அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

சங்கை மிகுந்த ரமளான் மாதம் !!!

அருள் செய்யப்பட்ட மாதம் உங்களிடம் வந்து விட்டது....' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூற்கள்: அஹ்மது, நஸயீ, பைஹக்கீ)   

அரபி மாதங்கள் என அழைக்கப்படும் சந்திர மாதங்களில் 9 வது மாதம் ரமளான் மாதமாகும். இந்த ரமளான் மாதத்திற்கென்று சில சிறப்புகள் உள்ளன. ஒவ்வொரு முஸ்லிமும் அம்மாதத்தின் முழுமையான பயனை அடைவதற்காக அதன் சிறப்புகளை அறிந்து கொள்வது அவசியமாகும்.   

சங்கை மிகுந்த ரமளான் மாதம் நம்மிடையே வருகை புரிய ள்ளது குறைந்த காலத்தில் குறைந்த செயலின் மூலம் அதிகமான நன்மை களை நமக்கு பெற்றுத்தரும் மாதமாகும் இது. இம்மாதம் குறித்து அல்லாஹு தஆலா,

�ரமளான் மாதம் எத்தகையது என்றால் அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் நேர்வழியிலிருந்தும் சத்தியத்தையும் அசத்தியத்தை யும் பிறித்தறிவிக்க கூடியதிலிருந்தும் தெளிவான விளக்கமாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.�
-அல்குர்ஆன் (2:185) என்று கூறுகிறான்.
அவ்வாறு ரமளானில் அருளப் பட்ட குர்ஆனைக் குறித்து அண்ணலார் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் பொழுதுzz

�நீங்கள் அல்லாஹ்விடம் திரும்பிச் செல்வதற்கும் அவனிடம் நெருங்குவதற்கும் உதவியாக அவனிடமிருந்து வந்த குர்ஆன் ஷரீ பைத் தவிர வேறு சிறந்த பொருளை பெற்றுக் கொள்ள முடியாது� என்று கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்கள் : ஹள்ரத் அபூதர் (ரளி) நூல் : ஹாகிம்

அல்லாஹ்வின் நெருக்கத்தை பெற்றுத்தரும் அற்புத வேதமான  குர்ஆன் ஷரீபை அல்லாஹுதஆலா குர்ஆனின் அதிகமான வசனங் களை ரமளான் மாதத்தில் தான் இறக்கி வைத்துள்ளான். நோன்பை நமக்கு கடமையாக்க விரும்பிய அல்லாஹுதஆலா குர்ஆன் இறக்கி அருளப்பட்ட ரமளான் மாதத்தை நோன்பு மாதமாக தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் கூறப்பட்ட பெரும்பாலான விஷயங்களை மனிதன் உடனடி யாக செயல்படுத்தும் முகமாக குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தையே நோன்பை நோற்க கடமையாக்கி இரவில் நின்று வணங்குவதையும் வலியுறுத்தினான். நோன்பு வைப்பதின் காரணமாக மற்ற மாதங்களில் தொழுகை மற்றும் இன்ன பிற விஷயங்களில் கவனக் குறைவாக இருக்கும் முஃமின்கள் ரமளான் மாதத்தில் தொழுகை மற்றும் தான தர்மங்கள் செய்வது என்ற நிலையில் முஃமின்கள் ஈடுபடுகின்றனர். குர்ஆன் கூறும் தொழுகை, தான தர்மங்கள், நற்செயல்கள் ஆகியவற்றை உடனடியாக அமல் செய்யும் விதமாக ரமளான் மாதம் அமைகிறது.
அனைத்தும் உள்ளடக்கிய அல்குர்ஆன்
 குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனைப்பற்றி சில விஷயங்களை நாம் நினைவு கூர்வோம். குர்ஆனில் அல்லாஹ் இம்மை, மறுமை மற்றும் அனைத்து விஷயங்களையும் கூறியுள்ளான். குர்ஆனில் அல்லாஹ் கூறாத விஷயங்களே இல்லை. இருப்பினும் அண்ணலார் (ஸல்) அவர்கள் குர்ஆனில் பொதிந்துள்ள விஷயங்களை ஐந்து அம்சங்களில் உள்ளடக்கி கூறுகிறார்கள்.
�புனித குர்ஆனில் ஐந்து விஷயங்கள் உள்ளன. 1. ஹலால் (ஆகுமாக்கப்பட்ட விஷயங்கள்) 2. ஹராம் (விலக்கப்பட்ட விஷயங்கள் 3. முஹ்கம் (தெளிவான மொழிநடை கொண்ட வசனங்கள்) 4. முதஷா பிஹாத் (மறைவான விஷயங்களான சுவனம், நரகம் அர்ஷ் போன்ற விஷயங்களை கூறும் வசனங்கள் 5. உதாரணங்கள் கூறும் வசனங்கள்.

இவ்வாறு குர்ஆனில் ஹலால் என்று கூறப்பட்டுள்ள விஷயங்களை ஹலால் என்று கருதுங்கள். ஹராமை ஹராமாக கருதுங்கள். கொள்கைகள் கோட்பாடுகள் சட்டங்கள் ஆகியவற்றை கூறும் முஹ்கம் வசனங்கள் படி செயல்படுங்கள். மறைவான விஷயங்களை சுவர்க்கம், நரகம், அர்ஷ் ஆகியவற்றை விபரிக்கும் முதஷாபிஹான வசனங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். அதனை துருவி ஆராய முற்படாதீர்கள். முந்தைய சமுதாயங்கள் அழிந்து மடிந்தது பற்றிய படிப்பினை தரும் சம்பவங்களில் மூலம் படிப்பினை பெறுங்கள்.
அறிவிப்பாளர்: ஹள்ரத் அபூஹூரைரா (ரளி) நூல்: மிஷ்காத்.

குர்ஆன் முழுவதிலும் அல்லாஹ் கூறியுள்ள விஷயங்களை அண்ணலார் (ஸல்) அவர்கள் ஐந்து அம்சங்களில் பொதிய வைத்து கூறிவிட்டார்கள். குர்ஆனில் வழிகாட்டுதல் படி வாழ்வது என்பது சிரமத்திற்குரிய விஷயமல்ல. விளங்க முடியாத வேதாந்தத்தையோ புரிய முடியாத தத்துவத்தை குர்ஆன் கூறிவிடவில்லை. மிக எளிதாக பாமரர்களும் புரிந்து கொள்ளும் விதமாக இலகுவான வழிகாட்டுதல் களைத்தான் குர்ஆன் முன் வைக்கிறது.

உதாரணமாக மனித வாழ்க்கையின் நோக்கமென்ன? என்ற வினாவை முன் வைத்தால் இன்று அறிஞர்கள், யோகிகள் தவத்திரு என்று கூறிக்கொள்பவர்கள் விளக்கம் சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால் ஜீவன், முக்தி, ஆன்மா என்றெல்லாம் கூறி நம்மை குழப்பி விடுவார்கள். ஆனால் குர்ஆன் மிகமிக இலகுவாக அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக விடை பகர்கிறது. மனித வாழ்வின் நோக்க மென்ன? தெரியுமா? �மனித இனம் இறைவனை வழிபட்டு வாழ வேண்டும் என்பதற்காகவே படைக்கப்பட்டுள்ளான்� என ஒற்றை வரியில் திருக்குர்ஆன் (51:56) பதில் பகர்கிறது. குர்ஆனின் கருத்துக் களும் வழிகாட்டலும் இலகுவானது என்பதை அல்லாஹ்வே தனது குர்ஆனில் தெளிவுபடுத்துகிறான். :இந்த குர்ஆனை அறிவுரை பெறு வதற்காக திட்டமாக நாம் எளிதாக்கி வைத்துள்ளோம். எனவே அறிவுரை பெறுகிறவர் எவரேனும் உண்டா? (54:32) என்று அல்லாஹ் கேட்கிறான்.

 பழங்கதை புத்தகமல்ல
திருக்குர்ஆனை �வேதம்� என்றதும் அது பூர்வீகமான நூல் என்றதும் அதில் பழங்கதைகள் புராண இதிகாசங்கள் நிறைந்திருக்கும் என்று நாம் எண்ணி விடக்கூடாது. முற்காலம், தற்காலம் இனிவரும் காலம் ஏன் உலக அழியும் காலம் வரை உண்டான அனைத்து விஷயங்களை யும் அல்குர்ஆனில் காணலாம். அறிவியல் அற்புதங்களையும் குர் ஆனின் மூலமாக காணமுடியும். உதாரணத்துக்கு திருகுர்ஆன் கூறும் சில விஞ்ஞான சங்கதிகளை காணலாம்.

சில ஆண்டுகளுக்கு முன்னர் பூகோள வல்லுநர்கள் வானவியல் சம்பந்தமாக சில கருத்த்துக்களை குறிப்பிட்டனர். அதாவது �இந்த பிரபஞ்சம் நிபுலா என்ற பேரண்டத்தில் சேர்ந்திருந்தது. பின்பு அதிலிருந்து பிரிக்கப்பட்டது. அதன் பின்பு தான் பால்வெளி உருவாயின� என்று கூறினர்.

இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே திருகுர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான். �நபியின் கூற்றை நிராகரிப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? வானங்கள் பூமி அனைத்தும் ஒன்றோடொன்று சேர்ந்திருந்தன. பிறகு நாம் அவற்றை தனித்தனியாக பிளந்தோம்.
                      -அல்குர்ஆன் (21:30)

 தாவர வர்கத்திலும் ஜோடிகள் உண்டு
தாவர இனத்தைச் சார்ந்த பூக்கள், செடிகள், கனிகள் அனைத்திலும் ஆண்,பெண் என்ற இருபாலும் உண்டு. தாவரவியல் வல்லுநர்கள் இது குறித்து கூறும் பொழுது பூக்களில் �ஸ்டோமென்� (STOMEN) என்ற ஆண் இன அம்சமும், �ஓவன்ஸ்� (OVENS) என்ற பெண் இன அம்சமும் உண்டு. இவற்றிலிருந்து தான் கனிகள் உற்பத்தி ஆகின்றன என்று கூறு கின்றனர். அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் பதிவு செய்து வைத்திருக்கிறான். �ஒவ்வொரு கனி வகை தாவரங்களின் ஜோடிகளையும் அல்லாஹ்படைத்துள்ளான்.� � அல்குர்ஆன் (13:3) என்று குர்ஆனில் கூறுகிறான்.

ஆணிகளாக சிகரங்கள்
 பூமியின் அமைப்பு குறித்து பூமி ஆய்வாளர்கள் கூறும்போது பூமியின் தூரம் 3750 மைல்களாகும். நாம் வாழும் பூமிப்பகுதி சுமார் 30 மைல்கள் வரையிலான பகுதி மெலிதான இலகுவான பகுதிகளாகும். மெலிதான பகுதி என்பதால் அதிர்வுகள் ஏற்பட சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அதிர்வுகளும் பூமி அசைவுகளும் ஏற்படாவண்ணம் மலைகள் தாங்கிப் பிடிக்கின்றன. அதாவது பூமியில் அடிக்கப்பட்ட ஆணிகள் போன்று மலைகள் பூமியின் அசைவை தடுக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளன. இது நில ஆய்வாளர்களின் கூற்றாகும். ஆனால் அல்லாஹுதஆலா சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே இது குறித்து குர்ஆனில் கூறி உள்ளான். �நாம் பூமியை விரிப்பாக்கவில்லையா? மேலும் மலைகளை, முளைகளாக ஊன்றி வைக்கவில்லையா?
-அல்குர்ஆன் (78:6, 21:31)

 இனிக்கும் கடல்நீர்
உலகில் பெரும்பாலான பகுதிகள் கடல்நீரால் சூழப்பட்டுள்ளது. அந்த கடலிலும் அல்லாஹு தஆலாபல அற்புதங்களை ஏற்படுத்தியுள்ள தாக குர்ஆனில் கூறியுள்ளான். கடலில் மத்திய தரைக்கடலும் அட்லாண்டிக் கடலும் �ஜிப்ரால்டர்� என்ற பகுதியில் இணைகின்றன. மத்திய தரைக்கடல் சங்கமிக்கும் இந்த இடத்தில் அதன் நீரின் தன்மை மற்றும் சுவை மாறுபடுவதாக கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறிகிறார்கள். இவ்வாறு இருகடல்கள் சங்கமிக்கும் இடத்தில் கண்ணுக்கு புலப்படாத தடுப்பு போன்ற அமைப்பு இருப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள். அந்த தடுப்பை சைக்னாக் லைன் (PYCNOCLINE) பகுதி என்று கடல் ஆய்வாளர்கள் பெயரிட்டு அழைக்கிறார்கள். இவர்கள் தெரிவிக்கக் கூடிய இந்த விஷயத்தை அல்லாஹு தஆலா சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே குர்ஆனில் பதிவு செய்து வைத்துள்ளான்.

�அல்லாஹ் எத்தகையவன் என்றால் இரு கடல்களையும் ஒன்றாக கலந்திடச் செய்துள்ளான். இது இனிமையானது. மதுரம் மிக்கது. மற்றொன்று உப்பும் கசப்பும் நிறைந்தது. (இரண்டும் ஒன்றோடொன்று கலந்திடாத வண்ணம்) இரண்டுக்குமிடையே மீற முடியாத ஒரு தடுப்பையும் ஏற்படுத்தி உள்ளான்.�
                        -அல்குர்ஆன் (25:53)

திருகுர்ஆனில் புதைந்துள்ள அறிவியல் கண்டுபிடிப்புகள் குறித்த ஒரு நூலில் ஒரு அற்புத நிகழ்வை குறிப்பிட்டுள்ளார்கள். மத்திய தரைக்கடல் பகுதியில் �கப்தான் லாக் குஸ்ஸோ� என்ற பிரஞ்சு ஆராய்ச்சியாளர் கடலில் மூழ்கி ஆய்வு நிகழ்த்திக் கொண்டிருந்த போது திடீரென்று அவரின் முகத்தில் மாட்டியிருந்த முகமூடி சற்று விலகுகிறது. அப்போது கடல்நீர் சிறிதளவு அவரின் வாயினுள் சென்று விடுகிறது. கடல் நீரை சுவைத்த அவருக்கு பெரும் ஆச்சர்யம். காரணம் வாயினுள் புகுந்த நீர் உப்பு கரிக்காமல் இனித்தது. �இது என்ன வியப்பாக இருக்கிறது. கடல்நீர் இனிக்கிறதே ! என்று நினைத்து சற்று தள்ளி இன்னொரு இடத்தில் நீரை சுவைத்துப் பார்த்தார்.

ஆனால் அந்த நீர் உப்பு கரிப்பாக இருந்தது. பெரும் வியப்படைந்த �கப்தான்� அவர்கள் கடலில் மேலும் பல இடங்களில் ஆராய்ந்து பார்த்தார். பெரும்பாலான இடங்களில் கடல்நீர் உப்பு கரிப்பாக இருந்தாலும் சில இடங்களில் நீர் தித்திப்பாக இருந்தது. இருவகையான நீரும் கலந்தே கடலில் இருந்தாலும் இரண்டுக்கும் மத்தியில் ஒரு �வகையான� தடுப்பு இருப்பதைப் போன்று உணர்ந்தார். தனது ஆராய்ச்சியை முடித்துக் கொண்டு வெளியில் வந்த கப்தான் இதைப் பற்றி யாரிடமாவது விசாரிக்க வேண்டும் என நினைத்தார். அப்போது தான் அவருக்கு பிரஞ்சு ஆய்வாளர் டாக்டர் மாரீஸ் புகைல் அவர்களின் நினைவு வந்தது. ( இந்த மாரிஸ் புகைல் என்பவர் உலகப் பிரசித்தி பெற்ற �பைபிலும் குர்ஆனும் விஞ்ஞானமும்� என்ற நூலை எழுதியவர் ) அவரிடம் தனது கண்டுபிடிப்பை ஆச்சர்யத்தோடு விபரித்தார். அப்போது அவர் �நான் சர்வசமய நூல்களையும் படித்து அதன் கருத்துக்களை ஆராய்ந்து வருபவன் என்ற முறையில் சொல்கிறேன். நீங்கள் சொல்கிற இந்த விஷயம் முஸ்லிம் சமய வேதமான அல்குர்ஆனில் (25:53, 35:12, 55:19,20) ஆகிய வசனங்களில் தெளிவான முறையில் சொல்லப்பட்டிருக்கிறது. தாங்கள் சொல்வதைப் பார்க்கும் போது 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருகுர்ஆனில் இவ் விஷயம் பதியப்பட்டுள்ளது என நினைக்கும்போது பெரும் வியப்பாக உள்ளது� என பதில் பகர்ந்தார். சுப்ஹானல்லாஹ் ! குர்ஆனின் அறிவியல் விஷயங்களால் எண்ணிப்பார்க்கும் போது கடலை விட ஆழமான கருத்துக்கள், அறிவியல் விஷயங்கள் குர் ஆன் தன்னிடம் புதைத்து வைத்துள்ளது. என்று உறுதியிட்டு கூறமுடியும். குர்ஆன் எனும் இந்த ஆழ்கடலில் மூழ்கி அதன் அரிய கருத்துக்கள் எனும் முத்தை எடுக்க இந்த ரமளான் மாதத்தை விட சிறப்பான மாதம் வேறென்ன இருக்க முடியும்?

 தேன்,தேனீ, திருகுர்ஆன்
மனிதகுலத்துக்கு அல்லாஹ் வழங்கியுள்ள அற்புத நோய் நிவாரணி தேன் என்பதில் இருகருத்து இருக்க முடியாது. அண்ணலார் (ஸல்) அவர்கள் தனது மருத்துவ வழிகாட்டுதலில் (திப்பநபவி) அதிகமான இடங்களில் தேனைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். மருத்துவத்துறைகள் ஒப்பற்ற இடத்தை பிடித்துள்ள இந்த தேனை உருவாக்கும் தேனியைப் பற்றியும் ஆய்வாளர்கள் ஆய்ந்து வந்துள்ளார்கள். அவர்களில் �வான் பிரிஸ்க்� என்ற ஆய்வாளர். தேனீ பற்றி குறிப்பிடும் போது மலரி லிருந்து தேனீ அதன் சாற்றை உறிஞ்சி அதனை உற்பத்தி செய்கிறது. இவ்வாறு தேனீ சாறு கிடைக்கக்கூடிய மலர்களை கண்டால் உடனே அது திரும்பிச் சென்று மற்ற தேனீக்களுக்கும் குறிப்பிட்ட மலர்களை யும் அது இருக்கும் பகுதிகளையும் தெளிவான முறையில் விபரிப் பதாக குறிப்பிடுகிறார். இவ்வாறு அறிவிப்புச் செய்யும் தேனீயும் தேனை சேகரிக்க செல்லும் தேனீக்களும் அனைத்தும் பெண் தேனீக்கள் தான் என்றும் தன் ஆய்வில் குறிப்பிடுகிறார். இந்த விஷயங்களை அல்லாஹு தஆலா தனது குர்ஆனில் தெளிவான முறையில் குறிப் பிடுகிறான்.

�உம்முடைய இறைவன் தேனீக்கு �மலைகளிலிருந்தும் மரங்களி லிருந்தும் ( மனிதர்களாகிய) அவர்கள் கட்டுகின்ற (தேன்கூடு முதலிய) வற்றிலிருந்தும் வீடுகளை நீ அமைத்துக்கொள்?� என்ற உள்ளுணர்வை ஏற்படுத்தினான். பிறகு எல்லாக்கனி மலர் வகைகளிலிருந்தும் நீ உணவருந்தி உன்னுடைய இறைவனின் எளிதான வழிகளில் நீ புகுந்து செல்வாயாக ! என்றும் உள்ளுணர்வை ஏற்படுத்தினான்.
அல்குர்ஆன் (16:68)
இந்த ஆயத்தில் அல்லாஹ் தேனீயைப் பற்றி குறிப்பிடும் பொழுது �நீ சாப்பிடு� நீ நுழைந்து கொள்� என்ற அர்த்தத்தை பொதிந்துள்ள �குலீ� �ஃபஸ்லுகீ� என்ற வாசகத்தை கூறி யுள்ளான். இந்த வாசகம் பெண்பாலிடம் உபயோகப்படுத்தும் வார்த்தை களாகும். இதன்மூலம் அல்லாஹுதஆலா தேனைத் தேடிச் சென்று மலர்களின் சாறுகளை சேகரிக்கும் தேனீக்கள் பெண் தேனீக்கள் தான் என்ற விஷயத்தையும் தெரியப்படுத்துகிறான். தற்கால ஆய்வில் அறியப்படுகிற விஷயத்தை சுமார் 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆன் பதிவு செய்து வைத்திருப்பது ஆச்சரியத்திலும் ஆச்சரியம் அல்லவா !

 மேகம் கருக்கிறது மழை வரப்பார்க்கிறது

பிரபஞ்சத்தில் அல்லாஹ் எவ்வளவோ ஆச்சரியமான விஷயங்களை வைத்திருப்பதைப் போன்று வான் மண்டலத்திலும் அல்லாஹ் ஆச்சர்யங்களை வைத்துள்ளான். அவைகளில் ஒன்று மழை பெய்வது. நீலவானில் திடீரென மேகங்கள் ஒன்று சேர்ந்து கருத்துப்போய் மழை பொழிய ஆரம்பிக்கிறது. நீரியல் ஆய்வாளர்கள் இது குறித்து கூறும் போது �காற்றுதான் மேகங்களை ஒன்றிணைத்து � குளிர்வித்து மழை பொழிய வைக்கிறது.� என கூறுகிறார்கள். இதை நாம் செயற்கையாக வும் செய்ய முடியும். மழை பொய்த்துப் போய் வறட்சி ஏற்படும் கால கட்டத்தில் விமானத்தின் மூலம் ரசாயணப் பொருட்களைத் தூவி மேகங்களை செயற்கையாக குளிரவைத்து மழை பொழிய வைக்க முடியும் என்று கண்டுபிடித்து அதில் சிறிதளவு வெற்றியும் பெற்றார் கள். ஆக மேகங்களை காற்று ஒன்றிணைத்து குளிர்விப்பதால் மழை பொழிகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். இக்கருத்தை அல்லாஹுதஆலா குர்ஆனில் முன்பே பதிய வைத்துள்ளான்.

�காற்றுகளை சூல் கொண்ட மேகங்களாக நாம் அனுப்பி வைத்தோம். பிறகு வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி வைத்து அதனை உங்களுக்கு நாம் புகட்டினோம்.�
                     -அல்குர்ஆன் ( 15:22 )

இவ்வாறு அல்லாஹுதஆலா காற்றின் மூலம் மேகங்களை குளிர வைத்து மழை பொழிய வைப்பதை குறித்து அல்லாஹுதஆலா திரு குர்ஆனில் பல இடங்களில் கூறியுள்ளான்.

அல்லாஹுதஆலா திருகுர்ஆனின் மூலம் மனித சமுதாயத்தின் முழு வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை நிரூபிப்பதைப் போன்று தற்கால நவீன அறிவியல் விஷயங்களையும் சுமார் 14 நூற்றாண்டு களுக்கு முன்பே தன்னில் கொண்டுள்ளது என்பதை விபரிப்பதற்காகத் தான் மேற்கண்ட ஆய்வு விஷயங்களை நாம் பதிவு செய்துள்ளோம். இது போன்று எண்ணற்ற நவீன கண்டுபிடிப்பு விஷயங்களை பற்றியும் குர்ஆன் தெரிவிக்க காத்திருக்கிறது. எனவேதான் அல்லாஹ் குர்ஆனை அவர்கள் ஆழ்ந்து ஆராய வேண்டாமா? � � அல்குர்ஆன் ( 4: 82 ) என்று கேட்கிறான்.

 குர்ஆனும் நாமும் 
 மனித சமுதாயத்திற்கு அவன் சார்ந்த அனைத்து துறைகளுக்கும் முழு வழிகாட்டிய அல்லாஹ்வால் அருளப்பட்ட குர்ஆனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம்? குர்ஆனை அது ஏதோ சடங்கு சம்பிரதாயங்களை போதிக்கும் நூல் என்பதைப் போன்று பள்ளிவாசல் களிலும் வீட்டில் ஒரு பெட்டியிலோ உரையிலோ போட்டு வைத்து விடுகிறோம். யாராவது இறந்து விட்டால் குர்ஆனின் ஞாபகம் நமக்கு வருகிறது. அதை ஓதி இறந்தவர்களுக்கு நன்மை சேர்ப்பித்துவிட்டால் � அத்துடன் குர்ஆனோடு நம்முடைய தொடர்பு முடிந்து விட்டது என்ற நிலையில் நாம் உள்ளோம். அஸ்தஃபிருல்லாஹ். குர்ஆனுடைய வழி காட்டுதலை மனித சமுதாயம் அலட்சியப்படுத்தியதால்தான் பாவங் களும், தீமைகளும் பல்கிப் பெருகிப் போய் உலகம் பெரும் பிரச்சனையை சந்தித்துக் கொண்டிருக்கிறது. உணவுப் பற்றாக்குறை. பணவீக்கம் � அத்தியாவசியப்பொருள்கள் விலையேற்றம். உலகம் வெப்ப மயமாகுதல் நாட்டுக்கு நாடு அரசியல் குழப்பங்கள். இன்னும் பல பிரச்சனைகள். இவைகளெல்லாம் ஏன்? ஏன்? குர்ஆன் அதற்கு பதிலுரைக்கிறது.

�மனிதர்களுடைய கைகள் சம்பாதித்த (கெடுதலான) வற்றின் காரணத்தால் தரையிலும், கடலிலும் (அழிவு) குழப்பம் பரவி விட்டது. அவர்கள் செய்ததில் சிலதை அவர்களுக்கு அவன் சுவைக்கச் செய் வதற்காக (இவ்வாறு செய்கிறான். இதனால் பாவங்களிலிருந்த) அவர்கள் திரும்பி விடக்கூடும்.�
                     -அல்குர்ஆன்( 30:41 )

மனிதர்களுக்கு மனிதர்களே தேடிக்கொண்ட வினைகள் தான் உலகில் தற்போது நிகழும் சூழ்நிலைகள் என குர்ஆன் தெளிவாக பதிலுரைத்து விட்டது. அது போன்று முஃமினானவர்களுக்கு மத்தியில் நிகழக்கூடிய பிரச்சனைகள் பிளவுகள் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்துள்ள கருத்து வேறுபாடுகள், இஸ்லாமிய நாடுகளை நோக்கி ஐரோப்பிய நாடுகள் போர் தொடுக்கும் சூழ்நிலைகள் இவை களேல்லாம் எதனால்? ஏன்? இதற்கும் குர்ஆன் தெளிவான விடை தருகிறது.

�முஃமின்களே ! உங்களுக்கிடையில் நீங்கள் பிணங்கித் தர்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தால் நீங்கள் கோழைகளாகி விடுவீர்கள். உங்களுடைய பலம் குன்றி விடும். � அல்குர்ஆன் (8:46)

முஃமின்கள் குர்ஆனின் வழிகாட்டுதல்களை புறந்தள்ளியதின் காரணமாக சர்வர்தேச இஸ்லாமிய சமுதாயத்திடம் கருத்து வேறுபாடு, பிளை, உண்டானது. அதனால் பிற சமுதாயத்தின் பார்வையில் இஸ்லாமிய சமுதாயத்தைப் பற்றி காழ்ப்புணர்ச்சியும் வெறுப்புணர்வும் தான் ஏற்பட்டுள்ளது. �உயர்வான உம்மத்� என குர்ஆனால் போற்றப்பட்ட சமுதாயம் கேவலப்பட்டு நிற்பதற்கு காரணம் குர் ஆனின் வழிகாட்டுதலை கைவிட்டது தான் காரணம்.

 என்ன செய்ய வேண்டும் ?
உலகம் முழுவதும் மனித சமுதாயத்திடம் குறிப்பாக இஸ்லாமிய சமுதாயத்திடம் சுபிட்சமும், மகிழ்ச்சியும் செழிப்பும் மலர வேண்டும் என்றால் குர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனுட னான நம் தொடர்பை வலுப்படுத்த வேண்டும். �சடங்கு நூலாக� திரு குர்ஆனைப் பயன்படுத்துவதை விட்டு விட்டு நம் வாழ்வின் அஸ்தி வாரமாக குர்ஆனை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலகின் அனைத்து மொழிகளிலும் திருகுர்ஆன் மொழிபெயர்ப்பு விரிவுரை களை நூற்களாகவும் குறுந்தகடு  களாகவும் வெளிவந்துள்ளது. அர்த்தமும் விளக்கமும் புரிந்து குர்ஆனை ஓதி � விளங்கி, நமது வாழ்விலும் நமது சந்ததியினரின் வாழ்விலும் குர்ஆனின் வழிகாட்டு தல்களை கொண்டு வர வேண்டும். பின்பு அந்த வழிகாட்டுதல்களை பிறருக்கும் எத்தி வைக்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் திருகுர்ஆன் அருளப்பட்ட இந்த ரமளான் மாதத்தில் குர்ஆனை விளங்கி அதன் வழிகாட்டுதல்படி வாழ்க்கை வாழ நமக்கு வழிகாட்டுவானாக !

'ரமளான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழி காட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை, தீமைகளை) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் அருளப் பெற்றது'. (அல்குர்ஆன் 2 : 185)'  

 நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் யார் ரமளானில் நோன்பு நோற்று வணங்குகிறாரோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன'. (நபிமொழி) (அபூஹுரைரா (ரலி), திர்மிதி - 619)   

மறுமையின் நிரந்தர சொர்க்கத்தை அடைந்து கொள்ள, அல்லாஹ்வின் அருள் நிறைந்த ரமளான் மாதத்தை, நல்ல விதத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை நாம் விளங்கிக் கொள்வோமாக!
  



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini