அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

வெள்ளிக்கிழமை சிறந்த தினம் !

வார நாட்களிலேயே இந்த வெள்ளிக்கிழமை தான் மிகவும் சிறந்த தினம் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். அதற்கு பல காரணங்களும் இருக்கின்றன. ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டதி­ருந்து மறுமை நாள் நிகழ்தல் போன்ற சில முக்கிய நிகழ்வுகள் இந்த வெள்ளிக்கிழமையை மையப்படுத்தி அமைந்திருப்பதால் இந்நாள் ஒரு பொன்னாள் என நபிகள் நாயகம் அறிவித்திருக்கின்றார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக்கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்றுதான் சொர்க்கத்திற்குள் அனுப்பப்பட்டார்கள் ; அன்றுதான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்றுதான் யுக முடிவு நிகழும்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம் 1548
துஆ ஒப்புக்கொள்ளப்படும் நேரம்
பல சிறப்புகளை தாங்கியிருக்கும் இந்த வெள்ளிக் கிழமையில் நம்முடைய துஆ ஒப்புக் கொள்ளப்படும் நேரம் என்ற பொற்புதையலும் இந்த தினத்தில் மறைந்திருக்கின்றது. இறைவன் நிர்ணயித்திருக்கின்ற குறிப்பிட்ட அந்த நேரத்தில் நாம் இறைவனிடத்தில் பிரார்த்தனை புரிந்தால் எந்த மறுப்பின்றி, இறைவன் அதற்கு பதிலளிக்கின்றான். அந்த பிரார்த்தனைகளை ஏற்றுக்கொள்கின்றான். இன்ன தினத்தில் துஆ கேட்டால் இறைவன் பதிலளிப்பான் என்று நமக்கு தெரிந்தால் அது எவ்வளவு மகத்தான பாக்கியம்.
அந்த பாக்கியத்தை இறைவன் இந்த தினத்தில் அமைத்திருப்பது இதன் புனித்தில் ஒன்று.
அபுல்காசிம் (நபிலிஸல்) அவர்கள், ”வெள்ளியன்று ஒரு நேரம் உண்டு. சரியாக அந்த நேரத்தில் ஒரு முஸ்­ரிம் தொழுகையில் நின்று ஏதேனும் நன்மையைக் கேட்டால், அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்று கூறினார்கள். அந்த நேரம் மிகவும் குறைவான நேரம் என்பதைத் தமது கையால் சைகை செய்து காட்டினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம் 1544
அந்த நேரம் எது?
பாக்கியம் பொருந்திய அந்த நேரம் எது என்பதையும் நபிகள் நாயகம் நமக்கு அறிவித்து சென்றுள்ளார்கள். இருப்பினும் அந்த நேரம் பற்றி பலவாறான ஹதீஸ்கள் வருகின்றது. அதில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் இரண்டு நேரத்தை குறிப்பிடலாம். ஒன்று இமாம் மிம்பரில் அமர்ந்து உரையாற்றத் துவங்கி தொழுகையை நிறைவேற்றும் வரையுமுள்ள நேரமாகும். அதற்கான ஆதாரம் பின்வருமாறு :
என்னிடம் அப்துல்லாஹ் பின் உமர் (ர­ரி) அவர்கள், ”வெள்ளிக்கிழமையில் உள்ள அந்த (அரிய) நேரம் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உம் தந்தையார் அறிவித்த ஹதீஸை நீர் செவியுற்றீரா?” என்று கேட்டார்கள். நான் கூறினேன்: ஆம்; என் தந்தை பின்வருமாறு அறிவித்ததை நான் செவியுற்றேன்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அது, இமாம் (சொற்பொழிவு மேடையில்) அமர்வதற்கும் தொழுகை முடிவதற்கும் இடையே உள்ள ஒரு நேரமாகும்.
அறிவிப்பவர் ; அபூபுர்தா பின் அபீமூசா அல் அஷ்அரீ (ரஹ்)
முஸ்­ம்1546
இமாம் மிம்பரில் அமர்ந்ததி­ருந்து தொழுகை முடியும் வரையுள்ள நேரம் நம்முடைய துஆ ஒப்புக்கொள்ளப்படும் என்பதால் அந்நேரத்தில் சொற்பொழிவை கேட்பதை துண்டித்துவிட்டு துஆ கேட்டுக் கொண்டிருக்கூடாது. ஏனெனில் உரை நிகழ்த்தப்பட்டால் அதை கவனிப்பதை தவிர வேறு வேலைகளில் ஈடுபடக்கூடாது. எனவே சொற்பொழிவு நிகழ்த்தப்படும் நேரம் தவிர உள்ள தொழுகையில் ஸஜ்தா அத்தஹிய்யாத் இருப்பு போன்ற நிலைகளில் நாம் விரும்பியவற்றை தாரளாமாக கேட்டுக் கொள்ளலாம். இது நம்முடைய பிரார்த்தனைகள் இறைவனிடத்தில் ஒப்புக் கொள்ளப்படுவதற்கு ஓர் அரிய வாய்ப்பு.
மற்றொரு நேரம் அஸருக்குப்பின்னுள்ள இறுதி நேரமாகும்.
ஜூம்ஆ தினத்தின் பகல் 12 மணி நேரமாகும். ஒரு இறைவிசுவாசி அதில் அந்நேரத்தை அடைந்து எதை கேட்டாலும் அல்லாஹ் அவனுக்கு அதை வழங்காமல் இருப்பதில்லை. அஸருக்குப்பின் இறுதி நேரத்தில் அதை தேடுங்கள் என நபிகளார் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­)
நஸாயி 1372, அபூதாவூத் 884
இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானதாக இருப்பதால் இந்த நேரத்தையும் நாம் துஆ செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த இரண்டை ஏதாவது ஒன்றை தேர்வு செய்வதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிகழ்வதால் இந்த இரண்டையும் தேர்வு செய்வதே அந்நேரத்தை இழக்காமல் இருப்பதற்கு ஏதுவானதாகும்.
அந்த நேரம் தொடர்பான மற்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இந்த இரு நேரத்தை குறிப்பவையாகவே இருக்கின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குளித்து தூய்மையாக இருத்தல்
ஒரு மகிழ்ச்சிகரமான நாள் என்றால் அந்நாளில் குளித்து நல்ல ஆடையணிந்து தூய்மையாக இருக்கவே நாமனைவரும் விரும்புவோம். அது போலவே இந்த வெள்ளிக்கிழமை நமக்கு சந்தோஷமான நாள். வெள்ளிக்கிழமை வந்து விட்டால் குளித்து நல்ல ஆடையணிந்து தூய்மையாக இருக்கவேண்டும்.
வெள்ளிக்கிழமை வாராந்திர சிறப்புத் தொழுகை நிறைவேற்றப்படுவதால் இந்த தினத்தில் தொழுகையில் கலந்து கொள்ளும் ஒவ்வோர் மீதும் குளிப்பது கடமையாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை குளிப்பது பருவமடைந்த ஒவ்வொருவர்மீதும் கடமையாகும்.
அறிவிப்பவர் ; அபூசயீத் அல்குத்ரீ (ர­ரி)
முஸ்­ம் 1535
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒருவர் (வெள்ளிக்கிழமை அன்று) குளித்துவிட்டு ஜுமுஆத் தொழுகைக்குச் சென்று, அவரது விதியில் எழுதப்பட்டிருந்த அளவு (கூடுதலாகத்) தொழுதார்; பிறகு இமாம் தமது சொற்பொழிவை (குத்பா) முடிக்கும்வரை வாய்மூடி மௌனமாக உரையைக் கேட்டுவிட்டு, அவருடன் சேர்ந்து தொழுகையை நிறைவேற்றுகிறார். இத்தகையவருக்கு அந்த ஜுமுஆவிரிருந்து அடுத்த ஜுமுஆ வரையும் மேற்கொண்டு மூன்று நாட்கள்வரையும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (அனைத்தும்) மன்னிக்கப்படுகின்றன.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம் 1556
பள்ளிக்கு விரைவாக வருதல்
இறைவன் சிறப்பித்திருக்கின்ற இந்நாளை நாமும் தவறாது கண்ணியப்படுத்த வேண்டும். நாம் எவ்வாறு கண்ணியப்படுத்துவது? அந்நாளின் மகத்துவங்களை பேணி, அந்நாளில் கடைபிடிக்க வேண்டிய சில ஒழுக்க மாண்புகளை ஒழுகுவதின் மூலம் இந்நாளை கண்ணியப்படுத்த வேண்டும்.
குறிப்பாக இன்றைய தினத்தில் தொழுகைக்காக அழைப்பு விடுக்கப்பட்டால் நமது வியாபாரத்தை நிறுத்தி விட்டு பள்ளியின் பால் விரைய வேண்டும். இது தான் நாம் இந்நாளை கண்ணியப்படுத்துபவற்றில் முதன்மையான காரியமாகும். இறைவன் இதை மிகவும் வ­யுறுத்துகின்றான்.
நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக்கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.
அல்குர்ஆன் 62 : 9 10
மேலும் இவ்வாறு வெள்ளிக்கிழமை பள்ளிக்கு விரைவாக வருவதின் மூலம் நாம் பெறும் நன்மைகளை நபிகள் நாயகம் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் வானவர்கள் (ஜுமுஆ தொழுகை நடைபெறும்) பள்ளி வாச­ரின் ஒவ்வொரு நுழைவாயிரி­லும் நின்று கொண்டு, முதன்முதலாக உள்ளே நுழைபவரையும் அடுத்தடுத்து உள்ளே நுழைபவரையும் (அவர்கள் யார், யார் என) எழுதிப் பதிவு செய்துகொண்டிருப்பார்கள். இமாம் (மிம்பர்மீது) அமர்ந்துவிட்டால், வானவர்கள் அந்த (பெயர் பதிவு) ஏடுகளைச் சுருட்டிவைத்துவிட்டு வந்து (இமாமின்) உரையைச் செவியுறுகின்றனர். (ஜுமுஆவுக்காக) நேரத்தோடு வருபவரது நிலையானது, ஓர் ஒட்டகத்தைக் குர்பானி கொடுத்தவரது நிலைக்கு ஒப்பானதாகும். அதற்கடுத்து வருபவர் ஒரு மாட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஓர் ஆட்டைக் குர்பானி கொடுத்தவர் போன்றவர் ஆவார். அதற்கடுத்து வருபவர் ஒரு கோழியையும், அதற்கடுத்து வருபவர் ஒரு முட்டையையும் தர்மம் செய்தவர் போன்றவர்கள் ஆவர்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம் 1554
ஜூம்ஆ தினத்தில் வியாபாரத்தை நிறுத்திவிட்டு மிகவும் நேரத்தோடு பள்ளிக்கு வந்து விடுவதின் மூலம் ஒட்டகம் மாடு ஆடு போன்றவற்றை குர்பானி கொடுத்த நன்மைகளை அள்ளிவிட முடியும் என்று நபிகளார் கூறுகின்றார்கள். நமக்கு இவைகளை குர்பானி கொடுக்க வசதியில்லை என்றாலும் பள்ளிக்கு விரைவாக வருவதின் மூலம் இந்த நன்மைகளை பெற்றுவிட முடியும் எனும் போது இந்த வாய்ப்பை ஒரு போதும் நழுவ விட்டு விடக்கூடாது.
ஆனால் பல இஸ்லாமிய வியாபாரிகள் இந்நாளின் மகத்துவத்தை பற்றி அறியாமல் இதன் புனிதத்தை அவமதிக்கின்றார்கள். தொழுகைக்கு அழைப்பு விடுக்கப்பட்டும் வியாபாரத்தில் மும்முரமாக ஈடுபடுகின்றனர். இன்னும் பலர் தொழுகையே முடிந்தாலும் அதைபற்றி சட்டை செய்யாமல் வியாபாரத்தில் மூழ்கி திளைக்கின்றனர். இந்த காரியம் இறைவன் கண்ணியமளித்திருக்கின்ற ஒரு நாளின் புனிதத்தை அவமதிக்கும் பாவகாரியம் என்பதை இஸ்லாமிய வியாபாரிகள் புரிந்து நடந்து கொள்ள வேண்டும் வெகு விரைவில் பள்ளிக்கு விரைவதே அவர்களின் வியாபார அபிவிருத்திக்கு வழிகோலும் என்பதை புரிய வேண்டும்.

சுன்னத் தொழ வேண்டும்
ஜுமுஆ உரையை கேட்பதற்காக பள்ளிக்கு வந்தால் அமர்வதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும். இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது வந்தாலும் சரி இவற்றை தொழாமல் உட்கார்ந்து விடக்கூடாது என்று நபிகள் நாயகம் நவின்றுள்ளார்கள். ஒரு தோழர் இவ்வாறு தொழாமல் உட்கார்ந்து விட்ட போது அந்த உரையின் போதே அந்நபரை எழுப்பி தொழுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். இதி­ருந்து ஜுமுஆ தொழுகைக்காக பள்ளியினுள் நுழைந்ததும் தொழவேண்டியதன் அவசியத்தை உணரலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக்கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரரி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ”சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்” என்றார்கள். பிறகு ‘உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கும்போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுதுகொள்ளட்டும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ர­ரி)
முஸ்­ம் 1589
வீணான செயல்களை தவிர்த்தல்
ஜூம்ஆ தினத்தில் நிகழ்த்தப்படும் உரையை நன்கு செவிதாழ்த்தி கேட்க வேண்டும். அந்நேரத்தில் எந்த வீணான காரியத்திலும் ஈடுபடக்கூடாது. மீறி ஈடுபடும் போது அதன் மூலம் பெறவிருக்கும் நன்மைகளை பாழாக்கியவர்களாய் ஆகிவிடுவோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிரிருந்து அடுத்த ஜுமுஆவரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும்போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளை யாடி)க்கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயரி­ல் ஈடுபட்டுவிட்டார்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம் 1557
”இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிருப்பவரிடம், ‘வாய் மூடு’ என்று கூறினால் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டு விட்டாய்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
புகாரி 934
உரையை கேட்கும் போது அருகில் கிடக்கும் கற்களை கூட கண்டு கொள்ளாது இருந்திட வேண்டும் எனும் போது எந்தளவிற்கு இந்த உரை முக்கியத்துவம் பெற்றது என்பதை நன்கறியலாம். எனவே தான் அருகில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தால் கூட அமைதியாக இரு என்று அவரிடம் கூறக்கூடாது என்றும் மீறிக்கூறினால் அவரும் வீணான காரியத்தில் ஈடுபட்டவராகி விடுவார்க என்று நபிகளார் எச்சரிக்கின்றார்கள்.எனவே இந்த உரையை கேட்பதில் அலட்சியம் வேண்டாம்.
நின்வாறே உரையாற்ற வேண்டும்
பொதுவாக எந்த ஒரு வணக்கத்தை செய்வதாக இருந்தாலும் நபிகள் நாயகம் எவ்வாறு செய்ய வேண்டும் என கற்றுத்தந்துள்ளார்களோ அந்த வித்தில்தான் நாமும் நிறைவேற்ற வேண்டும். நபிகளார் கற்றுத்தராத நமது விருப்பத்திற்கேற்ற முறையில் அவற்றை நாம் செய்யக்கூடாது.  ஜூம்ஆ தினத்தில் நிகழ்த்தப்படும் உரை எவ்வாறு அமைய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் கற்றுத்தந்துள்ளார்கள். எந்த ஒரு சந்தாப்பத்திலும் ஜூம்ஆ தின உரையை உட்கார்ந்த நிலையில் நிகழ்த்தியதாக எந்த ஒரு செய்தியும் இல்லை. எனவே நின்ற நிலையில் தான் உரை நிகழ்த்த வேண்டும். நபிகளார் அனைத்து ஜூம்ஆ உரைகளையும் நின்ற நிலையில் தான் நிகழ்த்தியுள்ளார்கள்ஈ
ஜாபிர் பின் சமுரா (ர­ரி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜுமுஆவின்போது) நின்றவாறே உரையாற்றுவார்கள். பிறகு உட்கார்ந்துவிட்டு (மீண்டும்) எழுந்து நின்றவாறே உரையாற்றுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உட்கார்ந்தவாறே உரை நிகழ்த்துவார்கள் என்று எவரேனும் உன்னிடம் கூறினால் அவர் பொய்யுரைத்துவிட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நான் இரண்டாயிரத்துக்கும் அதிகமான தொழுகைகளைத் தொழுதிருக்கிறேன்.
அறிவிப்பவர் ; சிமாக் பின் ஹர்ப் (ரஹ்)
முஸ்­ம் 1565
சுன்னத் ஜமாஅத் என்று தங்களை சொல்­க் கொள்வோர் பலரும் இதற்கு மாற்றமான முறையில் தான் உரை நிகழ்த்துகின்றார்கள். அவர்கள் நிகழ்த்தும் இரண்டு உரைகளில் ஒன்றை உட்கார்ந்த நிலையிலும் மற்றொன்றை வாள் பிடித்தபடி மக்களுக்கு புரியாத தங்களுக்கும் புரியாத அரபி மொழியில் நின்ற நிலையிலும்  நிகழ்த்துகின்றார்கள். ஜூம்ஆ உரை என்பது மக்களை சீர்திருத்தம் செய்வதற்கான ஒரு களம். மக்களுக்கு இறைநினைவை ஊட்டி இறையச்சத்தை ஏற்றி மக்களை பண்படுத்துவதற்கான ஒரு அற்புதமான தளம்.
நபிகளாரின்  ஜூம்ஆ உரை இந்த வகையில் தான் அமைந்திருந்தது என்று ஹதீஸ்கள் பறைசாற்றுகின்றன. இவர்கள் தங்களுக்கே புரியாத அரபி மொழியில் பிரச்சாரம் செய்தால் அது எப்படி மக்களின் உள்ளங்களை சென்றடையும்? அவர்களுக்கு இறையச்சத்தை ஏற்படுத்தி சீர்திருத்தம் செய்யும்? எனவே எந்த மொழியில் உரை நிகழ்த்தினால் மக்கள் பயன் அடைவார்களோ அந்த மொழியில் உரை நிகழ்த்துவதே நபிகளாரின் நல்வழி என்பதை புரிந்து செயல்பட வேண்டும். ஆதாரத்திற்காக அரபி வாசகத்தை குறிப்பிடுவதை இதற்கு முரணாய் புரிந்து கொள்ளக்கூடாது.
சுருக்கமான உரை
எங்களுக்கு அம்மார் பின் யாசிர் (ர­ரி) அவர்கள் (ஒரு வெள்ளிக்கிழமை) சுருக்கமாகவும் செறிவுடனும் உரை நிகழ்த்தினார்கள். அவர்கள் (மேடையிலிருந்து) இறங்கியபோது, ”அபுல் யக்ளானே!  செறிவுடன் சுருக்கமாகப் பேசினீர்கள். இன்னும் சிறிது நேரம் பேசியிருந்தால் நன்றாயிருந்திருக்குமே?” என்று நாங்கள் கூறினோம். அதற்கு அவர்கள் ”அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குவது ஒருவரது மார்க்க அறிவிற்கு அடையாளம் ஆகும். ஆகவே, தொழுகையை நீட்டி உரையைச் சுருக்குங்கள். சில சொற்பொழிவுகளில் கவர்ச்சி உள்ளது’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்)
முஸ்­ம் 1577
ஜூம்ஆ தின உரை சுருக்கமாக அதே சமயம் கருத்துச்செறிவாக இருக்க வேண்டும் என்பதை மேற்கண்ட நபிமொழி உணர்த்துகின்றது. இன்றைய காலத்தில் இதை பார்ப்பது மிகவும் அரிதாகவே இருக்கின்றது. மிகச்சில பள்ளிகளைத்தவிர ஏனைய பள்ளிகளில் மக்கள் அனைவரும் ச­ப்படையும் அளவிற்கு ஜூம்ஆ உரையை மிகவும் நீட்டி முழங்குகிறார்கள். சில ஊர்களில் ஜூம்ஆ  உரையை ஒரு மணி நேரம் பேசுங்கள் என்றெல்லாம் வ­யுறுத்துகின்றார்கள். இது நபிவழிக்கு மாற்றமான வழிமுறை என்பதை உணர வேண்டும்.
ஒழுங்கை நிறைவேற்றினால் பாவமன்னிப்பு
ஜுமுஆ தினத்தில் என்னென்ன ஒழுக்கங்களை பேண வேண்டும் என நமக்கு இறைவன் கட்டளையிட்டுள்ளானோ அவற்றை பேணி நடந்தால் மறு ஜுமுஆ வரையிலும் நம்மிடம் நிகழும் சிறு பாவங்கள் யாவையும் இறைவன் மன்னித்து விடுவான் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளார்கள். எனவே அந்நாளில் நாம் பேண வேண்டிய எந்த ஒரு விஷயத்தையும் அற்பமாக எண்ணி ஒதுக்கிவிடக்கூடாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஜுமுஆ நாüல் ஒருவர் குüக்கிறார். தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொள்கிறார். தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக்கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக்கொள் கிறார். பிறகு புறப்பட்டு (நெரிசலை உருவாக்கும் விதமாக) இருவரை பிரித்துக் கொண்டு வராமல் (பள்üக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம்  உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.
அறிவிப்பவர் : அல்ஃபார்சீ (ரலி)
புகாரி 883
ஜூம்ஆவில் அலட்சியம் வேண்டாம்
தொழுகை இஸ்லாத்தின் தூண் என்று நாம் நன்கறிவோம். இருப்பினும் மிக முக்கிய கடமையான தொழுகையில் சற்று அலட்சியமானவர்களாகவே இருக்கின்றோம். சில முஸ்­ம்கள் ஜூம்ஆ தொழுகையை நிறைவேற்றுவதில் கூட அலட்சியம் நிறைந்தவர்களாக இருக்கின்றார்கள். ஒருவன் ஜூம்ஆ தொழுகையில் அலட்சியம் காட்ட ஆரம்பித்து விட்டால் இஸ்லாத்தின் மற்றமற்ற வணக்க வழிபாடுகளிலும் அலட்சியம் அவனை தொற்றிக்கொள்ள ஆரம்பித்து விடும். அவனது உள்ளத்தில் நற்போதனை புகமுடியாத படி முத்திரை பதித்து இறுதியில் எதிலும் ஒழுங்கில்லாதவனாக ஆகிவிடுவான் என்பதாக நபிகளார் எச்சரித்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடையின் படிகள்மீது நின்றபடி ” மக்கள் ஜுஆக்களைக் கைவிடுவதிரிருந்து விலகியிருக்கட்டும்! அல்லது அவர்களின் இதயங்கள்மீது அல்லாஹ் முத்திரை பதித்துவிடுவான்; பிறகு அவர்கள் அலட்சியவாதிகளில் சேர்ந்துவிடுவர்” என்று கூறியதை நாங்கள் கேட்டோம்.
அறிவிப்பவர் ; அபூஹுரைரா (ர­ரி)
முஸ்­ம்1570
இரவுத் தொழுகையும் நோன்பும்
நாம் உபரியான நோன்பு நோற்பதாக இருந்தால் திங்கள் வியாழன் ஆகிய நாட்களை தேர்வு செய்ய வேண்டும் என்று நபிகளார் வழிகாட்டியுள்ளார்கள். இவ்விரு நாட்களிலும் நாம் செய்யும் அமல்கள் யாவும் இறைவனிடத்தில் மலக்குமார்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. எனவே நோன்பு நோற்ற நிலையில் நம்முடைய அமல்கள் இறைவனது கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அது மிகவும சிறப்பானதாய் அமையும் என நபிகளார் கூறியுள்ளார்கள்.
அதே சமயம் வெள்ளிக்கிழமை மட்டும் உபரியான நோன்பு வைப்பதும், வெள்ளி இரவு மட்டும் (வியாழன் மாலை) இரவு தொழுகை தொழுகை தொழுவதையும் நபிகளார் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவுகளில் வெள்ளிக்கிழமை இரவை மட்டும் இரவுத் தொழுகைக்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள். தினங்களில் வெள்ளிக்கிழமை தினத்தை மட்டும் நோன்பு நோற்பதற்காகத் தேர்ந்தெடுக்காதீர்கள்; உங்களில் ஒருவர் (வழக்கமாக) நோன்பு நோற்கும் நாள் வெள்ளிக்கிழமையாக அமைந்துவிட்டால் தவிர!
அறிவிப்பவர் :
முஸ்­ம்  2103
சொர்க்கத்தில் வெள்ளிக்கிழமை
இவ்வுலகில் வெள்ளிக்கிழமைக்கு தனி மகிமை இருப்பது போலவே மறுமையில் சொர்க்கத்திலும் இந்த தினத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உள்ளது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
சொர்க்கத்தில் (மக்கள் ஒன்றுகூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொரிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொரிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள்.
அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், ”எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொரிவும் பெற்றுவிட்டீர்களே!” என்று கூறுவர். அதற்கு அவர்கள், ”அல்லாஹ் வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொரிவும் பெற்றிருக்கிறீர்கள்” என்று கூறுவர்.
அறிவிப்பவர் ; அனஸ் பின் மாரி­க் (ர­ரி)
முஸ்­ம் 5448
இந்த ரம்மியமான அனுபவம் சொர்க்கத்தின் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நிகழும் என்று நபிகளார் கூறியுள்ளார்கள் எனும் போது சொர்க்கத்திலும் இதன் சிறப்பு தொடர்கிறது  என்பது உண்மை தானே.
ஸலவாத் கூறுதல்
வெள்ளிக்கிழமை நாம் செய்ய வேண்டிய காரியங்களில் குறிப்பாக நபிகள் நாயகத்திற்கு துஆ செய்யும் விதமாக ஸல் அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத் கூற வேண்டும். இதை அவர்களே வ­யுறுத்தி கூறுகின்றார்கள்.
ஜூம்ஆ தினம் என்பது உங்கள் நாட்களில் மிகவும் சிறந்த தினமாகும் அதிலே தான் ஆதம் அலை அவர்கள் படைக்கப்பட்டுள்ளார்கள் இன்னும் கைப்பற்றப்பட்டார்கள் அதிலே தான் சூர் ஊதுதல் உள்ளது எனவே அந்நாளில் என் மீது ஸலாவாத் அதிகம் கூறுங்கள் ஏனெனில் உங்கள் ஸலவாத் எனக்கு எடுத்துக்கூறப்படுகின்றது.
அறிவிப்பவர் : அவ்ஸ் பின் அவ்ஸ் (ர­)
நஸாயி : 1357
வெள்ளிக்கிழமை மரணித்தால் சொர்க்கமா?
வெள்ளிக்கிழமை மரணித்தால் கப்ர்  வேதனை இல்லை என்றும், வேதனை குறைக்கப்படும் என்றும் அஹ்மத் போன்ற ஹதீஸ் கிரந்தங்களில் சில செய்திகள் இடம் பெற்றுள்ளது. அது தொடர்பான அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானதாக இருக்கின்ற காரணத்தால் வெள்ளிதினத்தன்று மரணிப்பது நல்ல மரணம் என்று புரிந்து கொள்ளக்கூடாது



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini