அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்....

நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்' 51:55, 'எவருக்கு இதயம் இருக்கிறதோ, அல்லது எவர் ஓர்மையுடன் செவிதாழ்த்திக் கேட்கிறாரோ அவருக்கு நிச்சயமாக இதில் படிப்பினைஇருக்கிறது.'50:35<<>>"மேலும், (மக்களை) நன்மையின் பக்கம் அழைப்பவர்களாகவும், நல்லதைக் கொண்டு (மக்களை) ஏவுபவர்களாகவும் தீயதிலிருந்து (மக்களை) விலக்குபவர்களாகவும் உங்களிலிருந்து ஒரு கூட்டத்தார் இருக்கட்டும் - இன்னும் அவர்களே வெற்றி பெற்றோராவர்.

பொருளீட்டுதலில் , நேர்மை

 தொழுகை முடிக்கப்பட்டதும் அல்லாஹ்வின் அருளை பூமியில் அலைந்து தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்!அல்-குர்ஆன் : 62:10

இந்த வசனத்தில் அல்லாஹ்வால் 'அருள்' எனக் குறிப்பிடப்படுவது மனிதன் தன்னுடைய அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளத் தேவைப்படக்கூடிய பொருளாதாரம் ஆகும். எனவே தொழுகை எனும் வணக்கம் முடிவடைந்துவிட்டால் அவன் தன்னுடைய வாழ்க்கைக்குத் தேவைப்படக்கூடிய பொருட்களை பரந்து விரிந்த பூமியில் தேடி அடைந்து கொள்ளுங்கள், என திருக்குர்ஆன் நமக்கு அறிவுறுத்துகின்றது.

தன்னுடைய, தன் குடும்பத்திற்குண்டான பொருட்களை தகுதியுடைய ஒவ்வொரு மனிதனும் நேர்மையான முறையில் பெறவே முயற்சிக்க வேண்டும். திருக்குர்ஆன் வசனம் 2:273ன் மூலம் மார்க்கப் பணியில் ஈடுபடுபவர் தம்மால் இயலாது என்றால் மட்டுமே பொருளைத் தர்மமாகப் பிறரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். ஆனால் பொருளீட்ட இயலும் என்றாலோ அல்லது வேறு எந்தக் காரணங்களைக் கொண்டோ பொருளினைப் பெறுவதற்காக யாசிப்பதோ, தன் சுயமரியாதையை இழப்பதையோ அல்லாஹ் வன்மையாகக் கண்டிக்கின்றான்.

எனவே இஸ்லாமியர்களான நாம் மார்க்கம் அனுமதித்த வழியில் பொருளீட்டுவதை கட்டாயமாகப் பின்பற்றவேண்டும். இது குறித்து திருக்குர்ஆனின் பல இடங்களில் பொருளீட்டுவதற்கான ஒரு சில வரையரைகளையும், நெறிமுறைகளையும் அல்லாஹ் நமக்கு அறிவிக்கின்றான்.

குர்ஆன் கூறும் பொருளீட்டுதலின் நேரிய வழிமுறைகள்

ஒரு மனிதன் தனக்குத் தேவைப்படக் கூடிய பொருளாதாரத்தை எவ்வாறு பெறலாம் என்பதற்கு அல்லாஹ் சிறப்பான வழிமுறைகளை நமக்கு அறிவித்துள்ளான். அவையாவன.,

1)வியாபாரம்

நம்பிக்கைக் கொண்டோரே! உங்களுக்கிடையே, உங்கள் பொருள்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்! திருப்தியுடன் நடக்கும் வியாபாரத்தைத் தவிர.
(அல்-குர்ஆன் 4:29)

மேற்கூறப்பட்ட இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ் நமக்கு வியாபாரத்தை பொருளீட்டும் ஒரு அம்சமாக வழங்கியுள்ளான் என்பது புரியும். இரு நபர்களுக்கிடையே பரஸ்பர அடிப்படையில் கொடுக்கல், வாங்கல் நடைபெறுவதே வியாபாரம் எனக் கூறப்படுகிறது. இவ்வாறு செய்யப்படும் வியாபாரத்தில் கிடைக்கும் இலாபம் ஆகுமானதாகும், என அல்லாஹ் நமக்கு அறிவுறுத்துகின்றான். ஒரு வியாபாரம் நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டியவை.

அ)வியாபாரத்தில் நேர்மை
அவன் வானத்தை உயர்த்தினான், நிறுப்பதில் வரம்பு மீறாதீர்கள்! என்று தராசையும் நிறுவினான்! நியாயமாக எடையை நிலை நாட்டுங்கள்! எடையில் குறைத்துவிடாதீர்கள்!
அல்-குர்ஆன் 55: 7, 8 மற்றும் 9

வியாபாரத்தில் நேர்மையைக் கடைபிடிக்கவேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது. உதாரணமாக நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வரலாற்றைப் பார்த்தோமேயானால் அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவம் வழங்குவதற்கு முன்னரும், அவர்கள் மக்களிடையே பிரபலமானவராகத் திகழ்ந்தார்கள். இதற்கு முக்கியக் காரணம் அவர்கள் தான் ஈடுபட்ட வியாபாரத்தில் காட்டிய நேர்மையும், மேற்கொண்ட ஒப்பந்தத்தை மீறாமல் செயல்பட்ட காரணத்தினாலும்தான். எனவே அவர்களுடைய வழிகாட்டுதலைப் பின்பற்றும் நாமும் வியாபாரத்தில் நேர்மையாக நடந்துகொள்ளவேண்டும்.

ஆ)அளவு, நிறுவை சரியாயிருத்தல்
அளக்கும் போது நிறைவாக அளவுங்கள்! நேரான தராசு கொண்டு எடை போடுங்கள்! இதுவே சிறந்தது
(திருக்குர்ஆன் : 17 : 35)
அல்லாஹுதாஆலா ஒரு சமுதாயம் தன்னுடைய வியாபாரத்தில் செய்து வந்த அளவு, நிறுவை தவறுகளை திருத்துவதற்கென நபி ஷுஐப்(அலை) அவர்களை நபியாக அனுப்பிவைத்தான் எனில் இதில் நடைபெறும் தவறுகளை அல்லாஹ் கண்டிக்கின்றான் என்பதை புரிந்து நாம் செயல்பட வேண்டும்.

இ)மோசடியை தவிர்த்தல்
மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும்.

ஒருவர் தாம் செய்த பாவத்திற்கான தண்டனையை அவரே அனுபவிக்க வேண்டும் இவ்வாறுதான் மோசடி செய்யும் ஒருவர் தான் மோசடி செய்த பொருளைக்கொண்டே தண்டிக்கப்படுவார் என அல்லாஹ் மோசடி குறித்து எச்சரிக்கை செய்கின்றான். எனவே வியாபாரப் பொருட்களில் கலப்படம், போலி, பித்தலாட்டம் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.

2)உழைப்பின் மூலம் பொருளீட்டுதல்

உழைப்பின் மூலம் பெறக்கூடிய பொருட்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதாகும். இஸ்லாம் உழைத்துப் பெறக்கூடிய வகையில் ஒரு சில பணிகளைக் குறிப்பிடுகிறது. அவையாவன.,

அ)கூலி வேலை
மூஸா(அலை) அவர்கள் தாம் மணமுடித்துக் கொள்ளப்போகும் பெண்ணிற்கு மஹர் தொகை வழங்குவதற்கு அப்பெண்ணின் தந்தையிடம் எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்தார்கள் என்று திருமறை (28:27) கூறுகின்றது. எனவே மஹரை பொருளாக இல்லாமல் கூலி வேலை செய்தால் சரியாகிவிட்டது எனில், கூலி வேலை செய்வதால் பெறப்படக் கூடிய பொருள் இஸ்லாத்தில் ஏற்றுக்கொள்ளப்படக் கூடியதே.

ஆ)மீன் பிடித்தல்
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத்தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச்செய்தான்.
(திருக்குர்ஆன் : 16:4)

மேற்காணும் இந்த வசனத்தின் மூலம் கடலிலிருந்து மீன் பிடித்துப் பெறக்கூடிய வருமானம் அனுமதிக்கப்பட்டதாகும் என அறியலாம்.

இ)ஆபரணங்கள் செய்தல்
மேற்கூறப்பட்ட அல்குர்ஆன் 16:14 வசனத்தின் அடிப்படையில் முத்துக்குளித்தல், அவ்வாறு பெறப்பட்ட முத்துக்களை ஆபரணங்களாக மாற்றி அதனை விற்பதன் மூலம் பொருளீட்டுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்று என்பதை அறியலாம்.

ஈ)கால்நடைகளை மேய்த்தல்
உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேயவிடுங்கள் அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன!
(அல்-குர்ஆன் : 20:54)

நபி(ஸல்) அவர்கள் இளமைப் பருவத்தில் ஆடு மற்றும் ஒட்டகங்களை மேய்க்கும் தொழிலை செய்து வந்தார்கள் என்பதின் மூலம் கால்நடைகளை மேய்த்து பராமரித்து வருவதில் பெறக்கூடிய வருமானமும் சரியானதே என அறியலாம்.

2)விவசாயம் செய்தல்

நீங்கள் பயிரிடுவதை சிந்தித்தீர்களா? நீங்கள் அதை முளைக்கச் செய்கிறீர்களா? அல்லது நாம் அதை முளைக்கச் செய்கின்றோமா?
(அல்-குர்ஆன் 56:63, 64)

விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பாகத் திகழ்கின்றது. உதாரணமாக இந்தியாவை எடுத்துக்கொண்டோமேயானால் 70 சதவிகிதம் மக்கள் விவசாயமே செய்து வருகின்றனர். ஒரு நாட்டில் விவசாயம் நடைபெறவில்லையெனில் அது எவ்வளவு பெரிய வல்லரசாக இருந்தாலும் விவசாய உற்பத்தியை மேற்கொண்ட நாட்டிடம் கையேந்தும் நிலை உள்ளது. இதையே அல்லாஹ் தன்னுடைய திருமறையில் விவசாயத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்! அதை நானே முளைக்கச்செய்து வளமாக்குகின்றேன் எனக் கூறுகின்றான்.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்;
எவர் ஒருவர் ஒரு செடியையோ, விதையையோ நாட்டி (அது வளர்ந்து பலனளித்து) அதிலிருந்து பறவைகளோ, மனிதர்களோ, மிருகங்களோ உணவு பெற்றால் அவரது செயல் தருமமாக கருதப்படுகிறது.

எனவே திருக்குர்ஆனும், நபி வழியும் அறிவுறுத்தும் பொருளீட்டும் இம்முறை மிகச் சிறந்ததாகும்.

மேலும் திருக்குர்ஆனும், நபிவழியும் அனுமதித்திருக்கும் பொருளீட்டும் முறைகளை வரும் இதழில் காண்போம்.
 
4. மனப்பூர்வமாக ஒருவர் தருவதை ஏற்றுக்கொள்ளுதல்

பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாக கொடுத்துவிடுங்கள்! அவர்கள் மனமுவந்து அதில் எதையேனும் விட்டுக்கொடுத்தால் மனநிறைவுடனும் மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள். அல்குர்ஆன் 4:4

மனைவி விட்டுத்தரக்கூடிய மணக்கொடையைப் போல் பரிசாக வழங்குவது, உறவினர்கள் விட்டுக்கொடுப்பது போன்றவற்றையும் பொருளீட்டலில் இஸ்லாத்தில் ஆகுமானதாகும்.

5. கடன் மூலம் பொருளீட்டுதல்

அழகிய கடனை அல்லாஹ்வுக்காக கடன் கொடுப்பவர் யார்? அதை அவன் அவருக்கு அனேக மடங்கு அதிகரிக்கும் படிச் செய்வான். அல்குர்ஆன் 2:245

நபி அவர்கள் கூறினார்கள்;
உங்கள் அண்டை அயலார்கள் நோயிலிருந்தால் அவரிடம் சென்று விசாரியுங்கள். அவர்கள் நெருக்கடியில் இருந்தால் கடன் கொடுத்து உதவுங்கள்.

எனவே மேற்காணும் திருக்குர்ஆன் வசனமும், நபிமொழியும் எவர் ஒருவருர் வறுமை, பற்றாக்குறை, நோயினால் சிரமப்படுகிறாரோ அவருக்கு கடனை வழங்க வேண்டும் என அறிவுறுத்துகின்றனர். எனவே தன்னிடம் வசதியில்லாத ஒருவர் வசதியுடையவரிடம் கடனாக பொருளை பெற்றுக்கொள்வதும் கூடுமானதாகும்.

பொருளீட்டும் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள்

பொருளீட்டும் நடவடிக்கைகளில் சில நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என இஸ்லாம் மக்களுக்கு அறிவுறுத்துகின்றது.

1. லஞ்சம் வாங்குவதற்கு தடைஉங்களுக்கிடையே உங்கள் பொருட்களைத் தவறான முறையில் உண்ணாதீர்கள்! தெரிந்து கொண்டே மக்களின் பொருட்களில் ஒரு பகுதியைப் பாவமான முறையில் சாப்பிடுவதற்காக அதிகாரிகளிடம் உங்கள் பொருட்களைக் கொண்டு செல்லாதீர்கள! திருக்குர்ஆன் 2:188
இவ்வசனம் மூலம் பிறரின் பொருட்களை அடைய லஞ்சம் கொடுப்பதோ, வாங்குவதோ தவறு என சுட்டிக்காட்டப்படுகிறது. எனவே பொருளீட்டலில் இலஞ்சத்தைத் தவிர்க்கவேண்டும்.

2. வட்டி வாங்கத் தடைவட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாக எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்ற அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியை தடைசெய்து விட்டான். அல்குர்ஆன் 2:275

வட்டி மூலம் பொருள் சேர்ப்போர்க்கு நிரந்தர நரகம் என்றும் அவர்கள் என்னுடன் போர் செய்பவர்கள் என்றும் அல்லாஹ் நம்மை எச்சரிக்கை செய்கின்றான். எனவே கொடிய வட்டியைக் கொண்டு நாம் பொருளீட்டுவதை தவிர்க்க வேண்டும்.

3. பிறர் பொருளை அபகரித்தல்நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை தடுக்கின்றனர். அல்-குர்ஆன் 9:34

தங்களை நாடிவரக் கூடிய மக்களிடம் தவறான முறையில் அவர்களிமிருந்து பொருளை அபகரிப்பது திருடுவதற்கு சமமாகும். இவ்வாறு மதத் தலைவர்களும், பாதிரியார்களும் உண்ணுவதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

4. மோசடிநம்பிக்கை கொண்டோரே! அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் மோசடி செய்யாதீர்கள்! உங்களிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டவற்றிலும் மோசடி செய்யாதீர்க்ள். (திருக்குர்ஆன் 8:27)

ஒருவர் நம்பி உங்களிடம் ஒப்படைத்த பொருளை அவர் கேட்கும் போது அவரிடம் திருப்பித் தர வேண்டும். அதனை திருப்பித் தரமால் ஏமாற்றுவதை அல்லாஹ் இவ்வாறு திருமறையில் குறிப்பிடுகின்றான்.

5. அனாதைச் சொத்து அனாதை சொத்துக்களை அவர்களிடம் அளித்துவிடுங்கள்! நல்லதை கெட்டதற்கு பகரமாய் மாற்றிவிடாதீர்கள்! அவர்கள் சொத்துக்களை உங்கள் சொத்துக்களுடன் சேர்த்து சாப்பிடாதீர்கள்! இது மிகப்பெரிய குற்றமாக உள்ளது. திருக்குர்ஆன் 4:2

உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனாதைகளையும், அவர்களின் சொத்துக்களையும் அவர்கள் உரியவயதை அடைந்தவுடன் அவரின் சொத்தை அவரிடம் வழங்கிவி;ட வேண்டும். அதில் எதையும் அடைந்து கொள்ள முயற்சிக்கக் கூடாது.

6. பொய் சொல்லி வியாபாரம்வேதமுடையோரே! ஏன் உண்மையை பொய்யுடன் கலக்கிறீர்கள்! அறிந்து கொண்டே ஏன் உண்மையை மறைக்கிறீர்கள். (திருக்குர்ஆன் 3:71)

வியாபாரத்தில் ஒரு பொருளை அது உரிய தரத்துடன் இல்லையெனினும் அதைப்பற்றி உயர்வாகக் கூறி அதனை விற்பனை செய்வது கூடாது.

இவ்வாறு பொருளீட்டுவது இஸ்லாத்தில் மறுக்கப்படுவதோடு இது மிகப் பெரிய குற்றம் எனவும் குறிப்பிடப்படுகிறது.

7. அளவை, நிறுவை மோசடிஅளவையும், நிறுவையையும் நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களை குறைத்துவிடாதீர்கள்! (அல்குர்ஆன் 7:85)
ஒரு பொருளை வாங்கும் நுகர்வோருக்கு அதனுடைய சரியான அளவையும், எடை போடும் போது சரியாக நிறுத்தியும் தர வேண்டும். அவ்வாறில்லாமல் ஏமாற்றி பெறக்கூடிய பொருள் முறையாக சம்பாதித்ததாக ஆகாது,

8. விபச்சாரம்கற்பொழுக்கம் நாடும் உங்கள் பெண்களை இவ்வுலக சாதனங்களைப் பெறுவதற்காக விபச்சாரத்திற்கு நிர்பந்திக்காதீர்கள்! திருக்குர்ஆன் 24:33

பொருளீட்ட வேண்டும் என்பதற்காக தங்களது குடும்பத்தைச் சார்ந்த பெண்களை விபச்சாரத்தின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடாது. அல்லாஹ் இந்தச் செயலை மன்னிக்கவேமாட்டான்.

மேற்கூறிய இவை மட்டுமல்லாமல்

(1) கலப்படம் செய்து பொருட்களை விற்பதையும் (அல்குர்ஆன் 2:42)

(2) மார்க்கத்தைக் காட்டி பொருள் திரட்டுவதையும் (அல்குர்ஆன் 10:72)

(3) சகோதரர்களுக்கு தரவேண்டிய சொத்தை தராமல் ஏமாற்றி அதன் மூலம் பொருளீட்டுவதையும் (அல்குர்ஆன் 38:23, 24)

(4) பொய்ச் சத்தியம், யாசகம் கேட்டு பொருள் பெறுவதையும் (அல்குர்ஆன் 16:95) மற்றும்

(5) ஈட்டிய பொருளை கஞ்சத்தனமாக வைத்திருப்பதையும் அல்லாஹ் தன்னுடைய திருக்குர்ஆனின் மூலம் நமக்கு தடை செய்துள்ளான்.

எனவே அல்லாஹ் நமக்கு வழங்கிய அருட்கொடையான பொருள்களை நியாயமான முறையில் மேற்கூறப்படும் அல்லாஹ்வின் வரையரைகளையும், நெறிமுறைகளையும் பேணி நபி(ஸல்) அவர்கள் காட்டிய நேரிய வழியில் சம்பாதிப்பதோடு அதே அல்லாஹ்வின் கட்டளைப்படி நடப்போமாக!



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

தொழுகை-ஸலாத்- (தூய்மை)

பெருமானார்(ஸல்) போதித்த இரண்டாம் கடமை
தொழுகை – ஸலாத் ஆகும். தொழுவதற்கு முன் தூய்மை,தண்ணீரின் வகைகள்,பயன் படுத்தும் பாத்திரம் இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்
முதலில் தூய்மை – தஹ்ஹாரத் அவசியம்
அனைத்துக்கும் தூய்மையே அடித்தளம்
இஸ்லாம் தூய்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குகிறது. தூய்மையற்ற எந்தச் செயலும், வணக்கமும் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. இறைவன் தூய்மையானவன். அவன் தூய்மையை விரும்புகிறான்.

ِ

إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ


‘இறைவன் தீமையிலிருந்து விலகியிருப்போரையும், தூய்மையாயிருப்போரையும் விரும்புகிறான்.’ என அல்-குர்ஆன் (2:222) கூறுகிறது.

قال النبي صلي الله عليه وسلم ‘ الطهارة نصف الايمان

‘அத்தஹ்ஹாரத்து நிஸ்ஃபுல் ஈமான் ‘ ‘தூய்மை ஈமானில் பாதி’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்: அஹ்மத்,திர்மிதி,தாரமி)
மேலும் ‘தூய்மையற்றவனின் வணக்கம் (இறைவனால்) ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை’ எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் (ஆதாரம்:முஸ்லிம்,அஹ்மத்,அபூதாவூது, திர்மிதி, நஸாயீ,இப்னு மாஜா,தப்ரானி)
இதிலிருந்தே இஸ்லாம் தூய்மைக்கு எந்த அளவுக்கு முக்கியத்து வமும், முதலிடமும் கொடுக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். அது மட்டுமல்ல., அதை அனைத்துச் செயலுக்கும், வணக்கத்திற்கும் அடிப்படையாகவும் விதியாகவும் அமைத்துள்ளது.
எதிலும் தூய்மை !
இஸ்லாம் தூய்மையை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்க்கை நெறியாகும். அது எப்போதும் எதிலும் மனிதன் தூய்மையாக இருக்கவேண்டும் எனக் கட்டளையிடுகிறது.
எனவே, மனித வாழ்வில்,
1. உளத் தூய்மை
2. உடற் தூய்மை
3. இடத் தூய்மை
4. உடைத் தூய்மை
5. உடைமைத் தூய்மை
6. சொல் தூய்மை
7. செயல் தூய்மை
8. வணிகத் தூய்மை
9. வாழ்வுத் தூய்மை
10. வணக்கத் தூய்மை
என அனைத்திற்கும் ‘தூய்மையே அடித்தளம்’ என ஓர் உயரிய அளவுகோலை மனித சமுதாயத்திற்கு முன்வைக்கிறது இஸ்லாம். இது எந்த மதமும் வலியுறுத்தாத அரிய வாழ்க்கை நெறியாகும்.
‘தூய்மை நோயிலிருந்து மனிதனைக் காக்கும் கேடயம்’ என அறிவியல் கூறும் இந்த மருத்துவ உண்மையை இஸ்லாம் என்றோ மனித சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டது.
பாவங்களைப் போக்கும் அருமருந்து
தூய்மை பாவங்களைக் களைந்து மனிதனை பக்குவப்படுத்துகிறது. தூய வாழ்வுக்கு வழிநடத்திச் செல்கிறது. ஆன்மீகப் பாதையில் பீடுநடை போட ஊக்குவிக்கிறது.
நபிகளாரின் பின் வரும் பொன் மொழி சிந்திக்கத்தக்கதாகும். ஒரு முஸ்லிம் உளு செய்யும் போது முகத்தைக் கழுவினால் அவன் முகத்திலிருந்து கண்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. அவன் கைகளைக் கழுவினால் கைகள் செய்த தவறுகள் அனைத்தும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. அவன் கால்களைக் கழுவினால் கால்கள் (முலம் நடந்து சென்று) செய்த குற்றங்கள் யாவும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. இறுதியில் அவன் (இறைவன் பாதையில் அடியெடுத்து வைத்து தெய்வீக நெறி நிற்பதால்) குற்றமற்றவனாக ஆகிவிடுகிறான். (ஆதாரம் : முஸ்லிம், நஸாயீ) (‘உளு’ என்பது தொழுகைக்காக கை,கால்,முகம் போன்ற வெளி உறுப்புகளைக் கழுவித் தூய்மையாக்குவதற்கு சொல்லப்படும்.
2. தூய்மை செய்யும் தண்ணீரின் வகைகள்
அவை இரு வகைப்படும். 1. சுத்தமான தண்ணீர். (மாவுன் தாஹிர்- ) 2. அசுத்தமான தண்ணீர்(மாவுன் நஜஸுன்- )

முதல்வகை : சுத்தமான தண்ணீர்

இறைவனால் அருளப்பட்ட இயற்கை நிலையிலுள்ள தண்ணீர். இவை இரண்டு வகைகளாகும்.
1. தானும் சுத்தமாக இருந்து பிற பொருளையும் சுத்தமாக்கும். (தஹூர்)          உதாரணம் : கிணற்று நீர், ஓடை நீர், ஆற்று நீர், கடல் நீர், மழை நீர். பனி நீர் போன்றவை.
2. தான் சுத்தமாக இருந்து பிறபொருளை சுத்தம் செய்யாது. (தாஹிர்)               உதாரணம் : இளநீர். தேநீர், பதநீர், பன்னீர், பால், மோர், பழரசம் போன்றவை.
இரண்டாவது வகை : அசுத்தமான தண்ணீர்

இது கழிவு நீர், உபயோகித்த நீர், அசுத்தம் கலந்த நீர் ஆகும். அசுத்தமான (நஜீஸ்) பொருள் விழுந்து தண்ணீரின் நிறம், சுவை, மணம் மாறினால் சிறிய அளவாயினும் பெருவெள்ளம யினும் அது அசுத்தமான தண்ணீர் என்றே கருதப்படும்.
மார்க்கச் சட்டங்கள்: தடுக்கப்பட்டவை : (ஹராமானவை)

1.இந்த அசுத்தமான தண்ணீரை உண்பதும் குடிப்பதும் எவ்வாறு ஹராம் – தடை செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறே சுத்தம் செய்வதும் பயன்படுத்துவதும் ஹராம் – தடைசெய்யப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாது நிர்பந்த நிலைகள்,ஆபத்தான சூழல்கள் ஏற்படுமாயின் கடைசி கட்டத்தில் பயன்படுத்த மார்க்கம் அனுமதிக்கிறது. இது ஆபத்தான நிலைகளில் மார்க்கம் வழங்கும் பொது விதியாகும்.

2. தரையிலோ,உடலிலோ,உடையிலோ,பயன்படுத்தும் பாத்திரத்திலோ அசுத்தம் (நஜீஸ்) விழுந்து விட்டால் அது நீங்கும் வரை சுத்தம் செய்யவேண்டும். அவ்வாறு கழுவிய பிறகும் நிறமாற்றம் தெரியுமாயின் தவறில்லை. அதைப் பயன் படுத்தலாம்.
சான்றாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம:- ஒரு கிராமவாசி பள்ளிவாயலில் சிறுநீர் கழித்துவிட்டார்.அவரைப் பிடித்து விரட்ட மக்கள் ஓடினர்.அதைக்கண்ட நபிகளார் அவரை அப்படியே விட்டுவிடுங்கள்.அவர் சிறுநீர் கழ்த்த இடத்தில் ஒருவாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் எளிமையை கையாளவும் கடினமுறையை விடவும் போதிப்பதற்கு வந்தவர்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

3. நாம் பயன்புடுத்தும் பாத்திரத்தில் நாயின் எச்சில் பட்டுவிட்hல் அதை ஏழு முறை கழுவ வேண்டும். முதலாவதாக மண்ணைக் கொண்டு தேய்த்து சுத்தம் செய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-
ஒரு பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். முதலாவது முறை மண்ணைக் கொண்டு தேயுங்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
3. பயன்படுத்தும் பாத்திரங்கள்

நமது வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் விதிமுறைகளையும், வரையறைகளையும் வகுத்துத் தந்துள்ள இஸ்லாம், நாம் பயன்படுத்தும் பொருட்கள்,பாத்திரங்கள் எவ்வாறி ருக்க வேண்டும் என்பதற்கும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
மனிதன் உண்பதற்கும்,குடிப்பதற்கும் பயன்படுத்தும் பாத்திரங்கள் மிகவும் இன்றியமை யாததாகும்.. அவை தொன்று தொட்டு இன்றைய நாகரிக காலம் வரை காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப இரும்பு, செம்பு, பித்தளை, பலகை, தோல்,மண்பாண்டம், பிளாஸ்டிக், அலுமினியம், சில்வர், வெள்ளி,தங்கம் போன்ற பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நமது மார்க்கம் இவற்றுள் சிலவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. அவை யாவை ?
1. தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள். 
தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், அவற்றால் முலாம் பூசப்பட்ட அல்லது ஒட்டு போடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் புழங்;குவதும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- நீங்கள் தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிக்கவும் வேண்டாம். உண்ணவும் வேண்டாம். அவை நிராகரிப்போருக்கு இவ்வுலகிலும்,(நம்பிக்கை கொண்ட) உங்களுக்கு மறுவுலகிலும் உள்ளவையாகும். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) பாத்திரங்கள் என்பது பயன்படுத்துதற்கே தவிர பெருமைக்கோ அலங்காரத்திற்கோ அல்ல. இவ்வித ஆடம்பர அலங்காரப் பொருட்களைக் காணும் ஏழை எளியவர்கள் மனத்தளவில் பாதிக்கவும் சஞ்சலப்படவும் செய்யவார்கள்.
2. நிராகரிப்போரின் பொருட்களைப் பயன்படுத்துவது.

நிராகரிப்போர் தயாரிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள், பாத்திரங்கள், ஆடைகள் அசுத்தமானவை (நஜீஸ்கள்) அல்ல. அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். எனினும் அவை மார்க்கத்தில் அனுமதிக்ககப்படாத பொட்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது தீய விளைவுகளை ஏற்பத்தும் பொருட்கள் என தெரிய வந்தால் அவற்றைப் பயன்படுத்துவது கூடாது.
3. செத்த பிராணிகளின் தோல்கள்

செத்த பிராணி;களின் தோல்கள் பதனிடப்பட்டால் அவை சுத்தமானவையாகும். அவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களை தாராளமாகப் பயன்படுத்தலாம். அதைப் போன்றே அவற்றின் உரோமங்களும், திமிழ்களும் சுத்தமானவைகளாகும். அவை ஆடைகள், உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மிருகங்கள் உண்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக் கப்பட்டதாக இருக்க வேண்டும்.
மனிதர்கள்,மீன்கள்,இரத்த ஓட்டமில்லா ஈ,வெட்டுக்கிளி போன்றவை தவிர ஏனைய செத்த பிராணிகள் அனைத்தும் நஜீஸ்- அசுத்தப் பொருட்களாகும்.
4. தண்ணீர் இல்லாத போது எவ்வாறு சுத்தம் செய்வது?

மனிதனின் உடலுறுப்புகள் யாவும் மலம்,சிறுநீர்,வியர்வை போன்றவற்றிலிருந்து எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அவை வெளியாகும் பகுதிகளும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.

மனிதன் தூய்மையை விரும்புவதோடு மனதிற்கிதமான நறுமணத்தையும் விரும்புகிறான்.தன் உடையிலோ,உடலிலோ, வாழும் இடத்திலோ இலேசான துர்வாடை வீசினாலும் அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.உடனே அவற்றை அப்புறப்படுத்தவோ அந்த இடத்தை விட்டும் அகலவோ அவசரப்படுவான். இதனால் தான் தூய்மையாக இருப்பதோடு, தன்னிடமிருந்து எவ்வகையிலும் பிறர் வெறுக்கும் துர்வாடை வீசி விடக்கூடாதே எனவும் மிகவும் எச்சக்கையாக இருக்கிறான்.
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே, எவ்வகை தூய்மைகளை யெல்லாம் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம்; வரி விடாது ஒவ்வொன்றையும் மிகத்தெளிவாக எடுத்துரைப் பதிலிருந்து ‘இஸ்லாம் ஓர் அறிவியல் மார்க்கம்’ என்பது நிரூபணமாகிறது. இஸ்லாத்தின் மீது குறை காணவேண்டுமென்று வாரி வலிந்து நிற்போரெல்லாம் வாய் பொத்தி நிற்பதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.
5. கல்லால்,மண்ணால் சுத்தம் செய்வது

இஸ்தின்ஜா’ , ‘இஸ்திஜ்மார்’

மல ஜல உபாதைகளை தண்ணீரினால் சுத்தம் செய்வதற்கு ‘இஸ்தின்ஜா’ என்றும் தண்ணிரில்லாத போது கல் மண் போன்றவற்றால் சுத்தம் செய்வதற்கு ‘இஸ்திஜ்மார்’ என்றும் அரபியில் சொல்லப்படும்.தண்ணீரில்லாத போது இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
பின் வரும் பொருட்களால் மல ஜல உபாதைகளைச் சுத்தம் செய்யலாம்.
1. சுத்தமான கற்கள்
2. இறைவசனம், நபி மொழி போன்ற உயரிய வசனங்கள்,செய்திகள் எழுதப்படாத சுத்தமான காகிதங்கள், டிஷ;யூ பேப்பர்கள், துணிகள் போன்றவற்றால் சுத்தம் செய்யலாம்.
3. மேற்கூறப்பட்டவை யாவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். அது போல மூன்று முறைகளாக சுத்தம் செய்வதும் ஒரு நிபந்தனையாகும். இவை நபிவழிகளாகும். அவசியமாயின் மூன்று முறைகளுக்கு அதிகமாகவும் சுத்தம் செய்யலாம்..
அசுத்தங்கள் உடலில் தெறித்து விட்டாலோ பரவி விட்டாலோ தண்ணீரால் தான் சுத்தம் செய்யவேண்டுமென்பதை நினைவிற் கொள்க!.
இஸ்திஜ்;மார்-கற்கள் போன்ற வற்றால் சுத்தம் செய்யலாம் என்று கூறும் போது பின் வருபவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்கவேண்டியவை :-

1. எலும்புகளால் சுத்தம் செய்வது கூடாது. இது ஜின்களின் உணவாகும்.
2. மிருகங்களின் விட்டைகளால் சுத்தம் செய்சதும் கூடாது. இதுவும் ஜின்களின் உணவாகும்
3. கண்ணிமிக்க பொருட்களாலும் சுத்தம் செய்வது கூடாது.
மார்க்க விதி :
காற்று பிரிவதைத் தவிர முன் பின் துவாரங்களிலிருந்து எது வெளியானாலும் தண்ணீர், கல், மண், அவை போன்றவற்றால் சுத்தம் செய்வது கட்டாயமாகும்.
சிறுநீரை சரியாகச் சுத்தம் செய்யாதோருக்கு ஓர் எச்சரிக்கை!

இரு மண்ணறை (கப்று)களுக்கருகே சென்ற நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த இரு மண்ணறைவாசிகளும் தண்டிக்கப்படுகின்றனர். (அவை) மிகப் பெரிய குற்றத்திற்காக அல்ல. எனினும் அவை பெரும் குற்றமேயாகும். ஒருவர் கோள் சொல்லித்திரிந்தவர். மற்றொருவர் சிறுநீர் கழிக்கும் போது சரிவர மறைக்கா(து சுத்தம் செய்யா)திருந்தவர். என நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)
மற்றொரு முறை தெரிவித்தார்கள் :-
மண்ணறையின் வேதனைகளில் பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் விசயமாகவே உள்ளது.எனவே சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். (ஆதாரம்: ஹாக்கிம், தபரானி,தாரகுத்னி,பஸ்ஸார்.)
இன்று நம்மில் சிலர் பயணங்களிலும் அவசர வேளைகளிலும் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு விட்டால் அங்கேயே தனது தேவையை முடித்துவிட்டுச் சென்று விடு கிறார்கள். இவர்கள் இந்த எச்சரிக்கையை எப்போதும் மனதிற் கொண்டு பயணத்தின் போது டிஷ;யூ பேப்பர் அல்லது சிறிய பிளாஸ்டிக் பாட்டல்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். இதில் அலட்சியமாக இருந்து விடவேண்டாம்.
கழிவறை ஒழுக்கங்கள்.

கழிவறைக்குச் செல்லும் போது சில ஒழுங்கு முறைகளைப் பேண இஸ்லாம் நமக்குப் போதிக்கிறது.
1. கழிவறைக்குள் நுழையும் போது கீழ் வரும் துஅவை ஓதவேண்டும்.
‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்தி வல் கபாயிதி’
இறைவா! ஆண் பெண் சைத்தான்களின் தீங்குகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)
2. கழிவறையை விட்டு வெளியேறும் போது:-
‘குஃப்ரானக்க’
இறiவா! உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி)
3.. இடது காலை முன்வைத்து நுழையவேண்டும். வலது காலை முன்வைத்து வெளியேறவேண்டும்.
3. சில ஒழுங்குகள்

1. அல்லாஹ்வின் திருநாமங்கள் எழுதப்பட்ட எந்த பொருளையும் கழிவறைக்குள் எடுத்துச் செல்வது கூடாது. 2. நடை பாதையிலும், பழம் நிழல் தரும் மரங்களின் கீழும், தண்ணீருக்குள்ளும் மலஜலம் கழிப்பது கூடாது. 3. கட்டடங்கள் இல்லாத இடங்களில் மலஜலம் கழிக்கும் போது கிப்லா திசையை முன்னோக்கவா, பின்னோக்கவோ கூடாது. 4. கட்டடம் இல்லாத இடங்களில் சிறு நீர் கழிக்கும் போது மனிதர்களின் பார்வையில் படாதவாறு தூரமாகச் செல்லவோ, தன்னை மறைத்துக் கொள்ளவோ செய்ய வேண்டும். 5. வலது கையினால் சுத்தம் செய்வதும், தேவையின்றி மர்ம பாகத்தை தொடுவதும் கூடாது. 6. நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதும் கூடாது.
ஆனால், உட்கார்ந்து சிறு கழிப்பதால் தனது மர்ம உறுப்பை மறைக்க முடியாது என அஞ்சினாலோ, அல்லது தம்மீது சிறுநீர் தெறிக்கும் என பயந்தாலோ, கை,கால்களில் முறிவு ஏற்பட்டு காலை மடக்க முடியாத மருத்துவக் காரணங்களினாலோ நின்றவாறு சிறுநீர் கழிப்பதில் தவறில்லை.
தொழுகைக்கு முன் செய்யப்படும் தூய்மைக்கு உளு எனப்படும். உளு என்பது தொழுகைகு முன்னால் குறிப்பிட்ட சில உறுப்புகளை கழுவித் தூய்மைப் படுத்துவது ஆகும்.                                                                  



Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer

வட்டி ஒரு பெரும் பாவம்

Svr.pamini 1. வட்டி என்றால் என்ன?: அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது. '...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...' (அல்குர்ஆன் 2:279) இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...' (அல்குர்ஆன் 3:130) 2. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது. 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' (அல்குர்ஆன் 2:275) வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன. 1. வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது. 2. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும். 3. வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும். 3. வட்டி ஒரு பெரும் பாவம் : 'ஏழு பெரும் பாவங்களை விட்டும் தவிர்ந்து கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்ன போது, 'சொல்லுங்கள் அல்லாஹ்வின் தூதரே!' என்று அவர்களது தோழர்கள் கூறினார்கள். அப்போது, '1.அல்லாஹ்வுக்கு இணை வைப்பது. 2.சூனியம். 3.கொலை 4.வட்டி உண்பது 5.அனாதைகளின் சொத்தை உண்பது 6.போரில் புறமுதுகு காட்டுவது 7.அபலைப் பெண் மீது அவதூறு சொல்வது' என்று கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 4. வட்டி ஒரு கொடிய குற்றம் : 'ஒரு திர்ஹம் வட்டி என்பது அல்லாஹ்விடத்தில் முப்பத்து ஆறு முறை விபச்சாரம் செய்த குற்றத்தை விட கொடியதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி), நூல்: தாரகுத்னீ) மற்றொரு அறிவிப்பில், 'வட்டிக்கு 99 வாயில்கள் உள்ளன, அதில் மிகவும் தாழ்ந்தது (சிறியது), ஒருவன் தன் தாயோடு (ஜினா செய்ய) போவதைப் போன்றது' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒரு செயல் எந்த அளவுக்கு பாவமானது என்பதை தெரிந்து கொள்ள அதற்கு அளிக்கப்படும் தண்டனையை வைத்தே தெரிந்து கொள்ள முடியும். விபச்சாரம் செய்பவர்களுக்கு மரணதண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறுகிறது. விபச்சாரம் செய்யும் ஆண்களும் பெண்களும் நரகில் நிர்வாணமாக நெருப்பு மூட்டப்பட்ட, எளிதில் வெளிவர முடியாத அடுப்புக்குள் கிடப்பார்கள். வட்டி வாங்குவது விபச்சாரம் செய்வதை விட கொடியது என்றால் அதற்கான தண்டனை எத்தனை மடங்கு அதிகமாக இருக்க வேண்டும் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். விபச்சாரம் செய்பவனை சமுதாயம் இழிவாக பார்ப்பதைப் போன்று அல்லது அதை விட இழிவாக வட்டி வாங்குபவன் பார்க்கப்பட தகுதியானவன். 5. அல்லாஹ்வால் சபிக்கப்பட்டவர்கள் : 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 6. வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள். இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085) நிரந்தர நரகத்திற்குச் செல்பவர்கள் பட்டியலில் மூன்று பேர் இடம் பெறுகிறார்கள். 1.கொலையாளி, 2.காபிர்கள் 3.வட்டி உண்பவர். ஏனைய பாவங்களை அல்லாஹ் நாடினால் குறிப்பிட்ட காலம் தண்டனைக்குப் பிறகு நரகவாசிகளை மன்னித்து சொர்க்கத்தில் சேர்ப்பான். 7. போர்ப் பிரகடணம்: வட்டி என்பது ஹராம் என்பதை ஒரு இஸ்லாமியன் தெரிந்து கொண்ட பின்பும் வட்டி வாங்குவதை விட வில்லையானால் அல்லாஹ்வும் அவனது தூதரும் அவனுக்கு எதிராக போர் பிரகடணம் செய்கிறார்கள் என்பதை அல்லாஹ் திருமறையில் சொல்கிறான். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) அல்லாஹ்வும் அவனது தூதரும் வட்டி வாங்குவோருக்கு எதிராக போர் செய்கிறார்கள் என்றால் அவனது நிலை இம்மையிலும் மறுமையிலும் மிக மோசமானதாக ஆகி விடும் என்பது பொருள். இன்னும் தெளிவாக சொல்வதானால் இம்மையிலும் மறுமையிலும் அவன் நாசமாகி விடுவான் என்பது பொருள். 8. வட்டி வாங்குவோரின் அவல நிலை : 1. மறுமையில் பைத்தியக்காரனாக எழுப்பப்படுவான். 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள்...' (அல்குர்ஆன் 2:275) 2. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' (நூல்: புகாரி 5962) 3. அல்லாஹ்வின் சாபம். 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 4. போர் பிரகடணம். 'ஈமான் கொண்டவர்களே! நீங்கள் முஃமின்களாக இருந்தால் அல்லாஹ்வுக்கு பயந்து எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள். அவ்வாறு நீங்கள் செய்யவில்லையானால் அல்லாஹ்விடமிருந்தும் அவனது தூதரிடமிருந்தும் போர் அறிவிக்கப்பட்டு விட்டது (என்பதை அறிந்து கொள்ளுங்கள்)' (அல்குர்ஆன் 2:279) 9. அடமானம்: அடமானம் இரண்டு வகைப்படும். அதில் ஒன்று, கடன் கொடுப்பவர் பெருமானமுள்ள பொருளை அதற்கு ஈடாக பெற்று கடன் கொடுப்பார். இரண்டாவது, பெருமானமுள்ள பொருளை பெற்றுக் கொண்டு கடன் கொடுப்பவர் வட்டியும் வாங்குவார். இரண்டாவது வகைதான் இப்போது நடைமுறையில் இருக்கும் முறையாகும். வங்கிகள், தனியார் நிதிநிறுவனங்கள் இம்முறையைத் தான் பின்பற்றுகின்றன. முதல் முறை அடமானம் அனுமதிக்கப்பட்ட முறையாகும். இதற்கு கீழ்வரும் குர்ஆன் வசனமும் ஹதீஸும் ஆதாரமாகும். நீங்கள் பயணத்திலிருந்து (கடன் கொடுக்கல் வாங்கலில் ஈடுபட வேண்டிய அவசியம் ஏற்பட்டு) எழுத்தாளனையும் (தோதையும்) பெறாவிட்டால் (கடன் பத்திரத்திற்குப் பதிலாக) நீங்கள் அடமானத்தைக் கைப்பற்றிக் (கொண்டு கடன் கொடுத்துக்) கொள்ளுங்கள்' (அல்குர்ஆன்) நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் ஒரு யூதனிடம் தம் உருக்குச் சட்டையை அடமானமாக கொடுத்து உணவுப் பொருட்களைக் கடனாகப் பெற்றார்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்) வட்டி பெறப்படும் இரண்டாவது முறையான அடமானம் அனுமதிக்கப்படாத தடுக்கப்பட்ட முறையாகும். அடமானமாக அல்லது ஈடாக பெறப்பட்ட பொருளை உபயோகிப்பது கூட அனுமதிக்கப்பட வில்லை. அதற்கு செலவு செய்வதைப் பொருத்து உபயோகித்துக் கொள்ள சிலவற்றிற்கு அனுமதியுண்டு, என்கிற போது, கொடுத்த கடனுக்கு அடமானப் பொருளையும் அதே கடனுக்கு வட்டியும் வாங்குவது மனிதாபமானமற்ற கொடுஞ் செயலாகும். 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 10. ஒத்தி வட்டியா?: ஒத்தி என்பது ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை குறிப்பிட்ட காலத்திற்காக வீட்டுச் சொந்தக்காரரிடம் கொடுத்து விட்டு, அவரது வீட்டில் இவர் குடியிருப்பார் அல்லது மற்றவருக்கு வாடகைக்கு விட்டு விடுவார். நிர்ணயிக்கப்பட்ட காலம் முடிந்ததும் பணம் திருப்பிச் செலுத்தப்படும், வீடும் வீட்டுச் சொந்தக்காரரிடம் ஒப்படைக்கப்படும். ஒத்தியில் ஈடாக கொடுக்கப்படும் வீட்டையோ கடையையோ, ஒத்தி வாங்கியவர் குடியிருக்கவோ வாடகைக்கு விடவோ முடியாது. அவ்வாறு செய்தால் அது வட்டியாகும் என்பதை இந்த ஹதீஸ் விளக்குகிறது. 'சவாரிக்குரிய கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் (தீவனம் போன்ற) செலவுகளுக்குத் தக்கவாறு (அதன் மீது) சவாரி செய்யலாம். பால் கறக்கும் கால்நடை அடமானம் வைக்கப்பட்டால், அதன் செலவுக்குத் தக்கவாறு அதன் பாலை அருந்தலாம். பால் அருந்துபவரையே தான் செலவு சார்ந்திருக்கும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்) 11. பேங்க்கில் பணம் போடலாமா? : வங்கியில் பணத்தை போட்டு வைப்பதையும் இரண்டு வகையாக பிரித்துக் கொள்ளலாம். முதலாவது, பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக வங்கியை நாடுவது. இரண்டாவது, வட்டி மூலம் வருவாய் வருகிறது என்பதற்காக வங்கியில் பணத்தை போட்டு வைப்பது. இரண்டு வகைகளிலும் வட்டி கொடுக்கப்படுகிறது என்றாலும் அதன் விகிதாச்சாரத்தில் ஏற்றக் தாழ்வுகள் இருக்கின்றன. முதலாவது வகையில் வட்டி விகிதம் குறைவு என்றாலும் பாதுகாப்பு கருதி வங்கிக் கணக்கில் பணத்தை வைக்கலாம். ஆனால் அதனால் கிடைக்கும் கூடுதல் தொகையான வட்டியை எடுக்கக் கூடாது. இவ்விஷயத்தில் மார்க்க அறிஞர்களிடத்தில் மற்றொரு கருத்து நிலவுகிறது. அதாவது பணத்தை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கலாம் என்பது தான் அந்த கருத்து. ஆனால் வட்டியை வாங்குவோருக்கு கடும் எச்சரிக்கையை அல்லாஹ்வும் தூதரும் விடுத்திருக்கும் போது இந்த பலப்பரீட்சை தேவையற்றது என்பதால் தவிர்ந்து கொள்வது தான் சிறந்தது. இரண்டாவது வகைக்கும் இது பொருந்தும். 12. ஏலச்சீட்டு வட்டியாகுமா?: ஏலச்சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் ஏலம் விடப்படும். அவசர தேவைக்காக பணம் தேவைப்படுபவர்கள், பண நெருக்கடியில் உள்ளவர்கள் ஏலம் எடுப்பார்கள். அதிகமாக குறைத்துக் கொண்டு ஏலம் கேட்பவர்களுக்கே அது கொடுக்கப்படும். எவ்வளவு தொகை குறைக்கப்பட்டதோ அந்த தொகை கழிவு எனப்படும், அது மற்றவர்களுக்கு பகிர்ந்து கொடுக்கப்படும். இது ஆதாரம் தேவைப்படாத அளவு முடிவு செய்யப்படத்தக்க விஷயம். சந்தேகமின்றி இது வட்டியே ஆகும். 13. குலுக்கல் சீட்டு: குலுக்கல் சீட்டு என்பது குறிப்பிட்ட எண்ணிக்கையில் உள்ளவர்கள் குறிப்பிட்ட அளவு தொகையை மாதாமாதம் செலுத்திவர வேண்டும். அந்த குழுவினரின் முன்னிலையில் எல்லோரது பெயர்களையும் சீட்டில் எழுதி ஒருவரது பெயரை மட்டும் குலுக்கி எடுப்பார்கள். எவரது பெயர் குலுக்கி எடுக்கப்பட்டதோ அவருக்கு அந்த மாதத்திய தொகை வழங்கப்படும். அடுத்த மாத குலுக்கலில் இவரது பெயர் எழுதப்படாது. அவரவருக்கு கிடைக்கும் தொகை சரிசமமாக கிடைக்கும் என்பதால் இது அனுமதிக்கப்பட்ட ஒன்றே. 14. தவணை முறையில் பொருள் வாங்குவது: இந்த முறையிலும் இரண்டு வகைகள் உண்டு. ஒன்று, ஒரு பொருளுக்குரிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது அனுமதிக்கப்பட்ட ஒன்று. இரண்டாவது, ஒரு பொருளுக்குறிய விலை ரொக்கமாக வாங்கினால் என்ன விலையோ அந்த விலையை விட கூடுதலாக வைத்து அந்த தொகையை சிறிது சிறிதாக மாதாமாதம் கொடுத்து வருவது. இது தடுக்கப்பட்டது. 15. வங்கியில் வேலை செய்வது: 'வட்டி உண்பவனையும், வட்டி கொடுப்பவனையும், அதற்காக கணக்கு எழுதுபவனையும், அதற்கு சாட்சியம் கூறும் இருவரையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம்) 16. பகடி கூடுமா?: பகடி என்பது ஒருவருக்குச் சொந்தமான கடையில் மற்றவர் வாடகைக்கு இருப்பார். அந்தக் கடை மற்றவருக்கு தேவைப்படும் போது, வாடகைக்கு இருப்பவர் அவரிடமிருந்து பெரிய தொகையை கேட்டு வாங்கிக் கொள்வார். பகடி கொடுப்பதும் கூடாது, பகடி வாங்குவதும் கூடாது. 17. முடிவுரை: பல நாடுகள் உலக வங்கியில் கடன் வாங்கிவிட்டு வட்டியை கட்டுவதற்கே நாட்டின் வருமானம் போதாதிருப்பதும், விலைவாசி ஏற்றத்திற்கும் வட்டியே அடிப்படைக் காரணம் என்பதை மறக்க முடியாது. வட்டியின் வாடை கூட நம்மீது வீசாதபடி நம்மை அல்லாஹ் காப்பாற்றுவானாக! Svr.pamini