| உணவின் ஒழுங்குகள் | ![]() | ![]() |
நபி(ஸல்)அவர்கள் சாப்பிடுவதற்காகவும் ஒழுங்குமுகைளை கற்றுத்தந்துள்ளர்கள் அதை பேணி நடந்தால் நாம் உணவு உண்பதும் அல்லாஹுவிடத்தில் கூலி பெற்றுத்தரக்கூடிய அமைந்து விடும். 1. ஹலாலானவையே உண்பது, குடிப்பது. நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்தவற்றில் தூய்மையானவற்றை (ஹலாலானவைகளை) உண்ணுங்கள். நீங்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக இருப்பீர்களாயின் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்பகறா : 172) 2. உணவு உண்பதற்கு முன் இரு கைகளையும் கழுவிக் கொள்ளவேண்டும். 3. சாப்பிட ஆரம்பிக்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி ஆரம்பிக்க வேண்டும். உங்களில் ஒருவர் உணவு அருந்தினால் அல்லாஹ்வின் பெயரைக (பிஸ்மில்லாஹ் என்று) கூறட்டும். ஆரம்பத்தில் அதைக்கூற மறந்து விட்டால் என்று கூறிக்கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அபூதாவூத் 4.சாப்பிட்டு முடிந்ததும் விரல்களை சூப்பியும் , பாத்திரத்தை வழித்தும் சாப்பிட வேன்டும். 5. சாப்பிட்டு முடிந்த பின் ஓதும் துஆ யார் இந்த பிரார்த்தனையை ஓதுகின்றாரோ அவரின் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம் : திர்மிதி 6. வலது கையால் உண்ணவேண்டும். நான் நபி (ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம் உங்களில் ஒருவர் சாப்பிட்டாலோ குடித்தாலோ வலது கையாலேயே சாப்பிடட்டும் இன்னும் குடிக்கவும் செய்யட்டும் காரணம் ஷெய்த்தான் இடது கையால் சாப்பிடுகின்றான் இன்னும் குடிக்கின்றான் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். திர்மிதி , அபூதாவூத் 7. சாப்பிடும் போது நமக்கு அருகிலுள்ளதையே சாப்பிட வேண்டும். 8. வீண்விரயம் பண்ணக்கூடாது. ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன் :7:31 9. உட்கார்ந்து கொண்டு சாப்பிடவும் குடிக்கவும் வேண்டும். உங்களில் ஒருவர் நின்று கொண்டு நிச்சயமாக குடிக்க வேண்டாம், அப்படி மறந்த நிலையில் நின்றுகொண்டு குடித்தால் அதை வாந்தி எடுக்கட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கன் கூறினார்கள். ஆதாரம் : முஸ்லிம் 10. ஒருக்கணித்துக் கொண்டு உண்ணக்கூடாது. ஒருக்கணித்துக்கொண்டு நான் உண்ணமாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். .ஆதாரம் : புகாரி 11. உணவில் குறைசொல்தல் கூடாது எந்த உணவையும் நபி (ஸல்) அவர்கள் பழித்ததே கிடையாது. அவர்களுக்கு விருப்பமாக இருந்தால் உண்பார்கள், விருப்பம் இல்லையென்றால் விட்டுவிடுவார்கள். புகாரி, முஸ்லிம் 12. சாப்பிடும் உணவு கீழே விழுந்தால் அதை எடுத்து கழுவி சாப்பிட வேண்டும். உங்கள் ஒருவரின் உணவுக்கவழம் (உணவு கீழே) விழுந்தால் அதை எடுத்து சுத்தப்படுத்திவிட்டு உண்ணட்டும், அதை ஷைத்தானுக்கு விட்டு விடக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம் 13. உணவில் ஊதக்கூடாது 14. பானங்களை மூன்று முறை குடிப்பது. நபி (ஸல்) அவர்கள் மூன்று தடவை மூச்சி விட்டு குடிப்பார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி , முஸ்லிம் 15. தங்கம், வெள்ளி பாத்திரத்தில் உண்ணக் கூடாது. தங்கம், வெள்ளி பாத்திரங்களில் நாங்கள் உண்பதையும் குடிப்பதையும், இன்னும் பட்டு ஆடைகள், மற்றும் பட்டு நூல்களினால் அலங்காரம் செய்யப்பட்ட ஆடைகளை நாங்கள் அணிவதையும் எங்களுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என்று ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஆதாரம் : புகாரி 16. பச்சையாக வெங்காயம் இன்னும்; பூண்டை சாப்பிட்டால பள்ளிக்குள் செல்லக்கூடாது யார் வெங்காயத்தையும், வெள்ளைப்பூடையும் சாப்பிடுகின்றார்களோ அவர்கள் எங்களின் பள்ளிக்கு நெருங்கக்கூடாது. அவ்விரண்டையும் அவசியமாக சாப்பிடத்தான் வேண்டுமென்றால் சமைத்து சாப்பிடுங்கள் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:-அபூதாவூத் 17. கூட்டாகசேர்ந்து சாப்பிடுவது. இரண்டு பேரின் உணவு மூன்று பேருக்கும், மூன்று பேரின் உணவு நான்கு பேருக்கும் போதுமாகுமென நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம். அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உண்ணுகின்றோம் ஆனாலும் எங்களின் பசி போவதில்லை என நபித்தோழர்கள் நபியவர்களிடம் முறையிட்டார்கள், அதற்கு நபியவர்கள் நீங்கள் தனித்தனியாக சாப்பிடுகின்றீர்களா? ஏன வினவினார்கள். ஆம் என அவர்கள் விடையளித்தார்கள், நீங்கள் சேர்ந்து உண்ணுங்கள், உண்ணும் போது அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி (பிஸ்மிச்சொல்லி) உண்ணுங்கள் உங்கள் உணவில் அல்லாஹ்வின் அருள் கிடைக்கும் என்றார்கள். ஆதாரம்:-அபூதாவூத், இப்னு மாஜா 17.கூட்டாக சேர்ந்து உண்ணும்போது மற்றவர்களின் அனுமதியின்றி கூடுதலாக எடுத்து உண்ணக்கூடாது. உரியவரின் அனுமதியின்றி இரண்டு பேரீத்தம் பழத்தை இணைத்து உண்ணக்கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். திர்மிதி, இப்னுமாஜா 18. உணவில் ஈ விழுந்து விட்டால் உங்கள் ஒருவரின் (உணவுப்) பாத்திரத்தில் ஈ விழுந்து விட்டால் அதை உள்ளே அமுக்கிவிடுங்கள், காரணம் அதன் ஒரு இறக்கையில் நோயும், மற்ற இறக்கையில் (அதற்கு) நிவாரணமும் இருப்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: அபூதாவூத் 19. விருந்துக்கு அழைக்கப்பட்டால் அவசியம் செல்ல வேண்டும். உங்களில் ஒருவரை விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு அவர் விடையளிக்கட்டும், (சுன்னத்தான) நோன்பு நோற்றிருந்தால் நோன்பை விட்டு விடட்டும், நோன்பு இல்லாமல் இருந்தால் (சென்று) சாப்பிடட்டும் என்பதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்:- முஸ்லிம் 20. விருந்துக்கு அழைக்கப்படாதவரை அழைத்துச்சென்றால்... நபி (ஸல்) அவர்களை ஒரு மனிதர் விருந்துக்காக ஐந்தாவது நபராக அழைத்திருந்தார், ஆனால் நபியவர்களோடு (விருந்துக்கு அழைக்கப்படாத) ஒருவரும் விருந்து உண்பதற்காக சென்றிருந்தார், நபியவர்கள் விருந்து கொடுப்பவரின் வீட்டு வாசலுக்கு சென்றதும் இந்த மனிதர் எங்களோடு வந்திருக்கிறார், நீங்கள் விரும்பினால் அவரும் (எங்களுடன் சேர்ந்து) உண்பதற்கு உத்தரவளியுங்கள், நீங்கள் (உத்தரவளிக்க) விரும்பவில்லையென்றால் அவர் திரும்பி சென்று விடுவார் என்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருக்கு அனுமதி கொடுக்கின்றேன் என்றார் வீட்டுக்காரர். புகாரி, முஸ்லிம் 21. விருந்தளித்தவருக்கு செய்யும் பிரார்த்தனை. (உணவுப்) பாத்திரத்தில் மூச்சிவிடுவதையும், ஊதுவதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள. ஆதாரம் : திர்மிதி நான் நபி(ஸல்) அவர்களின் பராமரிப்பில் சிறு குழந்தையாக இருக்கும் போது என் கை சாப்பிடும் பாத்திரத்தின் பக்கம் சென்றது, அப்போது நபியவர்கள், பயனே! பிஸ்மி சொல்லி சாப்பிடு, இன்னும் வலது கையால் சாப்பிடு, உனக்கு பக்கத்தில் உள்ளதை சாப்பிடு, என எனக்கு கூறியதாக உமர் இப்னு அபூஸலமா (ரலி) அவர்கள் கூறினார்கள். புகாரி, முஸ்லிம் (அல்லாஹ்வின்) அருள் உணவின் நடுவில் இறங்குகின்றது. உணவின் (பாத்திரத்தின்) ஓரத்திலிருந்து சாப்பிடுங்கள், அதன் (உணவின்) மத்தியிலிருந்து சாப்பிட வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். முஸ்லிம், திர்மிதி உங்களின் எந்த உணவில் அல்லாஹுவின் அருள் இருக்குமென்பதை நீங்கள் அறியமாட்டீர்கள், ஆகவே (சாப்பிட்டு முடிந்ததும் ) விரல்களை சூப்பியும், பாத்திரத்தை வழித்தும் சாப்பிடும்படி நபி (ஸல்) அவர்கள் ஏவியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார். ஆதாரம் : முஸ்லிம் |
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer













United Arab Emirates Dirham Converter










