இணைவைப்பு என்றால் என்ன? அல்லாஹ்வுக்கே உரித்தான இறைத்தன்மை ஒருவரிடம் அல்லது ஒரு பொருளிடம் இருப்பதாகக் கருதி அதனை அல்லாஹ் வுக்கு இணையாக வைத்து குறுக்கு வழி யில் பயன்தேட முனைவதையே இணை வைத்தல் எனலாம். அல்லாஹ் அல்லாஹ் தான்! அவனுக்கு இணையாக உலகில் ஒன்றும் இல்லை என்ற நம்பிக்கை உறுதியாக ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.
மார்க்கத்தில் அல்லாஹ்வும், அவன் தூதரும் சொல்லாத ஒன்றின் மூலமாக தங்களின் மார்க்க ஈடுபாட்டை ஏற்படுத்தலாம், பக்தியை உருவாக்கலாம் என எண்ணிக்கொண்டு,
(அறிவிப்பவர் அன்னை ஆயிஷா(ரலி), ஆதாரம் : புகாரி,முஸ்லிம்)
ஆனால், இவர்கள் எதிர்பார்க்கும் நன்மைகளுக்குப் பதிலாக தீமைகளும், விபரீதங்களுமே பெருகிவிடுகின்றன.அதனால் அவர்கள் செய்யும் நன்மைகள் யாவும் பயனற்றுப் போகின்றன.
ஏனெனில், நபிகளாரை புகழ்வதாகக் கருதிக்கொண்டு வரையறை மீறும் போது அவர்களை அறியாமலே ஷிர்க்-இணைவைத்தல் என்னும் மன்னிக்க முடியாத கொடிய பாவத்தின் பால் தள்ளப்படுகின்றனர்.
இறுதியில், இது நபிகளார்(ஸல்)அவர்கள் அகில உலகிற்கும் போதிக்க வந்த ‘ஏகத்துவக் கொள்கை’ என்னும் மிகப்பெரிய நெறிப்புரட்சிக்கு எதிராக மாறுகிறது. அதுமட்டுமல்ல, யூத, கிறித்தவர்களைப் போல் நபிகளாரை கடவுள் நிலைக்குக் கொண்டு போகும் அபாயகரமான கட்டத்திற்குச் சென்றுவிடுகின்றனர். இவர்களின் செயல்கள் யாவும் வீணாகி இஸ்லாத்திலி ருந்தே வெளியேற்றி, நரகத்திற்கே விறகுகளாகிவிடுகின்றனர். வல்ல நாயன் அல்லாஹ் இக்கொடிய ஷிர்க்கிலிருந்தும் பாவங்களிலிருந்தும் நம்மைக் காப்பானாக!
மனிதனை மார்க்க நெறிகளிலிருந்தும் தூய இஸ்லாத்தின் புனிதக் கொள்கைகளிலிருந்தும் வெளியேற்றும் அபாயங்கள் ஒவ்வொரு கால கட்டங்களிலும் நிகழும் என்பதை முன்னரே அறிந்த அல்லாஹ்வும், அவனது தூதரும் மக்களை எச்செரிக்கை செய்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
மர்யம்(அலை) அவர்களின் மகன் ஈஸா (அலை) அவர்களை கிறித்தவர்கள் மிகைப்படுத்திப் புகழ்ததைப்போல் என்னையும் நீங்கள் புகழ்ந்துவிடாதீர்கள்.நிச்சயமாக நான் ஒரு அடியானே!
என்னை நீங்கள் அல்லாஹ்வின் அடியான் என்றும், அவனது தூதர் என்றும் கூறுங்கள். (புகாரி: 3189)
நாயகத் தோழர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
’நபிகளார்(ஸல்)அவர்கள் தமது ஹஜ்ஜின் போது (மினாவில் எறிவதற்காக) பொடிக்கற்களை கேட்க, நானும் அவ்வாறே எடுத்துக் கொடுத்தேன்.இதைக்கண்ட நபிகளார்’இவ்வாறே பொடிக் கற்களாலேயே எறிய வேண்டும்.(ஆவேசத்தில் பெரும் கற்களை எடுத்து எறிந்து)மார்க்கத்தில் அளவுகடந்து செல்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். இவ்வாறு வரையறை மீறிச்சென்றது தான் உங்களின் முன் வாழ்ந்த சமுதயத்தினரை அழித்தொழித்தது’என எச்செரித்தார்கள்.
அல்லாஹ்வுக்கு இணைவைத்தல்
அல்லாஹ்வுக்கு இணை வைப்பது பாவங்களிலெல்லாம் மிகப் பெரிய பாவமாகும்.
وَإِذْ قَالَ لُقْمَانُ لابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيم
ஈமான் கொண்டபின் எதேனும் பெரும்பாவங்கள் நிகழ்ந்துவிட்டால் அந்தப் பாவத்தை அல்லாஹ் நாடினால் 'தவ்பா' (பாவமீட்சி) இல்லாமலும் மன்னித்து விடலாம். ஆனால் "இணை வைத்தல்" என்ற பாவத்தை 'தவ்பா' இன்றி அல்லாஹ் மன்னிப்பதேயில்லை.
அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்:
இறந்துவிட்ட இறைநேசர்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவார்கள், சிரமங்களைக் களைவார்கள் என்று நம்புவது, அவர்களிடம் உதவி கோருவது, இரட்சிக்கத் தேடுவது போன்ற செயல்களனைத்தும் "ஷிர்க்' ஆகும்.
இறைத் தூதர்கள் அல்லது நல்லோர்களை சிபாரிசுக்காகவோ அல்லது துன்பங்களிலிருந்து விடுதலை பெறவோ அழைப்பதும் இணைவைப்பாகும் ஆகும்.
இவர்களைக் கண்டித்தே அல்லாஹ் பின்வரும் வசனத்தில் கூறுகிறான்.
Free Template Blogger collection template Hot Deals BERITA_wongANteng SEO theproperty-developer