். அதன் படி செயல்படுங்கள்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

நற்குணம் !

நற்குணங்கள் நபிமார்கள் மற்றும் நல்லோர்களின் பண்புகளாகும். அவற்றின் மூலமாகத் தான் அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றன. அல்லாஹ் தன்னுடைய நபி முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி, நிச்சயமாக நீர் நற்குணங்களை உடையவர்களாக இருக்கின்றீர் (68 : 4) என்று நற்சான்று வழங்கியிருக்கின்றான். இவ்வசனம் அனைத்து நற்குணங்களும் அவர்களுக்கு இருப்பதாகக் கூறுகின்றது.

நற்குணம் பிரியத்தையும் நேசபாசத்தையும் ஏற்படுத்துகின்றது. தீயகுணமோ வெறுப்பையும் பொறாமையையும் தோற்றுவிக்கின்றது. நற்குணமுடையவனிடம் அதன் பிரதிபலன் இவ்வுலகிலும் மறுவுலகிலும் தெளிவாகவே காண முடியும். அவனிடம் அல்லாஹ் இறையச்சத்தையும் நற்குணங்களையும் ஒரு சேர அமைத்துள்ளான்.

பெரும்பாலும் மனிதர்களை சுவனத்தில் சேர்ப்பது இறையச்சமும் நற்குணங்களும் தான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி- ஹாகிம்)

மலர்ந்த முகம் காட்டுதல், நன்மை செய்தல், யாருக்கும் தொல்லை தராமலிருத்தல் ஆகியவை நற்குணங்களாகும். இத்துடன் கோபத்தை அடக்குவதும் அதை மறைப்பதும் தொல்லைகளை சகித்துக் கொள்வதும் ஒரு முஸ்லிமுக்கு அவசியமாகும்.

நபி (ஸல்) கூறினார்கள் :

நற்குணங்களை நிறைவு செய்வதற்காகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன். (அஹ்மத், பைஹகீ)

அபூஹுரைராவே! நற்குணங்களை மேற்கொள்வீராக! என நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவுக்கு அறிவுரை வழங்கினார்கள். அப்போது அவர், அல்லாஹ்வின் தூதரே! நற்குணங்கள் என்றால் என்ன? என்று கேட்டார். அதற்கு உன்னைத் துண்டித்து வாழ்பவருடன் நீ சேர்ந்து வாழ். உனக்கு அநீதம் செய்தவரை நீ மன்னித்து விடு. உனக்குத் தர மறுத்தவருக்கு நீ கொடு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பைஹகீ)

முஸ்லிம் சகோதரனே! இத்தகைய அழகிய குணங்களுக்குக் கிடைக்கக் கூடிய மகத்தான கூலியை, மிகப் பெரும் பலனைப் பார்! நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவெல்லாம் நின்று வணங்கியும், பகலெல்லாம் நோன்பு நோற்றும் வரக் கூடியவர் அடையும் அந்தஸ்தை ஒருவர் நற்குணங்களால் அடைந்திட முடியும். (அபூதாவூத்)

நற்குணங்களை ஈமானில் பரிபூரணத்துமாகவே நபி (ஸல்) கணித்துள்ளனர். முஃமின்களில் ஈமானால் பரிபூரணமானவர் அவர்களில் குணத்தால் மிக அழகானவரே! (திர்மிதி).

மக்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் பிறருக்கு அதிகம் நன்மை செய்யக் கூடியவரே! செயல்களில் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானது ஒரு முஸ்லிமுக்கு நாம் கொடுக்கும் சந்தோஷம் அல்லது அவனது சிரமத்தை நீக்குவது அல்லது அவனது கடனை அடைப்பது அல்லது அவனது பசியைப் போக்குவது ஆகியவையாகும்.

நாம் கூறும் மென்மையான வார்த்தைக்கும் கூலி உண்டு. அதுவும் ஒரு தர்மமே! அழகிய வார்த்தையும் தர்மமாகும் என்பது நபிமொழி. நூல் : (புகாரி, முஸ்லிம்) ஏனெனில் அழகிய வார்த்தைக்கு நல்ல பலணுண்டு. இது உள்ளங்களை நெருக்கி வைக்கும். அவற்றுக்கிடையில் அன்பை ஏற்படுத்தி வெறுப்பை அகற்றும்.

நற்குணங்கள் மேற்கொள்ளும்படியும் தொல்லைகளை சகித்துக் கொள்ளும்படியும் தூண்டுவதில் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதல்கள் அதிகமாகவே உள்ளது. அவர்கள் கூறினார்கள் :

நீ எங்கிருந்தாலும் அல்லாஹ்வை அஞ்சிக் கொள். தீமை செய்து விட்டால் தொடர்ந்து ஒரு நன்மை செய்து விடு. அது அத்தீமையை அழித்து விடும். மக்களுடன் அழகிய முறையில் நடந்து கொள். (திர்மிதி).

ஒரு முஸ்லிமுக்கு நற்குணமென்பது எல்லா இடத்திலும் எல்லா காலத்திலும் அவசியமாகும். அது அவன் செல்கின்ற ஒவ்வொரு பாதையிலும் ஒவ்வொரு இடத்திலும் அவனை மக்களிடம் நெருக்கி வைத்து, பிரியத்தைத் தோற்றுவிக்கும். எந்த அளவுக்கெனில் தன் மனைவியின் வாயில் அவன் ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவுக்கும் இஸ்லாத்தில் கூலி தரப்படுகின்றது. (நல்வழியில்) எதைச் செலவு செய்தாலும்; அது தர்மமே! உன்னுடைய மனைவியின் வாயில் நீ ஊட்டுகின்ற ஒரு கவளம் உணவு உட்பட என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

அல்லாஹ்வை இறைவனாக. இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக முஹம்மத் (ஸல்) அவர்களை இறைத்தூதராக, நபியாக ஏற்றுக் கொண்ட எவரையும் அற்பமாக எண்ணுவதை விட்டும் விலகிக் கொள். இது குறித்து நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். தன் சகோதர முஸ்லிமை அற்பமாகக் கருதுவதே ஒரு மனிதனுக்குத் தீமை நேரப் போதுமானதாகும். (முஸ்லிம்)

முஸ்லிம் சகோதரனே! நற்குணங்கள் மேற்கொள்வது எல்லா நேரத்திலும் இலேசானதும் எளிதான வழிபாடாகும். அபூதர்தா (ரலி) விடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் : வணக்க வழிகாடுகளில் எளிதான, உடலுக்கு இலேசான ஒன்றை உனக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அதற்கு அபூதர்தா (ரலி), தாருங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மௌனத்தையும் நற்குணத்தையும் கடைபிடி. அதுபோன்ற செயலை உன்னால் செய்ய முடியாது.

நற்குணத்தின் அடையாளங்கள்

நற்குணத்தின் அடையாளங்கள் பல்வேறு பண்புகளில் ஒன்று சேர்ந்துள்ளன.

மனிதன் அதிகம் வெட்கப்படுபவனாக, தொல்லை செய்யாதவனாக, அதிகம் நன்மை செய்பவனாக, பேச்சைக் குறைப்பவனாக, உண்மையே பேசுபவனாக, நற்செயல்கள் அதிகம் செய்பவனாக, வீண் காரியங்களை விட்டும் விலகிக் கொள்பவனாக, பெற்றோருக்கு நன்மை செய்பவனாக, உறவினருடன் சேர்ந்து வாழ்பவனாக இருக்க வேண்டும்.

அவ்வாறே அவன் பொறுமை, நன்றி பாராட்டல், பொருந்திக் கொள்ளல், சாந்தம், மென்மை, கற்பைப் பேணல், அன்பு செலுத்துதல் ஆகிய பண்புகளைக் கொண்டவனாக இருப்பதும் அவசியமாகும்.

ஆனால் மனிதன் சபிப்பவனாக, திட்டுபவனாக, கோள் சொல்பவனாக, புறம் பேசுபவனாக, அவசரப்படுபவனாக, குரோதம் கொள்பவனாக, கஞ்சனாக, பொறாமை கொள்பவனாக இருக்கக் கூடாது.

அவனுடைய நேசமும், விருப்பும், வெறுப்பும் அல்லாஹ்வுக்காகவே இருக்க வேண்டும். நற்குணமுடைய மனிதனின் மக்களின் தொல்லைகளைச் சிகத்துக் கொள்ள வேண்டும். அவர்கள் தவறிழைக்கும் போதெல்லாம் எப்போதுமே அதற்கு தக்க காரணம் இருக்கும் என்று எண்ணிக் கொள்ள வேண்டும்.

அவர்களின் தவறுகளையும் குறைகளையும் துருவித்துருவி ஆராய்வதைத் தவிர்க்க முழு ஆர்வம் காட்ட வேண்டும். எந்த நிலையிலும் ஒரு முஃமின் தீய குணமுடையவனாக இருக்க முடியாது. இருக்கவேக் கூடாது.

நற்குணத்திற்குரிய முக்கியத்துவத்தையும் நற்குணங்களை மேற்கொள்ளக் கூடியவன் அடையக் கூடிய மகத்தான கூலியையும் நபி (ஸல்) அவர்கள் பல்வேறு இடங்களில் உறுதிபடக் கூறியுள்ளார்கள்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது சில மக்கள் வந்து, அல்லாஹ்வின் அடியார்களில் அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமானவர் யார்? என்று கேட்டனர். அதற்கு குணத்தால் சிறந்தவரே! என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். உஸாமா பின் ஷரீக் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸல் தபரானியில் உள்ளது.

உங்களில் எனக்கு மிகப் பிரியமானவரை மறுமை நாளில் எனக்கு மிக நெருக்கமானவரை நான் உங்களுக்க அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நபித்தோழர்கள் ஆம் என்றதும் உங்களில் நற்குணமுடையவரே! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் ஒரு அடியானின் தராசில் நற்குணத்தை விடவும் கனமானது எதுவும் கிடையாது ( அஹ்மத்)

நபி (ஸல்) அழகிய குணங்கள்

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு மத்தியில், எந்த நற்குணத்தின் பால் மக்களை அழைத்தார்களோ, அந்த நற்குணத்தின் மிகச் சிறந்த உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் தாம் கூறிய ஞானங்கள், அறிவுரைகள் மூலம் தம் தோழர்களிடம் நற்குணங்களை விதைப்பதற்கு முன்னால் அவற்றை தம் நடைமுறை மூலம் அவர்களிடையே விதைத்தார்கள். அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

அல்லாஹ்வின் மீது ஆணையாக : நான் நபி (ஸல்) அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். அவர்கள் மீது விளிம்பு பருமனான துண்டு ஒன்று இருந்தத. ஒரு கிராமவாசி வந்து அதைப் பிடித்து பலமாக இழுத்தார். நான் நபி (ஸல்) அவர்களின் தோள் பகுதியில் பார்த்தேன். பலமாக இழுத்ததனால் அதன் அடையாளம் பதிந்திருந்தது. பிறகு அந்த கிராம வாசி, உம்மிடமுள்ள செல்வத்திலிருந்து எனக்குத் தரும்படி உத்தரவிடும் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரைப் பார்த்துச் சிரித்து விட்டு, அவருக்கு உதவி வழங்கும்படி கட்டளையிட்டார்கள் (புகாரீ).

நபி (ஸல்) அவர்கள் நம் வீட்டில் என்ன செய்வார்கள்? என அவர்களுடைய மனைவி ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட போது அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் வீட்டு வேலைகளில் தமது மனைவிக்கு உதவி செய்தார்கள். தொழுகை நேரம் வந்து விட்டால் உளூச் செய்து விட்டு தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள். (முஸ்லிம்)

நபி (ஸல்)அவர்களை விடவும் புன்னகை பூப்பவர் யாரையும் நான் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். (திர்மிதி).

நபி (ஸல்) அவர்களின் பிரபல்யமான குணநலன்கள் : அவர்கள் ஈகைக் குணம் கொண்டவர்கள், கிஞ்சிற்றும் கஞ்சத்தனம் செய்ததில்லை. தைரியமிக்கவர்கள், சத்தியத்திலிருந்து ஒரு போதும் பின்வாங்கியதில்லை. நீதி மிக்கவர்கள், தமது தீர்ப்பில் ஒரு போதும் அநீதியிழைத்ததில்லை. தமது வாழ்வு முழுவதும் வாய்மை மிக்கவர்களாகவும் நம்பிக்கைக்குரியவர்களாகவுமே திகழ்ந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் எதையும் கேட்டு அவர்கள் இல்லையென்று சொன்னது கிடையாது என ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம் நகைச்சுவை செய்பவர்களாகஇ அவர்களுடன் கலந்திருப்பவர்களாக, அவர்களுடைய குழந்தைகளுடன் விளையாடுபவர்களாக, குழந்தைகளை தமது மடியில் அமர்த்துபவர்களாக, விருந்தழைப்பை ஏற்பவர்களாக, நோயாளிகளை சந்திப்பவர்களாக, தவறிழைத்தவர்கள் கூறும் சமாதானத்தை ஏற்பவர்களாக இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது தோழர்களை அவர்களுக்குப் பிரியமான பெயரைக் கொண்டே அழைப்பார்கள். தம்முடைன் பேசுகின்ற யாருடைய பேச்சையும் துண்டிக்க மாட்டார்கள்.

அபூகததா (ரலி) அறிவிக்கிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக நானும் அல்லாஹ்வுடைய அடிமை தான். ஒரு அடிமை சாப்பிடுவது போல நானும் சாப்பிடுகிறேன் என்று கூறினார்கள். அவர்கள் கழுதையில் பயணம் செய்திருக்கிறார்கள். வறியவர்களை நோய் விசாரிக்கவும், ஏழைகளுடன் அமர்ந்திருக்கவும் செய்திருக்கிறார்கள்.

வாய்மை

திண்ணமாக முஸ்லிம் தன் இறைவனுடன் எல்லா மக்களுடனும் வாய்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அது போல தன்னுடைய சொல், செயல் மற்றும் எல்லா நிலையிலும் வாய்மையோடு நடந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : இறைநம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். மேலும் வாய்மையாளர்களுடன் இருங்கள். (9:119).

ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள் : நபி (ஸல்) அவர்களுக்கு பொய்யை விட மிக வெறுப்பான குணம் எதுவும் கிடையாது. (அஹ்மத்)

ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள் ஆம்! என்றனர். ஒரு முஃமின் உலோபியாக இருப்பானா? என்று கேட்டதற்கும் ஆம்! என்றே பதிலளித்தார்கள். ஒரு முஃமின் பொய்யனாக இருப்பானா? என்று கேட்கப்பட்டதற்கு இல்லை என்று கூறினார்கள். (முஅத்தா)

மார்க்கத்தின் மீது பொய்யை ஏற்றிச் சொல்வது தீமைகளில் மிக மோசமானதும் பொய்யின் வகைகளில் மிகக் கொடியதுமாகும். அதற்குக் கூலி நரகமே!

என் மீது வேண்டுமென்றே எவன் பொய் சொல்கிறானோ அவன் தனது இருப்பிடத்தை நரகில் அமைத்துக் கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (புகாரி).

நம்முடைய இஸ்லாமிய மார்க்கம் நம் குழந்தைகளுடைய உள்ளங்களில் உண்மையை விதைக்கவே நம்மைத் தூண்டுகிறது. அந்த பண்பிலேயே அவர்கள் வளர வேண்டும் என்பதற்காக. யாரேனும் ஒரு குழந்தையிடம் வா! இதோ வாங்கிக் கொள்! என்று கூறி பிறகு அதைக் கொடுக்கவில்லையெனில் அதுவும் பொய்யே ஆகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) (அஹ்மத்).

வேடிக்கைக்காக கூட பொய் சொல்வதனின்றும் விலகிக் கொள்ள வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை ஏவியிருக்கிறார்கள்.
வேடிக்கைக்காக கூட பொய்யை விட்டு விடுகிறவனுக்கு சுவர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுவதற்கு நான் பொறுப்பேற்கிறேன். (அபூதாவூத்)

வியாபாரி தனது சரக்கை விவரிப்பதில் பொய் சொல்லக் கூடும். அதையும் நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். சரக்கில் குறை இருப்பதாக அறிந்தும் அதைத் தெரிவிக்காமல் விற்பது எந்த முஸ்லிமுக்கும் ஹலால் இல்லை - ஆகுமானது இல்லை என்று கூறியுள்ளார்கள். (புகாரி).

அமானிதம்

அமானிதங்களை நிறைவேற்றுமாறும், ஒரு மனிதன் தான் செய்யக் கூடிய சிறிய பெரிய எல்லா செயல்களிலும் இறைவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என எண்ணிச் செயல்படுமாறும் இஸ்லாம் அதைப் பின்பற்றக் கூடியவர்களுக்குப் பணிக்கிறது. எனவே முஸ்லிம் தன் மீது அல்லாஹ் கடமையாக்கி இருப்பவற்றை நிறைவேற்றுவதிலும் மக்களுடன் பழகுவதிலும் நம்பிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒருவன் தன் மீது கடமையாக்கப்பட்வற்றை பரிபூரணமான முறையில் நிறைவேற்றுவதற்கே அமானிதம் எனப்படும்.

அல்லாஹ் கூறுகிறான் : அமானிதங்களை அவற்றுக்குரியவர்களிடம் நீங்கள் ஒப்படைத்து விடுங்கள். நீங்கள் மக்களிடையே தீர்ப்பு வழங்கினால் நீதத்துடன் தீர்ப்பு வழங்குங்கள் எல அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான் (4:58) நாணம் இல்லாதவனிடத்தில் ஈமான் இல்லை.. .. என்பது நபிமொழி (முஸ்லிம்).

அமானிதம் என்பது சிலர் விளங்கி வைத்திருப்பது போல நம்பி ஒப்படைக்கப்பட்ட பொருட்களைப் பாதுகாப்பது மட்டுமல்ல. மாறாக, அது விரிந்த பொருள் கொண்டது. அமானிதத்தை நிறைவேற்றுவதென்பது தன்னிடம் நம்பி ஒப்படைக்கின்ற, உலக, மார்க்க சம்பந்தப்பட்ட எல்லா வேலைகளிலும் கடமைகளிலும் ஒருவன் நம்பிக்கையோடு நடந்து கொள்வதைக் குறிக்கும்.

பணிவு

ஒரு முஸ்லிம் தன்னைத் தாழ்த்திக் கொள்ளாமல் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும். ஒரு போதும் பெருமையுடன் நடந்து கொள்ளக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் : நம்பிக்கையாளர்களில் எவர்கள் உம்மைப் பின்பற்றிக்கொண்டிருக்கின்றார்களோ அவர்களிடம் பணிவாய் நடந்து கொள்ளும். (26:215)

அல்லாஹ்வுக்காக பணிவுடன் நடந்து கொள்ளம் எவரையும் அல்லாஹ் உயர்த்தாமல் இருப்பதில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

மேலும் அவர்கள் கூறியதாவது : அதாவது நீங்கள் பணிவுடன் நடந்து கொள்ளுங்கள் - ஒருவர் மற்றவரை விட பெருமை பாராட்டாமலும் ஒருவர் மற்றவருக்கு அநியாயம் செய்யாமலும் இருப்பதற்காக என அல்லாஹ் எனக்கு வஹீ அறிவித்துள்ளான். (முஸ்லிம்)

வறியவர்கள் மற்றும் ஏழைகளடன் அமர்வது அவர்களிடம் தன்மை உயர்வாகக் காட்டிக் கொள்ளாமலிருப்பது, மக்களுடன் முகமலர்ச்சியுடன் நடந்து கொள்வது, பிறரை விட தன்னைச் சிறந்தவராக கருதாமலிருப்பது ஆகியவை பணிவின் வெளிப்பாடுகளாகும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இச்சமுதாயத்திற்கு நபியாக இருந்தும் தமது வீட்டைப் பெருக்குபவர்களாகவும், ஆட்டிலிருந்து பால் கறப்பவர்களாகவும், கிழிந்த ஆடையைத் தாமே தைத்துக் கொள்பவர்களாகவும், தமது வேலைக்காரருடன் உணவு உண்பவர்களாகவும், கடைவீதிக்குச்சென்று பொருட்களை வாங்கி வருபவர்களாகவும், முஃமின்களில் பெரியவர், சிறியவர், செல்வந்தன், ஏழை என்ற பாகுபாடில்லாமல் அனைவருடனும் கைலாகு செய்பவர்களாகவும் இருந்திருக்கிறார்கள்.

நாணம்

நாணம் ஈமானின் கிளைகளில் ஒன்றாகும். நாணம் நன்மையே தரும். புகாரி, முஸ்லிமில் ,தற்குச் சான்று உள்ளது. இத்தகைய சிறந்த குணத்திற்கு நபி (ஸல்) அவர்களே ஒரு முஸ்லிமுக்கு முன்மாதிரியாகும். காரணம் நபி (ஸல்) அவர்க்ள அதிகம் நாணமுறுபவர்களாகவும் இருந்தார்கள். அபூஸயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்கள் தாம் வெறுக்கம் ஒன்றைக் கண்டால் அதை அவர்களின் முகத்திலிருந்து நாங்கள் அறிந்து கொள்வோம். (புகாரி).

ஒரு முஸ்லிமிடம் இருக்கும் நாணம் அவன் சத்தியத்தைச் சொல்வதற்கும், கல்வியைத் தேடுவதற்கும், நன்மையை ஏவி, தீமையைத் தடுப்பதற்கும் தடையாக இருக்காது. இந்த நாணம் உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களிடம் உண்மையை உரைக்க அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்! ஒரு பெண்ணுக்கு கனவில் ஸ்கலிதம் ஏற்பட்டால் அவளுக்கு குளிப்பு கடமையா? என்று கேட்பதற்குத் தடையாக இருக்கவில்லையே! அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்! இந்திரியத்தை அவள் கண்டால் குளிப்பு கடமையாகும் என்று பதிலளித்தார்கள். (புகாரி).

ஆயினும் ஒரு முஸ்லிம் தீய செயல்களைச் செய்வது, தன்னிடம் ஒப்படைக்கப்படுகின்ற பணிகளில் தவறு செய்வது, மக்களின் இரகசியங்களை வெளிப்படுத்துவது, அவர்களுக்குத் தீங்கிழைப்பது ஆகியவற்றுக்கு நாணம் நிச்சயம் தடையாக இருக்கும். அல்லாஹ்வுக்கு நாணமுறுவதே மிகச் சிறந்தது! எனவே முஃமின் தன்னைப் படைத்தவனுக்கு நாணமுற வேண்டும். அவன் தான் அவனை உருவாக்கி, அருட்கொடைகளையும் வழங்கியிருக்கிறான். ஆகையால் அவனுக்கு கட்டுப்படுவதிலும் அவனுடைய அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துவதிலும் குறை வைப்பதற்கு அவன் வெட்கப்பட வேண்டும்.

நாணமுறுவதற்கு மக்களை விட அல்லாஹ்வே மிகத் தகுதியானவன்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி.

நற்குணங்களை வளர்த்துக் கொள்ள சில வழிமுறைகள்

பழகிப் போன குணங்களை மாற்றுவது என்பது மனித இயல்புக்கு மிகச் சிரமமான ஒன்று என்பதில் ஐயமில்லை. ஆனால் இது ஒன்றும் முடியாத கரியமல்ல. மாறாக இதற்கு பல்வேறு வழிமுறைகள், காரணங்கள் இருக்கின்றன. அவற்றின் மூலம் மனிதன் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள முடியும்.

1. சரியான கொள்கை :

கொள்கை மிகப் பெரிய விஷயமாகும். ஒரு மனிதனின் குணநலன்கள் பெரும்பாலும், அவன் கொண்டிருக்கின்ற கொள்கை, சிந்தனை மற்றும் அவன் சார்ந்திருக்கின்ற மார்க்கம் அவற்றின் வெளிப்பாடகவே இருக்கும். மட்டுமல்ல கொள்கை தான் நம்பிக்கை - ஈமான் ஆகும். முஃமின்களில் பரிபூரண ஈமானை உடையவர்கள் நற்குணங் கொண்டவர்களே.

கொள்கை சரியாக இருந்தால் அதன் விளைவால் குணமும் அழகானதாக இருக்கும். சரியான கொள்கை அக்கொள்கைவாதியை வாய்மை, ஈகை, சகிப்புத் தன்மை, வீரம் போன்ற நற்குணங்களின்பால் தூண்டும். அதுபோல பொய், உலோபித்தனம், அறியாமை போன்ற தீய குணங்களை விட்டும் அவனைத் தடுக்கும்.

2. துஆ

துஆ மிகப் பெரிய வாயிலாகும். அவ்வாயில் ஒரு அடியானுக்குத் திறக்கப்பட்டு விட்டால் அதன் வழியாக நன்மைகள், பரக்கத்துக்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும். நற்குணங்கைள மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அவன் அவருக்கு நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் யார் ஆசைப்படுகிறாரோ அவர் அல்லாஹ்வின் பக்கம் திரும்ப வேண்டும். அவன் அவருக்கு நற்குணங்களை வழங்குவான். தீய குணங்களை விட்டும் அவரைத் தடுத்து விடுவான். ஆகவே இது விஷயத்திலும் சரி மற்ற விஷயங்களிலும் சரி துஆ பயனுள்ளதாக இருக்கம்.

இதனால் தான் நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனிடம் பணிந்து தமக்கு நற்குணங்கைள வழங்குமாறு அதிகம் இறைஞ்சுவார்கள். அவர்கள் தொழுகையின் ஆரம்ப துஆவில் இவ்வாறு கேட்பார்கள் :

இறைவா! நற்குணங்களின் பால் எனக்கு வழிகாட்டுவாயாக! நற்குணங்களின்பால் வழிகாட்டுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. தீயகுணங்களை விட்டும் அகற்றுவாயாக! தீய குணங்களை என்னை விட்டும் அகற்றுபவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (முஸ்லிம்)

3. போராடுதல்

போராடுவது இது விஷயத்தில் மிகவும் பலன் தரும். நற்குணங்களை மேற்கொள்வதற்கும் தீய குணங்களை விடுவதற்கும் தன் மனதோடு யார் போராடுகின்றாரோ அவருக்கு அதிக நன்மைகள் வந்து சேரும். அவரைச் சூழ்;திருக்கும் தீமைகள் அவரை விட்டும் விலகும்.

நற்குணங்கiளில் இயற்கையிலேயே உள்ள நற்குணங்களும் உண்டு. பயிற்சியின் மூலம் தாமே வளர்த்துக் கொள்ளக் கூடிய நற்குணங்களுமுண்டு. போராடுவது என்றால் ஒருவன் தம் மனதோடு ஒரு முறையல்ல பல முறையல்ல சாகும் வரைப் போராடுவதாகும். ஏனெனில் போராடுவதும் ஒரு வணக்கமாகும்.

உமக்கு மரணம் வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக என அல்லாஹ் கூறுகிறான். (15:99)

4. சுயபரிசோதனை

அதாவது தீய குணங்களை நாம் மேற்கொண்டு விட்டால் நாம் செய்தது சரிதானா என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது போன்ற குணங்களின் பால் இனி திரும்பக் கூடாது என நம் மனதைத் தூண்ட வேண்டும்.

5. நற்குணங்களால் விளையக் கூடிய நன்மைகளை எண்ணிப் பார்த்தல் :

சில விஷயங்களின் பலன்களை அறிந்து கொள்வதும் அவற்றின் நல்ல முடிவுகளை நினைவில் கொள்வதும் அவற்றை எடுத்து நடப்பதற்கும் அதற்காக முயற்சிப்பதற்கும் பெரும் காரணமாக ஆகி விடும்.

6. தீயகுணங்களின் முடிவுகளை எண்ணிப்பார்த்தல் :

அதாவது தீயகுணங்களால் விளையக் கூடிய நிரந்தர கைசேதம், விலகாத கவலை, பேரிழப்பு, துக்கம் மற்றும் மக்களின் உள்ளங்களில் ஏற்படும் வெறுப்பு ஆகியவற்றைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

7. மனதைப் பக்குவப்படுத்துவதை விட்டும் நம்பிக்கை இழந்திடாதிருத்தல் :

நம்பிக்கை இழந்து விடுவது ஒரு முஸ்லிமுக்கு அழகல்ல. ஒரு போதும் அவனுக்கு அது ஏற்றதுமல்ல. மாறாக அவன் தனது நாட்டத்தைப் பலப்படுத்தி மனதைப் பரிபூரணமாக்குவதற்கும் தன்னுடைய குறைகளை நிவர்த்தி செய்வதற்கும் முயற்சிப்பது அவனுக்கு அவசியமாகும்.

8. மலர்ந்த முகம் காட்டுவதும், முகம் சுளிப்பதைத் தவிர்ப்பதும் :

ஒருவன் தன் சகோதர முஸ்லிமை மலர்ந்த முகத்துடன் பார்ப்பது தர்மமாகும். அதற்குக் கூலி கொடுக்கப்படும். உனது சகோதரனை மலர்ந்த முகத்துடன் பார்ப்பதும் உனக்குத் தர்மமாகும் என்பது நபிமொழி. (திர்மிதி)

உன் சகோதரனை மலர்ந்த முகத்துடன் உட்பட எந்த நன்மையையும் நீ அற்பமாகக் கருதி விடாதே! எனவும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

9 சகிப்புத் தன்மை

இது குணங்களிலேயே மிகச் சிறந்ததும் அறிவுடையோருக்கு மிக ஏற்றதுமாகும். சகிப்புத் தன்மை என்பது கோபம் பொங்கியெழும் போது மனதைக் கட்டுப்படுத்துவதாகும். ஆனால் சகிப்புத் தன்மையுடையவர் கோப்பப்படக் கூடாது என்பது இதன் சட்டமல்ல. மாறாக அவருக்குக் கோபம் பொங்கியெழும் போது தனது சகிப்புத் தன்மையால் அதனை அடக்கிக் கொள்வார்.

சகிப்புத் தன்மையை ஒருவர் மேற்கொள்ளும் போது அவரை நேசிக்கக் கூடியவர்கள் அதிகமாவார்கள். வெறுக்கக் கூடியவர்கள் குறைந்து விடுவார்கள். மேலும் அவருடைய அந்தஸ்து உயர்ந்து விடும்.

10.. அறிவீனர்களை விட்டும் விலகியிருத்தல் :

யார் அறிவீனர்களை விட்டும் விலகியிருக்கிறாரோ அவர் தனது கண்ணியத்தைக் காத்துக் கொள்வார். மனதுக்கு நிம்மதி கிடைப்பதோடு தனக்கு துன்பம் தரக் கூடியவைகளைக் கேட்பதை விட்டும் நீங்கி விடுவார்.

அல்லாஹ் கூறுகிறான் : (நபியே!) மென்மையையும் மன்னிக்கும் போக்கையும் மேற்கொள்வீராக! மேலும் நன்மை புரியுமாறு ஏவுவீராக! இன்னும் அறிவீனர்களை விட்டும் விலகி இருப்பீராக! (7:199)

11. பொருத்தல், மன்னித்தல், தீமைக்குப் பகரமாக நன்மை செய்தல் :

இவ்வாறு செய்வது அந்தஸ்து உயர்வதற்குக் காரணமாக அமையும். இதில் மனதுக்கு அமைதி ஏற்படும். பழி வாங்கும் எண்ணதிலிருந்து விலகவும் முடியும்.


12.. அல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்தல் :

இது நற்குணங்களை வளர்த்துக் கொள்வதற்கு உதவக் கூடிய காரியங்களில் மிக முக்கியமானதாகும். மேலும் இது பொறுமை, மனதோடு போராடுதல், மக்களின் தொல்லைகளைச் சகித்துக் கொள்ளுதல் ஆகியவற்றுக்கும் உதவியாக இருக்கும். தான் மேற்கொள்ளும் நற்குணங்களுக்கம் மனதுடன் போரடுவதற்கும் நிச்சயம் அல்லாஹ் கூலி வழங்குவான் என்பதை உறுதியாக நம்பினால் நற்குணங்களை வளர்த்துக் கொள்ள அவன் ஆர்வம் காட்டுவான். இதற்காக அவன் சந்திக்கின்ற அனைத்தும் அவனுக்கு இலகுவாகும்.

13.. கோபத்தைத் தவிர்த்தல் :

ஏனெனில் கோபம் உள்ளத்தில் எரிகின்ற கனலாகும். இது தண்டிக்கவும் பழிவாங்கவும் தூண்டும். மனிதன் கோபப்படும் போது தன் மனதைக் கட்டுப்படுத்திக் கொண்டால் தன்னுடைய கண்ணியத்தையும் மதிப்பையும் காத்துக் கொள்வான். சாக்குப் போக்குச் சொல்லும் இழிவிலிருந்தும் கைசேதத்திலிருந்தும் விலக முடியும்.

ஒரு மனிதர் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், கோபம் கொள்ளாதே! என்றார்கள். அவர் பலமுறை இவ்வாறு கேட்கவும் ஒவ்வொரு முறையும் கோபம் கொள்ளாதே என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), புகாரி.

14. அர்த்தமுள்ள அறிவுரைகளையும் உருப்படியான விமர்சனங்களையும் ஏற்றுக் கொள்வது :

ஒருவனிடம் குறைகளைச் சுட்டிக் காட்டப்படும் போது அதிலிருந்து விலகுவது அவனுக்கு அவசியமாகும். ஏனெனில் தன்னுடைய குறைகளைத் தெரியாதது போல நடிப்பதன் மூலம் மனதைச் சீர்படுத்த முடியும்.

15.. தவறை ஒப்புக் கொள்ளுதல், அதை நியாயப்படுத்தாதிருத்தல்

இது நற்குணத்தின் அடையாளமாகும். அதுமட்டுமல்ல இதில் பொய்யை விட்டு விலகுதல் இருக்கிறது. தவறை ஒப்புக் கொள்வது சிறந்த பண்பாகும். இவ்வாறு நடப்பவரின் மதிப்பை இது உயர்த்தி விடுகின்றது.

16. தவறு செய்தவரை பழிப்பதை, கடுஞ்சொல் கூறுவதைத் தவிர்ப்பது :

அதிகம் பழிப்பது கோபத்தைத் தூண்டுவதாகவும் பகைமையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கின்றது. மேலும் அது துன்பம் தரக் கூடியவற்றை செவியேற்கும்படிச் செய்து விடும். எனவே புத்திசால் சிறிய, பெரிய எவ்விதத் தவறுக்காகவும் தனது சகாக்களைப் பழிக்க மாட்டான். மாறாக சமாதானங்களைத் தேடிக் கொள்வான். கண்டித்து தான் ஆக வேண்டும் என்றிருந்தால் மென்மையான முறையில் கண்டிப்பான்.

17 நல்லவர்கள், நற்குணமுடையவர்களுடன் தோழமை கொள்ளுதல் :

இது நற்குணங்களைப் பயிற்றுவிப்பதற்கம் அவற்றை மனதில் இறுத்திக் கொள்வதற்கும் மிகச் சிறந்த வழி முறையாகும்.

18 உரையாடல் மற்றும் சபை ஒழுக்கத்தைப் பேணுதல் :

உரையாடுபவரின் பேச்சை செவி தாழ்த்திக் கேட்பது, பேச்சைத் துண்டிக்காமல் இருப்பது, அவரின் பேச்சைப் பொய்ப்படுத்துவது அல்லது அதை அற்பமாக நினைப்பது, அவர் பேச்சை முடிப்பதற்கு முன்னால் எழுந்து செல்வது ஆகியவை அவசியம் பேண வேண்டிய ஒழுக்கங்களில் உள்ளதாகும்.

மேலும் சபைக்குள் நுழையும்போதும் சபையை விட்டு வெளியேறும் போதும் ஸலாம் சொல்வது, சபையில் மற்றவருக்காக இடத்தை விசாலப்படுத்துவது, ஒருவரை எழுப்பி அவரது இடத்தில் அமராமலிருப்பது, இருவருக்கிடையில் அவர்களின் அனுமதியில்லாமல் அமர்வது, மூவர் இருக்கும் போதுஇரண்டு பேர்களிடம் மட்டும் தனியாக - இரகசியமாகப் பேசுவது ஆகியவையும் அவ்வொழுக்கங்களில் உள்ளவையே!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

சிந்தியுங்கள் !

நமது அன்றாட வாழ்க்கையில் தினமும் பல சம்பவங்கள் நிகழ்கின்றன.. பல தவறுகளை நாம் செய்கிறோம்.. பல தவறுகள் நமக்கு செய்யப்படுகிறது. அதனால் நாம் பொருள் இழப்பு, மனக்கஷ்டங்கள் இன்னும் பல கஷ்டங்களுக்கு ஆளாகிறோம். இதன் விழைவினால் உறவுகள் முறிந்து போகிறது. இது அனைவர் வாழ்க்கையிலும் நடக்கும் சம்பவங்கள். இதை எந்த முறையில் நம்மை அனுகவேண்டும் என குர்ஆன் மற்றும் அண்ணல் நபி அவர்கள் கூறிய வழிமுறைகள் கற்றுக்கொடுத்திருக்கிறது என்று சற்று ஆராய்வோம் இன்ஷா அல்லாஹ்...
    மனிதன் நண்பர்கள், மனைவி, உடன் பிறந்தவர்கள் என அனைவாரிடமும் சில எதிர்பார்புகளை வைத்திருக்கிறான். அந்த எதிர்பார்ப்புகள் பொய் ஆகும் போது கோபப்படுகிறான். அதன் விழைவுகளால் சில வார்த்தைகளை கொட்டி விடுகிறான் இதனால் சிறு பிளவு அதன் பிறகு அதுவே பெரிய விரிசலாக
போய் உறவே முறிந்து விடும் சூழ்நிலை ஏற்படுகிறது. இன்னும் சில சந்தர்ப்பங்களில் அவசரத்தில் நாவை பேணாமல் சில வார்த்தைகளை கொட்ட அதனாலும் பிளவு ஏற்படுகிறது. சற்று ஆராய்ந்து பார்கும் போது மனிதனுக்கு சட்டென்று வரும் கோபம் தான் முக்கிய காரணமாக அமைகிறது.

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: குத்துச்சண்டையில் அடுத்தவனை வீழ்த்துபவன் வலிமை வாய்ந்தவன் அல்லன், மாறாக கோபம் வரும்போது தன்னைத்தானே அடக்கிக் கொள்பவனே உண்மையான வலிமை வாய்ந்தவன் ஆவான். (அதாவது கோபம் வரும்போது இறைவனுக்கும் அவனுடைய தூதருக்கும் விருப்பமில்லாத செயலை தவிர்ப்பவன்) அறிவிப்பாளர்: அத்தியா அஸ் ஸஅதி (ரலி) நூல்: புகாரி

    சிந்தித்து பாருங்கள் சகோதரர்களே.. கோபத்தை கட்டுபடுத்தினாலே பாதி பிரச்சனைகள் தீர்ந்து விடும்;. இன்னும்
    அண்ணல் நபி அவர்களிடம் ஒரு மனிதர், “எனக்கு ஏதாவது அறிவுரை கூறுங்கள்” என்று கேட்டுக்கொண்டார். (அந்த மனிதர் அநேகமாக சீக்கிரம் கோபத்திற்குள்ளாகும் இயல்பு கொண்டவராக இருந்தார்.) அதற்கு அண்ணலார், “கோபம் கொள்ளாதீர்” என்று பதிலளித்தார்கள். அம்மனிதர், “எனக்கு அறிவுரை கூறுங்கள்!” என்று மீண்டும் மீண்டும் (பலமுறை) கேட்டுக் கொண்டார். அண்ணலார் ஒவ்வொரு முறையும் “நீர் கோபம் கொள்ளாதீர்!” என்றே பதில் தந்தார்கள். நூல்;: புகாரி

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “(உண்மைக்கு மாறாகப் பேசுவதைவிட்டு) தன் நாவைக் காத்துக்கொள்பவனின் குறையை அல்லாஹ் மறைத்து விடுவான். தன் கோபத்தைத் தடுத்துக் கொள்பவனை விட்டு மறுமைநாளில் வேதனையை அல்லாஹ் அகற்றிவிடுவான். இறைவனிடம் மன்னிப்புக் கோருபவனை அல்லாஹ் மன்னித்துவிடுவான். அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: மிஷ்காத்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “மூன்று விஷயங்களை இறைநம்பிக்கையாளாின் பண்புகளில் கட்டுப்பட்டவையாகும்:
    1. ஒருவனுக்கு கோபம் வந்தால் அவனது கோபம் அவனை ஆகாத செயலைச் செய்ய வைக்கக் கூடாது.
    2. அவன் மகிழ்ச்சியடைந்தால், அவனது மகிழ்ச்சி சத்தியத்தின் வட்டத்தைவிட்டு அவனை வெளியேற்றிவிடக் கூடாது.
    3. அவனுக்கு வலிமையிருந்தாலும், அவனுக்கு உரிமையில்லாத பிறருடைய பொருள்களை அவன் அபகாித்துக் கொள்ளக் கூடாது.” அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: மிஷ்காத்

    நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான், ஆனால் அந்த நேரத்தில் எப்படிங்க கட்டுப்படுத்துகிறது என்று தாங்கள் கூறுவது காதில் விழுகிறது. கோபம் வருவது மனித இயற்க்கை அதை கட்டுப்படுத்த வழி இருக்கிறதா என்று ஆராய்ந்தால் அல்ஹம்துலில்லாஹ், அருமையான வழிமுறைகளை அண்ணல் நபி அவர்கள் காட்டிதந்திருக்கிறார்கள்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “கோபம் ஷைத்தானியப் பாதிப்பின் விளைவாகும். ஷைத்தான் நெருப்பால் படைக்கப்பட்டிருக்கின்றான். நெருப்பு, நீரால் மட்டுமே அணைகின்றது. எனவே, உங்களில் ஒருவருக்கும் கோபம் வந்துவிட்டால் அவர் ஒளு செய்து கொள்ளட்டும். நூல்: அபூதாவூத்

    அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் ஒருவருக்கு நின்று கொண்டிருக்கும் போது கோபம் வந்தால் அவர் உட்கார்ந்து கொள்ளட்டும். இப்படிச் செய்து கோபம் மறைந்துவிட்டால் சரி இல்லாவிட்டால் அவர் படுத்துக் கொள்ளட்டும்.” அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) நூல்: மிஷ்காத்

    இந்த நபிமொழியிலும் இதற்கு முந்திய நபிமொழியிலும் கோபத்தை ஒழித்திட அண்ணலார் காட்டிய வழிமுறைகள் எவ்வளவு சாரியானவை, பொருத்தமானவை என்பதற்கு அனுபவமே சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றது.

    சரி கோபப்பட்டாகிவிட்டது. உறவும் முறிந்து விட்டது இப்போது என்ன செய்வது என்று கேட்கிறீர்களா?
இஸ்லாம் கூறும் பதில் உடனே மன்னித்து விடுங்கள்.
அதெப்படி அவர்கள் எங்களுக்கு இந்த துரோகம் செய்து விட்டார்கள் எப்படி எங்களை மன்னிக்க சொல்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? சிந்தித்து பாருங்கள் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே...

    மன்னிப்பவர்கள் பற்றி திருமறை என்ன கூறுகிறது என்று பார்ப்போம்
   (பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (3:134)
    திருமறை எவ்வளவு அழகாக கூறுகிறது பார்த்தீர்களா.. பிறரின் பிழைகளை மன்னிப்போர்களை அல்லாஹ் நேசிக்கின்றானாம் இதை விட ஒரு மூமினுக்கு வேறு என்ன வேண்டும் சகோதரர்களே.. அதுமட்டுமல்ல

    நீங்கள் ஒரு நன்மையை வெளிப்படையாக செய்தாலும் அல்லது அதனை மறைத்துக் கொண்டாலும் அல்லது (ஒருவர் உங்களுக்குச் செய்த) தீமையை நீங்கள் மன்னித்தாலும் (அது உங்களுக்கு மிகவும் நல்லது) ஏனெனில் அல்லாஹ் நிச்சயமாக மன்னிப்பவனாகவும், பேராற்றல் உடையோனாகவும் இருக்கின்றான (4:149)

    ஆகவே, உங்களுக்குக் கொடுக்கப் பட்டிருப்பதெல்லாம், இவ்வுலக வாழ்ககையின் (அற்ப) சுகங்களேயாகும்; ஈமான் கொண்டு, தங்கள் இறைவனையே முற்றிலும் நம்பியிருப்பவர்களுக்கு, அல்லாஹ்விடம் இருப்பது மிகவும் மேலானதும் நிலையானதுமாகும். (42:37)
    அவர்கள் (எத்தகையொரென்றால்) பெரும் பாவங்களையும், மானக்கேடானவற்றையும், தவிர்த்துக் கொண்டு, தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள். (42:37)
    மூமினுகளைப்பற்றி அல்லாஹ் திருமறையில் அழகாக கூறுகிறான், அவர்கள் தாம் கோபம் அடையும் பொழுதும் மன்னிப்பார்கள் என்று. அவன் கூறிய மூமினாக நாம் ஆக வேண்டாமா? சரி என்ன தவறு செய்தாலும் மன்னித்து விட வேண்டுமா? என்று கேட்பது காதில் விழுகிறது.
    இன்னும் தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், எவர் (அதனை) மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது - நிச்சயமாக அவன் அநியாயம் செய்பவர்களை நேசிக்க மாட்டான். (42:40)
    பார்த்தீர்களா திருமறை கூறுவதை. ஒருவன் செய்த தீமைக்கும் கூலி அதைப் போன்ற தீமையேயாகும்; ஆனால், அதனை மன்னித்துச் சமாதானம் செய்கிறாரோ அவருக்குாிய நற்கூலி அல்லாஹ்விடம் இருக்கிறது. அளவற்ற அருளாளன், அவன் கொடுக்கும் கூலி எப்படி இருக்கும் சிந்தியுங்கள் சகோதரர்களே...
    சரி அடுத்து என்ன கூறுகிறார்கள் என்றால் ‘தவறு செய்தாலும் பொறுத்துக்கொண்டால் என்னை கோழை என்று நினைக்க மாட்டார்களா?’
     அல்லாஹ் கூறுகிறான்
     ஆனால், எவரேனும் (பிறர் செய்த தீங்கைப்) பொறுத்துக் கொண்டு மன்னித்து விட்டால், நிச்சயமாக, அது மிக்க உறுதியான (வீரமுள்ள) செயலாகும் (42:43)

    எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு சான்றிதல் கொடுக்கும் போது வேறு யாருடைய சான்றிதலும் அதற்கு ஈடாகாது என்று சொல்லித்தேரிவதில்லை. இதுவரை திருமறை கூறியதைப்பற்றி பார்த்தோம், இனி அண்ணல் நபி கூறியதை பார்ப்போம்.

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: இரு நண்பர்களில் ஒருவரின் தவறு அவ்விருவருக்குமிடையே பிரிவினை ஏற்படுத்திவிட்டால் அவ்விருவரும் அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள். அல் அதபுல் முஃப்ரத்

    இதில் எவர் மீது தவறு என்று பார்க்கவில்லை இருவருமே அல்லாஹ்விற்காக அல்லது மார்கத்திற்காக நேசித்தவராக மாட்டார்கள் என்று அண்ணல் நபி அவர்கள் கூறுகிறார்கள்

    இன்னும் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் நேசத்திற்குாியவர் யார் என்று
    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள்: “மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்கள் : “என் அதிபதியே! உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் நேசத்திற்குரியவர் யார்?” இறைவன் கூறினான்: “எவர் பழி வாங்கும் சக்தியைப் பெற்றிருந்தும் மன்னித்துவிடுகின்றாரோ அவரே என்னிடம் மிகவும் நேசத்திற்குரியவர் ஆவார்.” அறிவிப்பாளர்: அனஸ் (ரலி) நூல்: மிஷ்காத்

    அண்ணல் நபி அவர்கள் நவின்றார்கள்: “ஒரு முஸ்லிம் தனது சகோதரரை மூன்று நாட்களுக்கு அதிகமாக வெறுத்திருப்பது கூடாது. அவர்கள் இருவரும் சந்திக்கிறார்கள். ஆனால் அவர் இவரையும் இவர் அவரையும் புறக்கணிக்கிறார். (இவ்வாறு செய்யக்கூடாது), ஸலாமை முந்தி சொல்பவரே அந்த இருவரில் சிறந்தவர்” நூல்;கள்: புகாரி, முஸ்லிம்

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “முஃமினை மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை. மூன்று நாட்களுக்கு மேல் ஆகி விட்டால் அவரை சந்தித்து அவருக்கு ஸலாம் சொல்லட்டும். அம்மனிதர் இவருடைய ஸலாமுக்குப் பதிலளித்தால் நன்மையில் இருவரும் கூட்டாவார்கள். அவர் பதில் கூறவில்லையெனில் ஸலாம் கூறியவர் (முஃமினை) வெறுத்த பாவத்திலுருந்து நீங்கி விட்டார்” அறிவிப்பாளர்: அபூஹ{ரைரா (ரலி) நூல்: அல் அதபுல் முஃப்ரத்

    மூன்று நாட்களுக்கு மேல் வெறுத்திருக்க ஒரு மனிதருக்கு அனுமதி இல்லை என்று நபி அவர்கள் கூறியிருக்கிறார்கள். எத்தனை குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக பிறிந்து இருக்கிறது. அல்லாஹ் இது பற்றி நம்மிடம் கேட்க மாட்டானா?

    அண்ணல் நபி அவர்கள் கூறினார்கள்: ஒருவர் அல்லாஹ்விற்காகப் பணிந்து நடந்தால் அல்லாஹ் அவரை உயர்த்தியே தீருவான் நூல்கள்: முஸ்லிம்

    சிந்தித்து பாருங்கள்.. அண்ணல் நபி அவர்கள் உத்தரவாதம் தருகிறார்கள். அல்லாஹ்விற்காகப் பணிந்தால் அல்லாஹ் நம்மை உயர்த்தியே தீருவான் என்று. சிந்தியுங்கள் சகோதரர்களே..

    அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சுவனத்தின் வாயில்கள் திங்களன்றும் வியாழனன்றும் திறக்கப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு இணைவைக்காத ஒவ்வொரு அடியானுக்கும் மன்னிப்பு அளிக்கப்படுகிறது. ஆனால் தனது சகோதரனுடன் பகைமை கொண்டுள்ள மனிதன் மட்டும் மன்னிக்கப்பட மாட்டான். அப்போது சொல்லப்படும், ‘இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். இந்த இருவரும் சமரசம் செய்து கொள்வதற்கு அவகாசம் அளியுங்கள். நூல்கள்: முஸ்லிம்

    இப்படி மன்னிப்பு அளிக்கும் கூட்டத்தில் நாமும் இருக்க வேண்டாமா?
    அது மட்டுமல்ல இருவரிடையே சமரசம் செய்வது நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்ததொறு செயல் என்றும் கீழே கூறப்பட்டுள்ள ஹதீஸ் மூலம் விளங்கப்படுகிறது.

அபு தர்தா (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘நோன்பு நோற்பதை விட, தர்மம் செயவதை விட சிறந்தவொறு செயலை உங்களுக்கு நான் அறிவித்துத் தரட்டுமா? அது இருவரிடையே இணக்கத்தை ஏற்ப்படுத்துவது. அறிந்து கொள்ளுங்கள்! பகைமை நன்மையை அழிக்கக்கூடியதாகும் நூல்: அல் அதபுல் முஃப்ரத்

    ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியாிலும், உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சாிக்கையாக இருங்கள்; அதையும் (அவர்களின் குற்றங் குறைகளை) மன்னித்தும், அவற்றைப் பொருட்படுத்தாமலும், சகித்துக் கொண்டும் இருப்பீர்களாயின் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் மன்னிப்பவன். மிக்க கிருபையுடையவன். (64:14)

    இதை முஹம்மத்(ஸல்) அவர்கள் தான் வாழ்நாளில் வாழ்ந்தும் காட்டியிருக்கிறார்கள். தாயிப் நகரத்தில்; கல்லடி பட்ட போதும் அவர்களை மன்னித்தார்கள். மக்கா வெற்றியிலும் அவர் நினைத்திருந்தால் அனைவரையும் கொன்று குவித்திருக்கலாம். முஹம்மத்(ஸல்) அவர்கள் எதிாியைப் போர்க்களத்தில் தோற்கடிப்பதை ஒருபோதும் தம் குறிக்கோளாகக் கொள்ளவில்லை என்பதற்கு மக்காவின் வெற்றி ஓர் எடுத்துக்காட்டாகும்.

    இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மக்காவை அமைதியாகக் கைப்பற்றியதும் குறைஷிகள் தங்கள் முந்தையச் செயல்களுக்காக வருத்தம் தொிவிக்கும் அளவிலே இருந்தனர். இக்ரிமா இப்னு அபூ ஜஹல் என்பவர் மட்டும் சிறு குழப்பம் விளைவித்தார். முஸ்லிம்களுக்குக் கடுமையான எதிர்ப்பு தொிவிக்கும் சில பகுதிகளில் மட்டுமே பதற்ற நிலை இருந்தது. பொதுவாக அமைதியே நிலவியது. கஃபாவுக்கு அழைக்கப்பட்டபோது மதீனாவில் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்தோரும்கூட புறப்பட்டுச் சென்றனர். பழமைமிக்க இந்தப் புகலிடத்தில் பாதுகாப் பினைத் தேடி வருவோருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதால் கணிசமான மக்கள் அங்கே கூடினார்கள்.
    இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் கஃபாவின் மேற்கூரையில் ஏறி 'அதான்' எனும் தொழுகைக்கான அழைப்பொலி எழுப்பும்படி பிலால்(ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். கொடூரமான எஜமானனிடம் அடிமையாக இருந்து மீட்கப்பட்ட நீக்ரோதான் இந்த பிலால்(ரலி) அவர்கள். பிலால்(ரலி) அவர்கள் 'அதான்' கூறினார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கஃபாவின் வாசலில் நின்றார்கள். பல்லாண்டு காலமாக இறைத்தூதர்(ஸல்) அவர்களையும், அவர்களின் தோழர்களையும் துன்புறுத்தி அவர்களை நிம்மதியாக மதீனாவுக்குச் செல்லவிடாமல் கொலை செய்யத் திட்டம் போட்ட அதே குறைஷிகளிடம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெளிப்படையாகப் பேசினார்கள்.
    வணங்கத்தக்கவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவனுக்கு யாதொரு துணையும் கிடையாது. அவன் தன் வாக்குறுதியை நிறைவேற்றித் தன் அடியார் முஹம்மதுக்கு உதவினான். சதிகாரர்களை அவன் ஓடச்செய்தான். பிறப்பினாலோ, பந்தங்களாலோ, சொத்துக்களாலோ கோரப்படும் தனியுரிமைகள் மற்றும் அந்தஸ்துகள் என்னால் ஒழிக்கப்படுகின்றன. கஃபாவை மேற்பார்வையிடுவது மற்றும் ஹஜ் பயணிகளுக்கு நீர் விநியோகிப்பது ஆகிய இரண்டைத் தவிர!
    குறைஷிகளே! அறியாமைக் காலத்தில் உங்களோடிருந்த கர்வத்தை அல்லாஹ் போக்கிவிட்டான்; முன்னோர்களிடம் நீங்கள் கொண்டிருந்த ஈடுபாட்டையும் அல்லாஹ் நீக்கி விட்டான். ''மனிதன் ஆதமிலிருந்து தோன்றினான். ஆதம் மண்ணிலிருந்து தோன்றினார்'' அதற்குப்பின்,

    ''மனிதர்களே! உங்களை ஒரே ஆண் மற்றும் ஒரே பெண்ணிலிருந்தே படைத்துள்ளோம். நீங்கள் ஒருவர் மற்றவரை அறிந்து கொள்ளும் பொருட்டு உங்களை (பல) கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கியுள்ளோம். உங்களில் இறைவனிடத்தில் சிறந்தவர் இறையச்சம் மிகுந்தவரே.'' (49:13)

என்ற வசனத்தை முஹம்மத்(ஸல்) அவர்கள் ஓதிக்காட்டினார்கள்.
கூடியிருந்த குறைஞகளிடம் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்,
''நான் உங்களோடு என்ன செய்ய வேண்டும் என்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?”
என்று கேட்டார்கள். அதற்கு குறைஷிகள்
''நல்லது. நீங்கள் சிறந்ததொரு சகோதரர்; மாியாதைக்குாிய சகோதராின் மகன்''
என பதிலளித்தார்கள். அதற்கு இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள்,
''இன்று நீங்கள் பதிலளிக்க வேண்டியது எதுவுமில்லை; நீங்கள் விடுதலை செய்யப்பட்டவர்கள்''
என்று கூறினார்கள்.

    சகோதரர்களே... குர்ஆன் மற்றும் அண்ணல் நபி அவர்கள் கூறிய வழிமுறைகள் மூலம் பகைகையை பற்றி ஆராய்ந்தோம். அல்லாஹ் திருமறையிலே கூறுகிறான்
    இன்னும் அவர்கள், தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் மீது விழமாட்டார்கள். (சிந்தனையுடன் செவி சாய்ப்பர்கள்.) (25:73)

    மேலே கூறப்பட்ட திருவசனப்படி மன்னிக்கப் போகிறீர்களா? இல்லை இன்னும் அவர் அது செய்தார் இது செய்தார் என்று கூறப்போகிறீர்களா?

    தினமும் நாம் எவ்வளவு தவறுகளை செய்துவிட்டு அல்லாஹ்விடம் கையேந்துகிறோம் நம் பாவம் மன்னிக்கப்பட வேண்டுமென்றால் நாம் பிறரது பாவத்தை மன்னிக்க வேண்டாமா? சிந்தியுங்கள் சகோதரர்களே... நாம் ஒருவரை மன்னிக்காமல் நம்மை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கலாமா?

    ஆகவே சகோதரார்களே அல்லாஹ் நம்மை கண்காணித்துக் கொண்டு இருக்கிறான். நாம் அனைவரும் பகைமையை மறந்து அனைவரும் சகோதரர்களாக ஒற்றுமையாக வாழ்வோமாக.  



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

சின்ன சின்ன அமல்கள் !

அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நம்பிக்கை கொண்டவர்கள் சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் நம்பிக்கை மட்டும் போதாது. அத்துடன் நல்ல செயல்களும் அவசியம். இதைப் பற்றி அல்லாஹ் தன் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்வின் உண்மையான வாக்குறுதி. அல்லாஹ்வை விட அதிக உண்மை பேசுபவன் யார்? (அல்குர்ஆன் 4:122)

ஒவ்வொருவருக்கும் முன்னோக்கும் இலக்கு உள்ளது. அவர் அதை நோக்குகிறார். எனவே நன்மைகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே இருந்தாலும் உங்கள் அனைவரையும் அல்லாஹ் கொண்டு வருவான். அனைத்துப் பொருட்களின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 2:148)

நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்! உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 22:77)

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இருள் நிறைந்த ஒரு பகுதியைப் போன்று (வரவிருக்கும்) குழப்பத்திற்கு (முன்னால்) நற்செயல்களில் போட்டி இடுங்கள். (அந்தக் குழப்பம் வந்தால்) ஒரு மனிதன் முஃமினாக காலைப் பொழுதை அடைந்து மாலையில் காஃபிராகி விடுவான். அல்லது மாலையில் முஃமினாக இருப்பவன் காலையில் காஃபிராகி விடுவான். உலகத்தின் செல்வங்களுக்காகத் தனது மார்க்கத்தை விற்று விடுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 186

மேற்கூறப்பட்ட குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களிலிருந்து நல்ல செயல்களின் காரணமாகவே சுவனம் செல்ல முடியும் என்று தெரிகின்றது.

நாம் ஒவ்வொரு நாளும் நம்மையே அறியாமல் எவ்வளவோ பாவங்கள் செய்து வருகின்றோம். அவற்றை அழிக்கும் கருவியாக இருக்கக் கூடிய நல்ல செயல்களை நாம் தொடர்ந்து செய்து வர வேண்டும்.

அவர்கள் தமது இறைவனின் திருப்தியை நாடி பொறுமையை மேற்கொள்வார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப் படையாகவும் (நல் வழியில்) செலவிடுவார்கள். நன்மை மூலம் தீமையைத் தடுப்பார்கள். அவர்களுக்கே அவ்வுலகின் (நல்ல) முடிவு உண்டு. (அல்குர்ஆன் 13:22)

நன்மை என்றால் தொழுகை, நோன்பு, ஸகாத் இவை தான் நன்மை என்று நாம் நினைத்து வைத்துள்ளோம். இவை தவிர இன்னும் எவ்வளவோ நல்ல செயல்கள் உள்ளன. அவை அதிக நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாகவும் உள்ளன. அவற்றை இப்போது பார்ப்போம்.
அல்லாஹ்வை நினைவு கூர்வது

எந்தச் சிரமத்தையும் எடுத்துக் கொள்ளாமல் சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று கூறினால் அந்த வார்த்தைகள் அதிக நன்மைகளைப் பெற்றுத் தருகின்றன.

இரண்டு வார்த்தைகள் நாவிற்கு எளிதானதாகவும், (நன்மையின் தராசில்) கனமானதாகவும் இருக்கின்றன. அவை, சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சுப்ஹானல்லாஹில் அழீம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 7563

ஸலாம் கூறுதல்

இன்று முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டு சிலர் ஸலாம் சொல்வதற்கு வெட்கப்படுவதைப் பார்க்கிறோம். ஸலாம் கூறுவதால் அவர்களுடைய அந்தஸ்து கெடுவதைப் போன்று நினைக்கிறார்கள். ஆனால் ஸலாம் கூறுதல் இஸ்லாத்தில் சிறந்த செயல் என்பதை அவர்கள் விளங்கவில்லை.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்தது எது?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ''நீர் (மக்களுக்கு) உணவளிப்பதும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் நீர் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: புகாரி 12

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்று கூறினார். அதற்கு நபியவர்கள் (பதில்) சலாமை அவருக்குக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்த போது ''(இவருக்கு) பத்து (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். பிறகு மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிக் கூறினார்கள். பிறகு அம்மனிதர் (சபையில்) அமர்ந்து கொண்டார். அப்போது ''(இவருக்கு) இருபது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (மூன்றாவதாக) மற்றொரு மனிதர் வந்து ''அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு'' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் (பதில்) சலாமை திருப்பிச் சொன்னார்கள். பிறகு அம்மனிதர் அமர்ந்து கொண்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''(இவருக்கு) முப்பது (நன்மைகள் கிடைத்து விட்டது)'' என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) நூல்: திர்மிதீ 2613

தீங்கு தரும் பொருளை அகற்றுவது

நாம் செல்லும் பாதையில் மக்களுக்குத் தொல்லை தரும் பொருளை அகற்றினால் அதற்கும் நமக்கு நன்மை உண்டு.

''ஒரு மனிதன் பாதையில் நடந்து சென்ற போது முற்கிளையைக் கண்டு அதை எடுத்து அகற்றிப் போட்டார். அவரின் இந்த நல்ல செயலை அல்லாஹ் ஏற்றுக் கொண்டு அவருக்குப் பாவமன்னிப்பு அளிக்கின்றான்'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 2472

தொல்லை தரும் பொருளை அகற்றிப் போடுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 246

நல்ல வார்த்தைகளைப் பேசுதல்

தேவையற்ற பேச்சுக்களைப் பேசாமல் நல்ல வார்த்தைகளைப் பேசுவதால் அதிக நன்மையை அடைய முடியும்.

நல்ல வார்த்தை பேசுவது தர்மமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

பேரீச்சம் பழத்தின் கீற்றைக் கொண்டாவது நீங்கள் நரகத்தை விட்டுத் தப்பிக்க நினையுங்கள். இல்லையென்றால் நல்ல வார்த்தையின் மூலம் (நரகத்தை விட்டுத் தப்பியுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரி 6023

மற்றவருக்காகப் பிரார்த்தனை செய்தல்

மற்றவருக்காக நாம் துஆச் செய்தால் அதற்காக அதிக நன்மைகள் கிடைக்கின்றன. எத்தனையோ பேர் நம்மிடம் துஆச் செய்யும்படி சொல்லியிருப்பார்கள். அதை நாம் அலட்சியப்படுத்தாமல் நம்முடைய வாழ்வில் செயல்படுத்த வேண்டும்.

ஒரு மனிதன் தன்னுடைய சகோதரனுக்காக மறைவில் துஆச் செய்தால், ''உனக்கும் அவ்வாறே ஏற்படட்டும்'' என்று வானவர்கள் அவருக்காக வேண்டுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி) நூல்: அபூதாவூத் 1534

பிற முஸ்லிமைப் பார்த்து புன்னகை செய்தல்

வழியில் நாம் சந்திக்கும் ஒரு முஸ்லிமைப் பார்த்து நல்ல எண்ணத்துடன் புன்னகைத்தால் அதற்கும் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகின்றது. இப்படிப்பட்ட ஓர் அருமையான மார்க்கத்தில் இருக்கும் நாம் அதன் சிறப்பைப் பற்றி தெரியாமல் இருக்கின்றோம்.

உன்னுடைய சகோதரனுடைய முகத்தைப் பார்த்து நீ சிரிப்பது கூட உனக்கு நன்மையாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதர் (ரலி) நூல்: முஸ்லிம் 4760

கால்நடைகள் மீது இரக்கம் காட்டுதல்

ஒரு மனிதன் இன்னொரு மனிதனிடம் காட்டும் அன்புக்கு நன்மைகள் கிடைப்பது போன்று, விலங்கினத்தின் மீது இரக்கம் காட்டினால் அதற்கும் நன்மை உண்டு என்று இஸ்லாம் கூறுகின்றது.

கால்நடைகளுக்குச் சூடு வைப்பதையும் போட்டியில் அது தோல்வியடைந்தால் அதைச் சுட்டுக் கொல்வதையும் பார்க்கும் மக்கள், இஸ்லாத்தின் இந்த உன்னதத் தன்மையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

''ஒரு மனிதர் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது அவருக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. உடனே, அவர் (அங்கிருந்த) ஒரு கிணற்றில் இறங்கி, அதிலிருந்து (தண்ணீரை அள்ளிக்) குடித்தார். பிறகு கிணற்றிலிருந்து அவர் வெளியே வந்த போது நாய் ஒன்று தாகத்தால் தவித்து, நாக்கைத் தொங்க விட்டபடி ஈர மண்ணை நக்கிக் கொண்டிருப்பதைக் கண்டார். அவர் (தம் மனதிற்குள்) ''எனக்கு ஏற்பட்டதைப் போன்றே இந்த நாய்க்கும் (கடுமையான தாகம்) ஏற்பட்டிருக்கின்றது போலும்'' என்று எண்ணிக் கொண்டார். உடனே, (மீண்டும் கிணற்றில் இறங்கி, தண்ணீரைத்) தனது காலுறையில் நிரப்பிக் கொண்டு, அதை வாயால் கவ்விக் கொண்டு, மேலே ஏறி வந்து அந்த நாய்க்கும் புகட்டினார். அல்லாஹ் அவருடைய இந்த நற்செயலை ஏற்று அவரை (அவரது பாவங்களை) மன்னித்தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதைச் செவியுற்ற நபித்தோழர்கள், ''அல்லாஹ்வின் தூதரே! கால்நடைகளுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்குப் பலன் கிடைக்குமா?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ''ஆம்! உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவி செய்யும் பட்சத்தில் மறுமையில்) அதற்கான பிரதிபலன் கிடைக்கும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி 2363, 6009

குறைந்த தர்மம் அதிக நன்மை

நம்மில் அதிகமானோர் தர்மம் செய்யும் விஷயத்தைப் பற்றி தவறாகப் புரிந்து வைத்துள்ளனர். அதாவது அதிகமான பொருளைத் தான் தர்மம் செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியல்ல! தூய்மையான சம்பாத்தியத்தில், தூய்மையான எண்ணத்துடன் நம்மால் முடிந்ததை தர்மம் செய்தாலும் அதற்கு இறைவனிடம் கூலி உண்டு. நமக்கு அது அற்பமாகத் தெரிந்தாலும் இறைவனிடம் அது மிகப் பெரியதாக இருக்கும்.

எவர் முறையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம்பழத்தின் அளவு தர்மம் செய்தாரோ லி அல்லாஹ் பரிசுத்தமானதைத் தவிர வேறு எதையும் ஏற்றுக் கொள்ள மாட்டான் லி அதை அல்லாஹ் தனது வலக்கரத்தால் ஏற்றுக் கொண்டு, பிறகு நீங்கள் உங்கள் குதிரைக் குட்டியை வளர்ப்பது போன்று அதன் நன்மையை மலை போல் உயரும் அளவிற்கு வளர்த்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 1410

இது போன்ற சின்னச் சின்னச் செயல்கள் ஏராளமான நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடியதாக உள்ளன. அவற்றை நாம் செய்து நன்மை செய்யும் நல்லடியார்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி வைப்பானாக!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

மக்களே!

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் துவங்குகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு
நல்ல குணம் உடையவர்களையும், இறைவனுக்கு அஞ்சி அடிபணிந்து நடப்பவர்களையும் நாம் நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டும்


(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள். தவிர கோபத்தை அடக்கி கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (அல் குர்ஆன் 3 : 134)

இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி சாபமிடுபவனாகவும் இருப்பது இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும் இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.


ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள், (மாறாக) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும் தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).
உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை (முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி

எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (

மண்ணில் உள்ள மனிதர்களை நீங்கள் நேசித்தால் விண்ணிலுள்ள இறைவன் உங்களை நேசிப்பான் என்பது நபி மொழி. (நூல்:திர்மிதி)

நாம் பிறரிடம் மிகவும் அன்பாகவும், பிறருக்கு உதவி செய்யும் முகமாக இரக்கத்தோடும் நடந்து கொள்ள வேண்டும். சுடு சொல் பேசக்கூடாது. தவறான செயலும் செய்யக் கூடாது. நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் 'எவர் ஒருவர் தன் சொல்லாலும் செயலாலும் பிறர் மனதை புண்படுத்தாமல் இருக்கிறாரோ அவர் தான் உண்மையான முஸ்லீமாவார்'

அல்லாஹ்வுக்காக நட்பு கொள்வதும், அல்லாஹ்வுக்காக சினமுறுவதும் (நம்பிக்கையாளனின்) மேலான செயலாகும். (அறிவிப்பவர்: அபுதா (ரலி) நூல்:அபுதாவூத்.

1) உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாதது வரை
(முழுமையான) ஈமான் கொண்டவராக மாட்டார் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல் : புஹாரி (11).

2) மக்களை அமைதியுடன் செவி தாழ்த்தி கேட்கும்படி செய்வீராக!
எனக்கூறிவிட்டு (மக்கள்
அமைதியுற்ற பின்னர்) எனக்குப் பிறகு நீங்கள் ஒருவர்; கழுத்தை ஒருவர்
வெட்டிக்கொள்ளும்
காபிர்களாக மாறிவிட வேண்டாம் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
இறுதி ஹஜ்ஜின் உரையில் கூறினார்கள். அறிவிப்பவர் : ஜரீர் (ரழி) நூல்:
புஹாரி (121).

3) ஒரு கட்டிடத்தின் பகுதி இன்னொரு பகுதியை எப்படி
வலுப்படுத்திகொண்டிருக்கிறதோ அது போலவே ஒரு முஃமின் இன்னொரு முஃமின் விஷயத்தில்
நடந்து கொள்ள வெண்டும். என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தங்கள்
விரல்களை கோர்த்துக் காட்டினார்கள். அறிவிப்பவர் : அபூ மூஸா (ரழி) நூல்: புஹாரி
(481).

4) ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமின் சகோதரனாவான். அவனுக்கு அவன்
அநீதியிழைக்கவுமாட்டான், அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும் படி) கை விட்டு
வடவும் மாட்டான்.
எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடுபடுகிறாரோ அவரது தேவையை நிறைவு
செய்வதில் அல்லாஹ் ஈடுபடுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் துன்பத்தை நீக்குகிறாரோ
அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நாளின் துன்பங்களில் ஒரு துன்பத்தை நீக்குகிறான்.
எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நாளில்
அல்லாஹ்வும் மறைக்கின்றான் என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) நூல்: புஹாரி (2442).

5) உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்திற்கு
உள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனக்கு உதவி செய் என அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு மக்கள் அல்லாஹ்வின் தூதரே!
அக்கிரமத்திற்கு
உள்ளானவருக்கு நாங்கள் உதவி செய்வோம் ஆனால் அக்கிரமக்காரனுக்கு எப்படி உதவி
செய்வோம்? என்று கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவனை
அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து விடு(ங்கள்) இதுவே நீ(ங்கள்) அவனுக்கு செய்யும்
உதவி என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரழி) நூல்: புஹாரி (2444).

6) ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும், அன்பு செலுத்துவதிலும், இரக்கம்
காட்டுவதிலும், (உண்மையான) இறை நம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ
காண்பாய். உடலின் ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும்
(சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்தக்கொண்டிருக்கின்றன, அத்துடன் உடல்
முழுவதும் காய்ச்சல் கண்டு விடுகிறது என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : நுஃமான் பின் பஸீர் (ரழி) நூல்: புஹாரி (4011).

7) ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள், பிணங்கிக்கொள்ளாதீர்கள்,
(மாறாக) அல்லாஹ்வின்
அடியார்களே! (அன்பு பாராட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். எந்த ஒரு முஸ்லிமும்
தம் சகோதரனுடன் முன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று
என அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ்
பின் மாலிக் (ரழி) நூல்: புஹாரி (4045).

8) மக்களை அதிகமாக சுவர்க்கத்தில் புகுத்துபவை இறையச்சமும் நற்குணமும்தான் என்று
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
அபூஹூரைரா (ரழி). நூல் : திர்மிதீ, ஹாகிம்.

9) இறைநம்பிக்கையாளன் குத்திப் பேசுபவனாகவும் அடிக்கடி
சாபமிடுபவனாகவும் இருப்பது
இல்லை. மானங்கெட்ட செயல்புரிபவனாகவும், சண்டையில் தீய வார்த்தைகள் பேசுபவனாகவும்
இருப்பதில்லை என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூதர்தா (ரழி). நூல் : ஹாகிம்.

*10) வெட்கம் இறைநம்பிக்கையின் ஒரு பகுதியாகும் என்று அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரழி). நூல் :
புகாரி, முஸ்லிம்.
11) ஒருவர் மற்றவர்மீது அக்கிரமம் புரியாமல், ஒருவர் மற்றவர் மீது பெருமை
கொள்ளாமல் பணிந்தவர்களாக இருங்கள் என்று எனக்கு வஹி (இறைசெய்தி)
அறிவிக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : இயான் இப்னு ஹிமார் (ரழி). நூல் : புகாரி,
முஸ்லிம்.
12) எவர் தன்னுடைய சகோதரனுடைய மானத்தை அவனறியாமலேயே காக்கிறாரோ அல்லாஹ் அவருடைய
முகத்தை மறுமையில் நெருப்பிலிருந்து காக்கிறான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர்தா (ரழி). நூல் : திர்மிதி.
13) மக்களே! ஸலாமைப் பரப்புங்கள்! உறவினரோடு சேர்ந்து வாழுங்கள்! உணவளியுங்கள்!
மேலும் இரவில் மக்கள் தூங்கும் போது நீங்கள் (எழுந்து) தொழுங்கள். அப்போது
நீங்கள் சுவர்க்கத்தில் அமைதியுடன் நுழையலாம் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ்; இப்னு ஸலாம்; (ரழி).
நூல் : புகாரி, முஸ்லிம்.
14) நயவஞ்சகனுடைய அடையாளங்கள் மூன்று. (1)அவன் பேசினால் பொய்யே பேசுவான்.
2)அவன் வாக்குறுதி கொடுத்தால் மாறு செய்வான். (3)அவனிடம் ஒரு பொருள் அல்லது பணி
தொடர்பான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால் அதில் மோசடி செய்வான்'' என்று
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி, முஸ்லிம்.

15) பகைமை கொள்பவர்களும், தீயவர்களும் (தான்) அல்லாஹ்விடத்தில் கெட்டவர்கள்
என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபுதர்தா
(ரழி). நூல் : திர்மிதி

16) கடுமையாகச் சண்டையிடுபவன், மனதில் பகைமையை வைத்திருப்பவன்
அல்லாஹ்விடம் மிகவும்
வெறுப்புக்குரியவன் ஆவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா (ரழி). நூல்: முஸ்லிம்.

17) பொறாமை கொள்ளாதிருக்கும்படி உங்களை எச்சரிக்கிறேன். ஏனெனில் நெருப்பு
விறகைத் தின்று விடுவதைப் போன்று பொறாமை நற்செயல்களைத் தின்று விடும் என்று
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :
அபூஹூரைரா (ரழி). நூல்: அபூதாவூத்;.

18) நான் உங்களை சந்தேகப்பட வேண்டாமென்று எச்சரிக்கின்றேன். ஏனெனில்,
செய்திகளில்
மிகவும் பொய்யானது சந்தேகமேயாகும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்)
அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புகாரி,
முஸ்லிம்.

19) எவன் ஒரு முஸ்லிமுக்கு தீங்கு இழைக்கின்றானோ, அல்லாஹ் அவனுக்கு
தீங்கிழைப்பான். எவன் ஒரு முஸ்லிமை கஷ்டத்தில் ஆழ்த்துகிறானோ, அல்லாஹ் அவனை
கஷ்டத்தில் ஆழ்த்துவான் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள்
கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஸிர்மா (ரழி). நூல்கள்: அபூதாவூத், திர்மிதீ.

20) செயல்களில் சிறந்தது தொழுகையை அதன் நேரத்தில் தொழுவதாகும் என்று அல்லாஹ்வின்
தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரழி).
நூல்கள் : புஹாரி, முஸ்லிம்.

21) நமக்கும் அவர்களுக்குமிடையே (காபிர்களுக்கு மிடையே) இறைவன்
ஏற்படுத்திய வித்தியாசம்
தொழுகையேயாகும். யார் அதனை விட்டுவிட்டாரோ அவர் காஃபிராகி விட்டார் என்று
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : புரைதா
(ரழி). நூல்கள் : திர்மிதி, அபூதாவுத், அஹ்மது, இப்னுமாஜா, நஸயீ, இப்னு
ஹிப்பான்.

22) இரண்டு தொழுகைகள் முனாஃபிக்கீன்களுக்கு பாரமாக இருக்கிறது. ஃபஜ்ருடைய ஜமாஅத்தும், இஷாவுடைய ஜாமாஅத்தும். இந்த இரண்டிலும் உள்ள நன்மைகளை அவர்கள்
அறிவார்களேயானால், பள்ளிக்கு தவழ்ந்து வந்தாயினும் தொழுகையில் கலந்து விடுவர்
என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர் :
அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி, முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ,
நஸயி.

23) இறந்தவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் (கப்ரு) மற்றும் குளியலறையைத் தவிர, பூமி
முழுவதுமே அல்லாஹ்வை தொழும் இடம் (மஸ்ஜித்) ஆகும். என்று அல்லாஹ்வின் தூதர்
முஹம்மது (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல் குத்ரி(ரழி).
நூல் :திர்மிதீ.

24) தொழுகையில் இமாமுக்கு மறதி ஏற்படும்போது ஆண்கள் ''ஸூப்ஹானல்லாஹ்'' என்று
கூறவேண்டும், பெண்கள் கையைத் தட்ட வேண்டும் என்று அல்லாஹ்வின் தூதர் முஹம்மது
(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி). நூல்கள் : புஹாரி,



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini