அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

டோனி பிளேரின் மைத்துனி மதமாற்றம் ...

இங்கிலாந்து முன்னாள் பிரதமர் டோனி பிளேயரின் மைத்துனி முறையிலான லாரன் பூத், இஸ்லாமுக்கு மதம் மாறியுள்ளதாக அறிவித்துள்ளார். டோனி பிளேயரின் மனைவி செரி பிளேயரின் ஒன்றுவிட்ட சகோதரியான லாரன் பூத் பிறப்பால் கத்தோலிக்க கிறிஸ்த்தவர் என்பதுடன், பிரபல மனித உரிமை ஆர்வலராவார். சமீபத்தில் ஈரான் சென்றிருந்த போது, இஸ்லாமியர்கள் பலரும் கலந்துகொண்ட உலக அமைதி மற்றும் ஒற்றுமை என்ற பெயரிலான பேரணியில், பூத்தும் கலந்து கொண்டார். அப்போது தான் அவர் மதம் மாறியிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது.

இந்நிலையில் இதனை உறுதிப்படுத்தியுள்ள லாரன் பூத் ஈரானில் உள்ள ஒரு தர்காவில் ஆறு வாரங்களுக்கு முன்பு எனக்கு அருமையான இறை அனுபவம் கிடைத்தது. அதன் பின்னர் நான் இஸ்லாமத்தின் மார்க்கத்தின் பால் ஈர்க்கப்பட்டேன்.

இப்போது இஸ்லாமிய கடமைகள் அனைத்தையும் செய்கின்றேன் என்றார்.

உலகளாவிய ரீதியில் பிரபலமாகி வரும் ஈரான் தொடங்கியுள்ள 24 மணி நேர ஆங்கில சர்வதேச தொலைக்காட்சியான பிரஸ் டீவியிலும் இவர் பத்திரிகையாளராக பணிபுரிந்து வருகிறார்.

இவர், பாலஸ்த்தீனம் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலை கடுமையாக விமர்சிப்பதுடன், ஆதரவளிக்கும் டானி பிளேயரையும் நேரடியாக விமர்சிப்பவர்.

எனினும் டான் பூத்தின் மத மாற்றம் பற்றி டானி பிளேயர் இன்னமும் ஒரு விமர்சனமும் முன்வைக்கவில்லை.



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

குர்பானியின் சட்டங்கள்


தங்களுக்குரிய பவன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குர்பான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.
لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِيرَ



இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.

குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்  ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள்.அறிவிவப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநுல் புகாரி (955,5556)

இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொடுக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.

அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள். அறிவிப்பவர் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நுல் முஸ்லிம் (3637)முஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் ''பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள். அறிவிப்பவர் அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா (3137) முஅத்தா (921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 
அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். அறிவிப்பவர் அலீ ரளியல்லாஹு அன்ஹுநூல்: புகாரி (1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7
 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். அறிவிப்பவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹுநூல்: முஸ்லிம் (2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3
 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். அறிவிப்பவர் அலீநூல்: புகாரி. (1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே' என்று கூறினார்கள். அறிவிப்பவர் பரா ரளியல்லாஹு அன்ஹுநூல்: நஸயீ (4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பபவர் ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் (3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். 
அறிவிப்பவர் உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: நஸயீ (4285)
நாமே அறுக்க வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
 அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.
தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது
பராஃ
 ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார் ரளியல்லாஹு அன்ஹு'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள் (புகாரி 955) அனஸ்
ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழு(வித்)தார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதுவிட்டு அங்கேயே இரவு தங்கினார்கள். காலை விடிந்ததும் தம் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'லா இலாஹ இல்லல்லாஹ்'வும் 'ஸுப்ஹானல்லாஹ்'வும் கூறிக் கொண்டே சென்றார்கள். பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து அறுத்து பலியிட்டார்கள். (பெருநாளில்) பெரிய கொம்புகளையுடைய கருப்புநிறம் கலந்த வெள்ளைநிற ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத்தார்கள்'' இது பற்றி குரான் வசணங்கள் இல்லை எனவும் கூறுகிறார்.

அரஃபா தினத்தன்று நோன்பு
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்'' (புகாரி 2004)




Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கதை அல்ல நிஜம் !! இஸ்லாம் கூறிய வழியில் நடந்தால் வாழ்க்கை நிஜம் !!



பார்வையை உள்ளே செலுத்தாதிருத்தல்

ஒருவர் இன்னொருவர் வீட்டிற்கு வரும் போது, வீட்டில் நுழைவதற்கு அனுமதி பெறுவதற்கு முன், வீட்டுக்குள் பார்வையைச் செலுத்தக் கூடாது. வீட்டில் இருக்கும் அந்நியப் பெண்களின் மீது பார்வை பட்டு விடக் கூடாது என்பது தான் நபி (ஸல்) அவர்களது கட்டளையின் முக்கிய நோக்கமாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெரிவிக்கின்றது.
ஒரு மனிதர் ஒரு துவாரத்தின் வழியாக நபி (ஸல்) அவர்களின் வீட்டினுள் எட்டிப் பார்த்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஈர்வலிச் சீப்பால் தமது தலையைக் கோதிக் கொண்டிருந்தார்கள். (அவர் எட்டிப் பார்ப்பதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், “நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று எனக்குத் தெரிந்திருந்தால் இந்த ஈர்வலியைக் கொண்டே உன் கண்ணைக் குத்தியிருப்பேன். (வீட்டுக்குள் நுழைய) அனுமதி கேட்க வேண்டும் என்று சட்டமாக்கப்பட்டதே பார்வைகள் (வரம்பு மீறி வீட்டிலுள்ளவர்கள் மீது விழக்கூடும் என்ற) காரணத்தினால் தான்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி), நூல்: புகாரி 5294

மேலும் அறிய விடியோவை பார்ப்போம் ரசிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக !!!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கதையல்ல நிஜம் 04 ( vijay tv )



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கதையல்ல நிஜம் 03 ( vijay tv )



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கதையல்ல நிஜம் 02 (vijay tv)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கதையல்ல நிஜம் 01 (vijay tv)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பிஸ்மில்லாஹிர்ரஹூமானிர்ரஹீம்

லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரிக்க லஹுலஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவா ஆலா குல்லி ஷையின்கதிர். லாஹவ்ல வலா குவ்வத்த இல்லாபில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ் வலாநஃபுது இல்லா இய்யாஹ். லஹுன் நிஃமத்து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாஉல்ஹஸன். லாயிலாஹ இல்லல்லாஹ் முக்லிஸீன லஹுத்தீன் வலவ்கரிஹல் காஃபிரூன்.

பொருள்:வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு எந்த இனையும் கிடையாது. ஆட்சி அதிகாரங்களும் அனைத்துப் புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடைடையவன். அல்லாஹ்வின் உதவியின்றி பாவத்திலிருந்து விலகவோ; நன்மையை செய்யவோ முடியாது. வணக்கத்திற்க்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் எதனையும் நாங்கள் வணங்கமாட்டோம். அனைத்து அருட்கொடையும் சிறப்பும், சிறந்த புகழும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை. மார்க்க (வணக்க)த்தை அவனுக்காக மட்டுமே தூய்மையாக்கியவர்களாக அவனை மட்டுமே வணங்குவோம். இதனை இறை நிராகரிப்பாளர்கள் வெறுத்தாலும் சரியே!


அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா(ரலி)
ஆதாரம்:புகாரி,முஸ்லிம்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

பெற்றோர் தம் தலையாய கடமை

அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான்உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும்பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான்.            குழந்தைகளை இப்படித்தான் வளர்க்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லுகிறதுஅதன்படி குழந்தைகளை வளர்த்தால் ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக வளரும்சிறுவயது முதலே அவர்களுக்கு அல்லாஹ் பற்றிய இறைநம்பிக்கைநபிமார்கள்நபித்தோழர்கள்,நபித்தோழியர்கள் மற்றும் மார்க்க அறிஞர்கள் ஆகியோரது வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு சம்பவங்களாக அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும்அதுபோன்று உன்னத வாழ்க்கைக்கு ஆசைப்படும்படி அறிவுறுத்த வேண்டும்அந்த ஆசைக்கு அடித்தளங்களாக இறைதூதர் (ஸல்அவர்களது வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள்அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), லி (ரலிமற்றும் நேர்வழிப் பெற்ற நபிதோழர்கள் பற்றிய சம்பவங்கள் குழந்தைகளின் உள்ளத்தைப் பண்படுத்த வல்ல.
குழந்தைகள் கேட்கக்கூடிய அறிவுப்பூர்வமான கேள்விகளாகட்டும் மற்றும் ஆன்மீக சம்பந்தப்பட்ட கேள்விகளாகட்டும் அவர்களுக்குத்தகுந்த விளக்கம் கொடுத்து விளங்கப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அவர்களை ஊக்குவிக்கவும் வேண்டும்பெற்றோருக்கு நன்றி உடையவராகவும்பெரியோர்களுக்கு மரியாதை செலுத்தக்கூடியவர்களாவும் சிறுவர்களுக்கு அன்பு பாராட்டக்கூடியவர்களாகவும் மற்றும் ஒழுக்ககேடான செயல்களைத் தவிர்ந்து இருக்கவும் வலியுறுத்த வேண்டும்.
வெளியில் சென்று கல்வி கற்றுவிட்டு வீடு திரும்பக்கூடிய நம் பிள்ளைகளை அடிக்கடிக் கண்கானித்துக் கொண்டிருக்க வேண்டும்.பிள்ளைகளின் பழக்க வழக்கங்கள் மற்றும் பிள்ளைகளுடன் படிக்கக்கூடியபழகக்கூடியவர்களின் நிலையையும் அறிந்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும்



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

“அன்றியும், நிச்சயமாக மஸ்ஜிதுகள் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றன, எனவே, (அவற்றில்) அல்லாஹ்வுடன் (சேர்த்து வேறு) எவரையும் நீங்கள் பிரார்த்திக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 72:18)
அல்லாஹ் அல்லாதவர்களை  ஏன் அழைக்கிறீர்கள் என்று கேட்பவர்களைப் பார்த்து இவர்கள் கூறுவது  ‘நீங்கள் வழிகெட்டவர்கள்’ என்று! ஆனால் அல்லாஹ்வோ, அவனது வேதத்தில், அல்லாஹ் அல்லாத மற்றவர்களை அழைத்து உதவி தேடும் இவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? எனக் கேட்கிறான்.
“நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை அவர்கள் (உதவிக்காகவோ, வணங்குவதற்காகவோ) அழைக்கின்றார்களோ அவர்கள், உங்களைப் போன்ற அடியார்களே!….. (அல்குர்அன் 7:194)
“மறுமை நாள் வரையில் (அழைத்த போதிலும்) அவைகள் இவர்களுக்கு பதில் கொடுக்காது. ஆகவே, (இத்தகைய) அல்லாஹ் அல்லாதவைகளை அழைப்பவர்களைவிட வழிகெட்டவர்கள் யார்? தங்களை இவர்கள் அழைப்பதையே அவை அறியாது. (அல்குர்அன் 46:5)
துன்ப நேரங்களில் ஆபத்து காலங்களில் உதவி செய்பவன்அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை!
(துன்பத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்போர் அபயமிட்டழைத்தால், அவர்களுக்கு பதில் கூறி, அவர்களுடைய துன்பங்களை நீக்கியவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு இறைவன் இருக்கின்றானா?… (அல்குர்அன் 27:62)
யா முஹ்யித்தீன் என்றோ அல்லது யா ஷாகுல் ஹமீது பாதுஷாவே! என்றோ அல்லது வேறு எந்த அவுலியாவின் பெயரை அழைத்தவாறே ஒருவர் மரணித்தாரானால் அவரின் இருப்பிடம் 



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

அன்பான நெஞ்சங்களே அன்போடு வாழ பழகுவோம் !



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

கணவன் மனைவிக்குள் செய்யவேண்டிய கடமைகள்

கணவன் மனைவிக்கு செய்யவேண்டிய கடமைகள் உள்ளன
அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்  நபி (ஸல் ) அவர்கள் என்னிடம் வந்து உமது விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன  உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன என்ற கூறினார்கள்  (புகாரி  (1974)

மனைவியிடம் சிறந்தவரே மக்களில் சிறந்தவராவார்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கையாளர்களில் ஈமானில் முழுமையானவர் அவர்களில் அழகிய நற்குணமுடையவரே தன்னுடைய மனைவியிடத்தில் குணத்தால் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் தன்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவரே உங்களில் சிறந்தவராவார். நான் என்னுடைய மனைவியிடத்தில் சிறந்தவனாவேன்.  நூல் : திர்மிதி (3830)

கணவன் மனைவியிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்
ஹய்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் எங்கள் மனைவிமார்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறை என்ன? தவிர்க்க வேண்டியவை என்ன? என்று கேட்டேன் அதற்கு நபியவர்கள் (உங்கள் மனைவிமார்கள்) உங்கள் விளைநிலங்கள் உங்கள் விளைநிலங்களுக்கு நீங்கள் விரும்பியவாறு சென்றுகொள்ளுங்கள். (அவளை கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதே அவளை அசிங்கமாகத் திட்டாதே நீ உண்ணும் போது  அவளையும் உண்ணச் செய் நீ ஆடை அணியும் போது அவளுக்கும் ஆடை கொடு. வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளிடம் வெறுப்பைக் காட்டாதே. , நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் அவர்களின் மீது உங்களுக்கு ஆகுமானவை தவிர மற்ற விஷயங்களில் எப்படி நீங்கள் (அவர்களிடம் தவறான முறையில் நடந்து கொள்ள முடியும்?) என்று கூறினார்கள். (நூல் : அஹ்மத் (19190)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (மக்களே) பெண்கள் விஷயத்தில் நல்லவிதமாக நடந்து கொள்வது பற்றி (என்னுடைய ) உபதேசங்களை கவனத்தில் கொள்ளுங்கள். நிச்சயமாக (பெண்களாகிய) அவர்கள் உங்களுடைய பொறுப்பில் இருக்கின்றார்கள். இதைத்தவிர அவர்களிடமிருந்து நீங்கள் எதையும் சொந்தமாக்கிக் கொள்ளவில்லை. அவர்கள் தெளிவான மானக்கேடான காரியங்களைச் செய்தாலே தவிர. அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டால் அவர்களை படுக்கையறைகளில் காயம் ஏற்படாதவாறு (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழிகளைத் தேடாதீர்கள். அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.  நூல் திர்மிதி (1083)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பதுபோல் அடிக்க வேண்டாம். (ஏனெனில்) பிறகு அதே நாளின் இறுதியில் அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவு கொள்வீர்கள்  நூல் : புகாரி (5204)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் விஷயத்தில் (நல்ல விதமாக நடந்து கொள்ளும்படி கூறும்)  என்னுடைய அறிவுரையை ஏற்,றுக் கொள்ளுங்கள். அவர்களை நல்லவிதமாக நடத்துங்கள். ஏனெனில் பெண் விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறாள்.மேலும் விலா எலும்பிலேயே அதன் மேல் பகுதி மிகவும் கோணலானதாகும். நீ அதை (பலவந்தமாக) நேராக்க முயன்றால் உடைத்து விடுவாய். அதை அப்படியே விட்டு விட்டால் அது கோணலானதாகவே இருக்கும். ஆகவே பெண்கள் விஷயத்தில் என் அறிவுரையை ஏற்றுக் கொள்ளுங்கள்.  நூல் : புகாரி (3331) 

மனைவி தொழுகைப் பள்ளிக்குச் செல்ல அனுமதி கேட்டால் மறுக்கக் கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் பெண்கள் பள்ளிக்கு (தொழ)ச் செல்வதை தடுக்காதீர்கள். நூல் : புகாரி (900)
கணவன் மனைவிக்குச் செலவிடுதல்
சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். (அல் குர்ஆன் 4 : 34 ‏)
மனைவியை வெறுப்பது கூடாது
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத்திருப்பான்  (அல் குர்ஆன் 4 : 19 ‏)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் இறைநம்பிக்கை கொண்ட ஒரு ஆண் இறைநம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கொண்டு திருப்தி‎கொள்ளட்டும்.  நூல் : முஸ்லிம் 2915

மனைவியோடு பிணக்கு ஏற்பட்டால் நடந்து கொள்ள வேண்டிய முறை
பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப் பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான்  (அல் குர்ஆன் 4 : 34 ‏)

மனைவிமார்களிடம் நீதமாக நடந்து கொள்ள வேண்டும் 
மனைவியரிடையே நீதியாக நடந்து கொள்ள நீங்கள் ஆசைப்பட்டாலும் உங்களால் இயலாது. எனவே முழுமையாக (ஒரு பக்கமாக) சாய்ந்து, (இன்னொருத்தியை) அந்தரத்தில் தொங்க விடப் பட்டவளைப் போல் விட்டு விடாதீர்கள்! நீங்கள் நல்லிணக்கம் பேணி (இறைவனை) அஞ்சினால் அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 4  129
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாருக்கு இரண்டு மனைவிகள் இருந்து அவர். இருவரில் ஒருத்திக்கு எதிராக  இன்னொரு மனைவியின் பக்கம் சாய்ந்து கொண்டால் மறுமையில் தனது இரண்டு புஜங்களில் ஒன்றை சாய்ந்தவனாக இழுத்துக் கொண்டு வருவான்  நூல் அஹ்மது (7595 )

நீண்டநாள் பயணத்திலிருந்து திரும்பும் போது இரவில் வீட்டிற்கு செல்லக்கூடாது
நபி (ஸல்) அவர்கள்  ஒருவன் (நீண்ட நாள் பயணத்திலிருந்து வீடு திரும்பும் போது எந்தவித தகவலும் தெரிவிக்காமல்) தன்னுடைய குடும்பத்தினரை பயமுறுத்தும் வகையிலும் அவர்களுடைய குறைகளை கண்டறியும் நோக்கத்திலும் இரவு நேரங்களில் வீட்டுக் கதவுகளை தட்டுவதை தடைசெய்தார்கள்  நூல் முஸ்லிம் ( 3559 )

மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகள்
நல்ல மனைவி
நபி (ஸல்) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்கு கூறினார்கள் ஒரு மனிதனுடைய பொக்கிஷங்களில் சிறந்ததை நான் உனக்கு அறிவிக்கவா ? (அதுதான் நல்ல மனைவியாவாள்) நல்ல மனைவியென்பவள் (கணவன் ) அவளை நோக்கும் போது அவனை சந்தோஷப்படுத்துவாள். அவன் அவளுக்கு கட்டளையிட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும் போது அவனுக்காக (அவனுக்குரியவைகளை) பாதுகாத்துக் கொள்வாள். நூல் அபூதாவூத் ( 1417 )

கணவனின் கைகளில்தான் மனைவியின் சொர்க்கம் இருக்கிறது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (பெண்ணே நீ உன்னுடைய கணவனுக்குச் செய்யும் கடமைகளில் ) என்னிலையில் இருக்கின்றாய் என்பதைக் கவனித்துக் கொள். நிச்சயமாக அவர் ஒன்று உன்னுடைய சொர்க்கமாக இருப்பார். அல்லது நரகமாக இருப்பார். நூல் : அஹ்மத் (18233)
அதாவது கணவனுடைய கடமைகளை முறையாக நிறைவேற்றுகின்ற பெண் அதன் காரணமாக சுவர்க்கம் செல்வாள். முறையாக நிறைவேற்றாத பெண் அதன் காரணமாக நரகம் புகுவாள்.

கணவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  நான் ஒருவர் மற்றவருக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிடுபவனாக இருந்தால் மனைவி தன்னுடைய கணவனுக்கு ஸஜ்தா செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டிருப்பேன். (ஏனென்றால் அந்த அளவிற்கு அவள் தன்னுடைய கணவனுக்கு செய்ய வேண்டிய கடமைகள் உள்ளன. ஆனால் அல்லாஹ்வுக்கே தவிர யாரும் யாருக்கும் ஸஜ்தா செய்யக் கூடாது)  நூல் : திர்மிதி (1079)
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள் நான் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ஒரு பெண் மனிதர்களில் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் ? எனக் கேட்டேன். அதற்கு நபியவர்கள் அவளுடைய கணவனுக்கு என்று கூறினார்கள்   நூல் : ஹாகிம் (7244)

மனைவியே கணவனுடைய வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு பெண்மணி தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவன் குழந்தைகளுக்கும் பொறுப்பாளியாவாள். அவைகளைப் பற்றி (மறுமையில்) அவள் விசாரிக்கப்படுவாள். நூல் : புகாரி( 2554)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (ஒட்டகத்தில் பயணம் செய்யும் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்களாவர். தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக்காப்பவர்கள் ஆவர்.  நூல் : புகாரி (5365)

கணவனுடைய உபகாரங்களுக்கு நன்றி மறக்கக் கூடாது

நபி (ஸல் ) அவர்கள் கூறினார்கள் எனக்கு நரகம் காட்டப்பட்டது . அதில் பெரும்பாலோர் பெண்களாகக் காணப்பட்டனர். ஏனெனில் அவர்கள் நிராகரிப்பவர்களாக இருந்தனர். அப்போது இறைவனையா நிராகரிக்கிறார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் கணவனை நிராகரிக்கிறார்கள் உதவிகளை நிராகரிக்கிறார்கள் . அவர்களில் ஒருத்திக்குக் காலம் முழுவதும் நீ நன்மைகளைச் செய்து கொண்டேயிருந்து. பின்னர் (அவளுக்கு பிடிக்காத) ஒன்றை உன்னிடம் கண்டுவிட்டாளானாள் உன்னிடமிருந்து ஒருபோதும் நான் ஒரு நன்மையையும் கண்டதில்லை. என்று பேசிவிடுவாள். என்றார்கள்  நூல் : புகாரி  (29)

மலக்குமார்களின் சாபம்

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒருவர் தன்மனைவியைப் படுக்கைக்கு அழைத்து அவள் (அவருக்கு உடன்பட) மறுத்து விட அதன் விளைவாக அவர் இரவுப் பொழுதை கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.  நூல் : புகாரி (3237)



நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  அறிந்து கொள்ளுங்கள் நீங்கள் உங்கள் மனைவிமார்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் உள்ளன. அவர்கள் உங்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உள்ளன. உங்கள் மனைவிமார்கள் உங்களுக்குச் செய்யவேண்டிய கடமைகளாகிறது நீங்கள் வெறுப்பவர்களுக்கு உங்கள் படுக்கையறைகளில் இருக்க இடம்கொடுக்காமல் இருப்பதும் நீங்கள் வெறுப்பவர்களை உங்கள் வீடுகளுக்குள் அனுமதிக்காமல் இருப்பதும் ஆகும். நீங்கள் அவர்களுக்குச் செய்ய வேண்டிய கடமையாகிறது அவர்களுக்கு அழகிய முறையில் ஆடையளிப்பதும் உணவளிப்பதும் ஆகும்.  நூல் திர்மிதி (1083)

கணவனுடைய அனுமதியில்லாமல் செய்யக் கூடாதவை
ஒரு பெண் தன்னுடைய கணவன் ஊரில் இருக்கும் போது அவரது அனுமதியில்லாமல் (சுன்னத்தான) நோன்பு நோற்பது கூடாது. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கக் கூடாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அவனது பொருளை தர்மமாக) செலவு செய்தால் (அதன் நன்மையில்) பாதி அவருக்கும் கிடைக்கும்  நூல் : புகாரி (5195)

கணவனுடைய அனுமதியில்லாமல் அவசியமான நல்லகாரியங்களுக்கு தேவையான அளவு செலவுக்கு பணம் எடுத்துக் கொள்ளலாம்

( ஒரு முறை) ஹின்த் பின்த் உத்பா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே ( என் கணவர் ) அபூ சுஃப்யான் கருமியான ஒரு மனிதர். எனக்கும் என்குழந்தைக்கும் போதுமான பணத்தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவு எடுத்துக் கொள் என்று சொன்னார்கள்.  நூல் : புகாரி (5364)

கணவன் மற்றொரு மனைவியை தலாக் விடுமாறு கூறுவது கூடாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பாத்திரத்தை (வாழ்வாதாரத்தை) க் காலி செய்(துவிட்டு அதை தனதாக்கிக் கொள்) வதற்காக அவளை விவாகரத்துச் செய்துவிடுமாறு (தன் கணவணிடம் ) கோர அனுமதியில்லை. அவளுக்கென விதிக்கப்பட்டது நிச்சயம் அவளுக்கே கிடைக்கும்.  நூல் புகாரி (5152

எல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது பொருந்தும். கணவன் தன் உடல் இச்சையைத் தணிப்பதற்காக மனைவியை அழைப்பது ஒரு சாதாரண விஷயம். இஸ்லாம் இதிலும் தலையிட்டு, ”கணவன் அழைத்தால் மனைவி மறுக்கக்கூடாது” என்று கூறுவதால் ”இஸ்லாம் ஓர் பெண்ணடிமை மதம்” என்று அவசர முடிவுக்கு வந்து விடுகிறார்கள்.
ஆணுக்கு ஏற்படும் உடற்கிளர்ச்சி அவனை, மிருகத்தனத்திங்குத் தள்ளி தனக்கு உரிமையில்லாத அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரத்தை பிரயோகிக்கவும் தூண்டி விடுகின்றது. எல்லா ஆண்களும் இப்படி இல்லையென்றாலும், கணிசமான ஆண்கள், அன்னியப் பெண்களிடம் வரம்பு மீறி கீழ்த்தரமாக நடந்து கொள்வது அன்றாடச் செய்திகளில் வாசிக்கிறோம்.
உடல் உணர்வுகள் கணவனுக்கும், மனைவிக்கும் சரிசமம் என்றாலும், கணவன் தயாராகாமல், மனைவிக்கு உணர்வுகள் ஏற்பட்டு எதுவும் நடந்து விடப்போவதில்லை. கணவனுக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டு, மனைவி தயார் இல்லாமல் இருந்தாலும் காரியம் நடந்துவிடும். அதற்காக கணவன், மனைவியை பலாத்காரம் செய்யலாம் என்று பொருளில்லை. பாலின உடற்கூறுகள், கணவன் தயாராகாமல் மனைவியுடன் உடலுறவு சாத்தியமில்லை.
விஷயத்துக்கு வருவோம்.
ஒரு பெண் அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவளாக இருந்தாலும், எந்த நாட்டில் அவனைப் பார்க்க நேர்ந்தாலும், அல்லது மனிதர்கள் வாழாத காட்டில் காண நேர்ந்தாலும், அவள் நம் மதத்தை சார்ந்தவளாக இருந்தாலும், அல்லது எந்த மதத்தையும் சேராதவளாக இருந்தாலும் ஒரு முஸ்லிம் அப்பெண்ணை எந்த சூழ்நிலையிலும், எந்த நிலையிலும் பலாத்காரம் செய்ய முடியாது – கூடாது. அப்பெண்ணின் நிலையும் அந்தஸ்தும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், அவள் அச்செயலுக்கு உடந்தையாக இருந்தாலும், உடன் படாவிட்டாலும் சரியே -
”நீங்கள் விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” (திருக்குர்ஆன், 17:32) என்று – தவறான ரகசிய உறவுகள் அனைத்தும் அவனுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.
”விபச்சாரத்தின் பக்கம் நெருங்காதீர்கள்” இது முஸ்லிமான ஆண்கள், பெண்கள் இருபாலாருக்கும் இறைவனின் கட்டளையாகும். திருமண பந்தத்தை ஏற்படுத்தி, கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் தாம்பத்ய உறவு வைத்துக் கொள்வதைத் தவிர, மற்ற தவறான – ரகசிய உறவாக, விபச்சாரத்தின் மூலமாக உடல் இச்சையைத் தணிக்கும் அனைத்து வழிகளையும் இஸ்லாம் அடைத்து விட்டது. (இங்கு, முஸ்லிம்கள் விபச்சாரம் செய்வதில்லையா? என்று விமர்சிப்பது பொருத்தமாக இருக்காது. விபச்சாரத்தை இஸ்லாம் தடை செய்துள்ளது. முஸ்லிம்கள் செய்யும் தவறை, இஸ்லாத்தை நோக்கி திருப்ப வேண்டாமெனக் கேட்டுக் கொள்கிறேன்)
நபிமொழிகள்,
”ஒருவர் தம் மனைவியைப் படுக்கைக்கு அழைக்கும்போது அவள் வர மறுத்திட்டால், அவளைப் பொழுது விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 5193)
மேற்காணும் நபிமொழியைப் படிப்பவர்கள், மனைவி நோயாளியாக, அல்லது இயலாமல் இருந்தாலும் கணவன் அழைக்கும்போது உடலுறவுக்கு ஒத்துப்போக வேண்டுமா? இது எப்படி சாத்தியமாகும்? இது என்ன கொடுமை? என்றெல்லாம் தமக்குத் தோணுவதை கற்பனையால் விரிவுபடுத்தி, இஸ்லாம் ஓர் ஆணாதிக்க மதம் என்று விமர்சிக்கின்றனர்.
தவறானக் கண்ணோட்டத்துடன் அணுகும் இவர்களின் கற்பனைக்கு எள்ளளவும் இந்த நபிமொழியில் சான்றுகள் இல்லை.
”எந்தவொரு ஆத்மாவையும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை” என்ற இறைவாக்கிற்கு எதிராக – உடலுறவுக்கு சக்தியற்ற மனைவி மறுத்தால் – வானவர்கள் ஒரு போதும் சபிக்க மாட்டார்கள். கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது, உடலுறவுக்கு வலுவிருந்தும் மறுக்கும் மனைவியையே வானவர்கள் சபிக்கின்றனர் என்று விளங்கலாம்.
மனைவி உடல் நலமின்றி, இயலாமல் இருக்கும்பொழுது, மனிதாபிமானமுள்ள எந்தக் கணவனும் மனைவியுடன் உடலுறவு கொள்ள முயலமாட்டான். சுகமில்லாத மனைவிக்கு சிகிச்சையளித்து குணமடைய வேண்டியதைச் செய்வான்.
வெறுப்பு – கோபம்.
”ஒரு பெண் தன் கணவருடன் படுக்கையை(ப் பகிர்ந்து கொள்வதை) வெறுத்து (தனியாக) இரவைக் கழித்தால், (கணவனின் படுக்கைக்கு) அவள் திரும்பும் வரை வானவர்கள் சபிக்கின்றனர்.” (புகாரி, 5194)
”ஒருவர் தன் மனைவியைப் படுக்கைக்கு அழைத்து, அவள் (அவருக்கு உடன்பட) மறுத்துவிட, அதன் விளைவாக அவர் இரவைக் கோபத்துடன் கழித்தாரென்றால் அவளை, காலை விடியும் வரை வானவர்கள் சபித்துக் கொண்டேயிருக்கின்றனர்.” (புகாரி, 3237)
கணவன் படுக்கைக்கு அழைக்கும்போது எவ்வித காரணமுமின்றி மனைவி அதை மறுத்து வெறுத்தால், கணவன் கோபமடைவது இயல்பு. தாம்பத்திய உறவுக்கு பெரும்பாலும் கணவனிடமிருந்தே முதல் முயற்சி தொடங்கும். கணவனுக்கு மனைவியின் மீது ஏற்படும் நியாயமான ஆசைகள், மனைவியால் மறுக்கப்பட்டால் பின் விளைவு, விபச்சாரம் – அன்னியப் பெண்ணிடம் பாலியல் பலாத்காரம் என விபரீத விளைவுகளுக்குத் தூண்டும் அபாயம் ஏற்படும். எனவே தம்பதிகளுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டிருந்தாலும் அதற்காக பழி தீர்க்க எண்ணி படுக்கையை வெறுப்பது கூடாது என்று இங்கு வலியுறுத்தப்படுகிறது. (இன்னும்… அடுத்த பகுதியில்)



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini