பெற்றோர்களின் மத நம்பிக்கை அவர்களின் ஆன்மீக எதிர்பார்ப்பை நிறைவேற்றாதாலும் வரும் கேள்வி அறிவுக்கு புராதன நம்பிக்கைகள் ஈடு கொடுக்க முடியாததாலும் அமெரிக்காவில் இஸ்லாத்தின் பக்கம் ஈர்க்கப்படும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் வளர்ந்து கொண்டே போகிறது,சமீபத்தில் அமெரிக்கா இஸ்லாமியக் கவுன்சில் நடத்திய ஒரு ஆய்வில் இது தெரிய வந்தது.
தேசிய அளவில் அமெரிக்காவில் உள்ள கிரேட்டர்போஸ்டன் முஸ்லிம் சமூகத்தில் பெண்களே மூன்றில் இரு பங்காக இருக்கிறனர்.இஸ்லாத்தின் பக்கம் பெண்கள் அதிகமாக ஈடுபடுவதால் புதிர் இருப்பதாக அப் பெண்களின் குடும்பத்தார் கருதுகின்றனர். எந்த ஒரு சமயம் பெண்களை அடிமைபடுத்தி அடக்கி ஆள்கிறது என்று உருவகப்படுத்திக் காட்டப்படுகிறதோ அந்த மதத்தை நோக்கிப் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுவதுதான் அவர்களை வியப்பில் ஆழ்த்துகிறது, ஆனால் புதிதாக இஸ்லாத்தை தழுவிய முஸ்லிம் பெண்கள் ஒரு சேர அக்குற்றச் சாட்டை மறுக்கின்றனர்.
பிரச்சார நோக்கத்துடன் இஸ்லாத்தின் மீது பொய்யான தோற்றத்தை உருவகப்படுத்திக் காட்டப் படுகிறது என்று அவர்கள் வாதிடுகிறார்கள். அதற்கு உதாரணமாக சொத்துரிமை வாரிசுரிமை ஆகிய உரிமைகளை மேலை நாட்டு கலாச்சாரம் பெண்களுக்குக் கொடுப்பதற்;கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கி விட்டது என்று அவர்கள் கூறுகிறார்கள்.இஸ்லாத்தை தழுவும் வெள்ளை கிறிஸ்துவப் பெண்கள் வாழ்க்கையில் இஸ்லாம் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்துகிறது, இப்புதிய முஸ்லிம் பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் என்னும் தலைதுண்டினால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.
அவர்கள் அணியும் ஆடையிலும் வித்தியாசம் தெரிகிறது, கவர்ச்சி ஆடையை அவர்கள் வெறுக்கிறார்கள.நீண்ட தொளதொளப்பான ஆடையை அணிகின்றனர். அது அவர்களின் ஒழுக்க மாண்பை கூட்டிக்காட்டுகிறது. அவர்களின் உணவுப்பழக்கமும், இஸ்லாமிய விதிமுறைக்கு மாறுகிறது. பன்றி மாமிசத்தை அவர்கள் தொடுவதில்லை. புகைப்பது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அவர்கள் முழுக்குப் போடுகிறார்கள். அவர்களின் ஆன்மீகப்பாதை ஐங்காலத் தொழுகை இடம் பிடித்துக் கொள்கிறது.
இஸ்லாத்தை ஏற்றதும் அவர்கள் புதுப்பொழிவுடன் புதிய மனிதர்களாக உள்ளும் புறமும் மாற்றமடைகின்றனர். அவ்வாறு மாற்றமடைந்த பெண்கள் சிலரின் தகவல்களைத் திரட்டி கிழே தருகிறோம்:கிரேஜினோ கிரேட்டர், போஸ்டனில் உள்ள ஒரு கிறிஸ்துவக் குடும்பத்தில் பிறந்தவர், அவரின் தந்தை நம்பிக்கை இழந்து விட்ட கத்தோலிக்கர், தாயோ விறுவிறுப்பான பெந்த கொஸ்ட். கிறிஸ்துவ சமயப் பற்றுக் கிடையே கிரேஜினோ அலைகழிக்கப்பட்டார். சந்தோஷமும் குழப்பமும் அவர் மனதில் குடிகொண்டிருந்தது அப்பொது அவருக்கு வயது 14. வெல்ஸலி ஜூனியர் கல்லூரியின் மாணவி, குழப்பத்திலிருந்து தன்னைத்தானே விடுவித்துக் கொண்டு உலக மதங்களை ஆராய முற்பட்டார். புத்தம், ஹிந்து, யூதம், மற்றும் இஸ்லாம் ஆகியவைகளை ஆழ்ந்து படித்தார்.
முடிவில் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்பட்டார். இஸ்லாம்தான் தனது தாயின் கிறிஸ்துவத்தை விடவும் உண்மையை ஒங்கி ஒலிக்கிறது என்று நம்புகிறார். கடந்த மார்ச் 8-ம் தேதி போஸ்டனில் உள்ள பள்ளிவாசலுக்குச் சென்று அல்லாஹ்வைத்தவிர வணக்கத்துக்குரிய கடவுள் யாருமில்லை முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்,, என்று ஷஹாதத் (இஸ்லாமிய உறுதி மொழி) சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.கிறிஸ்துவச் சமயம் வாரம் ஒரு முறை சர்ச்சுக்குப் போவதும் ஒரு நல்ல மனிதராக இருப்பதும் மட்டுமே. ஆனால் இஸ்லாம் ஒரு முழு வாழ்க்கை நெறி என்று அவர் கூறிகிறார். மகளின் மனமாற்றம் அவரது தந்தைக்கு அடங்காக் கோபத்தை ஏற்படுத்தியது, உனக்கு ஒரு நல்ல வேலையோ அல்லது நல்ல கணவனோ கிடைக்காது, என்று அவர் வருந்துகிறார்.
அவரது தாய் அழுது தவித்து ஏசுவை துணைக்கு அழைக்கிறார். வசந்த கால விடுமுறையில் வீட்டிற்குப் போன கிரேஜினோவிற்கு நல்ல வரவேற்பு இல்லை. அவரது தந்தை, ஹிஜாப் அணிந்த அவரை பார்க்க சகிக்காமல் தனது மற்ற குழந்தைகளையும் அவரோடு பழக விடாமல் தடுக்கிறார். ஆனால் இஸ்லாம் குடும்ப உறவு முறையை பேணிக் கொள்ள அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. அதனால் கிரேஜினோ தமது உறவுகளைக் குடும்பத்துடன் புதுப்பித்துக்கொள்ள இன்னும் முயற்சி செய்து வருகிறார், ஆனால் அது கடினமானதாக அவருக்கு தெரிகிறது. ஏனெனில் அவரது தந்தை கல்லூரிக்கு கட்டவேண்டிய கட்டணத்தை கட்டுவதை நிறுத்தி விட்டார்.இருப்பினும் கிரேஜினோ ஹிஜாப் அணிவது தம்மை பல சங்கடங்களிலிருந்து விடுவிக்கிறதென்று கூறுகிறார்.
சுருள்சுருளான இடுப்பு வரை நீண்ட அழகிய தலைமுடி அவருக்குண்டு. ஹிஜாப் அணியாத காலங்களில் துடுக்குதனம் கொண்டோரை சந்திக்க நேரும் போது அவர்களில் சிலர் நெருங்கி வந்து, இந்த அழகிய கூந்தலை நான் தொடலாமா? என்று தன்னை முட்டாளாக்கி இருக்கிறார்கள் என்று கூறுகிறார். இப்பொது ஹிஜாப் அணிவது தம்மை இப்படிப் பட்ட இடர்பாடுகளில் இருந்து காப்பாற்றி இருக்கிறது என்று சொல்கிறார். இப்போது தன்னை யாரும் உற்று நோக்குவதில்லை. உடல் அழகையோ, உருவ அமைப்பையோ, கூந்தல் அலாங்காரத்தையோ யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை.
குறும்புத்தனம் செய்பவர் கண்ணுக்கு நாம் தெரிவதில்லை என்று கிரேஜியானோ கூறுகிறார்.மற்றுமொரு பெண்மணி கிறிஸ்டினா சபியா டோபியாஸ்நாகி. அவர் சாமர்வில்லாவைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ஒரு கத்தோலிக்கர். தாய் ஒரு யூதர். ஆனால் அவர் யூத மதக்கோட்பாடுளை கடைபிடிப்பதில்லை. சபியாவுக்கு வயது முப்பது. ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் இஸ்லாத்தை தழுவினார்.மேலைநாடுகளில் கடைபிடிக்கப்படும் இஸ்லாம் இலட்சியமாக இல்லாதது துரதிருஷ்டவசமானது, இங்கு நாம் எப்படி இஸ்லாத்தைக் கடைபிடிக்கிறோம் என்பதை பல நாடுகள் அக்கறையுடன் கவனித்து வருகிறன்றன.
அந்நாடுகளில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் நாம் சரியான உதாரணமாக அமையலாம். ஏனெனில் உலகில் வேறு நிலப்பரப்புகளை விடவும் அமெரிக்காவில் நிலவும் அதிகப்படியான சமத்துவ ஒருமைப்பாடு கொண்ட இஸ்லாமியக் கலாச்சாரம் அவர்களுக்கு சிறந்த முன் மாதிரியாகத் திகழும் திறம் படைத்தது. அது உலக அளவில் முஸ்லிம்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தவல்லது என்று சபியா கூறுகிறார்.மார்சியா. கே.ஹெர்மான்சென் சிகாகோவில் உள்ள லயோலா பல்கலைக்கழகத்தின் சமயத்துறை பேராசிரியர். அவர் இப்புதிய நூற்றாண்டுத் துவக்கத்தின் பல் வேறு வழிகளில் இளைஞர்கள் இஸ்லாத்தை அறிந்து கொள்கின்றனர் அது தங்கள் வாழ்வில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தி மனதை அமைதிபடுத்தி வைக்கிறது என்று கூறுகிறார்கள் என்று கூறுகிறார்.
ஹோடா எல்-ஷர்காவி என்ற பெண்மனி, கேம்பிரிட்ஜ் பள்ளிவாசலில் புதிய முஸ்லிம் பெண்களுக்கு உதவி செய்ய வகுப்புக்கள் நடத்துகிறார். இப்படி பல புதிய முஸ்லிம் பெண்கள் எல்லாம் கற்றறிந்து கல்விமான்களாக விளங்குகின்றனர். அவர்கள் சமய சகிப்புத்தன்மை கொண்ட பல்கலைகழக வளாகத்துடன் தங்களை இணைத்துக் கொண்டிருக்கின்றனர்;.லோரா கோவன் ஹார்வார்டு கல்லூரியின் ஜூனியர் கல்லூரி மாணவி. அவரின் வயது 20. அவரின் சக மாணவர் ஒருவர் அவருக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தினார். பின்னர் தனது இஸ்லாமிய அறிவை இன்டர்நெட் மற்றும் கல்லூரி வகுப்பறை இவைகளில் வளர்த்துக் கொண்டார். 4 மாதங்களுக்கு முன் ஷஹாதத் சொல்லி இஸ்லாத்தை ஏற்றார்.
இஸ்லாத்தைப் பற்றி நான் கண்டது, கேட்டது அனைத்தும் என் அறிவுக்குப் பொருத்தமாக இருக்கிறது. நான் தொழுகையை நிறைவேற்றிய ஒவ்வொரு வேளையிலும் என் தோளிலிருந்து பெரும் சுமை கீழிறக்கப்பட்டதாக உணர்கிறேன். அது வர்ணிக்க முடியாத உணர்வு. அந்த நேரத்தில் நான் தனிமையில் விடப்பட்டதாக உணர்கிறேன் என்கிறார் நெகிழ்வுடன். நாகரிகத்தின் உச்சாணிக் கொம்பில் இருப்பதாக சொல்லப்படும் அமெரிக்காவில் இஸ்லாம் இவ்வாறெல்லாம் வேகமாக பெண்களை கவர்ந்துள்ளது..
நன்றி: தமிழ்முஸ்லிம்.காம்
Free Template Blogger
collection template
Hot Deals
BERITA_wongANteng
SEO
theproperty-developer