தொழுகை – ஸலாத் ஆகும். தொழுவதற்கு முன் தூய்மை,தண்ணீரின் வகைகள்,பயன் படுத்தும் பாத்திரம் இவற்றைத் தெரிந்து கொள்ளவேண்டும்
இஸ்லாம் தூய்மைக்கு மிகவும் முக்கியத்துவம் வழங்குகிறது. தூய்மையற்ற எந்தச் செயலும், வணக்கமும் இறைவனால் அங்கீகரிக்கப்படுவதில்லை. இறைவன் தூய்மையானவன். அவன் தூய்மையை விரும்புகிறான்.
ِ
إِنَّ اللّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ
قال النبي صلي الله عليه وسلم ‘ الطهارة نصف الايمان
1. உளத் தூய்மை
2. உடற் தூய்மை
3. இடத் தூய்மை
4. உடைத் தூய்மை
5. உடைமைத் தூய்மை
6. சொல் தூய்மை
7. செயல் தூய்மை
8. வணிகத் தூய்மை
9. வாழ்வுத் தூய்மை
10. வணக்கத் தூய்மை
‘தூய்மை நோயிலிருந்து மனிதனைக் காக்கும் கேடயம்’ என அறிவியல் கூறும் இந்த மருத்துவ உண்மையை இஸ்லாம் என்றோ மனித சமுதாயத்திற்கு அறிவித்துவிட்டது.
தூய்மை பாவங்களைக் களைந்து மனிதனை பக்குவப்படுத்துகிறது. தூய வாழ்வுக்கு வழிநடத்திச் செல்கிறது. ஆன்மீகப் பாதையில் பீடுநடை போட ஊக்குவிக்கிறது.
நபிகளாரின் பின் வரும் பொன் மொழி சிந்திக்கத்தக்கதாகும். ஒரு முஸ்லிம் உளு செய்யும் போது முகத்தைக் கழுவினால் அவன் முகத்திலிருந்து கண்கள் செய்த பாவங்கள் அனைத்தும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. அவன் கைகளைக் கழுவினால் கைகள் செய்த தவறுகள் அனைத்தும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. அவன் கால்களைக் கழுவினால் கால்கள் (முலம் நடந்து சென்று) செய்த குற்றங்கள் யாவும் தண்ணீரின் கடைசிச்சொட்டுடன் வெளியேறி விடுகின்றன. இறுதியில் அவன் (இறைவன் பாதையில் அடியெடுத்து வைத்து தெய்வீக நெறி நிற்பதால்) குற்றமற்றவனாக ஆகிவிடுகிறான். (ஆதாரம் : முஸ்லிம், நஸாயீ) (‘உளு’ என்பது தொழுகைக்காக கை,கால்,முகம் போன்ற வெளி உறுப்புகளைக் கழுவித் தூய்மையாக்குவதற்கு சொல்லப்படும்.
முதல்வகை : சுத்தமான தண்ணீர்
இறைவனால் அருளப்பட்ட இயற்கை நிலையிலுள்ள தண்ணீர். இவை இரண்டு வகைகளாகும்.
1. தானும் சுத்தமாக இருந்து பிற பொருளையும் சுத்தமாக்கும். (தஹூர்) உதாரணம் : கிணற்று நீர், ஓடை நீர், ஆற்று நீர், கடல் நீர், மழை நீர். பனி நீர் போன்றவை.
2. தான் சுத்தமாக இருந்து பிறபொருளை சுத்தம் செய்யாது. (தாஹிர்) உதாரணம் : இளநீர். தேநீர், பதநீர், பன்னீர், பால், மோர், பழரசம் போன்றவை.
இது கழிவு நீர், உபயோகித்த நீர், அசுத்தம் கலந்த நீர் ஆகும். அசுத்தமான (நஜீஸ்) பொருள் விழுந்து தண்ணீரின் நிறம், சுவை, மணம் மாறினால் சிறிய அளவாயினும் பெருவெள்ளம யினும் அது அசுத்தமான தண்ணீர் என்றே கருதப்படும்.
1.இந்த அசுத்தமான தண்ணீரை உண்பதும் குடிப்பதும் எவ்வாறு ஹராம் – தடை செய்யப்பட்டுள்ளதோ அவ்வாறே சுத்தம் செய்வதும் பயன்படுத்துவதும் ஹராம் – தடைசெய்யப்பட்டுள்ளது. வேறு வழியே இல்லாது நிர்பந்த நிலைகள்,ஆபத்தான சூழல்கள் ஏற்படுமாயின் கடைசி கட்டத்தில் பயன்படுத்த மார்க்கம் அனுமதிக்கிறது. இது ஆபத்தான நிலைகளில் மார்க்கம் வழங்கும் பொது விதியாகும்.
சான்றாக ஒரு நிகழ்ச்சியைக் காணலாம:- ஒரு கிராமவாசி பள்ளிவாயலில் சிறுநீர் கழித்துவிட்டார்.அவரைப் பிடித்து விரட்ட மக்கள் ஓடினர்.அதைக்கண்ட நபிகளார் அவரை அப்படியே விட்டுவிடுங்கள்.அவர் சிறுநீர் கழ்த்த இடத்தில் ஒருவாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் எளிமையை கையாளவும் கடினமுறையை விடவும் போதிப்பதற்கு வந்தவர்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
ஒரு பாத்திரத்தில் நாய் நக்கிவிட்டால் அதை ஏழு முறை கழுவுங்கள். முதலாவது முறை மண்ணைக் கொண்டு தேயுங்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
நமது வாழ்வின் அனைத்து அம்சங்களுக்கும் விதிமுறைகளையும், வரையறைகளையும் வகுத்துத் தந்துள்ள இஸ்லாம், நாம் பயன்படுத்தும் பொருட்கள்,பாத்திரங்கள் எவ்வாறி ருக்க வேண்டும் என்பதற்கும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது.
மனிதன் உண்பதற்கும்,குடிப்பதற்கும் பயன்படுத்தும் பாத்திரங்கள் மிகவும் இன்றியமை யாததாகும்.. அவை தொன்று தொட்டு இன்றைய நாகரிக காலம் வரை காலத்திற்கும் வசதிக்கும் ஏற்ப இரும்பு, செம்பு, பித்தளை, பலகை, தோல்,மண்பாண்டம், பிளாஸ்டிக், அலுமினியம், சில்வர், வெள்ளி,தங்கம் போன்ற பாத்திரங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் நமது மார்க்கம் இவற்றுள் சிலவற்றைப் பயன்படுத்தத் தடை விதித்துள்ளது. அவை யாவை ?
தங்கம், வெள்ளிப் பாத்திரங்கள், அவற்றால் முலாம் பூசப்பட்ட அல்லது ஒட்டு போடப்பட்ட பாத்திரங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதும் புழங்;குவதும் கூடாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்:- நீங்கள் தங்கம், வெள்ளிப் பாத்திரங்களில் குடிக்கவும் வேண்டாம். உண்ணவும் வேண்டாம். அவை நிராகரிப்போருக்கு இவ்வுலகிலும்,(நம்பிக்கை கொண்ட) உங்களுக்கு மறுவுலகிலும் உள்ளவையாகும். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்) பாத்திரங்கள் என்பது பயன்படுத்துதற்கே தவிர பெருமைக்கோ அலங்காரத்திற்கோ அல்ல. இவ்வித ஆடம்பர அலங்காரப் பொருட்களைக் காணும் ஏழை எளியவர்கள் மனத்தளவில் பாதிக்கவும் சஞ்சலப்படவும் செய்யவார்கள்.
நிராகரிப்போர் தயாரிக்கும் உள்நாட்டு வெளிநாட்டு உற்பத்திப் பொருட்கள், பாத்திரங்கள், ஆடைகள் அசுத்தமானவை (நஜீஸ்கள்) அல்ல. அவற்றைத் தாராளமாகப் பயன்படுத்தலாம். எனினும் அவை மார்க்கத்தில் அனுமதிக்ககப்படாத பொட்களால் தயாரிக்கப்பட்டவை அல்லது தீய விளைவுகளை ஏற்பத்தும் பொருட்கள் என தெரிய வந்தால் அவற்றைப் பயன்படுத்துவது கூடாது.
செத்த பிராணி;களின் தோல்கள் பதனிடப்பட்டால் அவை சுத்தமானவையாகும். அவற்றால் தயாரிக்கப்படும் பொருட்களை தாராளமாகப் பயன்படுத்தலாம். அதைப் போன்றே அவற்றின் உரோமங்களும், திமிழ்களும் சுத்தமானவைகளாகும். அவை ஆடைகள், உபயோகப் பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப் படுகின்றன. இந்தத் தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தும் மிருகங்கள் உண்பதற்கு மார்க்கத்தில் அனுமதிக் கப்பட்டதாக இருக்க வேண்டும்.
மனிதர்கள்,மீன்கள்,இரத்த ஓட்டமில்லா ஈ,வெட்டுக்கிளி போன்றவை தவிர ஏனைய செத்த பிராணிகள் அனைத்தும் நஜீஸ்- அசுத்தப் பொருட்களாகும்.
மனிதனின் உடலுறுப்புகள் யாவும் மலம்,சிறுநீர்,வியர்வை போன்றவற்றிலிருந்து எப்போதும் தூய்மையாக இருக்கவேண்டும். அதுமட்டுமன்றி அவை வெளியாகும் பகுதிகளும் மிகவும் சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கவேண்டுமென இஸ்லாம் வலியுறுத்துகிறது.
மனிதன் தூய்மையை விரும்புவதோடு மனதிற்கிதமான நறுமணத்தையும் விரும்புகிறான்.தன் உடையிலோ,உடலிலோ, வாழும் இடத்திலோ இலேசான துர்வாடை வீசினாலும் அதை அவனால் பொறுத்துக் கொள்ள முடிவதில்லை.உடனே அவற்றை அப்புறப்படுத்தவோ அந்த இடத்தை விட்டும் அகலவோ அவசரப்படுவான். இதனால் தான் தூய்மையாக இருப்பதோடு, தன்னிடமிருந்து எவ்வகையிலும் பிறர் வெறுக்கும் துர்வாடை வீசி விடக்கூடாதே எனவும் மிகவும் எச்சக்கையாக இருக்கிறான்.
இவற்றையெல்லாம் கருத்திற் கொண்டே, எவ்வகை தூய்மைகளை யெல்லாம் கவனமாக மேற்கொள்ள வேண்டும் என்பதை இஸ்லாம்; வரி விடாது ஒவ்வொன்றையும் மிகத்தெளிவாக எடுத்துரைப் பதிலிருந்து ‘இஸ்லாம் ஓர் அறிவியல் மார்க்கம்’ என்பது நிரூபணமாகிறது. இஸ்லாத்தின் மீது குறை காணவேண்டுமென்று வாரி வலிந்து நிற்போரெல்லாம் வாய் பொத்தி நிற்பதை உலகம் முழுவதும் காணமுடிகிறது.
‘இஸ்தின்ஜா’ , ‘இஸ்திஜ்மார்’
மல ஜல உபாதைகளை தண்ணீரினால் சுத்தம் செய்வதற்கு ‘இஸ்தின்ஜா’ என்றும் தண்ணிரில்லாத போது கல் மண் போன்றவற்றால் சுத்தம் செய்வதற்கு ‘இஸ்திஜ்மார்’ என்றும் அரபியில் சொல்லப்படும்.தண்ணீரில்லாத போது இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
பின் வரும் பொருட்களால் மல ஜல உபாதைகளைச் சுத்தம் செய்யலாம்.
1. சுத்தமான கற்கள்
2. இறைவசனம், நபி மொழி போன்ற உயரிய வசனங்கள்,செய்திகள் எழுதப்படாத சுத்தமான காகிதங்கள், டிஷ;யூ பேப்பர்கள், துணிகள் போன்றவற்றால் சுத்தம் செய்யலாம்.
3. மேற்கூறப்பட்டவை யாவும் சுத்தமாக இருக்கவேண்டும் என்பது ஒரு நிபந்தனையாகும். அது போல மூன்று முறைகளாக சுத்தம் செய்வதும் ஒரு நிபந்தனையாகும். இவை நபிவழிகளாகும். அவசியமாயின் மூன்று முறைகளுக்கு அதிகமாகவும் சுத்தம் செய்யலாம்..
அசுத்தங்கள் உடலில் தெறித்து விட்டாலோ பரவி விட்டாலோ தண்ணீரால் தான் சுத்தம் செய்யவேண்டுமென்பதை நினைவிற் கொள்க!.
இஸ்திஜ்;மார்-கற்கள் போன்ற வற்றால் சுத்தம் செய்யலாம் என்று கூறும் போது பின் வருபவற்றைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
1. எலும்புகளால் சுத்தம் செய்வது கூடாது. இது ஜின்களின் உணவாகும்.
2. மிருகங்களின் விட்டைகளால் சுத்தம் செய்சதும் கூடாது. இதுவும் ஜின்களின் உணவாகும்
3. கண்ணிமிக்க பொருட்களாலும் சுத்தம் செய்வது கூடாது.
மார்க்க விதி :
காற்று பிரிவதைத் தவிர முன் பின் துவாரங்களிலிருந்து எது வெளியானாலும் தண்ணீர், கல், மண், அவை போன்றவற்றால் சுத்தம் செய்வது கட்டாயமாகும்.
இரு மண்ணறை (கப்று)களுக்கருகே சென்ற நபிகளார் (ஸல்) அவர்கள் இந்த இரு மண்ணறைவாசிகளும் தண்டிக்கப்படுகின்றனர். (அவை) மிகப் பெரிய குற்றத்திற்காக அல்ல. எனினும் அவை பெரும் குற்றமேயாகும். ஒருவர் கோள் சொல்லித்திரிந்தவர். மற்றொருவர் சிறுநீர் கழிக்கும் போது சரிவர மறைக்கா(து சுத்தம் செய்யா)திருந்தவர். என நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)
மற்றொரு முறை தெரிவித்தார்கள் :-
மண்ணறையின் வேதனைகளில் பெரும்பாலும் சிறுநீர் கழிக்கும் விசயமாகவே உள்ளது.எனவே சிறுநீரிலிருந்து சுத்தமாகிக் கொள்ளுங்கள். (ஆதாரம்: ஹாக்கிம், தபரானி,தாரகுத்னி,பஸ்ஸார்.)
இன்று நம்மில் சிலர் பயணங்களிலும் அவசர வேளைகளிலும் கட்டுப்படுத்த இயலாத நிலை ஏற்பட்டு விட்டால் அங்கேயே தனது தேவையை முடித்துவிட்டுச் சென்று விடு கிறார்கள். இவர்கள் இந்த எச்சரிக்கையை எப்போதும் மனதிற் கொண்டு பயணத்தின் போது டிஷ;யூ பேப்பர் அல்லது சிறிய பிளாஸ்டிக் பாட்டல்களில் தண்ணீர் எடுத்துச் செல்வது மிகவும் அவசியமாகும். இதில் அலட்சியமாக இருந்து விடவேண்டாம்.
கழிவறைக்குச் செல்லும் போது சில ஒழுங்கு முறைகளைப் பேண இஸ்லாம் நமக்குப் போதிக்கிறது.
‘அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் குப்தி வல் கபாயிதி’
இறைவா! ஆண் பெண் சைத்தான்களின் தீங்குகளைவிட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: புகாரி,முஸ்லிம்)
‘குஃப்ரானக்க’
இறiவா! உன்னிடம் மன்னிப்புத் தேடுகிறேன். (ஆதாரம்: அபூதாவூது, திர்மிதி)
3.. இடது காலை முன்வைத்து நுழையவேண்டும். வலது காலை முன்வைத்து வெளியேறவேண்டும்.
1. அல்லாஹ்வின் திருநாமங்கள் எழுதப்பட்ட எந்த பொருளையும் கழிவறைக்குள் எடுத்துச் செல்வது கூடாது. 2. நடை பாதையிலும், பழம் நிழல் தரும் மரங்களின் கீழும், தண்ணீருக்குள்ளும் மலஜலம் கழிப்பது கூடாது. 3. கட்டடங்கள் இல்லாத இடங்களில் மலஜலம் கழிக்கும் போது கிப்லா திசையை முன்னோக்கவா, பின்னோக்கவோ கூடாது. 4. கட்டடம் இல்லாத இடங்களில் சிறு நீர் கழிக்கும் போது மனிதர்களின் பார்வையில் படாதவாறு தூரமாகச் செல்லவோ, தன்னை மறைத்துக் கொள்ளவோ செய்ய வேண்டும். 5. வலது கையினால் சுத்தம் செய்வதும், தேவையின்றி மர்ம பாகத்தை தொடுவதும் கூடாது. 6. நின்ற நிலையில் சிறுநீர் கழிப்பதும் கூடாது.
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer